Home Blog Page 5978

கமல், அஜித்துடன் மோதும் இளம் ஹீரோ!

images cinema events kamal ajith - 2026

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ இஞ்சி முறப்பா”

இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும் ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா , சிரி, ரகு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – P.R.K. ராஜு

பாடல்கள் – பழனிபாரதி

இசை – மணிசர்மா

கலை – ஹரி.K

நடனம் – சொர்ணா

ஸ்டன்ட் – நந்து

தயாரிப்பு – A.P.ராதாகிருஷ்ணன், மலர்கொடி முருகன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா.

இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணனின் கதை இது. தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம். இது ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்றார் இயக்குனர்.

வஜ்ரம் படத்தை தயாரித்ததுடன் சதுரன் படத்தை உலகமுழுவதும் வெளியிட்ட ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிடுகிறது.

அன்றைய தினம்தான் கமலின் தூங்கா வனம் படமும், அஜித்தின் வேதாளம் படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.

லிப் லாக்கா???? அலறி ஓடிய ஹீரோ… காட்டுக்குள் திகைத்து நின்ற படக்குழு!

“இயக்குனர் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து நேர்முகம் என்னும் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்”.

ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக ரஃபி தயாரிக்கிறார். நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தில் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மனிதர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை சொல்லும் படம் தான் இந்த ’நேர்முகம்’. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காக எங்கு செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்‌ஷன், கிளாமர் கலந்து செம கமர்சியல் மசாலாவாக உருவாகி வருகிறது.

இளைஞர்களையும் , காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்குமாம்.

காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் முக்கிய ஜோடிகளாக ரஃபியும் மீனாட்சியும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஒரு பெரிய போராட்டமே நடத்துகின்றனர். அந்த வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென இயக்குனர் முரளி கிருஷ்ணா முடிவெடுத்தார். கதை சொல்லும்போது இக்காட்சி மீனாட்சியிடம் சொல்லப்படாததால் முதலில் அவரிடம் சொல்லி அவர் சம்மதம் வாங்குவது எனவும், சம்மதித்தால் லிப்லாக் காட்சி வைத்துவிடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் வைக்கப்படும் லிப்லாக் காட்சி சத்தியமாக விரசமாக இருக்காது என அவரிடம் விளக்குவதற்கு என உதவி இயக்குனர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அவர்களும் மீனாட்சியிடம் சென்று விபரத்தை விளக்க,’ மீனாட்சியோ வெடிக்கக் காத்திருந்த வெய்யக் காலத்து பஞ்சி ஓலக்காத்து வீசியதும் ஊரெல்லாம் பரவி பத்திக்குமே அந்த மாதிரி காட்சிக்குத் தேவைப்பட்டால் கழுத்தை வெட்டிக்கூட வீசுவேன் என மீனாட்சி வீராவேசம் பேச, பஞ்சைப் பத்த வச்ச சந்தோசத்தோட உதவி இயக்குனர் குழு தாய்க் கோழியிடம் ஓடியது.

அடடா, “லிப்லாக் சீன் பின்னிடும் என அபார சந்தோசத்தோட இயக்குனர், ஹீரோவை வரவச்சி சீனை விளக்க, வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கின மாதிரி பதறிப் போனார் ஹீரோ. சார் லிப்லாக்கா? ஆளை விடுங்க.. எப்படியாவது இதை இல்லாம பாத்துக்கோங்க என பதற்றமாய் பறஞ்சியிருக்கிறார். ஹீரோயினும் தன் பங்குக்கு சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் எதுக்கும் மசியாத ஹீரோவோ அமுக்கமாய் ரூமுக்குள் போய் அமுங்கிக்கொண்டார். ஹீரோவின் இந்த காரியத்தால் மொத்த டீமும் பகீராகி நின்றிருக்கிறது. கிடைச்ச கேப்புல கெடா வெட்டுற ஆர்யாக்களுக்கு மத்தியில் லிப்லாக்குக்கு காட்டுக்குள் காததூரம் ஓடிப்போற ஹீரோவா? அதுவும் ஹீரோயினே ஓகே என டிக் அடிச்ச பிறகும்…? என்னடா இது? சினிமாவுக்கு வந்த கலிகாலம் என விக்கித்து நின்றது மொத்த டீமும். (கவனிக்க: முத்தத்தால் விக்கித்துப்போன மொத்த டீம்! என ரைமிங்கா டைட்டில் வைக்கலாம்)

