Home Blog Page 5607

25 muslim families barred from entering mosque after joining BJP in Tripura

tripura mosque - 2026

AGARTALA:

CPI-M in Tripura was accused of not allowing the entry of a few Muslim families to a local mosque in South Tripura under Shantirbazar sub-division after they joined the BJP recently. The district administration said that they have also been informed about the incident but no formal communication is yet to reach from the deprived family.

Meanwhile, BJP Minority Morcha President Md Jasimuddin stated that the matter was informed to Superintendent of Police (South) detailing the threats and intimidations by the CPI-M cadres. He said about 200 minority people of 25 families residing in Madhyatilla hamlet of Shantirbazar had deserted CPI-M and joined in BJP last month despite strong prevention from the ruling party cadres.

Initially, the residents opposed the fatwa of the imam that asked them not to entre in the mosque because they joined in BJP, which favoured Hinduism and working against Islam, alleged Babul Hossain, a resident of the locality adding that the imam was forced to issue fatwa against them violating Islam code.

சர்வதேச யோகா தினம்: மோடி, யோகியுடன் லக்னோவில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை

International Yoga Day 2017 PM Narendra Modi Yogi - 2026

லக்னோ:

பாரத நாட்டின் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் யோகக் கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

2014 டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் புதன்கிழமை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் காலை 6.30க்கு பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்க, பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ராம்நாயக், யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று யோகப் பயிற்சி செய்தார்கள். தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். லக்னோவில் இன்று மழை பெய்தபோதும் அதை பொருட்படுத்தாமல் மோடி உள்ளிட்டோர் யோகா செய்தனர். அனைவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுஜான்பூர்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மணிப்பூரில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்பையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு என முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகப் பயிற்சி மேற்கொண்டனர்.

அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ராம்னாத் கோவிந்த் தேர்வை அரசியலாக நான் பார்க்கவில்லை: கிருஷ்ணசாமி

puthiya tamilagam krishnasami - 2026

 

பாஜக., சார்பில் தேஜகூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் தேர்வை அரசியலாகப் பார்க்கவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து…

அம்பேத்கர் சிந்தனையில் இருந்து இவர் (ராம்நாத் கோவிந்த்) எப்படி மாறுபட்டவர்
என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியவர். அவர்
மனதிலும் மத சிந்தனைதான் இருந்தது. எந்த இடத்திலும் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்டாக
மாறவில்லை. சமூக விடுதலைக்காக மதத்தைத்தான் தழுவச் சொன்னார் அம்பேத்கர்.
ரஷ்யா, சைனா, கியூபாவைப் போல, புரட்சி செய்யச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்
என்பதை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ராம்நாத்தை நான்
இந்தியனாகத்தான் பார்க்கிறேன்.

நான் அறிந்தவரையில், இந்து என்ற மதம் என்றைக்குமே இருந்ததில்லை.
கிறிஸ்துவத்தைத் தழுவக் கூடியவர்கள் கிறிஸ்துவர்களாவும் அல்லாவை
பின்பற்றுகின்றவர்கள் இஸ்லாமியர்களாகவும் இருக்கிறார்கள். புத்த மதத்தைச்
சேர்ந்தவர்கள் புத்திஸ்ட்டுகளாகவும் ஜைன மதத்தினர் ஜைனர்களாகவும்
இருக்கின்றனர். இந்து மதத்துக்கு எந்தக் கடவுளைக் குறிப்பிட்டு சொல்ல
முடியும்? அப்புறம் எப்படி அவரை ஓர் இந்துத்துவவாதி எனச் சொல்ல முடியும்?
ஒற்றைக் கடவுளைத் தொழக் கூடியதாக இந்து மதம் இல்லை. இந்த மண் சார்ந்த கலை,
கலாசார பண்பாட்டைத்தான் அவர்கள் வேறு வழியில் சொல்கிறார்கள். நாம் ஏன்
வெளிநாட்டுக் கடவுளை வணங்க வேண்டும்? உள்நாட்டில் உள்ள கருப்பனையோ சுப்பனையோ
சுடலைமாட சாமியையோ ஏன் வழிபடக் கூடாது? இது சுதேசி என்ற சிந்தனையில் இருந்து
எழக் கூடிய ஒன்றாகத்தான் பார்க்கிறேன். இந்து என்பதை கட்டமைக்கப்பட்ட மதமாக
நான் பார்க்கவில்லை.

