Home Blog Page 67

ஷாகாவுக்கு வெளியே சங்கம்!

rss 100 years celeb - 2026
#image_title

— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

கடந்த வாரம் தில்லியில் அறிஞர்கள் ஆர் எஸ் எஸ் ஸின் சர்சங்கசாலக் மோகன் பாகவதத்தின் மூன்று நாள் தொடர் உரையை கேட்கும் வாய்ப்பை பெற்றனர். ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டை ஒட்டி அந்த உரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் 21 ஆம் நூற்றாண்டில் அந்த அமைப்பின் கருத்தியல் நிலையை பற்றி பாகவத் அவருக்கேவுரிய தன்னடக்கத்துடன் தெளிவாக எடுத்துரைத்தார்.

நூற்றாண்டு பயணம்

நூறு ஆண்டு கால பயணத்தை ‘தொடர்ந்து வளர்ச்சியடைந்து’ வருவதாக அவர் விளக்கினார். இந்த விவரிப்பை முதன் முதலில் பயன்படுத்தியவர் இயக்கத்தின் புகழ்மிக்க சிந்தனையாளரான தத்தோபந்த் தெங்கடி. இறுகிய கருத்தியல் கொண்டவர்கள் அல்ல மாறாக திறந்த மனதுடன் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர்கள் என்ற பொருளில் அவர் அந்த சொற்றொடரை பயன்படுத்தினார். பரம் வைபவ – உலகின் மிக உயர்ந்த நிலையை ஹிந்து ராஷ்டிரம் அடைய வேண்டும் என்ற இறுதி இலக்கை அடைய தொடர்ந்து, அதேவேளையில் சமூக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்தபடி பயணிக்க வேண்டும் என்பது அதன் பொருள்.

சங்கத்தின் தற்போதைய தலைமையான பாகவத்தும் அவருக்கு அடுத்து நிலையில் இருக்கும் தத்தாத்ரேய ஹொஸோபோலே வும் மையக் கொள்கையில் சமரசம் இல்லாமல் ‘தொடர்ந்து பரிணாம வளர்ச்சி’ அடைந்து வருவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ‘ஹிந்துஸ்தானம் தான் ஹிந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையை நம்பிக்கையை தவிர்த்து சங்கத்தில் உள்ள மற்ற எல்லாம் மாறக் கூடியதே என்று பாகவத் கூறினார்.

தலைவர்களில் பங்களிப்பு

பாகவத்தின் உரை தொடரில் இயக்கத்தின் கருத்தியல் மற்றும் பண்பாட்டில் எப்படி வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது என்பதை உயிர்ப்புடன் சித்தரித்தார். தோற்றம் முதல் தொடர்ந்து வந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர். ஆர் எஸ் எஸ் ஐ துவக்கிய ஹெட்கேவார் , உடல் ரீதியாக வலிமையும் உணர்வுபூர்வமாக ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைப்பும் பெற்றிருக்க வேண்டும் . சுதந்திரம் பெறுவதற்கு மாத்திரம் அல்ல தன் சொந்த ஆன்ம பலத்தில் தேசம் முன்னேற இது அவசியம் , என்றார்.

அவருக்கு அடுத்து வந்த குருஜி கோல்வல்கர் தேச வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அமைப்பை விரிவாக்கம் செய்தார். மூன்றாவது தலைவரான பாளாசாஹேப் தேவரஸ் ஜாதியம், தீண்டாமை, ஹிந்து சமுதாயத்தில் உள்ள நல்லிணக்கமற்ற தன்மை போன்ற சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முனைந்தார். அவருக்கு பின் வந்த தலைவர்கள் ஊடகங்கள், பண்பாடு, இலக்கியம் போன்ற புதிய களங்களில் அமைப்பை ஈடுபடுத்தியதுடன் கருத்தியலாளர்கள் கட்டமைப்பையும் ஏற்படுத்த முனைந்தனர்.

சர்கார்யவாஹ் பிறகு சர்சங்கசாலக் என கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பொறுப்பில் இருக்கும் பாகவத் இயக்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையையும் பரந்த மனப்பான்மையையும் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மையம் மாறியது

நூறு ஆண்டுகளில் ஷாகாவை மையமாகக் கொண்ட அமைப்பு என்பதிலிருந்து ஸ்வயம்சேவகர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக , பெரிய மாறுதலை கொண்டதாக , ஆர் எஸ் எஸ் பரிணமித்துள்ளது. ஷாகா – தினசரி சந்திப்பு – என்பது தொடர்ந்து முக்கியமான விஷயமாக இருக்கின்ற போதிலும் பல்வேறு களங்களில் அதன் தொண்டர்கள் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான சமூக நல திட்டங்களால் ஆர்எஸ்எஸ் சிறப்பாக அடையாளம் காணப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் சங்கத்தை ‘சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ‘ (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள் ) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது ‘சங்க யானி ஸ்வயம்சேவக் ; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ‘ (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள் என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.

மதநல்லிணக்கம்

இன்று தொண்ணூறு சதவீதமான சங்கம் ஷாகாவுக்கு வெளியே உள்ளது. பரந்த சமுதாயத்துடன் உறவாடுவதும் இணைப்பதும் என்ற கருத்தை தளராமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் பாகவத். தேவரஸூம் அவருக்கு பின் வந்த சுதர்சனனும் முஸ்லிம், கிறிஸ்துவ தலைவர்களை சந்தித்து உரையாடினார்கள் . ஆனால் அவை அரிதாக நடந்தன. அடிக்கடி சந்திப்பது , திட்டமிட்ட ரீதியிலும் அவ்வாறு இல்லாமலும் சந்திப்பது, என்று அந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் பாகவத். இது அந்த சமூக தலைவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

‘ ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேட வேண்டாம்’ என்று ஹிந்துக்களுக்கு பாகவத் கூறிய புகழ்பெற்ற வாக்கியம் தொடங்கி ‘எங்களுக்கு முஸ்லிம்கள் தேவையில்லை என்று கூறும் நாள் ஹிந்துத்துவம் இல்லாமல் போகும் நாள்’ என்று வலியுறுத்தியது, காசி மற்றும் மதுரா கோவில்களை மீட்கும் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்று உறுதிப்பட தெரிவித்தது என பாகவத் அனைவரையும் அரவணைக்கும் ஏற்றுக் கொள்ளும் புதிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விஞ்ஞான் பவனில் நடந்த உரை நிகழ்ச்சியிலும் ‘இஸ்லாம் இல்லாமல் போய்விடும் என்று எந்த ஹிந்துவும் நினைக்கவில்லை’ என்று உறுதிப்பட கூறினார்.

நூற்றாண்டு கண்ட அமைப்பு மேலும் வெளிப்படை தன்மையுடன் அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென பாகவத் விரும்புவது பரந்த இந்திய சமுதாயத்தில் பல்வேறு தளங்களில் உள்ளோரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் அவர் கூறிய சில விஷயங்கள், அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் , விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

விவாதம் தேவைப்படும் விஷயங்கள்

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் சூழ்நிலையில் ‘மதங்கள் என்பது வெவ்வேறு வழிபாட்டு முறைகள் தான். அதற்கு அப்பால் வேறொன்றும் இல்லை’ என்று அவர் கூறியுள்ளது மேலும் விளக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டியுள்ளது. செமிட்டிக் மதங்கள் தங்கள் கருத்தியலை உறுதியாக கட்டமைத்துள்ளன. அவற்றை பல்வேறு நாடுகளில் உள்ள மைய சமுதாயங்கள் ஏற்க வேண்டும் என்றால் அந்த (செமிட்டிக்) மதங்களில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் . அவ்வாறு செய்யப்படாததால் தான் ஐரோப்பாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் சமூக முரண்பாடுகளும் மோதல்களும் வளர்ந்து வருகின்றன.

‘ மதம் மாறினாலும் உங்கள் சமூகம் மாறிவிடாது’ என்று மௌலானா ஆசாத் கூறியுள்ளதை முழுமையாக ஏற்றுக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார் பாகவத். ஆனால் பெருவாரியான முஸ்லிம்கள் ஆசாத் கூறியதை ஏற்கவில்லை . மாறாக முகமது அலி ஜின்னாவின் கருத்தைதான் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் என்பதுதான் உண்மை.

குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகவத் கூறியுள்ள மற்றொரு கருத்தும் விவாதிக்கப்பட வேண்டும். அண்மைய தரவுகளின்படி பத்து சதவீதம் குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உள்ளன. 2025 ஐநா உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1.9 சதவீதமாக உள்ளது. உலக சராசரி 2.1 சதவீதமாக இருக்கும் நிலையில் இது சராசரியை விட குறைவாக இருக்கிறது.

இந்த தரவுகள் அறிவியல் பூர்வமாக அலசி ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போது உள்ள மக்கள் தொகை வளர்ச்சியின் படி 2065 இல் இந்தியா 170 கோடி மக்களை கொண்டதாக இருக்கும். அதன் பிறகு அந்த வளர்ச்சி விகிதம் குறைய தொடங்கும். பாகவத் சொல்லிய மூன்று குழந்தைகள் என்ற ஆலோசனை சராசரி வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதத்தை எட்டும் வரை ஏற்புடையதாக இருக்கும். அதன் பிறகு மக்கள் தொகை அபரிமிதமாக பெருகிவிடும்.