சரி ஹீரோயினுக்குத்தான் பிரச்சனை.. இவருக்கென்ன? என இயக்கமும் ரூமுக்குள் சென்று கலக்கத்தில் கேட்க, ஹீரோவோ, சார் நான் கல்யாணமானவன், வீட்டில் டைவர்ஸ் வரைக்கும் போயிடுவாங்க. படம் நடிக்கணும் என்பது என் கனவு.. அதனாலத்தான் தயாரிச்சி நடிக்க வந்திருக்கேன். பத்து மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க குதிக்கேன். தயவுசெய்து இது மட்டும் வேணாமே என கேட்டுக்கொள்ள, இயக்குனரும் இசைந்திருக்கிறார்.

ஹீரோ மட்டும் தயாரிப்பாளராக இல்லாமலிருந்தால் என்னவாகியிருக்கும்? சைடில நின்றிருக்கும் வேறு ஏதாவது வெள்ளைத்தோல் போர்த்திய ஆண்மகனுக்கு முத்த விளையாட்டின் அதிர்ஷ்டம் அடித்திருக்கும். ம்.. தயாரிப்பாளரும் அவரே ஆச்சே… என்ன பண்ண? காட்சியைத்தானே மாத்த முடியும்? காட்சி வேறு ஜோடிக்கு மாத்தப்பட, பெருமூச்சிவிட்டது பெருங்காடு.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ் V. விஸ்வம்

எடிட்டிங் – வில்சி

தயாரிப்பு நிர்வாகம் – தேனி எஸ் முருகன்

தயாரிப்பு: ஹைடெக் பிக்சர்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை – முரளி கிருஷ்ணா

8 வருடத்திற்குப் பின் நடிகர் அஜித் மீண்டும் சாதனை.?

 அஜித் நடிப்பில் இந்த வருடம் என்னை அறிந்தால் படம் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது ‘வேதாளம்’ படமும் இந்த வருடத்திலேயே வெளியாகிறது.

‘வேதாளம்’ படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல்தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே தினத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படமும் வெளியாகவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது. இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’, ‘பில்லா’ ஆகிய 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியானது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு படமே அஜித் நடிப்பில் வெளியானது. தற்போது தான் அஜித் நடிப்பில் 2 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.?

 
அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.? என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சிமற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார் .
 
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அரசின் சாதனைகளை விளக்கியும், திமுகவினரின் அவதூறு பிரசாரங்களைக் கண்டித்தும் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
 
ஊழலைப் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அருகதை இல்லை .மத்தியில் செல்வாக்குடனும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த போது காவிரி நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணாத திமுக தலைவர் கருணாநிதி, அப்பிரச்னைக்குத் தீர்வு காணுவதாக பேசி வருகிறார். தமிழ் இனத்தை காப்பாற்றுவதாகக் கூறி கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றுபவர் தான் கருணாநிதி.
 
இன்று இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவதற்கு கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காணாததே காரணமாகும். இப்பிரச்னையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கருணாநிதி.
 
அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக பொருளாளர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறார்.
எங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கூறத் தயாரா.?
 
தமிழகத்தில் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட ரூ.3000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஜெயலலிதா. உலக வங்கி, ஆசிய வங்கிகளே பாராட்டும் வகையில் தமிழகத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா.
 
தமிழக மக்களை தம்மக்களாகக் கருதி, அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருபவர் ஜெயலலிதா. வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று வைத்திலிங்கம் கூறினார்.
 
நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமைக் கொறடாவும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான ஆர். மனோகரன் தலைமை வகித்தார். மாநில அமைச்சர் டி.பி.பூனாட்சி, அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத், மக்களவை உறுப்பினர் ப.குமார், திரைப்பட நடிகை விந்தியா ஆகியோர் பேசினர்.
 