ராம்நாத் ஒரு சுதேச சிந்தனையாளர். கே.ஆர்.நாராயணனுக்கும் ராம்நாத்
கோவிந்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மலைக்கும் மடுவுக்கும் நடுவில்
உள்ள வித்தியாசம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. ஒருவர் அந்தப் பதவியில்
வந்து அமர்ந்த பிறகுதான், இந்த வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். கடந்த
மூன்று மாத காலமாக, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள்
கசிய ஆரம்பித்தபோது, ‘ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நிறுத்தப்
போகிறார்கள்’ என்றுதான் தகவல் பரவியது. இப்போது அந்தத் தகவல் அடிபட்டுப்
போய்விட்டது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு
முறைக்கும் மேல் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார்கள். தலித் சமூகத்தில்
நாராயணனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. தற்போது பா.ஜ.க அரசில் அவர்களாக
முன்வந்து, பிரபலம் இல்லாத, ஒரு சாதாரண தொண்டனை வேட்பாளராக
முன்னிறுத்தியுள்ளதை நாம் வெளிப்படையாக பாராட்ட வேண்டும். அதில் குற்றம்
கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? அவர் இரண்டு முறை மேலவை உறுப்பினராக
இருந்திருக்கிறார். ஐ.நா வரை சென்றிருக்கிறார். மிகுந்த அடக்கமான, விசுவாசமான
தொண்டராக இருந்திருக்கிறார்.

ஜனநாயகத்தில் ஒன்றுக்கு அடுத்து இரண்டு என்ற நிலையை மாற்றி, இவரைப் போல்
ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு முன்னிறுத்தியதைவிட வேறு என்ன வேண்டும்?
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற வார்த்தை இப்போதுதான்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
‘பா.ஜ.க ஆட்சியில் மேலாதிக்க சிந்தனைதான் இருக்கும். சாதாரண மக்களை
அங்கீகரிக்க மாட்டார்கள்’ என்ற சிந்தனை தகர்க்கப்பட்டிருக்கிறது. ‘இன்னும்
சாதாரணமானவர்களைக்கூட நாங்கள் முன்னேற்றுவோம்’ என மோடி சொல்வதை நாம்
பாராட்டியே தீர வேண்டும். இதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை.
பா.ஜ.க.வுக்குள் ஒரு சமூக மாற்றம் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதாவது, புதிய கெமிஸ்ட்ரி ஏற்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இதை
ஒரு புதிய பரிணாமமாகப் பார்க்கிறேன். மோடியின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள
முற்போக்குப் பொறியாகத்தான் பார்க்கிறேன். ராம்நாத் முன்னிறுத்துப்படுவதை
அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் வரவேற்க வேண்டும். தலித்துகளுக்கு
எதிராக பா.ஜ.க அரசு செயல்படுகிறது எனச் சிலர் பேசுகிறார்கள். ஒரு கட்சி
திட்டமிட்டு தலித்துகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்பில்லை. பா.ஜ.க.வின்
ஆட்சியைப் பயன்படுத்தி, சில அமைப்புகள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சில
சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம். பா.ஜ.க என்ற கட்சி இதுபோல் செயல்படுவதற்கான
வாய்ப்புகளே இல்லை” என்றார் உறுதியாக.

ஆபாச படங்கள் அனுப்பியவரை காட்டிக் கொடுத்த நந்தினி சீரியல் நடிகை!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம். இவர் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் அவரின் முகநூல் பக்கத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர் எனக் கூறிக்கொள்ளும் அவர் தனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருவதாக கூறியுள்ளார்.

இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை பதிவு செய்கிறேன். இனிமையான ரசிகர்கள் பலர் எனக்கு உண்டு. அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு ஆதரவில்தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொட்டுத் தண்ணீர் கொடுக்காதவனுக்கு மகாபெரியவரின் அறிவுரை

1234201 315112848661397 4724600860700186658 n - 2026

“ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம
இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு
திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா

(ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட
தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி
போட்டுக்கொண்ட ஒரு செல்வந்தனுக்கு அறிவுரை)

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(47)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பெரியவா யாத்திரையின் போது திருக்கோவிலூர் அருகில்
ஒரு ஊரில் தங்க நேர்ந்தது.அந்த சமயத்தில் மழை பொய்த்து
போய் அந்த ஊரே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல்
தவித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஒரு செல்வந்தரின் வயக்காட்டிலும் அங்குள்ள
கிணற்றிலும் தண்ணீர் வற்றாமல் சுரந்தபடி இருந்தது.அந்த
செல்வந்தரோ ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட
தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி
போட்டுக்கொண்டு விட்டார்.