அதனால்தான் பிரதமர் மோடி 2019 இல் தனது சுதந்திர தின உரையில், மக்கள் தொகை பெருக்கம் பற்றிய விவாதமும் விழிப்புணர்வும் பெரிய அளவில் நிகழ்த்தப்பட வேண்டும், என்று கூறினார். ‘மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு தேசபக்தி செயல்’ என்று அவர் வலியுறுத்தினார்.

அகண்ட பாரதம் ஆரம்பம்

இந்த விவாதங்களுக்கு அப்பால், பாரதம் குறித்து பாகவதத்தின் கண்ணோட்டம் 21 நூற்றாண்டில் ஆர் எஸ் எஸ் இன் வளர்ச்சியை பிரதிபலிப்பாக இருந்தது. நூற்றாண்டு நேரத்தில் இந்த அமைப்பு நாட்டின் தலைமை இடத்தை அடைந்துள்ளது. அதன் குரல் நம்பிக்கையுடன் வெளிப்படுகிறது. 140 கோடி இந்தியர்களை அரவணைத்து செல்வதாக அதன் கண்ணோட்டம் விரிவடைந்துள்ளது.

அகண்ட பாரதம் ஆரம்பமாகிவிட்டது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


தேனி: திருப்பரங்குன்றம் பிரச்னையின் நீட்சியாக தாமரைக்குளம்! இந்து முன்னணி கண்டனம்!

theni periyakulam perumal temple mosque issue - 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள வேங்கடாசலபதி கரட்டில் உள்ள வேங்கடாசலபதி திருக்கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் வேற்று மதத்தினர் புதிதாக தர்ஹா உருவாக்கி செப்.10 புதன்கிழமை அன்று இறைச்சி விருந்து அமைக்க உள்ளதாகவும். இவ்வாறு அமைப்பதால் கோயிலின் தொன்மை பாதிக்கும், எனவே அனைத்து சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து வேங்கடாசபதி திருக்கோயிலை பாதுகாக்க வேண்டும் என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக மேற்படி நிகழ்வு தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் போராட்டம் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது குறித்து விஎச்பி.,யின் சரவண கார்த்திக் குறிப்பிட்டது…

theri periyakulam thamaraikkulam - 2026

அடுத்த திருப்பரங்குன்றமா??காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக்குளம் கிராமம், இங்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது

சுமார் 600 வருடங்கள் பழமையான இந்த திருக்கோவிலில் தினசரி பூஜை நடந்து வருகின்றது, அருகிலுள்ள மக்களும் வழிபாட்டிற்கு வந்தது செல்கின்றனர்

இந்நிலையில் திருக்கோவிலின் அருகிலே தர்ஹா ஒன்றை உருவாக்கினர் சில இசுலாமியர்கள்.. முதலில் சின்ன‌ சமாதி போல இருந்த அந்த கட்டுமானம்‌ நாளடைவில் விரிவடைய தொடங்கி பெரிய கட்டிடமாகவே ஆகி விட்டது

இந்நிலையில் திடீரென 10/09/2025 அதாவது இன்று அந்த தர்ஹாவிலே தாங்கள் பலி கொடுத்து இறைச்சி சமைத்து சாப்பிட‌ போகிறோம் என இதுவரை இல்லாத ஒன்று அறிவித்தனர் சில இசுலாமியர்கள்

அருகிலேயே பெருமாள் சன்னதி, அப்படியிருந்தும் இறைச்சி சமைத்து சாப்பிட போகிறோம் என அறிவித்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சில இசுலாமியர்களின் இந்த செய்கை அங்குள்ள ஹிந்துக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

உடனே‌ அங்குள்ள மக்கள் ஹிந்து அமைப்புகளை‌ நாட, உடனே‌‌ காவல்துறையிடம்‌‌ இந்து முன்னணி, பா.ஜ.க முறையிட்டதின் பெயரில் காவல்துறை இறைச்சி சமைத்து சாப்பிட கூடாது என‌ அனுமதி மறுத்தது, ஆனாலும் சைவ உணவை நாங்கள்‌ சாப்பிடுவோம் என இசுலாமியர்கள் அறிவித்து உடன் காவல்துறை‌ அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது

இந்நிலையில் திருக்கோவிலுக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களை‌ இன்று‌ திருக்கோவிலுக்கு செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, இதைக்கண்டித்து நமது சகோதர, சகோதரிகள் அனைவரும்‌ ஒன்று சேர்ந்து காவல்துறையிடம்‌ கேள்வி எழுப்ப காவல்துறை‌ அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது

இதை அறிந்த இந்து முன்னணி, பா.ஜ.க, விஹெச்பி தலைவர்கள் அனைவரும்‌ ஒன்று சேர்ந்து‌ ஹிந்துக்களோடு திருக்கோவிலில் பெருமாளை‌ வழிபட சென்ற‌ போது‌ சுமார் 100 க்கும்‌ மேற்பட்டவர்களை‌ கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது திராவிட மாடல் காவல்துறை

பா.ஜ.க மாவட்ட‌ தலைவர் ராஜபாண்டி ஜி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் ஜி, மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரியன் ஜி மற்றும் ஹிந்து இயக்க, பா.ஜ.க தவைவர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றமாக தாமரைக்குளத்தை மாற்ற சதி நடக்கிறதோ என‌ அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

உடனே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதில்‌ தலையிட்டு திருக்கோவிலின் உரிமை‌ மற்றும் சம்பிரதாயத்தை நிலை நாட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு அங்குள்ள பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்

  • பாலு சரவணகார்த்திக், விசுவ ஹிந்து பரிஷத்

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி ! தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் !- என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதி மலை மீது மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிறிய குடில் போட்டு தர்காவாக பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அந்த இடத்தின் மீது பிறைக் கொடியை பறக்க விடுவது, கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை அழைத்து வந்து தொழுகை நடத்துவது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

தாமரைக்குளம் பகுதியில் உள்ள பொது மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை எப்படி தர்காவாக மாற்றலாம். நிலத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

முதலமைச்சரின் கவனத்திற்கும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். ஆனால் அரசாங்க நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து 150 அடிக்கு அருகிலேயே
முஸ்லிம்கள் பிணத்தைப் புதைப்பது, பிறைக்கொடியை பறக்க விடுவது போன்ற சம்பவங்களால் பொது அமைதி பாதிக்கப்படும் என்பதைக் கூட உணராமல் அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது முஸ்லிம்கள் அந்த இடத்தில் மிகப்பெரிய கூடாரம் ஒன்றையும் அமைத்துள்ளனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக இதை அமைக்கின்றோம் எனவும் கூறியுள்ளனர்.

புதிதாக கூடாரம் அமைப்பது பற்றியும் அரசு நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் புகார் அளித்தும் அரசு தரப்பிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அங்கு வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆக்கிரமித்த இடத்தைப் பற்றி புகார் கூறியதால் திடீரென்று முஸ்லிம்கள் அந்த மலையின் மீது 500 பேருக்கு கறி விருந்து நடத்துகிறோம் என அழைப்பு விடுத்தனர். மிலாடி நபியை ஒட்டி கந்தூரி விழா நடைபெறும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தியை பரப்பினர்.

வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது இந்துக்களின் மன உணர்வை பாதிக்கும்
என்பதை கூட அறியாமல் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அமைதி காத்துள்ளது.

எப்போதும் இல்லாமல் திடீரென்று கூடாரம் அமைக்கும் முஸ்லிம்களை எச்சரிக்காமல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP )தலைமையில் அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு அசைவு உணவு சாப்பிட வேண்டாம் என முஸ்லிம்களிடம் காவல்துறை கோரிக்கை வைத்தது. ஆனால் முஸ்லிம்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டு, சொன்ன தேதியில் மலை மீது அசைவ உணவு விருந்து வைப்போம் என வேலைகளை தொடர்ந்தனர்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத ஊர் பொதுமக்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் ஆகியோர் போராட்டத்தை அறிவித்து மலையேற தயாரான போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு நிலத்தில் கோயிலுக்கு அருகில் அதுவும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வெங்கடாஜலபதி கோவிலின் அருகில்
நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டு விட்டு இந்துக்களை அடக்க நினைப்பது தமிழக அரசின் கையாலாகாத் தனத்தையும் சிறுபான்மை பாசத்தையும் காண்பிக்கிறது.

வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின் படி ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகில்
இன்னொரு வழிபாட்டு தலம் அமையக்கூடாது என்பதையும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தேனியில் உள்ள தாமரைக் குளம் பகுதியில் மட்டுமல்லாது கடந்த சில நாட்களாகவே திட்டமிட்டு முஸ்லிம்களால் பல இந்து கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை பலியிடுவோம் என‌ முஸ்லிம்கள் சென்றனர். அதை ஆரம்பத்திலேயே காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால், அது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஏற்பட்ட ஒட்டுமொத்த இந்து எழுச்சியால் முஸ்லிம்கள் நடத்தவிருந்த கந்தூரி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் நடந்து வருவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கடையநல்லூரில் மிகவும் தொன்மை வாய்ந்த அகத்தியர் அருள் புரிந்த அத்ரி மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த மலையின் மீது முஸ்லிம்கள் விழா நடத்துவதற்காக அந்தப் பகுதியில் பிரசுரம் விநியோகித்தனர்..

சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியில் இந்து கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள அரசு நிலத்தை முஸ்லிம்களின் ஈத்கா வழிபாட்டிற்காக அரசாங்கமே தாரை வார்த்தது.

இப்படி தொடர்ந்து இந்து கோவில்களின் நிலங்கள் பறிபோவதை அரசாங்கம் வேடிக்கை பார்க்கக்கூடாது.

திராவிட மாடலின் சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டால் இந்து கோவில்கள் அருகில் வேறு வழிபாட்டுத்தலங்கள் அமைவதை கண்டு இந்துக்கள் கொதிப்படைந்துள்ளனர் .

நேற்று 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி கோவிலின் புனிதத்தை காக்கப் போராடிய பொதுமக்களையும், இந்து அமைப்பினரையும் காவல்துறையினர் தாக்கியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அவனியாபுரம் அருணகிரி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!

kumbabishekam avaniyapuram arunagii swmy temp - 2026

மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் 70 வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

மதுரை அவனியாபுரத்தில், உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக , 6 ம் தேதி காலை அருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் அணுக்கை பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி பூஜையும் மாலையில் கும்ப அலங்காரம் வேதிகார்ச்சனையுடன் முதல் கால யாகசாலை பூர்ணாஹீதியுடன் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, 7.09.25 அன்று காலை 6 மணியளவில் விக்னேஷ்வர் பூஜை கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மாஹ பூர்ணா திகுதியுடன் தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்குள் கடம் புறப்பாடு அருள்மிகு அருணகிரி சுவாமிகள் ஆலய விமான மஹா கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து, மூலவருக்கும் மற்றும் பரிகார மூர்த்திகளும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ,12 மணியளவில் கோவிலில் 5 ஆயிரம் அன்னதானம் வழங்கப்பட்டது.

அருணகிரி சுவாமிகள் ஆலய கும்பாபிஷேக விழாவிற்குகான ஏற்பாடுகளை, திருப்பணி குழுத் தலைவர் அன்பரசன், செயலாளர் மார்கநாதன், பொருளாளர் கனகாம்புஜம், சிவமாணிக்கம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இது குறித்து, சிவமாணிக்கம் அடியவர் கூறுகையில் , கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து வந்த அருணகிரி சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் இங்கு பக்தர்கள் தங்கள் நோய் நொடிகளை வேண்டி விபூதி வாங்கி பூசி சென்றால் பூரண நலம் பெறுவார்கள் தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. மற்றும் 70-வது ஆண்டு அருணகிரியார் குருபூஜைகளும் நடைபெறுகிறது.

15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு: தலைவர்கள் வாழ்த்து! 

cpradhakrishnan wth pm modi - 2026

பாரதத்தின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட  ‘இண்டி’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

முன்னதாக, 14வது குடியரசுத் துணைத் தலைவராக கடந்த  2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர் தமது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து தேர்தல் நடைபெற்றது. இதற்கு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணியின் சார்பில் பாஜக., அறிவித்தது. இதை அடுத்து, அவர் அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு கோரினார்.

இரு அவைகளிலும் தங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற போதிலும், திமுக., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி, தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட் பாளராக அறிவித்தது. இதை அடுத்து தேர்தல் நடப்பது உறுதி ஆனது. 

திட்டமிட்டப்படி, செப்.9ம் தேதி நாடாளுமன்ற  முதல் தளத்தில் உள்ள வசுதா அரங்கில் காலை 10:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக வாக்கினைப் பதிவு செய்தார். பின் ஹிமாச்சலப் பிரதேச வெள்ள பாதிப்பை பார்வையிட அவர் சென்றார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சிவ்ராஜ் சிங் சௌகான், கிரண் ரிஜிஜு, எல்.முருகன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட பாஜக., மற்றும் தம்பிதுரை, சண்முகம், இன்பதுரை, தனபால், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி., தர்மர் உள்ளிட்ட அதிமுக., எம்.பி.,க்கள் உள்பட, தே.ஜ.கூட்டணி எம்பி.,க்கள் வாக்களித்தனர்.  

அதுபோல், இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்ஸன் ரெட்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் உள்பட கூட்டணிக் கட்சியினர் வாக்களித்தனர். 

தேர்தலில் பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரு அவைகளிலும் உள்ள மொத்த வாக்குகள் 788. இதில் இரு அவைகளிலும் காலியாக உள்ள 7 இடங்கள் போக, 781 எம்.பி.,க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். பாரத் ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம் ஆகியவை தேர்தலை புறக்கணித்த நிலையில்,மொத்தம் 767 எம்.பி.,க்கள் வாக்களித்தனர்.  வெற்றிக்கு, 384 வாக்குகள் தேவை என்ற நிலையில், 452 வாக்குகள் பெற்று தேஜ.கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டி கூட்டணியின் பி.சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 

இதை அடுத்து, குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, குடியரசு முன்னாள் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்.வெங்கட் ராமனுக்கு (1984 — 1987) அடுத்து குடியரசு துணைத் தலைவரான இரண்டாவது தமிழர் ஆனார், சி.பி.ராதாகிருஷ்ணன்.  1957 அக்.20ல் திருப்பூரில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன்,  இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., பட்டதாரியான இவர், 1996தமிழக பா.ஜ., செயலராக இருந்தார். 1998, 1999 ஆகிய வருடங்களில், கோவையில் இருந்து மக்களவை எம்பி., ஆனார். பின்னர் 2003 முதல் 2006 வரை தமிழக பாஜக., தலைவராக இருந்தார்.  2016ல் தேசிய கயிறு வாரிய தலைவராக இருந்த இவர், பின்னர் 2023ல் ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஆனார்.  பின் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேஜ.,கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்பி.,க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறியபோது, தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு மிகவும் ரகசியத்தன்மையுடன் நடந்தது. மேலும், பல எதிர்க்கட்சி எம்பி.,க்களும் தேஜகூ., வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் தங்கள் மனசாட்சியின் குரலைக் கேட்டு வாக்களித்திருப்பதைக் காட்டுகிறது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்த அனைத்து தேஜகூ., எம்பி.,க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பி.,க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து: சமூக சேவை, ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை வலுப்படுத்தி, பார்லி விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று நம்புகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! – குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்; அரசியலமைப்பு, ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று ஸ்டாலின், குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, ஸ்டாலினை சந்தித்து சி.பி. ராதாகிருஷ்ணன் ஆதரவு கோரியிருந்ததும், தமிழருக்கு திமுக., ஆதரவளிக்க வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. எனினும் திமுக., இண்டி கூட்டணி வேட்பாளருக்கே வாக்களித்தது.

இந்து முன்னணி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவராக சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வானது தமிழகத்திற்குப் பெருமை என்று, இந்து முன்னணி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கை:

இந்தியாவின் 11ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. இராதா கிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலிலும், பொது வாழ்விலும் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவர் மேதகு சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள். சிறு வயது முதலே தேசப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அரசுத் துறைகளில் தலைவராகவும், ஆளுநராகவும் படிப்படியாக உயர்ந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றியவர் . அவர் இன்று இந்தியத் திருநாட்டின் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்பது குறித்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

பாரதத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் தேர்தலில்,மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தேசிய அளவில் தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழகத்தில் வாழ்ந்த முதறிஞர் ராஜாஜி முதல் டாக்டர் அப்துல்கலாம் வரை உயரிய பதவியில் இருந்து பாரதத்திற்கு பெருமை சேர்த்தவர்களின் வரிசையில் இன்று தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்கும் மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களும் பெருமை சேர்ப்பார்.

பாரதத்தின் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்கும் மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்: ஓபிஎஸ்

ops interview - 2026

பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம். – மீண்டும் இணைந்தால் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன் என்றார்.

ஒன்றிணைந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கேள்விக்கு:
உங்களுடைய கருத்து வரவேற்கக் கூடியது. அதுதான் நடக்கும் ஒன்றிணைய வேண்டும் என்கிற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. ஒன்றிணைய வேண்டும் அப்படி ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவியின் எண்ணம் நிறைவேறும். – என்றார்

இபிஎஸ் மாறுபடுவதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு:
நீங்கள் தயவு செய்து என்னை கேட்பதை விட்டுவிட்டு அவரை கேளுங்கள். – என்றார்

இபிஎஸ்ஐ தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் நான் கூட்டணிக்குள் வருவேன் என டிடிவி கூறியது குறித்த கேள்விக்கு:
ஆழமான கருத்து, சத்தான கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சி இணைவது குறித்து நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை. – என்றார்.