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, சீ. வளர்மதி, மேயர் அ.ஜெயா, துணை மேயர் ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் அமைச்சர் என். நல்லுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

4 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கி ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்

 
 
4 ஏக்கர் நிலத்தை வாங்கி தனக்கென தனி நாட்டை அமெரிக்க இளைஞர் உருவாக்கியிருக்கிறார்.இது தொடர்பான செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்டது. தொலைக்காட்சியில் இந்த விநோத செய்தி வெளியான பிறகு அமெரிக்கா முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகப் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி வருகிறது
 
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் பெரும் பகுதி பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசமாகும். அந்த மாகாணத்தின் எல்டர் மாவட்டப் பகுதியில், கடந்த 2005-ஆம் ஆண்டு இணைய வர்த்தகம் வழியாக 4 ஏக்கர் நிலத்தை ஜாக் லாண்ட்ஸ்பர்க் என்ற இளைஞர் வாங்கினார்.
 
நியூயார்க்கைச் சேர்ந்த அவர் அடிப்படையில் ஒரு சிற்பி. நிலம் வாங்கியபோது அவருடைய வயது 20. தற்கால அரசியல், சமூக சூழல் மீது மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், தனது நிலத்தில் சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
 
நிலத்தைச் சுற்றிஎல்லைப்புற வேலியை முதலில் அமைத்த அவர், கண்காணிப்பு கோபுரம், எல்லைப் பாதுகாப்புக்கு இயந்திர மனிதன் என ஒவ்வொன்றாக அமைத்தார்.
 
அவருடைய பெயரைக் கொண்டே “ஜாகிஸ்தான் குடியரசு’ என்று தனது நாட்டுக்குப் பெயரிட்டார். அந்நாட்டுக்கு அவர்தான் அதிபர். அதற்கென தேசியக் கொடி, பாஸ்போர்ட் உண்டு. தலைநகர் ஜாக்கோபோலிஸ்.
 
ஆனால் அதன் வளங்கள் சற்றுக் குறைவுதான். இந்த நாட்டை அடைய ஒழுங்கான சாலை கூட கிடையாது. சாலையிலிருந்து விலகி, மணல் வெளியில் 24 கி.மீ. பயணம் செய்தால் ஜாகிஸ்தான் குடியரசின் எல்லையை அடையலாம். பெட்ரோல் வேண்டுமானால் 80 கி.மீ. செல்ல வேண்டும்.
 
அந்த நாட்டில் இதுவரை இவர் உருவாக்கிய கண்காணிப்பு கோபுரம், காவல் இயந்திர மனிதன் ஆகியவற்றை “கலைப் படைப்புகள்’ என்று அவர் கூறி வருகிறார்.
 
“இந்த இடம் ஓர் உண்மையான தேசமாக வேண்டும் என்பதே என் லட்சியம். அது நிறைவேறாது என்று எனக்குத் தெரியும். இங்கு நான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறு படைப்புகள் மூலம், இதனை ஒரு தனி நாடு என்று எல்லோரும் கருத வேண்டும். அந்த நோக்கத்துடன் எனது முயற்சிகளைச் செய்து வருகிறேன்’ என்று அவர் கூறினார்.
அந்த நிலத்துக்கான பல்வேறு வரிகளை அவர் செலுத்தி வருகிறார். ஆனால் அதை அவர் வரி என்று குறிப்பிடாமல், அண்டை நாட்டுடன் நல்லுறவு காக்க அளித்து வரும் அன்பளிப்பு என்று குறிப்பிடுகிறார்.
அவர் முறையாக வரி செலுத்துவதை உள்ளூர் அரசு அலுவலகம் உறுதி செய்தது.
 
 
ஜாகிஸ்தான் குடியரசு உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்களுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
 

சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை கொலை செய்து கொள்ளையர்கள் அட்டகாசம்

சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர்கள் ஜெகா, அசோக் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
 
இந்த நிலையில் இவர்களைப் பார்ப்பதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து அவர்களது நண்பர் சதீஷ் சனிக்கிழமை இரவு விருகம்பாக்கம் வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு 3 பேரும் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த வழியாக வந்த 2 இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 3 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதில், காயமடைந்த அசோக், ஜெகா, சதீஷ் ஆகியோர் வலிதாங்க முடியாமல் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்தப்பகுதியில் சாணை பிடிக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரைத் தட்டி எழுப்பிய கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டதில் அச்சமடைந்த கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து அந்த தொழிலாளியை சரமாரியாக குத்தினர். இதில் அவரது கை, இடுப்பு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த தொழிலாளி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தொழிலாளியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அப்துல் ஜைனு(42) என்பது தெரியவந்தது. இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர். விருகம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் இரவில் நடைபாதையில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபோல் சனிக்கிழமை இரவு தூங்கியபோதுதான் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி உயிரிழந்தார். விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.
 