இதனால் ஊரிலுள்ளோர் நெடுந்தூரம் போய் கிடைக்கிற
இடத்தில் தண்ணீர் கொண்டுவந்து நாட்களைக் கடத்திக்
கொண்டிருந்தனர்.

பெரியவர் வந்து தங்கவும் அவரிடம் மழை பெய்ய வேண்டும்,
எங்கள் குறை நீங்க வேண்டும் என்றும் வேண்டி நின்றனர்.
இந்நிலையில் அந்த செல்வந்தரும் தரிசனம் செய்ய வந்தார்.

வந்த செல்வந்தரிடம் ஒரே புலம்பல்.

“சாமி, என்கிட்ட பணம், காசு இருக்குன்னு பேர்தானே ஒழிய
என்னை யாரும் மதிக்கிறதேயில்லை.ஒரு புழுவைப் பார்க்கிற
மாதிரிதான் பார்க்கிறாங்க.அதனாலேயே என் மனது மாதிரியே
இந்த ஊரும் வறண்டு கிடக்குது” என்றார்.

அதைக்கேட்ட பெரியவரும்,”நான் என்ன செய்ய வேண்டும்?”
என்று திரும்பிக்கேட்டார்.

“உங்களைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு எல்லாரும்
பேசிக்கிட்டாங்க,அதான் வந்தேன்.இனி நல்லது நடந்தா சரி..”
என்றார்.

“என்னை கும்பிட்டா மட்டும் நல்லது நடந்துடாது.
நான் சொல்றபடி கேட்டாத்தான் நல்லது நடக்கும்.”

“சொல்லுங்க.என்னால முடிஞ்சா கட்டாயம் கேட்டு
நடந்துக்கிறேன்…”

“உங்களால நிச்சயம் முடியும்.உங்க மனசு வறண்டு
கிடக்கிறதாலதான் ஊரும் வறண்டிருக்குன்னு
சொன்னீங்கதானே?”

“ஆமா சாமி…நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”

“அப்ப நீங்க சந்தோஷத்துக்கு மாறினா ஊரும்
சந்தோஷமாயிடும்ன்னுதானே அர்த்தம்?”

“ஆனா என்னால ஆகமுடியலையே…என் பேச்சை
எல்லாரும் கேட்டாத்தானே சந்தோஷப்படமுடியும்?”

“நீங்க முதல்ல உங்க கிணத்தைச் சுற்றி போட்டுள்ள
வேலியை எடுத்துடங்க.எல்லாரையும் தண்ணி எடுத்துக்க
அனுமதியுங்க.அப்புறம் பாருங்க…”-பெரியவா

“சாமி, நான் எனக்கு சொந்தமான கிணத்தைத்தானே
பாதுகாப்பாக மூடி வச்சிருக்கேன்.இது எப்படி தப்பாகும்?”

“எதுவும் நமக்கு உண்மைல சொந்தமில்ல..உங்க உடம்பையே
எடுத்துக்குங்க..உயிர் பிரியப்போறவரை இது உங்க கூடதானே
இருக்கப்போகுது..அதனால இது இறப்புக்கு பிற்கு கூட
வந்துட முடியுமா?”-பெரியவா

“இப்படி தத்துவம் பேசினா எப்படி சாமி? இருக்கிற தண்ணியை
நான் தானம் பண்ணிட்டு என் நிலத்துக்கு என்ன செய்வேன்?”

“கல்வியும் தண்ணியும் கொடுக்கக் கொடுக்கத்தான் பெருகும்.
நீங்க ஊர் நல்லா இருக்கட்டும்னு முதல்ல நினைங்க.
பிறகு பாருங்க…”-பெரியவா.

“அப்படி செஞ்சா மழை நல்லா பேஞ்சு பிரச்னை தீர்ந்துடமா?”

“நிச்சயமா..ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம
இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு
திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா

“சாமி உங்க பேச்சை நான் நம்பலாமா?”

