Home Blog Page 5657

தண்ணீர் விற்பனையை தடை செய்ய வேண்டும்!

எம்.லட்சுமிநாராயணன் (கட்டுரையாளர்: கட்டுமானப் பாதுகாப்பு ஆர்வலர்)

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. இப்போது கோடைக்காலம் துவங்குகிறது. ஆனாலும்  கோடைக்காலம் முடிந்து பருவமழை நேரத்திலும் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியதை சென்ற வருடங்களில் பார்த்தோம். அப்படி இருக்கும்போது, இந்தக் கோடைக்காலத்தை எப்பாடி சமாளிக்கப் போகிறோம் என்பது நம்முன் உள்ள சவால்.

ஆடு மாடுகள் கால்நடைகள் குடிக்கக்கூட காசு கொடுத்து தண்ணீர் வாங்கவேண்டிய அவலம். பருவ மழை பொய்த்ததால் குடத்தால் தண்ணீர் விட்டாவது நெற்பயிரை காப்பாற்றிவிடமுடியுமா என்கிற பகீரத பிரயத்தனம். மணற்கொள்ளை, கழிவு நீர், இரசாயன விஷக்கழிவுகள், மனிதக்கழிவுகள் கலக்கும் கேடுகளால் இறந்து கொண்டிருக்கும் நதிகள்.

பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகவேண்டாம். தீர்வைச்சொல்லும் பிள்ளாய், என்று அனைவரும் ஆத்திரப்படுவது அவசரப்படுவது தெரிகிறது. இதற்கு அருமையான ஒரு தீர்வை இரண்டே ஆண்டுகளில் எட்டிவிட முடியும் என்றால் யார் இப்போது நம்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எண்ணிய எண்ணியாங்கு செய்யும் திண்ணிய மனமுடையோர் நாம் என்பதை நிரூபிக்க, உலகிற்கே வழிகாட்ட இதுதான் தருணம்.

முதலில் நதிகள் கழிவுநீர்த்தடங்களாக மாறுவதை ஒரேயடியாக நிரந்தரமாக தடுப்பது எப்படி?

இன்றைய மனிதன் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 15 லிட்டர் நீரை இயற்கைக்கடன், குளியலுக்கு என்று கழிவு நீராக மாற்றுகிறான். ஆற்றில் குளத்தில் குளிப்பவர்கள் சற்று குறைவாகத்தான் மாசுபடுத்துவார்கள் என்று சிலர் கூறலாம். தூய நீருடன் ஒரு இடத்திலிருந்து புறப்படும் நதி, ஒரு குடியிருப்பு, கிராமம் அல்லது நகரத்தைத் தாண்டி வரும்போது அப்பகுதிகளின் மொத்த கழிவு நீரையும் உள்வாங்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது. இரசாயன தொழிற்சாலைக் கழிவுகள், உலோகத் தொழிற்சாலை விஷக் கழிவுகள், நகராட்சி, மாநகராட்சி, பெரு நகர மக்களின் மனிதக்கழிவுகளைக் கொண்டுவரும் பாதாள சாக்கடைக் கழிவுகள் நதிகளில் நேரடியாக கலக்கின்றன. சில இடங்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் வைத்திருக்கிறார்கள். சீனப்பெருஞ்சுவரைவிட நீளமான தடுப்புச்சுவர்கள் நாடெங்கிலும் கட்டினாலும் கூட தடுக்கமுடியாது என்பதுதான் நிஜம். கங்கை நதியை தூய்மையாக்க ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவானாலும் செய்யத்தயார் என்கிறது மத்திய அரசு. பல நாடுகள் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயார் என்று முன்வருகின்றன. கழிவுகள் கலந்தபின் மொத்த நதியையும் தூய்மையாக்குவது என்பது புராண கதையில் தேவர்களும் அசுரர்களும் வங்கக்கடலை கடைந்தது போலத்தான். ஒரு பகுதியில் சுத்தம் செய்தால் வேறொரு இடத்தில் நதி மாசடையலாம். ஊழல் மலிந்திருப்பதால் நதிகளைத் தூர் வாருகிறோம் என்று சொல்லி காசை வாரிவிடுவார்கள். வேறு என்ன தான் செய்வது?