இந்திய கூட்டணியில் மீண்டும் இணைய எதுவும் கோரிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு:
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். – என்றார்.

ஒன்றிணையை ஈபிஎஸ் ஒப்புக்கொண்டால் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு:
அதில் பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது. ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்.

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு:
என்னைப் பொருத்தவரை அவர் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் அதற்கு எனது வாழ்த்துக்கள்.

டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு:
இதுவரை இல்லை.

அதிமுகவை துண்டாக்கி விளையாடுவது பாஜக ரசிக்கிறதா என்ற கேள்விக்கு:
நான் அப்படி எண்ணவில்லை.

வர தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு:
உடனுக்குடன் கருத்துக்கணிப்பு வெளியிட்டு கோட்பாடுகளை கேட்டால்,
எப்படி சொல்வது பொறுத்திருந்து பாருங்கள் தேர்தல் வர வர எண்ணங்கள் நிறைவேறும். தினந்தோறும் மக்களை சந்திக்கிறேன்.

செங்கோட்டையிடம் அலைபேசி மூலமாக பேசினீர்களா என்ற கேள்விக்கு:
டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என,ஒபிஸ் கூறினார்.

தராசு முனையில் ‘தர்மம்’!

dharma dhyana meditation - 2026

— இந்தோல் சென்குப்தா —
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –

ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் புதுடில்லியில் நிகழ்த்திய மூன்று நாள் தொடர் உரை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தனர். ஆர் எஸ் எஸ் ஸின் நூற்றாண்டை ஒட்டி அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் கருத்தியல் தாயமைப்பாக கருதப்படுகிறது ஆர் எஸ் எஸ். அதன் வரலாற்றைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன . அதன் அர்ப்பணிப்பு , வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றும் முழுநேர ஊழியர்கள், இந்திய அரசை நடத்தும் பிரதமர் நரேந்திர மோதி உட்பட மத்திய அமைச்சரவையில் உள்ள பலரும் அந்த அமைப்பின் தொண்டர்கள் என்பன போன்ற உண்மைகள் பலரும் அறிந்ததே.

விரிவான விவாதம் தேவை

ஆன்மாவும் வாளும் (Soul and Sword) என்ற பெயரில் ஹிந்துயிசத்தின் அரசியலைப் பற்றிய நூலை நான் எழுதி உள்ளேன். அது தொடர்பான ஆய்வின் போது ஆர்எஸ்எஸ் ஸின் வரலாற்றைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால், அதன் மைய கருத்தியல் பற்றியும் அந்த கருத்தியலில் இயல்பு பற்றியும் நீண்ட விரிவான விவாதம் நிகழாமல் இருக்கிறது. பலரும் ஹிந்துத்துவ கருத்துகளின்படி இந்தியாவை ஹிந்துராஷ்டிரமாக்குவது அதன் நோக்கம் என்று ஒற்றை வரியில் சுலபமாக சொல்லி சென்று விடுகிறார்கள். பண்பாட்டு ரீதியில் ஹிந்துவாக வாழும் அனுபவத்தை, வாழ்வியலை, வெறும் அரசியல் மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் சுருக்கி சொல்லி செல்கிறார்கள்.

இந்த எளிய புரிதல்தான் ஆர்எஸ்எஸ் பற்றி பலருக்கும் உள்ளது. அந்த அமைப்புக்கு 50 – 60 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 70 ஆயிரம் கிளைகள் உள்ளன . அதன் மூலம் இந்திய சமுதாயத்தை தன் லட்சியத்திற்கு ஏற்ப மாற்ற நம்பிக்கையுடன் பணிபுரிந்து வருகிறது. அந்த மாற்றத்துக்கு ஒரு முக்கிய விசையாக அதன் அரசியல் கரமான பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை உறுதிப்படுத்த முனைகிறது. ஆனால் 1947 க்கு பிறகு சுதந்திர இந்திய வரலாற்றில் பல தசாப்தங்கள் அந்த கட்சி ஆட்சியில் இருந்ததில்லை. பாஜக ஆட்சியில் இருந்தது சொற்ப காலமே.

ஆர் எஸ் எஸ் எதன் மீது கவனமாக இருக்கிறது ? என்ற கேள்வி சரியானதாக இருக்கும். அதிகாரத்தின் மீது (அரசியல் அதிகாரம் மட்டுமல்ல சமுதாயத்தின் மீது செல்வாக்கு/ தாக்கம் என்ற அதிகாரமும் கூட) என்பது வழக்கமான பதில். பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பை கூர்ந்து கவனித்து வருபவன் என்ற அடிப்படையில், மேற்சொன்ன பதில் தவறு என்பதே எனது கருத்து.

rss 100 years - 2026
#image_title

சமநிலை

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆர் எஸ் எஸ் சமநிலையை பற்றி தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறது. 1925 இல் துவங்கியதில் இருந்து, இந்திய தத்துவங்களை கற்றதிலிருந்து, ஆர்எஸ்எஸ் தலைமை இந்திய தேசியத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் சமநிலை உணர்வு அவசியம் என்ற முடிவுக்கு மீண்டும் மீண்டும் வந்துள்ளது.

பொதுவாக நம்பப் படுவதற்கு நேர்மாறாக, ஆர் எஸ் எஸ் அதிகாரம் (சக்தி) என்பதை விடவும் சமநிலை (சமன்வய) என்ற மதிப்பீட்டை முக்கியமாகவும் நோக்கமாகவும் கொண்டுள்ளது என்பதை இப்போதுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை முன்னிறுத்துகிறது. இதுவே இந்த கட்டுரை முன் வைக்கும் மையக் கருத்து.

இந்த குறிக்கோள் நவீன சொல்லாடலால் வந்தது அல்ல. இந்தியாவின் சாரமான தத்துவ நாகரிகத்தில் ஊடுபாவாக உள்ள விஷயம் இது. சமநிலை, நல்லிணக்கம், எந்த பக்கசார்பும் இல்லாத மையப் பாதையை தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் வரலாற்று ரீதியாக இந்தியா வளர்த்தெடுத்த மதிப்பீடுகள். இவற்றிற்கேற்ப ஆர்எஸ்எஸ் அரசியல் சக்தியாக மட்டுமே தன்னை நிறுவுவதற்கு முனையவில்லை. மாறாக தொன்மையான தேசிய பண்புகளின் பாதுகாவலனாக தன்னை நிறுவ முனைகிறது.

சமநிலையே தர்மம்

முன்பிருந்ததை விட மேலும் உயர்வான இந்த புரிதலுக்கு காரணம் மோகன் பாகவத் தர்மம் பற்றி கூறிய தெளிவான வரையறை. புதுடில்லி நூற்றாண்டு உரையில் அவர் , ‘ தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் சமநிலையை பேணுவதே தர்மம். எதுவாக இருந்தாலும் தீவிரமாக அதன் இறுதி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். பாரதிய மரபு இதை நடுவழி என்கிறது. இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுகின்ற விஷயம் இது.’

தர்மம் என்றால் மதம் என்ற பொதுவான புரிதலில் இருந்து வேறுபட்டது இந்த விளக்கம். இங்கு தர்மம் என்பது சூழலியலுக்கு ,சமூகவியலுக்கு ஏற்ற கருத்தாக – தீவிரவாதத்தை விலக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும் சமநிலை கருத்தாக – விளக்கப்படுகிறது. ஒருவர் தன்னளவிலும் சமூக ரீதியிலும் இயற்கையோடு கூடிய உலகத்துடனும் ஒத்திசைவான சமநிலை கொள்ளும் வழிமுறையாக முன்வைக்கப்படுகிறது. இந்த விளக்கம் ஆர் எஸ் எஸ் ஸின் கருத்தியல் அரசியல் மற்றும் சமூக நோக்கம் கொண்டது என்பதிலிருந்து தத்துவார்த்தை நோக்கம் கொண்டது என்ற தளத்துக்கு நகர்த்துகிறது.

இங்கு அதிகாரம் என்பது இறுதி லட்சியம் அல்ல. மாறாக லட்சிய பாதையில் கிடைக்கும் கூடுதல் லாபம். அதே வேளையில் சமநிலையை பராமரிப்பதற்கு முரணாக செல்லுமானால் அது ஆபத்தானது. ‘மதத் தீவிரவாதம், அதனால் ஏற்படும் மோதல்கள், அமைதியின்மை’ ஆகியவற்றால் இன்றைய உலகம் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி பாகவத் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். நுகர்வு வெறி மற்றும் லௌகீக வாழ்வியல் கண்ணோட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.