“தாராளமாக நம்புங்க. மனசார எல்லாருக்கும் தண்ணி கொடுங்க
நானும் உங்களுக்காக அந்த ஈஸ்வரன் கிட்ட வேண்டிக்கிறேன்.”

“சரிங்க சாமி, இப்பவே போய் வேலியை எல்லாம் எடுத்துட்டு
யார் வேணா வந்து எவ்வளவு வேணா தண்ணி
எடுத்துக்குங்கன்னு தண்டோரா போட்டுட்றேன்” என்று
கூறிவிட்டு சென்ற செல்வந்தர் அப்படியே நடந்துகொண்டார்.

ஊரார் மனம் குளிர்ந்து போனது. யார் சொன்னாலும் கேட்காத
செல்வந்தர் பெரியவர் சொல்லி கேட்டதை அதிசயமாகக்
கருதினர்.

இத்தனைக்கும்ஊரார் பெரியவரிடம் அந்த செல்வந்தர் பற்றியோ
நீருள்ள கிணறு பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

அவ்வளவையும் பெரியவர்தன் ஞானதிருஷ்யாலே தெரிந்து
கொண்டு செயல்பட்டார்.அதன் பிறகு இரண்டு நாளில் அந்த
ஊரில் நல்ல மழை பெய்தது. அந்த செல்வந்தருக்கும் பெரிய
நம்பிக்கையைக் கொடுத்தது.

கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

karnan judge - 2026

 

கோவை:
மே மாதம் 9ம் தேதி முதல் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நாளை கோல்கத்தா அழைத்துச் செல்லப் படுவார் என்று தெரிகிறது.

முன்னதாக, கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு  உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் நிறைவு பெற்றது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சிறைத் தண்டனை பெற்ற முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற சாதனையுடன், தலைமறைவாக இருக்கும்போது பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனவும் பெயர் கிடைத்தது நீதிபதி கர்ணனுக்கு. ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த கர்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த போது, சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதனால், உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்தது. இதில், நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக் காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்த கர்ணனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று கோவையில் பிடிபட்டார்.

தூக்குல தொங்குவேன்னீங்களே!: அமைச்சருக்கு பால் முகவர் சங்கம் கேள்வி

rajendra-balaji-admk-minister

சென்னை:

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது “அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரியுள்ளார்.

 

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, “தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிருபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்” என அதிரடியாக பேசினார்.

இந்த சூழ்நிலையில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும்,  பாலில் கலப்படம் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் -19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று (19.06.2017) பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் கடந்த 05.08.2011முதல் 31.05.2017வரை தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் பதில் மனு உறுதி செய்துள்ளது. அப்படியானால் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே நாங்கள் (பால் முகவர்கள்) மனிதாபிமானமிக்கவர்கள் என்பதால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்ற வகையில்  தனது “அமைச்சர் பதவியை மட்டும் உடனடியாக ராஜினாமா செய்தால் போதும்” என்பதை “அன்போடு” தெரிவித்துக் கொள்வதோடு இனியாவது ஆதாரமற்ற தகவல்களை பொத்தாம் பொதுவாக பேசாமல் தனது பொறுப்பை உணர்ந்து பேசிட வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்… என்று கோரியுள்ளார்.

அடிமைக் கலாசாரம் தொடர்வதா?: ராமதாஸ் கண்டனம்

 

 

சென்னை:

அவை விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் விஷயத்தில்,  அடிமைக் கலாச்சாரம் தொடரக்கூடாதுஎன பாமக., நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று ஒரே நாளில் 5 துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும்வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்மூன்று மாதங்கள் தாமதமாக இப்போது தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசில் மொத்தம் 54 துறைகள்உள்ளன. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பேரவையில் விவாதித்து ஒப்புதல்பெறுவதற்காகவே மானியக் கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில்துறை சார்பில் செயல்படுத்தப் படவுள்ள திட்டங்கள் குறித்து அதன் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்; அது தான்முறை.

அதன்படியே பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, உயர்கல்வித்துறை, வனம் மற்றும்சுற்றுச்சூழல்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சி.சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜு ஆகியோர் பதிலளித்தனர்.  அதுமட்டுமின்றி, அந்த துறைகள் சார்ந்த அறிவிப்புகளையும் கடந்தவாரமே அவர்கள் வெளியிட்டனர்.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பங்குக்கு 5 துறைகள் சம்பந்தப்பட்ட  21 அறிவிப்புகளைநேற்று வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களே கடந்த வாரம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் முதல்வரே அனைத்து துறைகளில் அறிவிப்புகளையும் வெளியிடுவதுஅவை மரபுகளுக்கு பெருமை சேர்க்காது.

