பாகிஸ்தான் ஏஜெண்டு ஷாருக்கான் : சாத்வி பிராச்சி
ஈச்சம்பாடி, கோமுகி அணைகளை நாளை திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு
சென்னை:
10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று, ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும்;
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அந்த வேண்டுகோளினை ஏற்று, கோமுகி அணையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
2016 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. உச்சநீதிமன்றத் தடையால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறுதழுவல் போட்டி தமிழர்களின், குறிப்பாக மதுரை உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய மாவட்ட மக்களின் வீரத்துடன் சம்பந்தப்பட்டதாகும். கடந்த 8 ஆண்டுகளாகவே இப்போட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போதிலும், அவற்றை சமாளித்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தது. அத்தடையை நீக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பல நூற்றாண்டுகளாக தமிழர் திருநாளையொட்டி பரபரப்பாக காணப்பட்ட பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட நகரங்களின் வாடிவாசல்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் முகங்களும் கடந்த ஆண்டு தான் முதல்முறையாக களையிழந்தன.
ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் திருநாள் இந்த ஆண்டுடன் முடிந்த கதையாக இருக்கட்டும்… வரும் ஆண்டில் வழக்கம் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் குரலாக உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் அதை இரு வழிகளில் மட்டுமே நீக்க முடியும். அவற்றின் முதலாவது உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து தடையை அகற்றுவதாகும். இரண்டாவது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதன்மூலம் இப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் இந்த போட்டிகளை நடத்த எந்த வகையிலும் சட்ட சிக்கல் ஏற்படாமல் தடுப்பது ஆகும். ஆனால், இந்த இரு வழிகளில் எந்த வழியிலும் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாததற்கு காரணம் தமிழக அரசு தானே தவிர வேறு யாரும் இல்லை. 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்திருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் சீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசு, அதை விரைவாக விசாரிக்கும்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிடவில்லை. அதனால் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு சாதகமாக எந்தவித தீர்ப்பையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கவில்லை.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை மத்திய அரசு இன்னும் நீக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தாலும் சாதகமான பலன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதன் மூலம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த யோசனையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை; எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே சட்டத் திருத்தத்தை மேற்கொண்டால் மட்டுமே வரும் ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியும். பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் தான் பொதுமக்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஜல்லிக்கட்டுக்கு தயாராக முடியும். எனவே, இது தொடர்பான உத்தரவாதத்தை அளிப்பதுடன், வரும் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத்க்கு பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு
ஸ்டாலின் மட்டுமே தி.மு.க.வின் அடுத்த தலைவர் பதவிக்கு தகுதியானவர் : மு.கருணாநிதி
விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என போலி வீடியோ வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்
தமிழகத்தில் மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ.க. முற்றுகை போராட்டம்: தமிழிசை சவுந்தரராஜன்
அதற்கு நான் பொறுப்பல்ல… கொம்பன் இயக்குனரின் அவசர எச்சரிக்கை!

கொம்பன் படத்தை இயக்குனர் முத்தையா தற்போ விஷாலை வைத்து மருது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக யாரேனும் கூறினால் தயவு செய்து அதை நம்ப வேண்டாம் என்று அவசர அவசரமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் பேஸ்புக், டுவிட்டர் போன்ற எந்தவிதமான சமூக வலைதளங்களை இதுவரை பயன்படுத்தியதில்லை. எனது பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான கணக்குகளை தொடங்கி அதில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.
அதே போன்று எனது பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகிறது. அதனால் தயவு செய்து என்னை யாரும் நேரில் சந்திக்காமல் எனது பெயரில் வரும் எந்த ஒரு பொய்யான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்டு கால்
‘தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை’ என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை.
விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ”ஏம்ப்பா, இந்த நம்பரைக் கொஞ்சம் போட்டுத் தர்றியா?” என இரவல் செல்போன் வாங்கி உறவினர் ஒருவர் பேசலாம். புதிய வாய்ப்பு ஒன்றுக்கான அழைப்பாக இருக்கலாம்.
ஆனால், ”நம்பர் தெரிந்தால்தான் நம்புவேன்” என்பவர்கள் கஸ்டமர் கேர் அழைப்புகளை வெளிநாட்டு நம்பர் என நினைத்து, பதறி எடுப்பதைப் பார்த்தால், ஒரே சிப்புச் சிப்பா வருது!
