மழைக்காலம் துவங்கும் முன்பே… ஒருநாள்! மழலை மொழியோடு பார்க்க வந்தாய்! முதல் பார்வையிலேயே முதல் தடுமாற்றம்! காய்ச்சல் கண்டதாய் உன்தன் முகம் ! காய்ச்சல் கண்டதோ என்தன் மனம் ! வெய்யிற் காலத்தின் விருந்தோம்பலில் வேதனை துறந்து ஈடுபட்டிருந்தேன்! உன் மூக்கில் வழிந்த நீர் முட்டிப் பார்த்து முனகலைக் கொடுக்க… என் கண்ணில் கரைகண்ட நீர் சூழலின் தாக்கத்தால் ஆவியாகிப் போயிருந்தது! ஈரத்தின் தன்மையை உலரா நிலையில் உணர்த்திய கூந்தல்! வீங்கிப் போயிருந்த உன் முகம்… தாங்கிப் பிடித்தேன் மனத்தில்! கேள்விக்கே இடமில்லை! விடையெல்லாம் வினாவாகி… அதுவும்கூட வீணாகி… தடுமாற்றத்தின் முதல் அடியை தன்னிச்சையாய் நான் உணர்ந்தேன்! அன்று பிறந்தது உன் மீதான பரிவு! பரிவு பிறந்த போது… காதலும் பிறந்தது! காதல் மலர்ந்த பின்னே… கனிவும் பிறந்தது! ஆனால் நீயோ… அஸ்திவாரத்தின் ஆரம்ப நிலையிலேயே அமிலத்தை ஊற்றிவிட்டாய்! அறியாமல் போனது என் தவறு! அறிந்தே செய்தது யார் தவறோ? அதுவரை… என் மொழி வீச்சு வெல்லுமென இறுமாப்பில் திளைத்திருந்தேன்.. அதன்பின்… உன் விழி வீச்சில் விழுந்தபின்னே எழமுயன்று களைத்துவிட்டேன்…! ஆண்டி ரண்டு போனாலும் ஆண்டி யாகிப் போகாமல்… நானும் என் சொல்வீச்சும்! இவ்வீச்சுக்கு முன்னதும் பின்னதுமாய் நானும் என் வாழ்வும்! அன்று… முகம் காட்டி மலர்ச்சியுடன் புன்னகை பூத்தாய்! இன்றோ… முகம்காட்டிச் செல்கின்றாய்- வெறுப்பை உமிழ்ந்தே! அலுப்பும் சலிப்பும் அதற்குள் ஏன்? அலட்சியப் படுத்தல் அன்புக்கு உண்டோ? மனித வாழ்வில் ஒரே மகிழ்ச்சி… நேசிப்பும் நேசிக்கப்படுதலும்! நேசிப்பு- எந்தத் தடையையும் பொருட்படுத்துவதில்லை! ஆற்று நீரைப் போல் அன்பு பெருக்கெடுக்கும்! தடையைச் சந்தித்தால் தகர்த்துச் செல்லும்- புதிய பாதையை உருவாக்கி! அதில்… தடுமாற்றத்திலிருந்து தன்மாற்றத்திற்கு பயணம் தொடரும்! காலம் உணர்த்தும் காதல் உணரும் காத்திருப்பேன்… அதுவரை!
தடுமாற்றத்தின் முதல் விதை
குறளொடு புகுந்த காதல்!
குறள் – இருவரிக் கவிதை அவள் – இதழ்விரிக் கையிலே குறள் – ஈரடியால் உலகு அளக்கும் அவள் – ஈரவிழியால் உவகை அளிப்பாள் முதல் அடி – முடிச்சு இரண்டாம் அடி – இல்லறம் அடி மட்டும் இரண்டு அதன் சீர் ஏழு! முதல் சீர் – முத்தம் இரண்டாம் சீர் – இன்பம் மூன்றாம் சீர் – மூச்சுக்காற்று நான்காம் சீர் – நாணம் ஐந்தாம் சீர் – அன்பு ஆறாம் சீர் – ஆற்றுப்படுத்த ஏழாம் சீர் – எய்தும் வாழ்வு! அவள் கொண்டு வரும் சீர் இவையெனக் காத்திருந்தேன்… ஊரும் பேரும் தெரியாதுதான்! உறவும் உலகும் புரியாதுதான்! வீட்டுக் கதவைத் திறந்தே வைத்து வாசலின்மீதெ விழி வைத்திருந்தேன்..! அவள்… விளக்கேற்றி வாழ்வின் ஒளி பரப்புவாள்… முப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆசையில்! தப்பாமல் அப்பால் சென்றாள் தனியனாய்த் தவிக்க விட்டே! தகிக்கும் என் ஆசைகளைத் தனலாக்கி எரித்து விட்டே!