தமிழக சட்டப்பேரவை விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 208(1) பிரிவின்படி இயற்றப்பட்டவை ஆகும். பொதுமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டுமானால், அதை அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கலாம் என்றும், இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது என்றும் பேரவை விதிகளில்கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரிதிலும் அரிதாகவே விதி எண் 110 பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபாகும். எப்போதாவது செயல்படுத்தப்பட வேண்டிய விதியை எப்போதும் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது  அனைத்து அறிவிப்புகளும் தம்மால் தான் வெளியிடப்பட வேண்டும் என்றஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.  இப்போதுமுதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தம்மைவேட்டி கட்டிய ஜெயலலிதாவை நினைத்துக் கொண்டு, அதே அடிமைக் கலாச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். அதிமுகசட்டப்பேரவை உறுப்பினர்களையும், அமைச்சர்களையும்  கோடிகளையும், தங்கக் கட்டிகளையும் கொட்டிக்கொடுத்துவாங்கியதாலோ என்னவோ, அவர்களை தமது அடிமைகளாகவே எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். அரசியலில்எடப்பாடியை விட பழுத்த அனுபவமும், அறிவும் கொண்ட அமைச்சர்கள் கூட இந்த அதிகார அத்துமீறலை எதிர்க்கத்துணிவின்றி கோழைகளாக இருப்பது அவர்களுக்கு வேண்டுமானால் லாபம் தரலாம்; தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும்பயன் தராது.

ஜனநாயகத்தின் பெருமையே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது தான். அதற்கு மாறாக,  மாநில  முதலமைச்சர் என்றமுறையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையெல்லாம் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு அடிமையாக இருக்கும்ஒருவர், அமைச்சர்களின் அதிகாரங்களைப் பறித்து அவர்களை தமது அடிமைகளாக கருதுவது கேலிக் கூத்தின் உச்சமாகும். தமிழக சட்டப்பேரவை ஜனநாயகத்தின் தொட்டிலாகவும், அறிவார்ந்த விவாதங்களின் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தபெருமைக்குரியதாகும்.

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது. சட்டப்பேரவையில் அறிவார்ந்த விவாதங்கள் நடப்பதையும், அமைச்சர்களின் துறைசார்ந்த அறிவிப்புகளை அவர்களே வெளியிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