– பாரதி தம்பி (மிஸ்டு கால்:
பன்றிகளின் வளர்ப்பும் பராமரிப்பு முறைகளும்
இனப்பெருக்கப் பராமரிப்புகள்
- பன்றிகளின் இனவிருத்தித் திறன் அதிகம். அதற்கேற்ப ஆண்டுக்கு இரு முறை குட்டி ஈனுமாறு அதனை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
- ஒவ்வொரு 10 பெண் பன்றிக்கு 1 ஆண் பன்றி என்ற விகிதத்தில் பராமரித்தல் நலம்.
- சரியான சினைத்தருணத்தில் இனக்கலப்புச் செய்தல் அவசியம்.
சினையான பன்றிகளின் பராமரிப்பு
குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே சினைப் பன்றிக்கு தனிக்கவனம் செலுத்தவேண்டும். நல்ல தீனி, சுத்தமான நீர், தூய்மையான இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். குட்டி ஈனும் கொட்டிலை 3-4 நாட்கள் முன்னரே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். பின் குட்டி ஈனும் போது சரியான படுக்கைவசதி இருக்குமாறு அமைத்து வைத்தல் வேண்டும்.
பன்றிக்குட்டிகள்
- பன்றிக்குட்டிகள் நசுங்கினால் இருக்கும் கம்பியமைப்பை ஏற்படுத்தி வைக்கலாம்.
- கூரிய கத்திக் கொண்டு தொப்புள் கொடியை நறுக்கிய உடனே நோய்த் தொற்கு ஏற்படாமல் இருக்க டிங்சர் (அ) அயோடினைத் தடவவேண்டும்.
- முதல் 6-8 வாரங்கள் தாய்ப்பால் அருந்தச் செய்யவேண்டும்.
- குடடிகளை முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு தட்பவெப்பநிலை பாதிப்புக்கும் உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- கோரைப்புற்களை நீக்கிவிடவேண்டும். அப்போதுதான் தாய்ப்பன்றியின் காம்புகள் காயம் படாமல் தடுக்க முடியும்.
- முறையான தடுப்பூசி அட்டவணைப்படி குட்டியிலிருந்தே தடுப்பூசிகளை முறையாகப் போட்டு வந்தால் எந்த ஒரு நோய்த் தொற்றும் ஏற்படாமல் இருக்க உதவும்.
- இரத்தச் சோகை ஏற்படுவதைத் தடுக்க சரியான அளவு இரும்புச் சத்துத் தாதுக்களை அளித்தல் அவசியம்.
- விற்பனைக்கு அல்லது இறைச்சிக்காக வெட்டுமிடத்திற்கு அனுப்புமுன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
- இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தாத ஆண் குட்டிகளை காயடித்தல் செய்து (3-4 வாரங்களில்) விடுவதால் இதன் இறைச்சியின் தரம் அதிகரிப்பதுடன் கெட்ட வாடை அடிக்காமல் இருக்க உதவும்.
- பாலூட்டும் பன்றிக்குத் தேவைப்படும் அளவு அடர் மற்றும் கலப்புத் தீவனங்களை முறையாக அளித்தால் மட்டுமே நல்ல பால் சுரப்பு இருக்கும்.


பன்றிக்குட்டிகள்
பெண் பன்றிகள் பராமரிப்பு
- பெண் பன்றிகளை பிறந்ததிலிருந்தே நல்ல தீனி மற்றும் பராமரிப்புடன் வளர்த்துவரவேண்டும். அப்போது தான் அவை ஈனும் குட்டிகள் ஆரோக்கியமான நல்ல எடை தருபவையாக இருத்தல் வேண்டும்.
- குட்டி ஈனும் கொட்டிலை 2 சதவிகிதம் பினைல் களிம்பு கொண்டு சுத்தப்படுத்தி ஒரு வாரம் முன்பே தயார் செய்யவேண்டும்.
- குட்டி ஈனுவதற்கு சற்று முன்னரும் 2-3 வாரத்திற்கு முன்பு ஒரு முறையும் சினைப் பன்றிக்கு குடற்புழு நீக்க மருந்து அளித்தல் அவசியம்.
- புற ஒட்டுண்ணித் தாக்குதலைக் குறைக்க 1 சதவிகிதம் மாலத்தியான் / சையத்தியான், பட்டாக்ஸ் 0.05 சதவிகிதம் கலந்த கரைசலை தெளிக்கவேண்டும். இக்கரைசல் கொண்டு அடிப்பகுதி, பக்கங்கள் மற்றும் பன்றியின் மடியினை நன்கு தேய்த்துக் கழுவுதல் வேண்டும். மேலும் அழுக்கு, ஒட்டுண்ணி முட்டைகள், நோய்க்கிருமிகள் ஏதேனும் இருக்க வாய்ப்புள்ளதால் குட்டி ஈனும் கொட்டிலுக்கு பன்றியை அனுப்பு முன் சோப்புக் கொண்டு தேய்த்துக் கழுவுதல் நலம்.
