Home Blog Page 5658

கே.டி.ராஜேந்திர பால ாஜி மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட A.E.கோவில் தெருவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரன் பிரச்சாரம் செய்து வந்தார். அதே பகுதியில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக பொம்மி,உமையாள் என்ற பெண் நிர்வாகிகள் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களைப் பார்த்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.டி.ராஜேந்திரன் உமையாள் என்ற பெண்ணின் மூக்கில் குத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உமையாள் மற்றும் பொம்மி இருவரும் தண்டையார்பேட்டை H-3 காவல் நிலையத்தில் அமைச்சர் மீது புகார் மனு அளித்துள்ளனர்.

தென்னிந்திய லாரி உ ரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம் தொடரும்: சண்முகப்பா அறிவிப்பு

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம் தொடரும் என சண்முகப்பா அறிவித்துள்ளார். ஹைதெராபாத்தில் நடந்த இன்சூரன்ஸ் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் லாரி உரிமையாளர் சங்கம்  முடிவு செய்துள்ளது. போராட்டத்திற்கு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் சண்முகப்பா கூறியுள்ளார்._
_கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், 8-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஓடாது என்றும் சண்முகப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் பிரீமியத் தொகை, சுங்கக் கட்டண உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்._

எஸ்.பி.ஐ-யின் துணை வ ங்கிகளில் பணி புரிந்த 2,800 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற முடிவு

மும்பை,
பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) யுடன் அதனுடன் தொடர்புடைய ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் &ஜெய்ப்பூர் (எஸ்.பி.பி.ஜே.), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்.பி.எம்.) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்.பி.டி.) மற்றும் கூடுதலாக பாரதீய மஹிலா பங்க்(பி.எம்.பி) ஆகிய வங்கிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி இணைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், துணை வங்கிகளில் பணியாற்றிய ஊழியர்களில் 2,800பேர் வி.ஆர்.எஸ் பெற முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊழியர்கள் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை வி.ஆர்.எஸ் பெறுவதற்கான முடிவு எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து துணை வங்கிகளில் பணியாற்றிய 12,500 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர். வி.ஆர்.எஸ் பெறுவதற்கு சில விதிமுறைகளை வங்கி வகுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியும் 55 வயதை பூர்த்தி செய்துள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தகைய தகுதி கொண்டவர்கள் வி.ஆர்.எஸ் பெறலாம்” என்றார்.
துணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு ஸ்டேட் வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை 2,70,011 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 69,191 துணை வங்கிகளின் ஊழியர்களும் அடங்கும். 24 ஆயிரம் கிளைகள் கொண்ட ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 59 ஆயிரம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்கள் உள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கான கற்களை எடுத்துக் கொடுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

போராட்டம் போதும்; நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறைகூவல்
உதம்பூர்: ”போராட்டத்தில் ஈடுபடும் ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கற்கள் மூலம் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க முன் வாருங்கள்” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு – ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நாட்டிலேயே முதலாவது மற்றும் ஆசியாவிலேயே மிக நீளமான செனானி – நாசரி சுரங்க சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதன் பின்னர், அந்தச் சாலையில் பயணம் செய்த அவர் உதம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது,

கடந்த 40 ஆண்டுகளாக, இந்த மாநிலத்தில் பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். அதனால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் சுற்றுலா வளர்ச்சியில் ஈடுபட்டிருந்தால், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக ஜம்மு – காஷ்மீர் உருவாகியிருக்கும். நாட்டின் மற்றும் ஜம்மு – காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துடன் இந்த சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான இந்த திட்டப் பணியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்களைப் பாராட்டுகிறேன்.

ஒரு பக்கம் இளைஞர்கள் கற்களால் வளர்ச்சிப் பணியில் ஈடுபடும் அதே நேரத்தில் சில அப்பாவி இளைஞர்கள், சிலரின் தவறான  துாண்டுதலால், கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாதவர்களின் தவறான துாண்டுதலில், காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சியைக் காண முடியாது.

‘காஷ்மீரம், ஜனநாயகம், மனித நேயம்’ ஆகியவை ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அந்த கோஷத்தின்படி, மாநிலத்தின் வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சியின் மூலமே, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த சுரங்க சாலை, மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது, இதுவரை தங்கள் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்த ஜம்மு – காஷ்மீர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, இந்த சுரங்க சாலை உயர்த்த உள்ளது.

இது வெறும் ஒரு வளர்ச்சி திட்டம் மட்டுமல்ல. இது ஒரு துவக்கத்தின் ஆரம்பம்தான். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், மேலும், ஒன்பது சுரங்க சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்… என்று பேசினார் மோடி.