நதிகளின் இரு கரைகளிலும் நதியின் போக்கிலேயே இரண்டு இரட்டைக் குழாய்களைப் பதிக்கவேண்டும். ரயில்வே தண்டவாளம் போன்று. நதிக்கு இணையாகவே செல்லும் இந்த இரட்டைக் குழாய்களுக்கு நடுவில் நதி பயணிக்கும்படி குழாய்கள் அமையவேண்டும். ஆற்றங்கரையைவிட குழாய் மட்டம் சிறிது தாழ்ந்து இருக்கவேண்டும். நதியில் கலக்க வரும் கழிவுகள் முதல் குழாயில் புகுவதற்கு வழி அமைக்கப்படும். எங்கெங்கெல்லாம் கழிவு நீர் வருகிறதோ, அது முதல் குழாயிலேயே புகும். ஆற்றின் போக்குப்படியே குழாய்கள் பதிக்கப்படுவதால் கழிவு நீர் தங்கு தடையின்றி குழாய் வழியாக பயணிக்க ஏதுவாகும். குழாயின் ஒருபுறத்தில் உள்ளே புகும் கழிவு நீர்  அடுத்த இடத்தில் புக இருக்கும் துவாரம் வழியாக  வெளியேறாமல் இருக்க, ஒருவழிப்பாதை வால்வு தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் பல இடங்களிலிருந்தும் குழாயில் புகும் கழிவு நீரை குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு அளவுள்ள வடிகட்டிகள் அமைத்து திடக்கழிவுகளை முதலில் அகற்றிவிடவேண்டும். இவ்வாறு திடக்கழிவு நீக்கப்பட்ட நீர் இணையாக இருக்கும் மற்றொரு குழாய்க்குள் செலுத்தப்பட வேண்டும். அந்த நீரை குறிப்பிட்ட மைல்கள் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ள சுத்தகரிப்பு நிலையங்களில் சுத்தப்படுத்தப்பட்டு ஏரிகள், குளங்கள், குட்டைகள், சிறிய நீர் நிலைகளில் தேக்கியது போக மீதியை பாசனத்திற்கு திருப்பி விடவேண்டும். இதன் மூலம் பெருவாரியான தரிசு நிலங்களைக்கூட விளைநிலங்களாக ஆக்க முடியும். சுத்தப்படுத்தப்பட்ட இந்த நீர் நமது பாசன தேவை அளவுக்கு நிகராக இருக்கும். கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுவதால், நதிகள் உடனடியாக தாமாகவே சுத்தமாகிவிடும்.  நதி நீரைவிட கழிவு நீர் அதிகம் இருந்தால் குழாய்களின் எண்ணிக்கையை அதிகமாகுவதன் மூலமோ, வடிவில் பெரிய குழாய்களைக்கொண்டோ அல்லது கூடுதல் சுத்தகரிப்பு நிலையங்களை அமைத்தோ சமாளித்து விடலாம். கழிவு நீர் கலந்த மொத்த நதி நீரையும் சுத்தமாக்குவதென்பது விழலுக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றதாகும். அதுமாதிரி முயற்சியில் நாம் இறங்கக்கூடாது. ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி மூலம் அழிக்கப்பட்டு வரும் விளை நிலங்களுக்கு ஈடாக அதைவிட அதிகமான தரிசு நிலங்களை பாசனம் மூலம் விளை நிலங்களாக மாற்றமுடியும். மிக முக்கியமாக நதி நீரை குடிநீர்த் தேவைக்கு மட்டும் பயன்படும்படி ஆக்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி கொடுக்காமல் குட்டைகள், குளங்கள், ஏரிகளை 100 நாட்கள் வேலைத்திட்ட மக்கள் உதவியுடனும் அரசு மானியத்துடனும் அமைக்க வேண்டும்.

வெல்வதற்கு பகைவர்களோ வேறு அண்டை நாடுகளோ இல்லாமல் போனதால், இராஜேந்திர சோழன், படை வீரர்களைக் கொண்டு வீராணம் ஏரியை வெட்டி உருவாக்கியதாக அறிகிறோம். அது 1000 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று மாபெரும் சென்னை நகருக்கே குடிநீர் தரும் அட்சய பாத்திரமாக திகழ்வதைக் காண்கிறோம். ஒரு மாநில அளவுள்ள பகுதியை மட்டுமே ஆண்ட சோழ மன்னன் செய்ததை மாபெரும் இந்திய சாம்ராஜ்யம் செய்ய முடியாதா? முடியும்! முடியும்!! முடியும் என்பதே உண்மை.