கொள்கையற்ற அரசியல், மனிதநேயமற்ற அறிவியல் என்று மகாத்மா காந்தி சுட்டிக்காட்டிய ஏழு சமூக தீமைகளை மேற்கோள் காட்டி நவீன சமுதாயங்களில் நிலவும் சமநிலை அற்ற சூழலுக்கான காரணங்களாக விளக்கினார்.

rss 100 years celeb - 2026
#image_title

நூற்றாண்டு செயல்திட்டம் ( பஞ்ச பரிவர்த்தன் )

இந்த தத்துவார்த்த லட்சியத்தை சமூக நடைமுறைப்படுத்த ஆர் எஸ் எஸ் தற்போது முனைப்பு காட்டி வரும் பஞ்ச பரிவர்த்தன், ஐந்து தளங்களிலான செயல் திட்டத்தை பற்றி அவர் எடுத்துரைத்தார். பஞ்ச பரிவர்த்தன் – சமூக நல்லிணக்கம் (சமாஜிக் சமரசதா) , நல்ல குடும்பம் பற்றிய விழிப்புணர்வு (குடும்ப பிரபோதன்) , இயற்கை சூழலியல் பற்றிய விழிப்புணர்வு (பரியாவரண் சங்கர்ஷன்) ,தன்னெறி (ஸ்வாஸ்த்தா ) – இது பண்பாட்டு பெருமை மற்றும் தற்சார்பை வலியுறுத்துவது, குடிமக்கள் கடமை (நாகரிக் கர்த்தவ்யா) என்பதே அந்த ஐந்து தளங்களிலான செயல் திட்டம்.

இவை ஒவ்வொன்றும் சமநிலையை மீண்டும் நிறுவுவதற்கான வழிமுறைகள். சமூக நல்லிணக்கம் என்பது வரலாற்று ரீதியான மோதல்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு ஜாதிகள், சமூகங்களிடையே உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய நல்லிணக்கத்தை நிறுவுவதற்கான செயல் திட்டம். குடும்பம் பற்றிய விழிப்புணர்வு , தனிமனிதரின் எதிர்பார்ப்புகளையும் குடும்ப பொறுப்புகளையும் சமநிலைப் படுத்தும் நோக்கம் கொண்டது. சூழலியல் பற்றிய விழிப்புணர்வு என்பது மனித முன்னேற்றத்திற்கும் இயற்கைக்குமான சமநிலைக்காக விடுக்கப்பட்ட நேரடி அறைக்கூவல்.

தன்னெறி மற்றும் தற்சார்பு (ஸ்வாஸ்தா மற்றும் சுதேசி) என்பது பொருளாதார சமநிலைக்கானது. ‘தற்சார்பு’ என்றால் ‘இறக்குமதியை நிறுத்துவது’ என்று பொருள் அல்ல. மாறாக சமமான நிலையில் இருப்பவர்களுக்கு இடையேயான தன்னிச்சையான சர்வதேச வர்த்தகம். இது தன்னை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் நம்முடைய அழுத்தத்திற்கு ஆள்படுபவர்களை நமக்கு சாதகமாக சுரண்டுவது அல்ல என்று பாகவத் தெளிவு படுத்தினார். இது தேச பொருளாதார நலன்களையும் சர்வதேச சார்பு என்பதையும் சமநிலைப் படுத்துவதற்கான அழைப்பு.

இறுதியாக, குடிமக்கள் கடமையானது தனி நபரின் உரிமைக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அவரது பொறுப்புகளையும் சமநிலைக்கு கொண்டு வருவது. நல்லிணக்கமும் செயல் துடிப்பும் கொண்ட சமுதாயத்திற்கான மிக முக்கியமான அம்சமிது.

இந்த ஐந்து தளத்திலான அணுகுமுறை உலகில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முழுமையான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி அந்த கண்ணோட்டத்தை, கருத்தியலை பற்றி வெறுமனே பேசாமல் அதை செயல்படுத்துவதற்கான பல பரிமாணங்களைக் கொண்ட துடிப்பான செயல்திட்டம் இது.

சமநிலை பற்றி ஹெட்கேவார்

ஆர் எஸ் எஸ் ஸை உருவாக்கிய கேசவ பலிராம் ஹெட்கேவாரின் பார்வையிலும் சமநிலை என்பது முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது வார்த்தைகளில் ,

” உலகத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவ வேண்டுமானால் அதற்கு சமநிலை தேவைப்படுகிறது. பலமுள்ளவனும் பலவீனமானவனும் ஓரிடத்தில் வந்தால் அங்கு அமைதி குலைகிறது. இரண்டு புலிகள் ஒன்றை ஒன்று துன்புறுத்துவதில்லை. அமைதியும் நல்லிணக்கமும் சம வலிமை கொண்டவர்களிடையேதான் நிலவும். “

ஹெட்கேவாரின் வார்த்தைகள் உலகம் முழுக்கவும் ஓங்கி ஒலிக்கும் வல்லமை படைத்தவை.

சமயங்கள் கூறும் சமநிலை

சமநிலையை பற்றிய கருத்து ஆர் எஸ் எஸ் இன் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, இந்திய தத்துவ நீரோட்டத்தின் ஆழத்திலிருந்து நேரடியாக பெறப்பட்டது. பாகவத் சொல்லிய ‘மையப்பாதை’ (மத்யமா பிரதிபாத்) என்பது பௌத்த சிந்தனையின் மையக் கருத்தாக இருக்கிறது. புலனின்பத்தில் மூழ்கி விடாமலும் தீவிர புலனொடுக்கத்தில் ஈடுபடாமலும் இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையில் மையப் பாதையில் வாழ்க்கையை நடத்தும்படி பௌத்தம் கூறுகிறது.

நான்கு புருஷார்த்தங்கள் – மனித வாழ்க்கையின் நோக்கம் பற்றிய சரியான வரையறை – என்று ஹிந்துக்கள் சொல்வதும் சமநிலைக்கான சிறந்த செயல்திட்டமாகும் . அது பொருளையும் (அர்த்த) இன்பத்தையும் (காம) தர்மம் என்ற வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் ஆன்ம விடுதலைக்கு (மோட்சம்) வழிகோலுகிறது. வாழ்க்கை என்பது உலகியலை மறுப்பதோ அல்லது உலகியல் சுகங்களில் மூழ்குவதோ கிடையாது. இந்த இரண்டிற்கும் இடையே சரியான வகையில் பயணிப்பதாகும்.

ஸ்ரீமத் பகவத் கீதை

ஹிந்து நூல்களில் உயர்வானதாக பகவத் கீதை கருதப்படுகிறது. காந்தி, விவேகானந்தர் , அரவிந்தர் போன்ற பலரும் அதை மிகவும் நேசித்துள்ளனர். கீதை நிஸ்காமிய கர்மா அல்லது தன்னலமற்று செயல் புரிவதை வலியுறுத்துகிறது. முழு அர்ப்பணிப்போடு செயல் புரிவது அதே வேளையில் பலனின் மீது பற்றற்று செயல் புரிவது என்ற உளவியல் சமநிலையை அது போதிக்கிறது.

லோக் சங்ரஹா ( உலக நலன் மற்றும் ஒற்றுமை ) என்று கீதை கூறுவது சமூக மற்றும் பிரபஞ்ச ஒழுங்கை பராமரிப்பதற்கான சிறந்த செயல்திட்டமாகும். உலகிலுள்ள எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒட்டுமொத்த சமநிலையை பராமரிக்க ஒவ்வொன்றிற்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. இந்த தொன்மையான ஞானம்தான் பாகவத் தன் உரையில் வெளிப்படுத்திய கண்ணோட்டத்தின் தத்துவ அடித்தளமாக இருந்தது.

மறைபொருளா ?

அந்தவகையில், பல நூற்றாண்டு காலமாக அன்னியர் ஆதிக்கத்தில் இருந்ததாலும் அதற்கு பிறகு ‘முழுமையற்ற’ மேற்கத்திய சித்தாந்தங்களான கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவத்தை பின்பற்றியதாலும் இந்தியர்களின் மரபான சமநிலையில் வாழ்வது என்ற புரிதல் மறைந்து போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அந்த வாழ்வியல் புரிதலை மீண்டும் நிறுவ களப்பணி செய்து கொண்டிருக்கிறது.

மேற்கண்டதெல்லாம் ரகசியமாக சிலருக்கு பாகவத் மறைபொருளாக சொன்னது அல்ல . அவர் இரண்டு நாள் உரை நிகழ்த்தினார். மூன்றாம் நாள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிலிருந்து சில விஷயங்களை பார்ப்போம். அவர் சொன்னார், உலக நாடுகளிடையே உயர்ந்த நிலையை இந்தியா எட்ட வேண்டும். ஆனால் பிற நாடுகளை தகர்த்து அழிக்காமல், தன் கொள்கைகளை ஏற்காதவர்களை வெட்டி வீழ்த்தாமல், தொன்மையான நாகரீகங்களை துடைத்தெறியாமல் , உலகின் உச்ச நிலையை எட்ட வேண்டும். உலகத்திற்கு ஆன்மீகத்தை வழங்குவதே இந்தியாவின் நோக்கம். இந்தியாவின் தொன்மையான ஞானம் ஒரு பிரிவினருக்கு சொந்தமானது என்று எப்போதுமே சொல்ல முடியாது . மாறாக இந்திய தத்துவ ஞானத்தின் சாரமானது உலகம் முழுமைக்குமானது. அது ஒன்றை விட மற்றொன்று உயர்வானது என்று எப்போதும் சொல்லியதில்லை என்று பாகவத் வலியுறுத்தி கூறினார்.