இந்த விழாவில்,  மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை

புது தில்லி:

ஆர்.கே. நகர் தொகுதியில், பண விநியோகம் தாராளமாக நடைபெறுவது குறித்தும் முறைகேடுகள் குறித்தும், அங்கு நடைபெறும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயரதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.  கரகாட்டம், குத்தாட்டம், ஆடல், பாடல், ரெக்கார்ட் டான்ஸ் என களைகட்டியுள்ள இத் தொகுதியில், பணப்பட்டுவாடாவும் அதிகரித்துள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பதற்றத்தில் பண விநியோகம், பொட்டிக்கடைகளிலும் மளிகைக் கடைகள் மூலமாகவும் கூட நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருமானவரித்துறை இயக்குநர், உள்துறைச் செயலாளர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

செல்பி எடுக்க முயன ்றவரை குதிரை கடித்துக் குதறியதால் பரபரப்பு

செல்பி எடுக்க முயன்ற வாலிபரை குதிரை கடித்துக் குதறிய சம்பவம், கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_*⭕கண்ணூர்*_
இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் செல்பி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. 
சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அந்த வரிசையில், குதிரையுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை அந்த குதிரை கடித்து காயப்படுத்திய சம்பவம் கேரளா மாநிலத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சாஜித்(வயது 37). நேற்று மாலை 7 மணியளவில் இவர் அப்பகுதியில் உள்ள பய்யம்பலம் கடற்கரையில் நின்று தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கிருந்த குதிரையின் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ள சாஜித் விரும்பியுள்ளார். 
தனது ஆசைப்படி குதிரை முன்னால் சாஜித் செல்பி எடுக்க முயன்றபோது, குதிரை அவரை கடித்துள்ளது.
இதனைக்கண்ட அவரது நண்பர்கள் வேகமாக ஓடிவந்து குதிரையின் வாயிலிருந்து சாஜித்தைக் காப்பாற்றி அருகிலிருந்த மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். 
குதிரை கடித்ததில் அவரது மார்பில் காயம் அதிகமாக இருந்ததால் தற்போது கோழிக்கோடு மருத்துவமனைக்கு சாஜித் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு ரேடார் வடிவமைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது

நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய ரேடாரை வடிவமைத்து சாதனை படைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டு உள்ளது.


திருநெல்வேலி  மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர்பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவரது தலைமையிலான குழுவினர், 5 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடார் வடிமைத்து வந்தனர். இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு ரேடார் ஒப்படைக்கப்பட்டது. இதனை பாதுகாப்புத்துறை சோதனை செய்து அதன் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரித்தது. இந்திய தொழில்நுட்பத்தில்இந்தியாவிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்ட ஆரூத்ரா என்ற இந்த ரேடார் கடந்த குடியரசு தினத்தன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த விழாவில்நாட்டின் பாதுகாப்பிற்கான ரேடாரை வடிவமைத்த ஞானமிக்கேல் பிரகாசத்திற்கு அக்னி விருதை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வழங்கி பாராட்டினார். இந்த ரேடார் மூலம்இந்தியாவிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச்செலாவணி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி விருது பெற்ற ஞானமிக்கேல் பிரகாசம்கீழப்பாவூர் ஆர்சி துவக்க பள்ளியில் ஆரம்பக்கல்வியும்பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வரை தமிழ் வழியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது  ரேடார் ஆராய்ச்சி துறையில் 30க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார். சிஸ்டம் ஜெனரேட்டர் என்ற நூலை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். இவரது ஆராய்ச்சி முடிவுகள் நாட்டின் பாதுகாப்புத்துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

தேக்கடியில் துவங்க ுகிறது மலர்க் கண்காட்சி

தேக்கடியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களுடன் நாளைமுதல் மலர் கண்காட்சி துவங்குகிறது. கேரள மாநிலம், தேக்கடியில் 11வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது.  இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள், நூற்றுக்கணக்கான மூலிகைச்செடிகள், அலங்கார மற்றும் தோட்டச்செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் இடம் பெறுகின்றன. மேலும் வேளாண் கருத்தரங்கம், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டி, சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளன. கண்காட்சி நாளை தொடங்கி ஏப். 23ம் தேதி முடிவடைகிறது.

தனித் தேர்வர்கள் க வனத்துக்கு: இன்று 8ஆம் வகுப்பு முடிவுகள்

ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பவுள்ளன.
இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்கக மண்டலத் துணை இயக்குநர் தேவவரம் இனிய வேந்தன் கூறியது: 4.1.2017 முதல் 9.1.2017 வரை நடைபெற்ற 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேவர்களின் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதிய தனித்தேர்வர்கள் என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி மாதம், ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் விவரங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் .

திருவானைக்காவல் கோ யில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வர-அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. 

இந்த ஆண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 23-ந் தேதி கோவிலின் 8 திசைகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  28-ந் தேதி நடந்தது. 

தேரோட்டத்தையொட்டி சுவாமி ஒரு பெரிய தேரிலும், அம்பாள் மற்றொரு பெரிய தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகரும், சுப்ரமணியரும் சிறிய தேரில் புறப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். 
அதன்பின்னர், காலை 5.45 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய 4 பிரகாரங்களில் வீதி உலா வந்தது. காலை 7 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பின்னர் காலை 7.30 மணிக்கு அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதன் பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர். இரண்டு தேரும் காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. 
தேரோட்டத்தை யொட்டி அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல மேளதாளங்கள், வாண வேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர்.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்று விண்ணதிர கோஷம் எழுப்பி தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். 
தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும் தான். 
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்ரியா உள்துறை மேலாளர் ஆறுமுகம் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.