Home Blog Page 5977

இந்தியாவின் விவசாய பாரம்பரியம்

இந்தியாவில் விவசாயம் புதியதாக தற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை அது புதிய கற்கால காலமான 7500 – 6500 கி.மு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டு வருகிறது. அக்காலத்தில் மனிதன் , காட்டு பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான். பெரிய ஞானிகளின் முயற்சியினாலும், கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது. அவர்களின் முயற்சியினால் பெற்ற முறைகளை, அடுத்த தலைமுறையினரால் பின்பற்றப்பட்டு வந்தன. பழைய காலத்தில் விவசாயிகள் கலப்பு பண்ணை, கலப்பு பயிர்கள், பயிர் சுழற்சி போன்ற இயற்கைக்கு தீங்கு சேர்க்காத விவசாய முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர்.

இந்தியாவில் பழங்கால விவசாயிகளின் ஆழ்ந்த அறிவினால் பழைய இந்தியா வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அவர்களின் அனுபவங்களை, தற்போதைய புதிய தலைமுறையினர், அதன் பலன்களை அறிந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பழைய காலத்து விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்ட விவசாய முறைகள் தற்சமயம் அங்கக வேளாண்மை என்ற புதிய முறையாக பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.

விவசாயமானது, நல்ல மண் கொண்ட மலையடிவாரப் பகுதியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதியில், நீரை கட்டுப்படுத்த, நிறைய ஆற்றலும், புதிய தொழில்நுட்பங்களும் தேவைப்படுவதால் அங்கு ஆரம்பம் ஆகவில்லை.வேதகால விவசாயிகள், மண்வளம், விதை தேர்வு, விதைப்பு பருவம், அறுவடை, உரமிடுதல் போன்ற வேலைகளில் சிறிதளவு தெரிந்து கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள், பயிர் சுழற்சியினால், மண் வளத்தை மேம்படுத்த முடியும் எனவும் அறிவர்.

அவர்கள் 3 ஆண்டு பயிர் சுழற்சி முறையில், ஆழ் வேர் செடிகள், குறைந்த வேர் செடிகள் மற்றும் பயறு வகை பயிர்கள் இடம் பெற்று இருந்தன. கோதுமை-பட்டாணி, கரும்பு – பசுந்தாள் உரச் செடி, கோதுமை – துவரை, சோளம் போன்ற பயிர்கள் பயிர் சுழற்சியில் இடம் பெற்று வந்தன. கலப்பு பண்ணையில் பயிருடன் கால்நடை வளர்ப்பு செய்து வந்தனர். கலப்பு பயிர் முறையானது, பலதரப்பட்ட பயிர்களை கலந்து செய்வது அனுமதிக்கப்பட்டது. கோதுமையுடன் பட்டாணி மற்றும் இதர பயறு வகைகளை கலந்து பயிர் செய்தால், கோதுமையின் தழைச்சத்து தேவையை பயறு வகையினால் நிரப்பப்படுகிறது. சோளம்+துவரை+தட்டைப்பயறு, உளுந்து/பாசிப்பயிறு + Sorgham/ கம்பு, கோதுமை + பட்டாணி கோதுமை + பேய் எள் போன்ற பயிர் கலப்புகள் செய்யப்பட்டு பயிரிடப்பட்டு வந்தனர். ஆனால், பொதுவாக, தனி பயிர் முறை அங்கீகரிக்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஜெயிலுக்கு போவார்: சுப்பிரமணியன் சுவாமி

 
தமிழக முதலமைச்சர் மீண்டும் ஜெயலலிதா சிறைக்கு போவார் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
 
நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு வந்த சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் வருகிற 2016 தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். இதை தேசிய செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
 
1½ ஆண்டுகால மோடி ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. அதிமுக, திமுக கட்சிகள் ஊழல்கட்சிகள்.
 
தமிழ்நாட்டில் இந்து மறு மலர்ச்சி ஏற்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் பாஜக வை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
 
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விவாதம் வருகிற 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தொடங்குகிறது. பிப்ரவரியில் தீர்ப்பு வரும்
 
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும். மீண்டும் தமிழக ஜெயலலிதா சிறைக்குப் போவார் என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

தமிழர்களின் கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடரவேண்டும் : நடிகர் கமல்ஹாசன்

 
 
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடக்கிறது. இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். புகைப்பட கண்காட்சியையும் அவர் சுற்றிப் பார்த்தபின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
 
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடரவேண்டும்’’ என்றும் ஜல்லிக்கட்டு, விலங்குகளை ரொம்ப தொந்தரவு செய்கிற விளையாட்டு என்று பலபேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்பெயினில் அது உண்மையாக இருக்கலாம். இத்தாலியிலும் உண்மையாக இருக்கலாம்.
 