- 10 நாட்களுக்கு முன்பே குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பி விடலாம்.
- நறுக்கிய வைக்கோலை படுக்கை வசதிக்காக 3 நாட்களுக்கு முன்பே தயாரித்து வைத்தல் வேண்டும்.
- பன்றியின் காம்பு அழுத்திப் பார்த்தால் மிக மென்மையாக பால் சுரந்து காணப்படும். இது குட்டி ஈனப்போவதன் அறிகுறியாகும்.
- குட்டி ஈனுதலின் போது எல்லாக் குட்டிகளையும் ஈனுவதற்கு 2-6 மணி நேரம் தேவைப்படும். சில சமயம் 20 மணி நேரம்கூட ஆகலாம். எனினும் எல்லாக் குட்டிகளையும் ஈனும் வரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும்.
- குட்டிகளை வைக்கோல் / துணி வைத்து மூக்கினருகே மூச்சுவிட எளிதாகுமாறு துடைத்துவிடவேண்டும். நன்கு ஆரோக்கியமான குட்டிகள் 10-30 நிமிடத்தில் பாலூட்டிவிடும். சிறிய தெரியாத குட்டிகளுக்குக் காம்பை வாயில் வைத்து ஊட்டப் பழக்கவேண்டும்.
- இறந்து போன குட்டிகள், நஞ்சுக்கொடி, படுக்கை அமைப்பு போன்றவற்றை குட்டி போட்ட பின் சிறிது நேரத்தில் அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் வேண்டும்.
- 50 கிராம் இரும்புச்சத்து (இம்ப்பெரான் 1 மிலி) அளவு கொடுத்து குட்டிகளுக்கு இரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.
- கொட்டில் எப்போது சுத்தமாக, மிதமான வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். புறஊதாக்கதிர் விளக்கு அல்லது மின்சார விளக்கு கொண்டு சிறிது வெப்பமான சூழ்நிலையை (குளிர் காலங்களில்) உருவாக்கலாம். இதனால் குட்டிகள் கடுங்குளிரிலிருந்து சிறிது தப்பித்துக் கொள்ளும்.
இனச்சேர்க்கை மற்றும் பராமரிப்பு
பெண் பன்றியானது ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். நல்ல பராமரிப்பும் தீவனமும் பன்றிகள் சினைக்கு வருவதைத் துரிதப்படுத்துவதோடு அதிக எடையுள்ள குட்டிகளை ஈனுகின்றன. பயறு வகைகள், தானியங்களோடு, கழிவு கொழுப்பு நீக்கப்பட்ட கால்நடைகளின் பால், மோர் போன்றவற்றை இனக்கலப்பு செய்வதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பிருந்து கொடுத்து வந்தால் பன்றியின் எடையானது 200-300 கிராம் கூடும்.

இனச்சேர்க்கை
சராசரி சினைப்பருவ காலம் 112-115 நாட்கள் அதே போல் சராசரியாக ஒரு ஈற்றில் 8-10 குட்டிக்ள வரை ஈனும். நன்கு பராமரிக்கப் பட்டிருந்தால் வயது முதிர்ந்த பன்றிகள் கூட நல்ல எடையுடன் நிறைய குட்டிகள் ஈனும்.
குட்டி ஈனும் சமயத்தில் கவனிக்க வேண்டியவை
சினையான பன்றிகளை குட்டி ஈனுவதற்கு 3-4 நாட்கள் முன்பு குட்டி ஈனும் கொட்டிலுக்கு அனுப்பிவிட வேண்டும். அப்போது தான் அது அப்புதிய சூழ்நிலைக்குப் பழகுவதோடு அது விரும்பிய படி தனிமையில் இருக்க முடியும்.
மேலும் இந்தக் கொட்டில் நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்டமும் கொண்டு சுத்தமாக இருத்தல் வேண்டும். குட்டி ஈனும் போது தேவைப்பட்டால் மட்டுமே பன்றிக்கு உதவவேண்டும். குட்டிகள் பிறந்தவுடன் அவற்றை துணி / வைக்கோல் கொண்டு துடைத்துப் பின் வெதுவெதுப்பான் வெப்பநிலையுடன் கூடிய படுக்கையை அவைகளுக்கு அமைத்துத் தருதல் வேண்டும்.