rama-gopalan
கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய தேசவிரோத சக்திகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் (18.7.2017) பாரத, பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் குழுக்களிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லீம்கள், `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்டும், நள்ளிரவில் வெடி வெடித்தும் கொண்டாடியிருப்பது முஸ்லீம்களின் மனோபாவம் இன்னமும் மாறவில்லை என்பதை காட்டுகிறது.
இதனை எந்த முஸ்லீம் அமைப்புகளோ, நடுநிலை முஸ்லீம்களோ, முஸ்லீம் அரசியல் தலைவர்களோ, அரசியல் கட்சியினரோ கண்டிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.
சமீபத்தில் வெளியிலிருந்து, சென்னை புழல் மத்திய சிறைசாலைக்குள் ஒரு பார்சல் வீசியேறிப்பட்டிருக்கிறது, அதில் பாகிஸ்தான் கொடிகள், செல்போன் போன்ற பொருட்கள் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளான குற்றவாளிகள், சென்ற ஆண்டைப்போல தற்போதும் சிறை வார்டன்களை, அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை இது சம்பந்தமாக எந்த வழக்கும் தொடரப்படவில்லை, இந்த சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைக்கும் உத்திரவவிடவில்லை. கோவை மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இடதுசாரி மாவோஸ்ட் நக்ஸல் பயங்கரவாதிகளை பார்ப்பதற்கு வந்த நக்ஸல் ஆதரவாளர்கள், முஸ்லீம்கள், அவர்களிடம் சிம் கார்ட், பென் டிரைவ் முதலானவை ரகசியமாக கொடுத்தப்போது மாட்டியுள்ளார்கள்.
இதிலிருந்து நக்ஸல் போன்ற நாசகார சக்திகளுடன் முஸ்லீம் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுகிறது.
இந்து முன்னணி, அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் செல்போனை செயலிழக்கச் செய்யும் அதிநவீன ஜாமர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் சிறைச்சாலைகளிலிருந்து முஸ்லீம், நக்ஸல் பயங்கரவாதிகள் வெளி ஆட்களிடம் பேசுவதை உளவுத்துறை கண்காணித்து, பயங்கரவாதிகளின் ஆதவாளர்களை, வெளியிலிருந்து உதவி செய்பவர்களை, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களின் சதி செயல்களை முழுமையாக முடக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
அதற்கு நவீன தொழில்நுட்ப கருவிகளை அளித்து காவல்துறைக்கு அளித்து, நவீன தொழில்நுட்பத்தை கையாளும் பயிற்சிகளையும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். இன்னமும் பழங்கால முறையில் காவலர்கள் கையில் லத்தியோடு, தகர டப்பா வைத்த சைக்கிளில் செல்லுவதைப் பார்த்தால், பரிதாபகரமாக இருக்கிறது. இதனாலேயே இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணிச்சலாக சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, சட்டவிரோத சலுகைகளை பெற்று வருகிறார்கள்.
எனவே, `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் போட்டு தேசவிரோதத்தைத் தூண்டிய முஸ்லீம்கள் மீதும், சிறையில் இருக்கும் முஸ்லீம் பயங்கர வாதிகளுக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் உதவுவோர் மீதும் கடும் நடவடிக்கைகளை இன்னும் ஒருவாரத்திற்குள் தமிழக அரசு எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அரசு மெத்தனமாக செயல்படுமேயானால், அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜிஎஸ்டி சட்டமும் நடைமுறையும்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

gst - 2026

GST RULES AND REGULATIONS

ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து
தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு
உள்ளோம்.

  1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.

  2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

  3. உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி
    விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு
    செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி
    செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில்
    மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ
    நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.

  4. Aggregated turnover என்பது taxable goods +exempted good +Zero rated
    goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல்
    இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில்
    எடுத்துக் கொள்ளப்படும்.

  5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password
    மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம்
    அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக
    பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த
    மாதத்திற்குண்டா ITC claim செய்ய முடியும்.

  6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.

– 1)CGST – Central goods and service tax.
– 2)SGST -State goods and service tax.
– 3)IGST – Integrated goods and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல்
குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும். IGST =CGST
+SGST.

IGST என்பது IT based centrally managed automated mechanism to monitor the
“Inter state sales and supply of goods and services.

  1. வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய
    நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர்.
    Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த
    வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.

  2. Invoice ல் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என
    குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம்
    வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். Packing
    charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை
    தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.

9.Invoiceகள் 3 copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து
முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller
ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference
number வாங்கி supplementary invoice போட்டு transport மூலம் சரக்குகள்
அனுப்பலாம். Supplementary invoice ல் orginal invoice number
குறிப்பிடவேண்டும். Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.

  1. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல்
    depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம்
    கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.

  2. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50
    லட்சம் ரூபாய் வரை “aggregated turnover” உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம்
    செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு
    வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள்
    மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று
    மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite
    scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம்
    செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை
    composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது
    நல்லது.

  3. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு
    வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில்
    மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும்.
    அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் turnover
    limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய்
    வரை வரி விலக்கு கிடையாது.

  4. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும்
    வியாபாரிகள் composition scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC
    எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும்
    Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை
    தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம்
    மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.

  5. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல்
    கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று
    தெரிந்து கொள்ளலாம்.
    அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து
    கொள்ளலாம்.

  6. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய்
    வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.

  7. Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில்
    கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி
    அபராதம் விதிக்கப்படும்.

  8. Inter state self supplies such as stock transfer will be taxable as a
    taxable person has to take state wise registeration.
    B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
    B2B means supplies to registered person. (i. e.)business to business men.

  9. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம்
    அமலுக்கு வந்த பின்னர் தங்களது stock பொருட்களுக்கு Input credit கோர
    முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு
    வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு Invoice ல் bill amount
    ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம்
    தேதிக்குள் செலுத்த வேண்டும்.

