Home Blog Page 6003

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை – இலங்கை பிரதமர்

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்க வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நிருபர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:-

எனது அரசு இலங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். வெளிநாட்டு நீதிபதிகள், இங்கு செயல்படுவதை அரசியல் சாசனம் அனுமதிக்காது. எனவே, உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்ய முடியாது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் எடுத்துக் கூறுவார்.

அதேசமயத்தில், சர்வதேச நிபுணர்களின் உதவியை ஏற்றுக்கொள்வோம். அதற்கு கூட இலங்கை நீதித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். ராஜபக்சேவின் தவறால்தான், சர்வதேச விசாரணையை சந்திக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. ஆனால், நாங்கள் இப்பிரச்சினையை சரியாக கையாண்டு, போர்க்குற்ற விசாரணையை சந்திப்பதில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றி உள்ளோம் என ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.

 

துடைப்பத்தை வைத்து போஸ் கொடுத்து கொண்டு நாடகம் போடும் முதலமைச்சர் : பா.ஜ.க. அமைச்சர் கடும் தாக்கு

துடைப்பத்தை வைத்து போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போஸ் கொடுத்து கொண்டு, நாடகம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் இந்த மனநிலையை விட்டு வெளியேவந்து பின்னர் யதார்த்தத்தை பற்றி விமர்சிக்கட்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, இந்தியாவில் தயாரியுங்கள் என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இந்தியாவில் தயாரியுங்கள் என்பதைவிட இந்தியாவை உருவாக்குங்கள் என்பதே முக்கியம் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் நேற்று கருத்து பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான எங்கள் அரசில் சுகாதாரம், கல்வி, குடிநீர், பாதுகாப்பு, நீதி, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். மின்சார உற்பத்தி துறையை பற்றி கூறப்பட்டுவந்த தவறான விமர்சனங்கள் எல்லாம் எங்களது நேர்மையான அரசு நிர்வாகத்திறனால் தவிடுப்பொடியாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரியுங்கள் என்பதைவிட மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்து இந்தியாவை உருவாக்கும் பணியே மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல திட்டமாக இருக்கும். மக்கள்தான் நமது சிறந்த சொத்து. அந்த மக்களில் முதலீடு செய்தால் போதும். முதலில் இந்தியாவை நாம் உருவாக்கினால் போதும். பின்னர், உலகம் தானாகவே இந்தியாவில் தயாரிக்க தொடங்கிவிடும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் முயற்சிகளுக்கு மாற்றாக கருத்து வெளியிட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

துடைப்பத்தை வைத்து நாடகம் நடத்திக் கொண்டு, போஸ்டர் மற்றும் புகைப்படங்களுக்குள் அடைபட்டு கிடக்கும் கெஜ்ரிவால் போன்றவர்கள் முதலில் அந்த மனநிலையில் இருந்து வெளியில்வந்து, பிறகு யதார்த்தத்தைப் பற்றி அவர்கள் விமர்சிக்கலாம்.

மோடியின் அரசைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, டெல்லியைப் பற்றி ஆவர் கவலைப்பட வேண்டும். டெல்லி நகரம் சந்தித்துவரும் பிரச்சனைகளைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டும் என மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

 

நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற முடியாது : தமிழிசை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணுபிரியா 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கடலூரில் உள்ள கோண்டூரில் விஷ்ணுபிரியாவின் பெற்றோர் வசித்து வரும் வீட்டுக்கு நேற்று மதியம் கனிமொழி எம்.பி. வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த, விஷ்ணுபிரியா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா மரணம் சி.பி.ஐ. விசாரணையாக இருக்க வேண்டும் என்று தலைவர் கருணாநிதி ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பல பெண் காவலர்கள் இப்படிப்பட்ட நிகழ்வை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். பெண் காவலர்கள் சந்திக்கிற பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்பு கூட தமிழக காவல்துறையில் இல்லை. தமிழகத்தில் பல அரசு அதிகாரிகள் இது போன்ற துயரமான முடிவை தேடிக்கொள்ளும் சூழல் தான் உள்ளது என கூறினார்.

முன்னதாக மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத்தலைவர் டிராபிக் ராமசாமி, விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்து அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுவது குறித்து சி.பி.ஐ. இயக்குனருக்கு கடிதம் எழுதுவேன். வழக்கும் தொடரப்போகிறேன். இனிமேல் காவல்துறை தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலையை நீதிமன்றம் மூலம் உருவாக்கிக்காட்டுவேன் என்றார்.

தமிழக பாஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பிற்பகல் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஷ்ணுபிரியா விசாரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும், சந்தேகத்துக்கு உரியவர்களும் உயிருடன் இருக்கும் போது, விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டமும், வழக்கும் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பெண் அதிகாரிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசு இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள்

நேற்று இரவு பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ‘www.keralagov.in’ என்ற இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.

இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது.
அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். மேலும் வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க கேரள அரசு நடவடிக்கை வருகிறது என தெரிவித்தார்

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பலி: சென்னையில் பரிதாபம்

சென்னை:
சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால், 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் அஜய் விடுமுறை தினமான ஞாயிறு நேற்று தனது தாய் தந்தையருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது அறுந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மாஞ்சா நூல் சிறுவன் அஜயின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
ஆனால் சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாஞ்சா நூலை பயன்படுத்தியவர்களை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை நகரில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், இந்தத் தடை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை.

சிவ புராணம்-வரிகள்.

சிவ புராணம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
.
    
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 
    
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! 
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
    
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
    
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
    
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
    
`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
“ஐயா” என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
    
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
 
    
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
.
    
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
.
    
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!
 
    
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; “எம் ஐயா,” “அரனே! ஓ!” என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!’ என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து..

ரூ.5.51 லட்சம் மோசடி செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி பழனியாண்டி, 65. இவரது மகன் ராஜேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சுபாவின் கணவர் சிவக்குமார், சென்னை தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து பணிமனையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாரியப்பன், 57, என்பவரும், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தனது மைத்துனர் ராஜேசுக்கு வேலை வாங்க வேண்டும் என்று சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு மாரியப்பன், தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி சிவக்குமார், தன் மாமனார் பழனியாண்டியிடம், 7 லட்சம் பெற்று, மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால், மாரியப்பன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை தொடர்ந்து 1.48 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி பணம் ரூ.5லட்சத்து. 51ஆயிரத்து. 500ஐ விரைவில் தருவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை தராததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பழனியாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கோரி போளூர் போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போளூர் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.13.35 லட்சம் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலை

ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார், 39. இவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக ஆண்டுதோறும் சீட்டு நடத்தி, பணமாகவும், பொருளாகவும் தந்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டின் தீபாவளிக்காக சீட்டு சேர்த்துள்ளார். வாரந்தோறும் பணம் செலுத்தி, தீபாவளி பண்டிகை சமயத்தில் பணமாக பெற்று குடும்பத்தினருக்காக செலவு செய்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது.

இதை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு போட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பணத்தை வசூல் செய்த விஜயகுமார், தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக காணாமல் போய் உள்ளார். அதனால் சீட்டு போட்டவர்கள் விஜயகுமாரை தேடியுள்ளனர். அவர் இருக்கும் இடம் தெரியாத நிலையில், சீட்டு போட்ட ஐந்து பேர் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரில், 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கூறியுள்ளனர். பூலாம்பட்டி போலீசார் விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மெக்காவில் இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நேற்று(26ம் தேதி) நிலவரப்படி இந்தியர்கள் சிக்கி 35 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து. மேலும், 4 இந்தியர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.இதில், ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; இருவர், ஜார்க்கண்ட் மற்றும் உ.பி.,யைச் சேர்ந்தவர்கள். எஞ்சியோரை, அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ‘டுவிட்டரில்’ தெரிவித்து உள்ளார்.
இத்தகவலை, ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகமும் உறுதி செய்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 760 பேர் உயிரிழந்துள்ளனர். 930 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,50,000 பேர் ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர்.மெக்கா நகரில் இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. கடந்த சில நாட்களுக்கு முன் மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த சம்பவத்தில் 105 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

 

 

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை
அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு! 
 
கட்டுரையாளர்-ரா.கணபதி.
புத்தகம்-மைத்ரீம் பஜத
 
ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள் பசங்கள் வந்து ஸ்ரீசரணர்களின் திருமுன்னர் மாமறை ஒப்பித்தனர். 
 
பெரிய வித்வத் ஸதஸ் நடந்து பெரும் வித்வான்கள் ஸம்பாவனைகள் பெற்றிருந்த சமயம். எதிர்காலத்திற்கு நமது ஸநாதன தர்மத்தின் ஆணிவேரான வேதத்தைக் காத்துத் தரப்போகும் இளம் வாரிசுகளையும் ஸம்பாவிக்க ஐயன் உளம் கொண்டிருந்தார் போலும்! சுவையான முறையில் அதைச் செய்தார்.
 
யஜுர் வேத வித்யார்த்தி கூறிய பஞ்சாதியில் ‘க்ருஷ்ணாஜினம்’ ( மான் தோல்) என்று வந்தது.
 
உடனே ஸ்ரீசரணர் அப்பிள்ளைக்கு மான் தோலாஸசனம் பரிசளிக்கச் செய்தார்!
 
ஸாமவேத வித்யார்த்தி ஸோமனைப் பற்றி வேதகானம் இசைத்தான்.
 
‘கொழந்தைக்கு நல்ல சோமன் (வேஷ்டி) கொண்டு வாங்கோ!” என்று பணியாளரிடம் கூறித் தருவித்து வழங்கினார் தர்மதாதா.
 
ரிக்வேத வித்யார்த்தி சொல்லிப் போன ஸுக்தத்தில் இது போல் மந்த்ர வார்த்தையைக் கொண்டே பரிசளிக்கக் கூடியதாக எதுவும் வரவில்லை. அவன் முடிக்கும் போது மட்டும் ஏதோ ஒரு வார்த்தை ‘நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.

அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு! 
 
‘கொழந்தைகள் எல்லாருக்கும் இப்பவே நெய்த் தோசை வாத்துப் போடுங்கோ!” என்று அன்பாணை இட்டுவிட்டார்!