- ஒரு தாய்ப்பன்றியானது 8 வார இளங்குட்டி ஈன்ற காலங்களில் 150-200 கிலோகிராம் பால் கறக்கும். இதன் பால் மாட்டின் பாலை விட அதிக அடர்த்தியாக இருப்பதால் இதற்கு தீவனமும் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு பன்றிக்கு 1.5 கிலோகிராமும் குட்டி ஒன்றிற்கு அரை கிலோ என்ற வீதம் 5-6 கிலோகிராம் நாளொன்றுக்குத் தேவைப்படும். குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சூடான் புல், சிவப்புக் குளோவர் போன்றவை பன்றிக்கு மிகச்சிறந்த பசும்புல் தீவனங்கள் ஆகும்.
- குட்டிகளைத் தாய்ப்பன்றியிடமிருந்து பிரித்த பின்வு பன்றிக்குத் கொடுக்கும் தீவன அளவை குறிப்பாக அடர் தீவனத்தை சற்றுக் குறைக்கவேண்டும். இது பால் மடியில் சுரந்து வீணாவதைக் குறைக்க உதவும்.
ஆண்பன்றிப் பராமரிப்பு முறைகள்
- ஆண்பன்றிகள் தனித்தனிக் கொட்டிலில் பராமரிக்கப்படவேண்டும். தீனி மிகையாகவோ, குறைந்து விடாமலோ இல்லாமல் சரியான அளவு கொடுக்கவேண்டும். ஆண் பன்றியானது அளவான எடையோடு, அதிகக் கொழுப்பின்றி இருத்தல் வேண்டும். கலப்புச் சேர்க்கை இல்லாத சமயங்களில் நிறையப் புற்களும் பயறு வகைப் புற்களும், அடர் தீவனம் 2 கிலோ என்ற அளவிலும் கொடுக்கப்படவேண்டும். கலப்பு காலம் தொடங்கும் போது இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து 0.5 கிலோ அதிகமாகக் கொடுக்கலாம்.
- இனக்கலப்புக்கு பயன்படுத்தும் கிடாப்பன்றியின் வயது குறைந்தது 9 மாதமாவது இருக்கவேண்டும். இளம் கிடாவானது ஒரு பருவத்திற்கு 15-20 பன்றிகளுடனும், முதிர்ந்த கிடா 25-45 பன்றிகளுடனும் கலப்புச் செய்யலாம்.
- இனக்கலப்பு முடிந்த பிறகே தீவனம் அளிக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பெட்டைப்பன்றியுடன் மட்டுமே இனக்கலப்பிற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
- ஆண் பன்றிக் கொட்டில் சுத்தமான தண்ணீர் வழங்கப்பட்டிருக்கவேண்டும். பன்றியை நன்கு கழுவித் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். இளம் கிடாக்களை வயது முதிர்ந்த பெட்டைப் பன்றிகளோடு கலப்புச் செய்யலாம்.
- அவ்வப்போது கால் நகங்களை வெட்டிவிடுதல் நல்லது. புதிதாக வாங்கப்பட்ட கிடாக்களைத் தனியே வைத்து 2 வாரங்கள் பராமரிக்கவேண்டும். இவ்வாறு செய்யும் போது அவைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று இருந்தால் இது பண்ணையில் உள்ள பிற பன்றிகளுக்குப் பரவாமல் தடுக்க இயலும்.
புதிதாகப் பிறந்த குட்டிகள் பராமரிப்பு
- பிறந்த உடன் 8-10 முறை ஒரே நாளில் பாலூட்டப்பழக்கவேண்டும்.

பிறந்த குட்டிகள் பாலூட்டம்.
- குட்டி ஈன்றவுடன் அதன் நாசித்துவாரத்தை துணிகொண்டு துடைத்து நல்ல படுக்கை அமைப்பை ஏற்படுத்தி குட்டிகளைக் வெதுவெதுப்பான வெப்பநிலையில் இருக்குமாறு செய்யவேண்டும்.
- பிறந்த குட்டிகளுக்கு கோரைப்புற்களை நீக்கிவிடவேண்டும்.
- குட்டிகளுக்கு இரத்தசோகை ஏற்படாமல் இருக்க காப்பர். இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்த தீனியளித்தல் அவசியம்.