  10. வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST account code எழுத வேண்டும்.
    CGST -Tax 00010001,
    IGST -Tax-0002 0001
    SGST -Tax00030001
    Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account
    codeகள்உள்ளன.

  11. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில்
    அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய
    வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு
    என்பது கிடையாது.

21.Every registered taxable person whose aggregated turnover during a
financial year exceeds one crore rupees shall get his account audited and
he shall furnish a copy of audited annual accounts and a reconciliation
statement duly certified in FORM GSTR-9B,electronically through a common
portal.

  1. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
    unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி
    செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.

  2. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில்
    குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற
    இடத்தில் குறிப்பிடவேண்டும்.

24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை
கொடுக்கும் போது transporter கொடுக்கும் invoice ல் உள்ள tax யை ITC-யாக
எடுத்துக்கொள்ளலாம்.

  1. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல்
    செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று
    மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என
    ஒரு வருடாந்திர படிவமும்
    தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும்.
    வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.

  2. ஒரு வியாபாரி வேறு மாநில Consumer அல்லது unregistered person க்கு
    விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice
    details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு
    குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால்
    போதுமானது.

  3. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD
    மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால்
    Internet banking, credit card, debit card, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த
    வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து
    வரும் form உடன் பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
    விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.

  4. GST slab rates are
    5%,12%,18%,28%.

  5. Job work “service ” என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில்
    இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர்
    Unregistered job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன்
    சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.

  6. ஒரு unregistered jobworker – யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும்
    வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.

  7. நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி
    அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட
    தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST
    சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில்
    தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க
    வேண்டும்.

32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன்
receipt voucher கொடுக்க வேண்டும்.

  1. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off
    செய்து கொள்ளலாம்.

  2. நாம் வாங்கிய Raw Material (taxable goods )நமக்கு வேண்டாம் என்று
    வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி
    கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.

  3. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள்
    அனுப்ப முடியாது

  4. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை turnover செய்பவர்கள் Invoice ல் HSN code
    குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை turnover செய்பவர்கள்
    முதல் 2 degit HSN code குறிப்பிட வேண்டும்.

  5. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின்
    மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு
    பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

  6. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை
    மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.

  7. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம்
    செய்யும் உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது
    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer
மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.

  1. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு “reverse charge “முறையில் வரி
    விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.

  2. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக்
    கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகு‌ம்.
    Commission,freight, packing charges சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.

  3. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும்
    கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

  4. GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல்
    செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய
    வேண்டும்.

  5. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட
    பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால்
    அவர் Tax invoice க்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).

  6. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note
    /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.

  7. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம்
    வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில்
    தெரிவிக்க வேண்டும். Section 33.

  8. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ,
    அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

  9. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount
    (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு ) provisional ஆக எடுத்துச்
    கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section
    36

  10. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர
    ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.

  11. ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம்
    மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.

  12. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து
    ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63

  13. GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல
    கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க
    அரசுக்கு அதிகாரம் உள்ளது.

  14. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல்
    செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  15. GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ
    அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

  16. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம்
    விதிக்கப்படும். Section 85

  17. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும்
    அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு
    இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section
    86

  18. GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு
    செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து
    வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும்
    விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம்
    செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89

  19. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக
    இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  20. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு
    முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section

  21. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே
    அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.

  22. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங்
    செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2

  23. “Mutatis mutandis” means “the necessary changes having been made
    “.Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase
    செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.

  24. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது
    பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக்
    கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10 ம்
    தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க
    முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் mismatch என
    இருவருக்கும் notice வரும்.

  25. வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது “time of supply “என்பது invoice
    தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக்
    கொள்ளப்படும்.

  26. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம்
    போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் “Aggregated turnover “கணக்கிடும்போது
    சேர்த்துக் கொள்வர்.

67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய
registration செய்து கொள்ள வேண்டும்.

68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே
கொடுத்த invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு
கொடுக்கவேண்டும். Section 28

  1. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர்
    கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து
    தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம்
    கொடுக்க வேண்டும். Section 68

  2. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான
    நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே
    ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

Compiled by CA BABU K THEVAR.