தினசரி ஜோதிடம்
[su_button url=”https://www.dhinasari.com/category/astrology/astrology-articles” target=”blank” background=”#ef2e2d” size=”5″ radius=”5″]ஜோதிடக் கட்டுரைகள்[/su_button] [su_button url=”https://www.dhinasari.com/category/astrology/astrology-guidance” target=”blank” background=”#ef2e2d” size=”5″ radius=”5″]ஜோதிட ஆலோசனைகள்[/su_button]
[su_row][su_column size=”1/2″]
[su_animate type=”flash”][su_note]பஞ்சாங்கம்[/su_note] [/su_animate]
05.05.2015
செவ்வாய்க்கிழமை
மன்மத வருடம்,
சித்திரை மாதம் 21 தேதி.
யோகம்: அமிர்த யோகம் 12.4க்கு மேல் மரணயோகம்.
கரணம்: 7.30 – 9.00.
மேஷ லக்ன இருப்பு: காலை மணி 6.29 வரை
சூர்ய உதயம்: காலை 5.57.
ராகு காலம்: பிற்பகல் 3.00 – 4.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
எம கண்டம்: காலை 9.00 – 10.30
நல்ல நேரம்: காலை 8 – 9 மாலை 5 – 6
திதி: பிரதமை காலை 10.01 வரை பிறகு துவிதியை.
நட்சத்திரம்: விசாகம் காலை 11.53 வரை பிறகு அனுஷம்.
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி
இன்றைய விசேஷம்:
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி கருடாரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல்; இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம் இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
சென்ன கேசவப் பெருமாள் சூரியப் பிரபையில் பவனி.
[/su_column] [su_column size=”1/2″]
[su_animate type=”flash”][su_note]இன்றைய ராசிபலன்[/su_note] [/su_animate][su_spacer]
[su_animate type=”bounceIn” delay=”1″]மேஷம் :வெற்றி[/su_animate]
[su_animate type=”flipInX” delay=”2″] ரிஷபம் : வருத்தம்[/su_animate]
[su_animate type=”flipInY” delay=”3″] மிதுனம் : நன்மை[/su_animate]
[su_animate type=”fadeInDown” delay=”4″]கடகம் : அமைதி[/su_animate]
[su_animate type=”fadeInLeft” delay=”5″] சிம்மம் : செலவு[/su_animate]
[su_animate type=”fadeInRight” delay=”6″] கன்னி : ஆதரவு[/su_animate]
[su_animate type=”fadeInUp” delay=”7″] துலாம் : உதவி[/su_animate]
[su_animate type=”bounceIn” delay=”8″] விருச்சிகம் : பாசம்[/su_animate]
[su_animate type=”flipInX” delay=”9″] தனுசு : சுகம்[/su_animate]
[su_animate type=”flipInY” delay=”10″] மகரம் : நட்பு[/su_animate]
[su_animate type=”fadeInDown” delay=”11″] கும்பம் : போட்டி[/su_animate]
[su_animate type=”fadeInLeft” delay=”12″]மீனம் : கோபம்[/su_animate]
[/su_column][/su_row]
[su_divider]
[su_row]
[su_column size=”1/2″]வார ராசிபலன்
[su_table]
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ![]() |
[/su_table]
[/su_column]
[su_column size=”1/2″]மாத ராசிபலன்
(மே – 2015)
[su_table]
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ![]() |
[/su_table]
[/su_column]
[/su_row]
[su_heading size=”30″ margin=”30″]2015ம் வருட ராசி பலன்கள் [/su_heading]
[su_button url=”https://www.dhinasari.com/?p=733″ background=”#ef362d” wide=”yes” center=”yes”]2105ம் வருட – ஆண்டு பலன்கள்: பொது தகவல்கள்[/su_button]
[su_table]
![]() | ![]() | ![]() | ![]() |
![]() | ![]() | ||
![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ![]() |
[/su_table]
ஜோதிட ஆலோசனைக்கு அணுகவும்:
ஜோதிடமணி, ஜோதிட கலையரசி
வசந்தா சுரேஷ்குமார்
நேரில் அணுகவும்: ஆலோசனை நேரம்: பகல் 2.00 – 6.00 வரை / முன் அனுமதி பெற்று வரவும்
அனுமதி பெற தொலைபேசி எண்: 044 -2498 0898 / 98402 96463 / 94448 53904
முகவரி: 26, ஈஸ்வரி பிளாட், முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை- 600 004
நினைவிழந்து போகவில்லை!
வெங்காயமும் உருளையும் வெளுத்துக் கட்டுவாள் உன்னவள்… சொல்லி வைத்தாள் தோழி..! உனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்ததாய் உருவகித்துக் கொண்டேன்! அறிவில் நீயிருக்க… அரிவாள்மனை முன்னிருக்க… காய் நறுக்கி வந்தேன்.. கவனத்தில் நீ! கை நறுக்கிக் கொண்டேன்! துடித்துப் போனது நீ நிறைந்திருந்த என் இதயம் ! துடிப்பின் வீரியத்தை உடனே கொட்டிய ரத்தநீர் உணர்த்திக் காட்டியது! உன்மேல் உறைந்திருந்தது சிந்தனை! என்மேல் உறையாதிருந்தது சிவந்தநீர்! நினைவிழப்பு நிகழவில்லை! நினைவில் நீயே நிறைந்திருந்ததால்!
கோணலாகிப் போன நேசம்!