- குட்டிகள் தீவிர முறையில் வளர்க்கப்படுவதால் இயற்கையாக மண்தரையில் வளர்க்கப்படும் போது கிடைக்கக்கூடிய தாதுச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
- இவற்றைத் தடுக்க பன்றிக்குட்டிகளை மண் தரையில் மேயவும், இரும்புச்சத்து, தாமிரச்சத்து மாத்திரைகளைக் கொடுத்தும், தாயின் மடியில் இரும்பு சல்பேட், தாமிர சல்பேட் அடங்கிய மருந்துகளைத் தடவலாம் அல்லது வெளியில் கிடைக்கும் இரும்பு – டெக்ஸ்ட்ரான் ஊசிகளைப் போடுவதன் மூலமும் தேவையான சத்துக்கள் கிடைக்கச் செய்யலாம்.
- குட்டிகள் முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உலர் தீனிகள் மட்டுமே எடுக்கும். பின்பு இரண்டு வாரங்கள் கழித்து தாயுடன் சேர்ந்து பிற தீவனங்களை உண்ணத் தொடங்கும் அப்போது அது உட்கொள்ளும் அளவு, அதிக சத்துள்ள தீவனங்களை அளித்தால் மட்டுமே குட்டிகள் அதிக எடையுடன் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெறும் தாய்ப்பன்றியின் பால் மட்டும் குட்டிகளின் விரைவான வளர்ச்சிக்கு உதவாது. கீழ்க்கண்ட கலவைகளைக் கொண்டே குட்டிகளின் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.
| கலவைகள் | பாகங்கள் |
| சிவப்புச்சோளம் | 65 |
| கரும்புச் சக்கை / தோகை | 5 |
| கோதுமை தவிடு | 10 |
| மீன் கழிவு | 5 |
| தாதுக்கலவை | 1 |
| எதிர்ப்பொருட்கள் | – |
| ஜிஎன்சி | 14 |
பன்றிக்குட்டிகளைப் பிரித்தல்
- 7,8 வது வாரங்களில் குட்டிகள் தாயிடமிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டு விடவேண்டும். ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே தாய்ப்பன்றியை சிறிது நேரம் தனித்து அடைத்து வைத்துப் பழக்கவேண்டும். குட்டிகளைப் பிரித்த பின்பு தாய்ப்பன்றிக்குக் கொடுக்கும் தீவன அளவை சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்கள்
பன்றிப் பண்ணையில் பன்றியின் இனம், வயது, உடல் எடை போன்ற காரணிகளைப் பொறுத்து, ஊட்டச்சத்துக்களின் அளவு வேறுபடும். ஊட்டச்சத்து தேவையின்படி பன்றிகள் 11 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பன்றிக்குட்டிகள்:
- பிறந்தகுட்டிகள் (2-5 கிலோகிராம்)
- வளரும் குட்டிகள் (11-23 கிலோகிராம்)
சந்தைக்கு வளர்க்கப்படும் பன்றிகள்:
- வளரும் பன்றிகள் (23-57 கிகி)
- வளர்ந்த பன்றிகள் (57-91 கிகி)
ஆண்பன்றி:
- ஆண்பன்றி (பொலிகிடா)
பெண் பன்றிகள்:
- பருவமடைந்த பெண் பன்றி
- பருவமடைந்து சினைக்குத் தயாராக இருக்கும் பெண் பன்றி
- சினைப்பன்றி
- குட்டி ஈனப்போகும் பன்றிகள்
- பாலூட்டும் பன்றிகள்
கழிவுகளை அகற்றுதல்:
உலர்ந்த கட்டியான கழிவுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் உரம் சேகரிக்கும் குழியில் போட்டு விடலாம். சிறுநீர், பன்றி கழுவும் நீர் போன்றவை கீழே ஏதேனும் தொட்டியில் சென்று விழுமாறு கொட்டகையை அமைத்திருத்தல் வேண்டும்.
ஒருங்கிணைப்பு
பன்றிப் பண்ணையுடன் சாண எரிவாயு தயாரிப்பு அமைப்பையும் நிறுவினால் பண்ணைக்கும், வீட்டுத்தேவைக்கும் தேவையான எரிவாயுவைத் தயாரித்துக்கொள்ள முடியும். மேலும் இது தவிர மீன் வளர்ப்பும் இதனுடன் ஒருங்கிணைத்துச் செய்யலாம். பன்றிக்கழிவுகள் வயலுக்க சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுகின்றது.
பன்றியின் தினசரிக் கழிவில் கிடைக்கும் உர அளவு (தோராயமாக)
வயது (வாரங்களில்) | உடல் எடை (கிலோகிராமில்) | திட மற்றும் திரவக் கழிவு (லிட்டரில்) |
| 12 | 14 | 1.5 |
| 20 | 45 | 3.5 |
| 28 | 80 | 7.0 |
| பெண் பன்றிகள் கழிவு | – | 14.0 |
டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை
COURTESY & SOURCE : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளம்