கழிவுநீர்த் தடுப்புக்குழாய்கள், சுத்தகரிப்பு நிலையங்கள் அமைப்பது நிரந்தரத் தீர்வு மட்டுமல்ல ஒருமுறை மட்டும் செய்யப்படும் செலவுதான். பராமரிப்பு + செயலாக்கத்திற்கு ஆகும் செலவை விட பயன் அதிகம். தரை நீர் மட்டம் உயரும். மின்சாரப் பயன்பாட்டளவு மிகவும் குறையும். சேமிப்பாகும் மின்சக்தி நாட்டின் உற்பத்தியை பெருக்க உதவும். விளை நிலங்கள் பெருகும். கூவம் நீரையே குடி நீராக்கமுடியும் என்றால் நமக்கு வேறென்ன வேண்டும்? அண்டை மாநிலங்களையே நம்பியுள்ள  நம் தமிழகம், ஏன் நாமே  நமக்கு என்ற கோட்பாட்டை உருவாக்கிக்கொள்ள முடியாது? குடி நீர்த் தேவை போக எஞ்சியுள்ள நதி நீரை அரபு நாடுகளுக்கு அனுப்பி பெட்ரோலியத்தை மாற்றாக பெறலாம். அரபு நாடுகள் கடல்நீரை குடி நீராக ஆக்க மிக அதிகம் செலவழிக்கிறார்கள்.

நாம் நம் உள்நாட்டில் காசுக்கு தண்ணீர் வாங்குவது என்ற அநியாயத்தை தொடரவிடக்கூடாது. பாட்டிலில், கேனில், லாரியில் எந்த உருவிலும் தண்ணீரைக் காசாக்க விட அனுமதிப்பது பாபகரமான செயலாக கருதப்பட வேண்டும். ஒரு காலத்தில் உணவையே தானமாகத்தான் கொடுக்க வேண்டும், விற்கக்கூடாது என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது நம் பாரத  நாட்டில்தான். பிரயாணிகள் வசதிக்காக குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவு விற்பனை தற்போது முன்னணி வியாபாரங்களில் ஒன்று. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தண்ணீர் வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

காசைத் தண்ணீராக வீணடிப்பதாக பெரியவர்கள் முன்பு கூறுவதைக் கேட்டிருப்போம். இன்று தண்ணீரை காசைப்போன்று பாதுகாத்து சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

Author email id: m_lakshyan@rediffmail.com

 

கல்லங்குறிச்சி கலி யுக வரதர் கோயில் பெருந்திருவிழா கொடியேற்றம்

அரியலூர்-கல்லங்குறிச்சி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
*அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று அதிகாலை துவங்கியது.
*இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
*10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருத்தேர் விழா வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
*அன்றைய தினம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 ரூபாய் நோட்டு அச் சிட ரிசர்வ் வங்கி முடிவு

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு புதிய ரூ.500 ரூ.2,000 நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
என்றபோதிலும், முன்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அளவிற்கு புதிய ரூ.500, 2,000 நோட்டுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இன்னும் பணப் புழக்கத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. தவிர, கடந்த மாதம் 13–ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு முற்றிலுமாக தளர்த்தப்பட்ட போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையை தவிர்ப்பதற்காக புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. கடந்த மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடுவது குறித்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது. இந்த பரிந்துரை நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய 200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி ஜூன் மாதத்துக்கு பிறகு தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து உடனடியாக இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது ஒப்புதலை அளிக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக புதிய ரூ.200 நோட்டு அச்சிடும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.200 நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு நாட்டில் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

வாக்காளர்க்கு தினகரன் தரப்பு பரிசுப் பொருள்: வருமான வரித் துறை சோதனை

சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களை அதிமுக அம்மா கட்சியின் போட்டியிடும் டி.டி.வி தினகரன் தரப்பு சென்னை பார்க் டவுனில் உள்ள சிதம்பர பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மொத்த விலை கடையில் இருந்து சப்ளை செய்வதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடை உரிமையாளரிடம் தொடர்ந்து 7 மணி நேரமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..

சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு தயாராக வைத்து இருந்த குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமானவரித்துறை உதவி ஆணையர் சந்திரமௌலி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனைவி கிறிஸ்துவர் என்பதால் தொல்லை தருகிறார்: திருச்சி சிவா மகன் புகார்

திருச்சி திமுக எம்பி சிவாவின் மகன் திருச்சி பிரஸ் கிளப்பில் காதல் மனைவியுடன் செய்தியாளர் சந்திப்பு.

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பிரதியுஷா என்ற கிரிஸ்துவ பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க திருச்சி சிவா மறுத்து விட்டார்.

இதைதொடர்ந்து சூர்யா சிவாவும் பிரதியுஷாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே இருவருக்கும் திருச்சி சிவா பல இடையூறுகளை தருவதாக சூர்யா சிவா குற்றம் சாட்டி  வந்தார்.

இந்நிலையில், இன்று சூர்யா சிவா திருச்சி பிரஸ் கிளப்பில் காதல் மனைவியுடன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…
எனது காதல் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனது தந்தையான எம்பி சிவா ஏற்க மறுக்கிறார். மேலும் எங்களை வாழ விடாமல் மிரட்டி வருகிறார்.