என்ன நடக்கிறது என்று தெரியாமல் அங்கு விலங்குகள் மிரண்டு ஓடும். அதை நான் பார்த்து இருக்கிறேன். மிருகங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுப்பது இல்லை. அதை ஒரு விளையாட்டாகவும் அவர்கள் பார்ப்பது இல்லை. அங்கு நடப்பது போல் மாடுகள் மேல் ஆணியால் கீறி கொல்வது போன்றது அல்ல, ஜல்லிக்கட்டு.
 
இது தமிழர்களின் வீர விளையாட்டு. ஜல்லிக்கட்டின் நற்றமிழ் பெயர் ஏறு தழுவுதல் என்பதாகும். மாடுகளை தழுவி பிடிக்க வேண்டும். கொம்பை பிடித்து முறுக்குவதோ மாட்டை கொலை செய்வதோ அல்ல.
 
அமைதியான காலங்களில் இளைஞர்கள் மோதலில் ஈடுபடாமல் இருந்து பயந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களின் தசை நார்களை பதம் செய்வதற்காக மாடுகளைத்தழுவும் ஒரு வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. அது தொடரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. அதனால் தான் இங்கு வந்தேன்.
 
 
ஜல்லிக்கட்டு என்பது புராதன விஷயம். அது மேற்கத்திய சிந்தனைகளால் அடிபட்டு போய்விடக்கூடாது. சுற்றுலாப்பயணிகளை கவருகின்ற விளையாட்டு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் இந்த ஜல்லிக்கட்டு நமக்கு என்று இருந்துவிட்டுப் போகட்டும்.
 
கலாசார, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை தடுக்க வேண்டாம் என்று ஏறு தழுவும் தமிழனாக கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே விழுங்க நினைத்தவர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் காமராஜ்

 
 
குடவாசல் சீரணி அரங்கத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 44–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின் என பேசினார்.
 
கூட்டத்திற்கு குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உறுப்பினர் கோபால் ஒன்றிய செயலாளர்கள் குருமூர்த்தி, நன்னிலம் ராம.குணசேகரன், சி.பி.ஜி.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திரைப்பட நடிகர் ராமராஜன், திரைப்பட இயக்குனர் லியாகத்அலிகான், உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினர்.
 
அப்போது அ.தி.மு.க.அமைச்சர் காமராஜ் கூறியதாவது:–
 
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். இந்த பகுதியில் கல்லூரி வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் கூறியபோது அதை தான், முதலமைச்சரிடம் கூறினேன். அதனை உடனடியாக கொடுத்தவர் முதலமைச்சர். அந்த கல்லூரி இன்று புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் இப்பகுதி ஏழை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்தவர் தான் நமது முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை நான் நன்றியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
 
 
தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை போன்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க கூடிய வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கும் சட்டசபையில் கையெழுத்திட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே விழுங்க நினைத்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க தடைபெற்றவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சிக்கு நீங்கள் என்றும் ஆதரவு தந்து 234 தொகுதிகளையும் வெற்றி பெற செய்து தி.மு.க. மற்றும் எதிர்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காத வகையில் செய்திட நாம் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என அமைச்சர் காமராஜ் பேசினார்.
 
கூட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மத்திய படை பாதுகாப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

 சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய படை பாதுகாப்பு கோரிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக போலீஸார் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சோதனை அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும். இதுதொடர்பாக மத்திய – மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மக்கள் நல கூட்டு இயக்கத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் : வைகோ

 
 
 
மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அதன் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். சென்னையில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமையகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
 
இதில் மதிமுக கொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அப்போது மக்கள் நல கூட்டு இயக்கத்தின் 24 அம்ச குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்றார். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அவர் தெரிவித்தார்.
 
கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இணையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகும் மக்கள் நல கூட்டு இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெரிவித்தார். விலைவாசியை கட்டுபடுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டுகொள்ளாத காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? : பிரதமர் மோடி கடும் தாக்கு

 
 
 
கடந்த 1984ம்ஆண்டு தலைநகர் டெல்லியிலும் இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்து காங்கிரஸ் சகிப்புத்தன்மை குறித்து பேசுவதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பீகார் மாநிலத்திலத்தில் 243சட்ட தொகுதிகளுக்கு 5கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த அக் டோபர் மாதம் 12ம் தேதி துவங்கிய தேர்தல் தற்போது இறுதி கட்ட நிலையை நெருங்கியுள்ளது. 5வது இறுதி கட்ட தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது.
 