வீடு கட்ட வைத்திருந்த ஜல்லியை திருடிய காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு

 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வீடு கட்ட வைத்திருந்த ஜல்லியை, திருடியதாக காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்
 
ஆலங்குடி, படேல்நகரை சேர்ந்தவர் பங்கராஜ், 40, இவர், வீடு கட்டுவதற்காக தனது இடத்தில் ஜல்லியை கொட்டி வைத்திருந்தார்.
 
இதை ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சேர்ந்த, இரண்டாவது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சக்திவேல், ரத்தினம்மாள், மற்றும் ரத்தினம்மாளின் மகன்கள் இருவர் சேர்ந்து இரவில் லாரியை வைத்து, ஜல்லியை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
 
இதன் மதிப்பு, ரூ. 40 ஆயிரம்.இதுகுறித்து, ஆலங்குடி காவல் நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பங்கராஜ் புகார் செய்தார். நடவடிக்கை இல்லாததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பங்கராஜ் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, காங்கிரஸ் கவுன்சிலர் சக்திவேல், ரத்தினம்மாள் உட்பட 4 பேர் மீது ஆலங்குடி காவல் நிலையத்தினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பின்லேடன் கொல்லப்பட்டதற்காக அழுதவர் சோனியா: முக்தர் அப்பாஸ் நக்வி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட அன்று அழுதவர்தான் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கான்பூரில் இதுகுறித்து நக்வி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சோனியா காந்திக்கு நாட்டின் மீது பற்றோ, பாசமோ இல்லை. நாட்டின் பெயரைக் கெடுப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அரசியல் லாபத்திற்காக எப்படி வேண்டுமானாலும் அவர் நாட்டின் பெயரைக் கெடுப்பார் என்றார். 2008-ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுன்டரில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது அதற்காக வருத்தம் அடைந்தவர் சோனியா காந்தி. இதை நான் சொல்லவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறியதுதான் இது.

நக்வியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . இதுதொடர்பாக நக்வியும், பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களிடையே பதவிப் போட்டி : இளங்கோவன் குற்றச்சாட்டு

 
மூத்த தலைவர்களிடையே பதவிப் போட்டி தமிழக காங்கிரஸில் நிலவுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் இன்று நடந்தது.
 
தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:
 
”தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் புது உற்சாகம் பெற்றுள்ளனர். இங்கு நடக்கும் கூட்டத்தை ஒரு வருடத்துக்கு முன்பு கூட்டியிருந்தால், இவ்வளவு பேர் வந்திருப்பார்களா? காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையாக உழைக்கின்றனர். ஆனால், தலைவர்களிடையே பதவிப் போட்டி நடக்கிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது பைகளை நிரப்பாமல், மக்கள் மனதை மட்டுமே நிரப்பினேன்” என்றார்.
 
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, எச்.வசந்தகுமார், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து இளங்கோவன் மீது புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தலைவர்களிடையே பதவிப் போட்டி நடப்பதாக இளங்கோவன் பேசியது, காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று இளங்கோவன் கூறினார். நடைபெற்ற கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்காரசர், மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் என்.ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடுக்கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்து : 22 பேர் பலி

அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 22 பேர் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தினமும் ஆயிரக் கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
 
அவ்வாறு அகதிகளாக வெளியேற நினைக்கும் பெரும்பாலானவர்கள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செல்லும் சில படகுகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலினுள் மூழ்கி விபத்துக்குள்ளாகின்றன. இது போன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த வரிசையில் துருக்கியில் இருந்து கிரீஸின் ரோட்ஸ் நோக்கி அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. காலிம்னோஸ் தீவுக்கு அருகில் வந்த போது அந்த படகு திடீரென நிலைதடுமாறி திடீரென்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், 13 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் பலியாயினர். 144 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.