ஆர் எஸ் எஸ் ஸின் மற்றொரு உயர்ந்த தலைவரான தீனதயாள் உபாத்தியாயா , ‘ வாழ்க்கையை ஒருங்கிணைந்ததாக பார்ப்பது பாரதிய கலாச்சாரத்தின் அடிப்படை குணம். வேற்றுமையும் பன்முக தன்மையும் வாழ்க்கையில் உள்ள போதிலும் அதற்கு பின்னால் இருக்கும் ஒற்றுமையை கண்டறிவே நாம் முயன்று வருகிறோம்’, என்று கூறியுள்ளார்.

மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் மிகவும் செல்வ செழிப்புடன் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகமாக இருப்பது இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு ஒரு தடையாக உள்ளது என்று பாகவத் கூறினார். ராமர் கோவில் இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்ற போதிலும் அதேபோன்ற காசி, மதுரா கோவில் விடுதலை இயக்கத்தில் ஈடுபடாது என்றார். ஆனால் ஸ்வயம் சேவகர்கள் அந்த இயக்கத்தில் ஈடுபட்டால் ஆர் எஸ் எஸ் அதை தடுக்காது என்று தெளிவுபடுத்தினார்.

ஆர் எஸ் எஸ் ஸை பொறுத்த வரையில் இஸ்லாமிய படையெடுப்பில் பாதிக்கப்பட்ட அயோத்தியா , காசி , மதுரா மூன்று இடங்களும் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமான புனித ஸ்தலங்கள். அதற்கு அப்பால், ‘ஒவ்வொரு மசூதிக்கு அடியிலும் சிவலிங்கத்தை தேடிக் கொண்டிருக்க தேவையில்லை’ என்றார். அத்துடன் ஆர்எஸ்எஸ் இன் தலைவரான தான் இந்த மூன்று இடங்களை மீட்பதற்கு அப்பால் வேறெதற்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவளிக்காது என்று வெளிப்படையாக அறிவித்த பிறகு முஸ்லிம் சமூகங்கள் நீண்ட கால கோரிக்கையான இவற்றை விட்டுக் கொடுப்பதை பற்றி முடிவு எடுக்க வேண்டும் . அது வரும் காலங்களில் எந்தவிதமான மோதலும் ஏற்படாமல் மையப் பாதையை ஏற்படுத்தி தரும் என்று கூறினார்.

ஆர் எஸ் எஸ் இன் கருத்தியலில் இருந்து கிளைத்தெழுந்த பாஜகவுடன் அதற்கு நெருங்கிய உறவு இருக்கிறது. என்றாலும் அதே கருத்தியலை ஏற்றுக் கொண்ட எவரையும் எந்த அமைப்பையும் ஆதரிக்க தயங்காது என்று பகவத் தெளிவுபடுத்தினார். ஆர் எஸ் எஸ் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. சமூகங்கள் உயர்வடையவும் அவற்றுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவும் உண்மையான சகோதரத்துவம் ஏற்படவும் அரசின் செயல்களுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களை முன்னெடுக்க வேண்டும். அவற்றை அரசால் செய்ய முடியாது , என்றார்.

தீவிர கம்யூனிசத்திற்கும் மிகையான முதலாளித்துவத்திற்கும் எதிராக எச்சரிக்கை விடுத்தார் பாகவத். இதை மற்றொரு ஆர் எஸ் எஸ் சிந்தனையாளரான தத்தோபந்த் தெங்கடி மேற்கண்ட இரண்டுடனும் ‘அணிசேரா’ பிரச்சாரத்துடன் இணைத்து பார்க்கலாம். மூன்றாவது வழி (1998) என்ற தலைப்பில் தெங்கடி மையப் பாதையை தேர்ந்தெடுப்பது பற்றி நூல் எழுதியுள்ளார்.

வோக் (Woke) பிரச்சாரம் மற்றும் எல்லாவற்றையும் மறுக்கும் கலாச்சாரத்தையும் (Cancel culture) மிக ஆபத்தானதாக ஆர் எஸ் எஸ் பார்க்கிறது என்றார் பாகவத் . சூழலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது – மேற்கத்திய நாடுகளில் உள்ள வலதுசாரிகள் சூழலியலை இடதுசாரி (கம்யூனிச) கருத்தாக பார்க்கிறார்கள். எனவே அதை ஏற்க மறுக்கிறார்கள் – மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

பாஜகவின் உள் விவகாரங்களில் ஆர் எஸ் எஸ் தலையிடுவதில்லை என்று கூறிய பாகவத் , கட்சிக்கு புதிய தலைவர் யார் என்பதை ஆர்எஸ்எஸ் முடிவு செய்வதாக இருந்தால் இவ்வளவு நீண்ட காலம் தாமதமாக இருக்காது என்றார்.

ஆரம்பம் முதலே அமைதியாக பின்னணியில் இருந்து வேலை செய்யும் ஆர் எஸ் எஸ் இப்போது ‘வெளிப்படையாக வந்திருக்கிறது’ என்று சுலபமாக சொல்லலாம். ஆனால் அவ்வாறு சொல்வது முன்யோசனையின்றி உணர்ச்சி வேகத்தில் சொன்னதாகிவிடும். மூன்று நாள் உரையில் பகவத் வலியுறுத்தி சொல்லியது போல் ஆர்எஸ்எஸ் இன் பணி பரந்த இந்திய சமுதாயத்தின் லட்சியங்களில் இருந்து வேறுபடாத, அதன் ஆதரவு பெற்ற பணியாகும்.

ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் வாதங்கள் இன்று இந்தியாவிலும் உலகளவிலும் பலத்த எதிரொலியை எழுப்பி வருகின்றன. மேம்போக்கான வளர்ச்சிகளால் களைப்படைந்து, மரபான பண்புகளை ஏற்க ஏங்கும், மெதுவாக மாறிவரும் உலகில் இது இயல்பானது. எனவே, இதற்கு முன்பில்லாத வகையில் கேட்க தயாராக உள்ள சமுதாயத்திற்கு ஆர் எஸ் எஸ் தன் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் முன்வைக்கிறது.

நன்றி : சண்டே கார்டியன்


இந்தோல் சென்குப்தா பல விருதுகளைப் பெற்ற வரலாற்றாளர். ஆன்மாவும் வாளும் என்ற நூல் உட்பட பதிமூன்று நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்.


அறம் வெல்ல தாமதம் ஆகிறதே..! அது ஏன்?

hindu
ohm

— டாக்டர் சசிகிரண் உமாகாந்த் —
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –

அறம் / தர்மம் அல்லது எது சரியானதோ அது வெற்றி பெற காலதாமதம் ஆகிறது. எல்லா கலாச்சாரத்திலும் தர்மம் மெதுவாகதான் வெற்றி பெறுவதாக இருக்கிறது. இது ஏன் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. இந்த தாமதம் பலருக்கும் குழப்பத்தை அல்லது தாமதம் நியாயமற்றது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தவறு செய்பவர்கள் வளமோடு வாழ்கிறார்கள். எட்டா கனியாக நீதி இருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி இல்லையா ?

ஹிந்து தத்துவங்களும் மற்ற மரபுகளில் உள்ள கண்ணோட்டங்களும் இதைப்பற்றி வேறு விதமாக சொல்கின்றன. தாமதம் என்று தெரிவது பல நேரங்களில் சரியான காலமாகவும் மற்றும் தார்மீக சமநிலைக்கு அவசியமான வழியாகவும் பார்க்கப்படுகிறது.

தர்மம் காலத்திற்கும் சூழலுக்கும் கட்டுப்பட்டதே!

பகவத் கீதையில் (4.7-8 ) ஸ்ரீ கிருஷ்ணர் , ‘ஓ பாரதா , எப்போதெல்லாம் தர்மம் தளர்ந்து அதர்மம் வலுப் பெறுகிறதோ அப்போதெல்லாம் நான் பிறப்பெடுக்கிறேன். நல்லவர்களை பாதுகாத்து , தீமை செய்பவர்களை ஒடுக்கி , அறத்தை மீண்டும் மீண்டும் நிலை நாட்டுகிறேன்,’ என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

ஆனால் உடனடியாக செயல்படுவதாக அவர் சொல்லவில்லை. காரண காரியம் முறைமை போலவே காலத்திற்கும் ஏற்புடைய சூழலுக்கும் உட்பட்டே செயல்படுகிறார். ராமாயணத்தில் சீதாப்பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்றவுடன் ராமபிரான் அவனுடன் சண்டையிடவில்லை. மாறாக சூழல் பக்குவப்பட வேண்டி இருந்தது. கூட்டாளிகளை சேர்க்க வேண்டியிருந்தது. சில விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. தர்மம் உறுதியாக செயல்பட காலமும் கனிந்து வர வேண்டி இருந்தது.

அதுபோலவே மகாபாரதத்திலும், நீண்ட காலம் வனவாசம், தலைமறைவு வாழ்க்கை, அவமானங்கள், அறச்சோதனைகள் பலவற்றை கடந்த பிறகே பாண்டவர்கள் மாபெரும் போருக்கு புறப்பட்டனர். இதெல்லாம் காலதாமதம் அல்ல. மாறாக தர்மம் உறுதியாக செயல்படுவதற்கு முன்பு தேவைப்படும் தயாரிப்புகள்.