எதிலும் நேர் வழி என் வழி! வாழ்வில் நான் எடுத்த தீர்மானம் அது! ஆனால்… காதலுக்கு? குறுக்குச்சால் ஓட்டும் தந்திரம் தெரியவில்லை! உன் மீதான நேசிப்பைக் கூட நேராகச் சொன்னதால் கோணலாகிப் போனது என் மீதான உன் நேசம்! நெஞ்சினில் உன் நினைவு சுமந்து நித்தமும் உன் பெயர் சுமந்து… சுமைதாங்கியாய் மாறிப் போன உள்ளம்! அதன் நீட்சியோ…? என் குலக் கருவை நீ சுமப்பாய் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.. உன் கவிக் கருவை சுமக்க வைத்து நன்றாகவே நழுவிக் கொண்டாய்.
காதல் மட்டுமே நிரந்தரம் !
காதல்- அரசியலைப்போல் சூதாட்ட மயமானது… அனுபவசாலி ஒருவர் அவிழ்த்துவிட்டுப் போனார்… ஏன்? என்றேன்! காதலிக்கும் இருவருமே ஒருவருக்கு ஒருவர் அலுக்காமல் சலிக்காமல் பொய்களை அவிழ்த்து விடுவார்களாம்! ஏமாற்றிக் கொள்வதில் சளைக்காமல் ஒருவரை ஒருவர் விஞ்சி விடுவார்களாம்! எச்சரிக்கை மணி என்று எனக்குள் அடித்துவிட்டுப் போனார்! எனக்கென்ன கவலை என்று இறுமாப்போடு உதறிவிட்டேன்! நீ என்ன…? என்னை ஏமாற்றவா போகிறாய்? அந்த நம்பிக்கையைத் தான் எப்போதோ கைவிட்டேனே! நான் மாற்றத்தை விரும்பினேன்… ஏமாற்றத்தை அல்ல! உன் காதல் உன்னை ஏமாற்றினும் என் காதல் என்னை ஏமாற்றாது! ஒற்றை ஆளாய் உன்னையே காதலித்த எனக்கு… காதல் மட்டுமே நிரந்தரம்! கனவு காட்டுமே சுதந்திரம்! நனவோ வாட்டுமே நிதம்நிதம்!
ஒற்றை நிலவு நீ இருக்க…
நாளை.. இரட்டை நிலா வானில் தெரியுமாம்! ஆண்டுகள் இரண்டுக்கு முன்பே… எவனோ அவிழ்த்துவிட்டானாம்! ஆச்சரியம்தான்! நிலவுக்குத் துணையாய்… செவ்வாய் நிலவாய்த் தோன்றும்! சொல்லி வைத்தவன் எவன்? அறிவியல் எதிர்நோக்குகள் பொய்யாகிப் போகலாம்! கணக்கிடலில் கோளாறு! ஆனால்.. அன்பின் எதிர்நோக்குகள் பொய்யாகிப் போகுமோ? என் கணக்கீடுகள் தவறிவிடாது! ஆண்டுகள் இரண்டுக்கு முன்னே என் காதல் வானின் ஒரே நிலவாய்த் தோன்றியவள் நீ! உன் செவ்வாய் திறந்து நிலவின் தண்ணொளி நீ காட்டுகையில்… இரட்டை நிலவாவது.. ஒண்ணாவது..? என் ஒரே நிலவாய் உன் முகம்! ஒன்றாகித் தெரியும் நம் மனம்!
நீயே என் சத்திய ஜீவன்!
காலடித் தடங்கள்
கடற்கரை மணல்வெளியில் நம் காலடித் தடங்கள்… சிவந்த மெல்லிய உன் பாதங்களின் அடியில் மிதிபட்டவை மணல் துகள்கள் இல்லை… சிவந்து தடித்த உன் வார்த்தைகளில் காயப்பட்டு சிதறியஎன் மனத் துகள்கள் தானடி! காலை நேரம் உன் கூந்தலில் நெருக்கமாய்த் தொடுத்துக் கட்டிய மல்லிகை… அழகாய்த்தான் அசைந்து சிரிக்கிறது! நேரம் கடந்து மாலை வந்தால்… வாடிய பூக்கள் நீ நடக்கும் பாதையில் உதிர்ந்து விழுந்து என் உள்ளம் தைக்கும்! நீயும் உன் நேசிப்பைச் சொல்ல நாட்கள் கடத்தி நேரம் போக்குகிறாய்! உன்னோடு கைகோத்து உடன் வந்த எந்தன் மனம் வாடிய பூவின் வாட்டம் சொல்லும் கேளடி! ஆனாலும் பெண்ணே… தொட்டுப் பேசாமலே நீ என்னைக் கட்டிப் போட்டவள்! உன் முன்னே பெட்டிப் பாம்பாய்க் கட்டுண்டு கிடக்கிறேன்! நீ என்னை விட்டுச் செல்லப் போகிறாய்… உணர்த்துகிறது உள்மனம்! ஈரத்தைக் காயவிட்டு உலர்த்துகிறது உன்மனம்!


