மனைவியின் உயிருக்கு ஆபத்து என்பதால், அவரை காப்பாற்றவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறையிடுகிறேன்.

என் அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக்கு பிடித்த தலைவர் என்பதால் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். அதிமுகவில் சேரும் திட்டம் எதுவுமில்லை என்றார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் புகார்: பாஸ்போர்ட், க்ரெடிட் கார்ட் தொலைந்ததாம்!

அமெரிக்காவில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவற்றை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொலைத்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் இசைக் கச்சேரிக்காக சென்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது பை திருடு போனதாக தெரிவித்துள்ளார்.

திருடு போன எஸ்.பி.பியின் பையில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேட் உள்ளிட்டவை இருந்தன என்று தெரிகிறது.

அண்மையில் இவர் இளையராஜாவுடன் பாடல் உரிமைப் பிரச்னை குறித்த விவாதத்தைக் கிளப்பி பரப்பரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

MCI cancel admissions around 500 students in TN who allegedly not appeared for NEET

The Medical Council of India (MCI)has directed some private colleges in Uttar Pradesh and Tamil Nadu to cancel admissions of around 500 students who had allegedly not appeared for NEET exam last year.
 
According to a senior MCI official, these are suspected to be backdoor admissions allegedly done after receiving capitation fees as these states were among those who had optedfor NEET.
 
Around 17 to 18 private colleges in UP have been issued notices asking them to cancel the admissions of over 400 students, MCI secretary Dr Reena Nayyar said.
 
Similarly, in the line of fire is a private college in Tamil Nadu which has been issued a discharge notice to cancelthe admission of around 36 students as it was allegedly done in violation of norms.
 
“The monitoring committee of MCI found that these institutes have admitted students who did not appear for the NEET exam despite the states opting for NEET,” said Dr Nayyar.
The Centre had last year given state governments the option to either conduct their own exams or opt for NEET to fill undergraduate seats.
 
The committee, Nayyar said, is keeping an eye on admissions in all the medical colleges across the country and is yet to find out the exact numbers of students who did not appear in the NEET but still got admission.
 
“Such admissions are illegal as the concerned states hadopted for NEET and so they cannot bypass it,” she said.
The Dental Council of India (DCI) is also examining the admissions in dental colleges across India.
“We have received complaints about illegal admissions in dental colleges in states like Rajasthan and Madhya Pradesh and we are scrutinizing such admissions which were doneignoring NEET,” Dr A K Chandna, a member of DCI, said.
 
The government, through NEET, is aiming to bring in moretransparency and eliminate the practice of capitation fee charged by private colleges.

‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’!

தேனிலவு செல்லும்  புதுமண தம்பதிகளின் ஈகோ யுத்தமே  ‘பூம் பூம் காளை’..!
 
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.
காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார்  இயக்குனர் R.D.குஷால் குமார்.. ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்..
நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.
இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா  இல்லையா என்பதை  நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக  சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவராக  நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு: K.P.வேல்முருகன்
படத்தொகுப்பு: யுவராஜ்
இசை: P.R.ஸ்ரீநாத்
பாடல்கள்: S.ஞானகரவேல்

தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த தினகரன் முயல்வதாக குற்றச்சாட்டு

சென்னை:

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த முயற்சி செய்துவருகிறார் என்று ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தினகரன் மீது ஓ.பி.எஸ் அணியும், ஓ.பி.எஸ் அணி மீது தினகரன் தரப்பும் மாறி மாறி புகார்களை கூறிவருகிறார்கள். சமீபத்தில் இரட்டை மின் கம்பம் சின்னத்தை, ஓ.பி.எஸ் அணியினர் இரட்டை இலை சின்னத்தை போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என தினகரன் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது.

அதனையடுத்து இதுபற்றி விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்த வில்லை எனவும், தினகரன் தரப்புதான் பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் அளித்திருந்தர். மேலும், அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அங்கு தேர்தலை நிறுத்த தினகரன் அணியினர் முயற்சி செய்வதாக ஓ.பி.எஸ் அணி சாரிபில் மைத்ரேயன் எம்.பி. தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இரு அணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.டி.ராஜேந்திர பால ாஜி மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட A.E.கோவில் தெருவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரன் பிரச்சாரம் செய்து வந்தார். அதே பகுதியில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக பொம்மி,உமையாள் என்ற பெண் நிர்வாகிகள் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களைப் பார்த்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.டி.ராஜேந்திரன் உமையாள் என்ற பெண்ணின் மூக்கில் குத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உமையாள் மற்றும் பொம்மி இருவரும் தண்டையார்பேட்டை H-3 காவல் நிலையத்தில் அமைச்சர் மீது புகார் மனு அளித்துள்ளனர்.