4வது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக இருந்தபோதும் பின்னர் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் 4வது கட்ட வாக்குப்பதிவில் 57 சதவீதம் பதிவாகியுள்ன
 
இந்த சட்டசபைத்தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து மெகா கூட்டணி போட்டியிடுகிறது இந்த மெகா கூட்டணியில் பீகாரை தற்போது ஆட்சி செய்து வரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
 
கடந்த ஆண்டு மக்களவைத்தேர்தல் நடைபெற்ற போது பீகாரில் பிரதமர் மோடி தீவிரப்பிரச்சாரம் செய்தார் . இதனால் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. எனவே தற்போதைய சட்ட சபைத்தேர்தலிலும் மோடியை நம்பி பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கியுள்ளது. மோடியும் அதிக அளவில் பிரச்சாரக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சகிப்புத்தன்மை இல்லாத கட்சி என்கிற விதத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன
 
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி நேற்று பீகாரில் உள்ள புர்னியாவில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பதிலடி தந்தார். அப்போது அவர் கூறியதாவது, சகிப்புத்தன்மை குறித்து காங்கிரஸ் பேசுகிறது . கடந்த 1984ம்ஆண்டு டெல்லியிலும் இந்தியாவின் இதரப்பகுதிகளிலும் சீக்கியர்கள் லட்சகணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் 2வது 3வது 4வது நாளில் சீக்கியர்கள் அதிக அளவில் கொல்லப்பட்டார்கள்.அதே காங்கிரஸ் கட்சி தற்போது சகிப்புத்தன்மை குறித்து பேசுகிறது.
இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் கண்ணீர் ஈரம் இன்னும் காய வில்லை.அப்போது ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை.பீகார் சட்ட சபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40இடங்களை ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அளித்துள்ளன., இதற்கு அந்த கட்சிகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
 
காங்கிரசுக்கு நீங்கள் ஒதுக்கிய இடங்கள் பாஜ கட்சிக்கு கிடைக்கும்.லல்லு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் நீண்ட காலமாக காங்கிரசிற்கு எதிராக போராடியவர்கள் ஆவார்கள். ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக அவர்கள் பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களை ஒதுக்கியுள்ளனர். பீகாரில் காங்கிரஸ் கட்சி என்பதே இல்லை . இந்த நிலையில் 40 இடங்களை காங்கிரசிற்கு அளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.இந்த இடங்களை நாங்கள்(பா.ஜ.க) எந்த வித சவாலும் இல்லாமல் எளிதாக வெற்றி பெறுவோம்.. பீகார் மக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
முந்தைய பிரதமர் வாஜ்பாயின் ஆசிர்வாதத்தால் நிதிஷ் குமார் பீகார் மாநில அரசியலில் உயர்வு பெற்றார்.எனவே அப்போது பீகார் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.மாநிலத்தில் காட்டாட்சியை அகற்ற வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு வாக்களித்தனர். தற்போது வாஜ்பாயின் ஆசிர்வாதம் நிதிஷ் குமாருக்கு இல்லை. எனவே மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள். பீகாருக்கு நான் வருகை தந்துள்ளதையொட்டி மெகா கூட்டணி தலைவர்கள் பீதி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
பாரதிய ஜனதா ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சகிப்புத்தன்மை இல்லை என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டது. இந்த நிலையில் பிரதமர்மோடி காங்கிரசின் சகிப்புத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அ.தி.மு.க.அரசு செயல்படாத அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.
 
கடந்த 4 ஆண்டுகளில் 43 லட்சம் பெண்கள் உட்பட 85 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு செயல்படாத அரசாக உள்ளது என  குற்றச்சாட்டியுள்ளார்.   

அ.தி.மு.க.அரசு செயல்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.
 
கடந்த 4 ஆண்டுகளில் 43 லட்சம் பெண்கள் உட்பட 85 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு செயல்படாத அரசாக உள்ளது என  குற்றச்சாட்டியுள்ளார்.   

கியாஸ் சிலிண்டர் விலை ரூ.27.50 அதிகரிப்பு

 
மானியம் இல்லாத கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.27.50 அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
 
மானியம் இல்லாத சிலிண்டர் (14.2 கிலோ எடை) ஒன்றின் விலை சென்னையில் ரூ.532 ஆக உள்ளது. இதன் விலை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். அதன்படி, தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.27.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
எண்ணை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பரத் பெட்ரோலியம் ஆகியவை மாதம்தோறும் எரிபொருள் விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது