“வட சொற்கள் தமிழாக்கம்” (பெரியவாளின் பொருள் பொதிந்த அதிரடி நகைச்சுவை) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். தமிழ்க் கவி மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய கிரந்தாக்ஷரங்களையும் உரைநடையில் கூட தள்ளி, சிரிப்புக்கிடமான தப்பிதங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டார். “மந்தஹாஸ”த்தை ‘மந்தகாச’மாக்கிப் புன்னகையை slight T.B. ஆக்குவானேன்?” என்று கேட்டுப் புன்னகையாயின்றிப் பெருநகையே புரிந்தார்! (மந்தமான காசம் என்றால் லேசான எலும்புருக்கி நோய்தானே?) ஜாதகம்,ஸாதகம் (ஸாதக-பாதகம் என்பதில் வருவது), சாதகம் (வானிலிருந்து பெய்யும் மழைத் துளியை மட்டுமே பருகும் chaatakam என்ற பறவை) என்ற மூன்றையும் ‘சாதகம்’ என்று எழுதி குழப்புவானேன் எனக் கேட்டார். ‘ஜபிப்பது’ என்பதை ‘சபிப்பது’ என்று எழுதிச் செய்யும் அர்த்த விபரீதத்தை எப்பேர்ப்பட்ட சிரிப்புடன் எடுத்துக் காட்டினார்?. ‘ஹ’வைக் ‘க’ ஆக்குவதில், வணங்கியோரின் துயரைப் போக்கும் ‘பிரணதார்த்திஹரன்’, வணங்குவோருக்குத் துயரை உண்டாக்கும் ‘பிரணதார்த்திகரன்’ ஆகி விடுகிறானே என்றார்!. ‘ரஸனை’ என்பதே ‘சுவை’; ‘ரச(cha)னை’ என்றால் உருவாக்குவது,உண்டாக்குவது எனப் பொருள்.தற்காலத்தில் இலக்கியச் சுவையுணர்வை ‘ரசனை’ என்றெழுவது உண்மையில் இலக்கியப் படப்பைத்தான் குறிக்குமேயன்றி, இலக்கிய ரஸிப்பையல்ல என்று காட்டினார். அவசியமான இடத்தில் வட சொற்களை ஓற்றெழுத்திலேயே தொடங்கலாம்; இல்லாவிடின் ‘த்ருட(திடமான) மனம் வேண்டும்’ என்பது ‘திருட(திருடவதற்கு) மனம் வேண்டும்’ என்றாகுமே என நகைத்தார்.
“வட சொற்கள் தமிழாக்கம்”
சொந்தமாக நீர்மூழ்கிக் கப்பல்கள்: அரசின் திட்டத்தில் மாற்றம்
புது தில்லி: நாட்டின் கப்பல் படைக்கு, உள்நாட்டிலேயே கட்டப்பட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் அரசின் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குள் கப்பற் படைக்குச் சொந்தமாக 24 மரபுசார் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டமிட்டபடி, இதுவரை ஒரு நீர்மூழ்கி கப்பல்கள்கூட இந்தியாவில் கட்டப்பட்டு கப்பற் படையில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த 30 ஆண்டுகளில் 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே கட்டப்படும். இந்தக் கப்பல்களில் 18 கப்பல்கள் டீசலி்ல் இயங்குபவையாகவும், மீதமுள்ள 6 கப்பல்கள் அணு சக்தியால் இயங்குபவையாகவும் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய நோட்டீஸ்
புது தில்லி: புது தில்லியில் காங்கிரஸ் கட்சி இயங்கிவரும் அலுவலகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1978-ம் ஆண்டு முதல் தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான அக்பர் ரோடில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டு வந்து, இதுவரை கட்சி அலுவலகம் இயங்கி வந்தது. ஆனால், தற்போது நகர வளர்ச்சித் துறை சார்பில் அந்தக் கட்டடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகம், சேவா தள கட்டடம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் மற்றும் தில்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ள பங்களா ஆகிய கட்டங்களையும் காலி செய்து தருமாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013 ஜூன் 26 ஆம் தேதியுடன் அக்பர் ரோடில் உள்ள கட்டடத்தை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. எனவே, தற்போது வரை அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தியதற்கான உரிமக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த நோட்டீஸ் குறித்து விரைவில் பதில் அனுப்பவுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோதிலால் ஓரா தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக ஐ.மு.கூ. ஆட்சியி்ன் போது ரவுஸ் அவென்யூ பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கட்சித் தலைவர் சோனியா காந்தி புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும் கட்சித் தலைமையகம் தொடர்ந்து அக்பர் ரோடிலேயே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைப் பேச்சுகளால் பாஜகவுக்கு பாதிப்பு: தில்லி தோல்வி குறித்து வெங்கய்ய நாயுடு
புது தில்லி : ஹிந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக கடைபிடிப்பவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளால்தான் தில்லி தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை இன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்… பாஜக தனது அடித்தளத்தை இன்னும் விரிவடையச் செய்ய வேண்டும். மேலும், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுக்க வேண்டும். இப்போது பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தில்லியில் நடைபெற்ற தேர்தலில், கட்சி அடைந்த தோல்விக்கு வேறு சில காரணிகளும் உள்ளன. அதற்கு, கிரண் பேடியை மட்டும் காரணமாகக் கூற இயலாது. எங்களின் சகாக்கள் என்று அழைக்கப்படும் சிலர் வெளியிட்ட சில கருத்துக்களும் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டி விட்டனர். அதுவும் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்று கூறியுள்ளார்.
மத பிரசாரத்துக்கு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம்
சென்னை: மதப்பிரசாரத்துக்கு நாகர்கோவில் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்: நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் (Women’s Christian College – WCC) கிறிஸ்தவ மத பிரசாரத்திற்காக கல்லூரிப் பெண்களை பயன்படுத்தும் மதவெறிச் செயல் நடந்துள்ளது. கல்லூரி அமைந்துள்ள சாலையில் ( WCC ROAD) தினம் ஒரு துறையைச் (department) சார்ந்த மாணவிகள் கட்டாயம் கிறிஸ்தவ மத சம்பந்தமான நோட்டீஸ் விநியோகிக்க வேண்டும். இதற்காக கல்லூரி முடிவதற்கு அரைமணி முன்னதாகவே மாணவிகள் வெளியில் சாலைக்கு அனுப்பப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதத்தைச் சாராத அனைத்துப் பெண்களுமே இந்த நோட்டீஸ் விநியோகத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகத்தின் கட்டளை.எனவே கிறிஸ்தவ மதம் சாராத மற்ற பெண்களும் நிர்பந்தம் காரணமாக இந்த செயலில் ஈடுபட வேண்டி இருக்கிறது. கல்லூரியில் ஒரு மதத்தைச் பரப்ப வேலை செய்வது என்பது நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு எதிரானது. இம்மதப் பிரசாரம் மதமாற்றத்திற்கே வழிகோலுகிறது. மேலும் கல்வி பயில வந்த மாணவிகளிடம் இச் செயல்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவது மனித உரிமைகளை மீறும் செயலாகும், எனவே இதை தடுத்திடக் கோரி காவல் துறையில் புகார் கொடுத்தபோதும் அவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு நோட்டீஸ் விநியோகிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக நின்று வேடிக்கை பார்த்து சென்றுவிட்டனர். பட்டப்பகலில், நட்ட நடு ரோட்டில் இத்தகைய மதப் பிரசாரத்தில் ஈடுபடும் கல்வி நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுத்து, அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்யவேண்டும். மேலும் மதமாற்ற செயலுக்கு மாணவிகளை அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், என இந்துமுன்னணி இந்து மக்கள் சார்பிலே கேட்டுக்கொள்கிறது.
அஜித் குமார் ஐ.நா.வின் இந்தியத் தூதர், பிரதிநிதியாக நியமனம்
புது தில்லி: ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியாக, அஜித் குமார் வெளியுறவுத் துறையால் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் ஜெனீவா ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்பார் என்று வியாழக்கிழமை இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அஜித் குமார் தற்போது அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதராகப் பணிபுரிகிறார். அவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுள்ளது.
பெட்ரோலியத் துறை ஆவணங்களை கசிய விட்டதாக துறை அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது
லஞ்சம் கொடுத்தாலும் சிறைதான்!: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு முடிவு
புது தில்லி: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டு வருகிறதாம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது. லஞ்சம் கொடுப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறுவதுபோல், லஞ்சம் பெறும் அதிகாரிகளை கையும்களவுமாகப் பிடிக்க தகுந்த ஆதாரங்களுடன் புகார் செய்யுங்கள் என்று கூறும் நிலையில், பொதுமக்கள் யாரேனும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்கும் சிறை தண்டனை கிடைக்க இந்த சட்டத் திருத்தம் மூலம் வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன், இதுபற்றி தற்போது எதுவும் கூற முடியாது. ஆனாலும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை பொதுமக்கள் பதிவு செய்தால், அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கும்போது அதை ஆதாரமாக காண்பிக்க முடியும் என்றார்
திருமணமோ, கர்ப்பமோ கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு தீவிரம்
தோஹா: சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தங்கள் ஏர்ஹோஸ்டஸ் மற்றும் பணிப்பெண்கள் பணி புரியும் காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், கர்ப்பம் தரிக்கக் கூடாது என்றும் விதிகளை கடுமையாக்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனம் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில், திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது. வேலையில் சேர்ந்த பின் 5 வருடங்களுக்கு தனி நபராகவே இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும். கருத்தரிப்பது ஒப்பந்தத்தை மீறும் செயல். அப்படி மீறினால் நடவடிக்கைக்கு உள்ளாவர்” உள்ளிட்டவிதிமுறைகள் இதில் உள்ளன. இது குறித்து பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் விமர்சித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி 18 மாதங்கள் ஆனபின்பும், பெண்களுக்கு எதிரான விதிமுறைகளை கத்தார் ஏர்வேஸ் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அதன் விமானப் பணிப்பெண்கள் கடும் சிரமத்துக்கும் மன நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அந்நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பார்சிலோனா கால்பந்து சங்கத்தை சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரோசன் டிமிட்ரோவ், “பணிப்பெண்கள் தனியாக இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. இங்கே பணிபுரியும் பணிப்பெண்கள் பலர் திருமணமானவர்கள்” என்றார். இருப்பினும் அதன் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பேகர், “நிறுவனத்தின் விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. பணி வேண்டி வரும்போது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை அவர்களிடம் வழங்கப்படுகிறது. அதைப் பார்த்துதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். பிறகு எப்படி விதிமுறைகளுக்கு எதிராக புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தபோதும், சர்வதேச அளவில் இந்த விவகாரம் விமானப் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் விமானக் காட்சியில் பறந்து கொண்டிருந்த விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து
பெங்களூர்: பெங்களூர் யெலஹங்காவில் நடைபெறும் விமான சாகசக் கண்காட்சி ஏரோ இந்தியா 2015ல் வியாழக்கிழமை இன்று மாலை பறந்து கொண்டிருந்த இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றை ஒன்று உரசி விபத்துக்கு உள்ளானது. இதில், விமானத்தில் பறந்த 4 பேர் குழு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. செக் குடியரசில் இருந்து வந்திருந்த ஒரு குழு இந்த விபத்து நேரிட்ட விமானத்தில் இருந்தது. இந்த இரு விமானங்களின் இறக்கைகள் மோதி காக்பிட் பகுதி வரை ஒரு விமானம் பாதிப்பு அடைந்தது. இதில் இரு விமானங்களும் பின்னர் ஒருவாறு சமாளித்து தரையிறங்கின. விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் 66 வயது ராட்கா மக்கோவா என்ற விமானியும் மேலும் ஒருவரும் இருந்தனர். இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது.