இதுபோன்றே பிற மரபுகளிலும் நிகழ்வுகள் உள்ளன. விவிலியத்தில் இஸ்ரவேலர்கள் பல காலம் கட்டுப்பட்டு கிடந்த பிறகு விடுதலை பெற்றனர். அவர்களது பிரார்த்தனைகளுக்கு செவி கொடுக்கப்பட்டது . ஆனால் மக்கள் தயாராகவும் மோசஸ் தலைவராக உருவெடுக்கும் சூழல் வந்த பிறகுதான் அது நடந்தது. விரிவான கண்ணோட்டத்தில் பார்த்தால் அது காலதாமதம் அல்ல மாறாக சரியான காலம்.

மனித சுதந்திரமும் வினை(கொள்கை)யும் வெளிப்பட வேண்டும்!

ஹிந்து தத்துவம் வினைக் கொள்கையை வலியுறுத்துகிறது. அதன்படி நோக்கம், சொல், செயல், ஆகியவை இந்த பிறப்பிலோ அல்லது இனிவரும் பிறப்பிலோ அதற்குரிய விளைவுகளை ஏற்படுத்தும். தர்மமும் இந்த தார்மீக முறைமைக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறது. தர்மம் மனித விருப்பங்களை/ தேர்வுகளை மீறி செயல்படுவதில்லை. மாறாக அதற்கு ஒத்திசைந்தே வினையாற்றுகிறது.

பல்வேறு செயல்களின் தொடர்ச்சியாகவும் தொகுப்பாகவும் தான் அதர்மம் தலை தூக்குகிறது. ஆரம்பத்திலேயே அது ஒழிக்கப்படுமானால் ,அவ்வாறு செய்வது , செயல்களின் இயல்பான சங்கிலி தொடர்ச்சியை தடை செய்வதாகி விடும்.

எடுத்துக்காட்டாக , கம்சனின் கொடுங்கோல் ஆட்சி மதுராவில் பற்பல ஆண்டுகள் நீடித்து இருந்தது. அவனது முடிவு பற்றி முன்னறிவிப்பு இருந்த போதிலும் அவனது வீழ்ச்சி விரைவாக நிகழவில்லை. மக்கள் துன்பப் பட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பெடுத்து, அரண்மனையிலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் வளர்க்கப்பட்டார். இரண்டு தசாப்தங்கள் கழிந்த பிறகுதான் கம்சன் எதிர்கொள்ளப்பட்டான் . இந்த நீண்ட காத்திருப்பு அலட்சியத்தினால் விளைந்தது அல்ல . கர்மா வெளிப்படுவதற்கான உரிய காலம் அது.

அதுபோலவே, இராவணனின் இலங்கை செல்வ செழிப்பில் இருந்தது. ஆனால் ஆன்மீக ரீதியாக சமனற்ற நிலை நிலவியது . அதை சில திருத்தங்களால் சரி செய்ய முடியாது. ஒட்டுமொத்தமாக மறு நிர்மாணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ராமபிரான் வனவாசம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு படை திரட்டி பெரும் போரும் , அதன் வெற்றிக்குப் பிறகு தர்மம் நிலைநாட்டப் பட்டது.

மகாபாரதத்தில் துரியோதனனின் சூழ்ச்சிகரமான , அநீதியான ஆட்சி பல ஆண்டுகள் நீடித்தது. திரௌபதி அவமானம் போன்ற செயல்கள் , பாண்டவர்கள் நாடு நீங்குதல் போன்றவை சமுதாயத்தின் தார்மீகத்தை அழித்துவிட்டன. அஸ்தினாபுரத்தின் மக்கள் தினம் தினம் அநீதியை அனுபவித்தனர். இருந்தாலும் சூழல் பக்குவப்பட்ட பிறகே அறம் செயல்பட்டது. அது தலைமையை மட்டுமே சரி செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்த அதிகார அமைப்பையே மாற்றியது.

தர்மம் சோதிக்கப்படும், திணிக்கப்படாது!

தர்மம் எப்போதும் தன்னை உடனடியாக நிறுவும் என்றால் தனி மனித முயற்சிகளுக்கும், தார்மீக தைரியத்திற்கும், வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு நல்வழியைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மீகத் துணிவுக்கும் இடமில்லாமல் போய்விடும். தர்மம் திணிக்கப்படலாகாது. அறிவு கூர்மையுடன் அறவழியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் . அப்படி பார்க்கும்போது அதர்மம் என்பது தர்மத்தை சோதிப்பதற்கான, அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகிறது.

இராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரானின் செயல்கள் மட்டுமில்லை. அதில் பரதனின் துறவு , லட்சுமணனின் விசுவாசம் , சீதா பிராட்டியின் பொறுமை , அனுமனின் அர்ப்பணிப்பு , விபீஷணரின் தார்மீக துணிவு ஆகியவையும் பதிவாகியுள்ளன. ஒவ்வொருவரும் கஷ்டமான சூழ்நிலையில் தர்மத்தை உறுதியாக வெளிப்படுத்தி , தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களது கஷ்டங்களை சிறியதாக குறுக்கி விட்டால் கதையில் தர்மத்தின் கனம் காணாமல் போய்விடும்.

மற்ற மரபுகளிலும் இது எதிரொலிப்பதை பார்க்கலாம். கிறிஸ்தவத்தில் இயேசு துன்பங்களை ஏற்றார். தானே போய் ஏற்றுக் கொண்டார். தியாகம் ,மன்னிப்பு , நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக அவர் இருந்தார். உடனடியாக நீதி நிலை நாட்டப்படும் என்று அவர் சொல்லவில்லை . மாறாக பொறுமையாக அநீதியை எதிர்கொள்ள சொன்னார்.

இஸ்லாத்தில் முகமது நபியும் ஆரம்பகால முஸ்லிம்களும் ஒரு தசாப்தமாக மெக்காவில் துன்பங்களை ஏற்றுக் கொண்டனர் . அதன் பிறகு மதினாவில் நீதி நிலைநாட்டப்பட்டது . இதெல்லாம் அதே விஷயத்தை தான் வலியுறுத்துகின்றன . அதாவது , தர்மமானது மனித முயற்சிகளால் உணரப்பட வேண்டுமேயன்றி மேலிருந்து (இறை) திணிப்பாக இருக்கக் கூடாது.

துன்பங்கள் விழிப்புணர்வுகான வழி

துன்பங்கள் , அவை கஷ்டம் தருவதாக இருந்தாலும் , பல நேரங்களில் மாற்றத்துக்கு வழி வகுக்கின்றன. அவை தனி மனிதரிடத்திலும் சமுதாயத்திலும் தார்மீக விழிப்புணர்வை வேகமாக ஏற்படுத்துகின்றன. ஸ்ரீ ராமபிரான் வனவாசம் போகாமல் இருந்தால் , அவரது வாழ்க்கையை இளவரசரது கடமைகளை செய்வது என்ற வட்டத்துக்குள்ளே இருந்திருக்கும். வனத்தில் அரச வசதிகள் இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்ததால்தான் அவரது ஆன்மீக பலம் உறுதிப்பட்டது.

பகவத் கீதை செயல் என்றால் என்ன, பற்றில்லாமல் எப்படி செயல்படுவது, பக்தி ஆகியவற்றை நமக்கு நன்கு விளக்கும் வழிகாட்டியாக இன்றும் விளங்குகிறது. ஆனால், துரியோதனனின் வரம்பற்ற ஆணவம், தொடர்ந்து செய்த அதர்மங்கள் இல்லாவிட்டால் மகாபாரதப் போர் நடந்திருக்குமா. குருச்சேத்திரம் போர்க்களம் தானே பகவத் கீதை நமக்கு கிடைக்க காரணம்.

சீக்கிய மரபில் குரு அர்ஜுன் தேவரும் குரு தேஜ் பகதூரும் துன்பங்களை ஏற்றார்கள். பலகீனமாக இருந்ததால் அதற்கு ஆட்படவில்லை. மாறாக உண்மைக்கு சாட்சியாக இருப்பதற்காக துன்பங்களை அனுபவித்தனர்.

அதுபோலவே , நீண்ட காலமாக அன்னியர் ஆட்சியில் இந்தியா திட்டமிட்ட ரீதியில் நசுக்கப்பட்டது. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மதரீதியாக ஒடுக்குதல்களும் கட்டாய மதமாற்றங்கள், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சங்கள், சுரண்டல்கள் ஆகியவை பற்றி பல ஆவணங்கள் பதிவாகி உள்ளன. 1947 இல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து திடீரென விடுதலை கிடைக்கவில்லை . பல நூற்றாண்டுகள் துன்பப்பட்டு, தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ராணி லட்சுமி பாய் முதல் கோகலே, காந்தி, பட்டேல் என எண்ணற்றோர் பல தலைமுறைகளாக தொடர்ந்து அன்னியர் ஆட்சியை எதிர்த்து போராடியதன் பிறகே சுதந்திரம் கிடைத்தது.

உலக அரங்கிலும் கூட , நாஜிக்களின் பேரழிவு ஆட்சிக்கு – ஹிட்லரின் ஆட்சியில் அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் – பிறகு வெறுப்புணர்வின் ஆபத்துக்கள் அம்பலமாகியன. அது மனித உரிமை என்ற விஷயத்தை உலகம் ஒப்புக் கொள்ள காரணமாக அமைந்தது.

அண்மையில் , காஷ்மீரில் பிராமணர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். திபெத்திய புத்த சமயத்தினரின் போராட்டங்கள். (ஈரானில்) யசீதி மக்களின் இனப்படுகொலை ஆகியவை எல்லாம் துன்பங்கள் தொடர்வதையும் அவை நம்முடைய ஒட்டுமொத்த மனசாட்சிக்கு சவால் விடுவதாக இருப்பதையும் பார்க்கிறோம்.

கம்சன், இராவணன் ,ஹிட்லர், முசோலினி போன்ற தனி மனிதர்கள் பற்றியும் ஆழ்ந்து பார்க்கலாம் . அவர்களது வாழ்க்கை அதர்மத்தின் அடையாளமாக இருந்ததால் தர்மம் வெளிப்பட தூண்டுதலாக அமைந்தன. ஒருவேளை , சமுதாயத்தை விழிப்புறச் செய்யவும் உறங்கிக் கொண்டிருந்த சமுதாயத்தின் தார்மீக சக்தியை தூண்டி விடவும் அவர்களது வாழ்க்கை பயன்பட்டதோ என்று சிந்திக்கத் தூண்டுகிறது . அந்த வகையில் பார்த்தால், ஒரு முரண்பட்ட வகையில், அவர்கள் நேர்முறையாக பங்களித்துள்ளார்கள் என்று கருதலாம். அவர்கள் ஏற்படுத்திய துன்பங்கள் நோயை அடையாளம் காணவும் நோயை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் வழி வகுத்தன.

நேரம் சீரானதல்ல

மனிதர்களின் பொறுமையின்மை என்ற கண் கொண்டு பார்க்கும் போது நீதி கால தாமதமாக வருவது போல் தெரிகிறது. பிரபஞ்ச பார்வையில் காலம் என்பது நேர்கோடாகவும் இல்லை , ஒரே போல் சீராகவும் இல்லை.

ஹிந்து பிரபஞ்சவியலின்படி, மனித கால அளவீடுகளில் இருந்து முற்றிலும் வேறானதொரு அளவீட்டின்படி வானுலக தேவர்கள் செயல்படுகிறார்கள். படைப்பு கடவுளான பிரம்ம தேவரின் ஒரு நாள் என்பது மனித கால கணக்கீட்டின்படி 4.32 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) ஆண்டுகள். தேவர்களின் ஒரு ஆண்டு என்பது 360 மனித ஆண்டுகள். மனிதர்களின் வாழ்க்கை காலமே தேவ கணக்கில் ஒரு ஷணம்தான்.

சூரிய மண்டலத்தில் ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு கால அளவை கொண்டுள்ளன. புதன் கிரகத்தில் ஓராண்டு என்பது பூமியில் 88 நாட்கள். நெப்டியூன் கிரகத்தில் ஓராண்டு என்பது பூமியில் 165 ஆண்டுகள். சுக்கிரனில் ஒரு நாள் என்பது நமக்கு ஓராண்டை விட அதிகம். பூமியில் நாம் தசாப்தம் (பத்தாண்டுகள்) என்பது புதனில் ஒரு வாழ்நாளை விட அதிகம். அல்லது நெப்டியூனில் ஓராண்டின் சிறு பகுதி. இந்த வேறுபாடுகள் காலம் என்பது ஒரே சீரான அளவானது அல்ல என்பதை நினைவூட்டுகின்றன.

பூமியிலும் கூட வெவ்வேறு உயிரினங்கள் காலத்தை வெவ்வேறு விதமாக உணர்கின்றன. பறக்கும் எறும்பின் (பூச்சியின்) வாழ்நாள், ஒரு மனிதநாளில் பாதி கூட கிடையாது, வெறும் சில மணி நேரம்தான். ஆனால் அந்த பூச்சிக்கு அந்த சில மணி நேரங்கள் என்பது குறுகியதோ அல்லது முழுமையற்றதோ கிடையாது. மாறாக ஒரு முழுமையான வாழ்க்கை காலம்.

தாமதம் என்று நாம் கருதுவது , பிரபஞ்ச விதிகளின்படி , சரியான நேரமாக இருக்கலாம். காத்திருப்பதை நாம் அப்படிதான் பார்க்க வேண்டும். காலம் வெவ்வேறு வேகத்தில் செயல்படும் உலகில் – ஆன்மீக காலம் , உடலியல் / உயிரியல் காலம் , பிரபஞ்ச காலம் – நீதி எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பது முக்கியமல்ல. உண்மையில் அது எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. தர்மமானது நமது உடனடி புரிதலுக்கு அப்பாற்பட்ட கால கணக்கின்படி செயல்படுகிறது.

முடிவு : தாமதமாக இருக்கலாம் ஆனால் மறுக்கப்படவில்லை

தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம் , சுதந்திரம் , வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும் . உடனடி தீர்வு என்பது அதற்கு கிடையாது . தனிமனித தேர்வுகளும் தெய்வீக ஒத்திசைவும் சேர்ந்து தர்மத்தை வெளிப்படுத்துகின்றன. இதற்கு பொருள் இன்றைய மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதல்ல.

மக்களை சிந்தித்து செயலாற்றும்படி , அநீதிக்கு எதிராக போராடும்படி , தாங்கள் உயர்வாக கருதும் மதிப்பீடுகள் பாதுகாக்கும்படி , அக்கறையற்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று தர்மம் அறைகூவல் விடுக்கிறது. அர்ஜுனனை , களத்தில் இருந்து ஓட வேண்டாம். நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து, அகக் கட்டுப்பாட்டுடன் எழுச்சி கொண்டு செயல்படு , என்று ஸ்ரீ கிருஷ்ணன் நெறிப்படுத்தினார்.

தர்மம் தாமதமாகலாம் ஆனால் அது எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை , உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது.

நன்றி : சன்டே கார்டியன்

கட்டுரையாளர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள டாக்டர் டிஎம்ஏ பை மருத்துவமனையில் சூப்ரடெண்ட்டாக இருக்கிறார்.

காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

mahaperiyava temple in madurai anusham - 2026

மதுரை அழகர் கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டியில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

மதுரை அழகர்கோவில் அருகே, பொய்கைக்கரைப் பட்டியில் காஞ்சி மகா பெரியவர் கோயில் கட்டுமான திருப்பணிகள் தொடங்கின.

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் ‘மகா பெரியவா’ என பக்தர்களால் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பொய்கைக் கரைப்பட்டியில் கோயில் கட்டப்பட உள்ளது. மலை அடிவாரத்தில், அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே அரசுப் பள்ளியை அடுத்துள்ள சிட்டி ஃபால்ஸ் என்ற இடத்தில் இயற்கை எழில் சூழ இக்கோயில் அமைய உள்ளது. ஏற்கெனவே, வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடிக்கப்பட்ட நிலையில், அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆலயம் கட்டுமானத் திருப்பணி நேற்று தொடங்கியது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். காலையில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான 11 வேத விற்பன்னர்கள் பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதா பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார்.

மதுரை மங்கையற்கரசி மில்ஸ் சேர்மன் பாகனேரி மு கண்ணப்ப செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.ஆர். பிரபு, மகா பெரியவா குரூப்ஸ் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் குமார் வெங்கடேசன், வழக்கறிஞர் கார்த்திக், சோழவந்தான் செல்வராணி இண்டேன் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் மணிகண்டன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், எழுத்தாளர் ஆதவன், ஸ்தபதி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ மகா பெரியவா படம், ஸ்படிக மாலை, புத்தகம், விபூதி பிரசாதம், அழகர்கோயில் தோசை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டன.

திருப்பணி செலவுகளுக்கு மகா பெரியவா பக்தர்கள் நன்கொடை வழங்கலாம் என்றும், ஒரு லட்ச ரூபாய் வழங்குவோரின் பெயர் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!

amavasai pitru tharpanam - 2026

மகாளய பட்ச வழிகாட்டி!

2025 – விசுவாவசு வருடம் – மாளயபட்ச திதி விவரங்கள்

2025 இந்த வருடம் மகாளய பட்ச அமாவாசை வரும் புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2025 ஞாயிறு) அன்று வருகிறது. அதற்கு முந்தைய ஒரு கிருஷ்ண பட்சமும் (தேய்பிறை) மகாளய பட்சமாக – பித்ரு கடன்களைத் தீர்ப்பதற்கு – பித்ரு பூஜைகளைச் செய்வதற்கு உகந்த காலம்.

செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் – நட்சத்திரம் – திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே…

08.09.2025 -ஆவணி 23 திங்கள் – தேய்பிறை பிரதமை – இரவு 09.12 மணி வரை – பூரட்டாதி – இரவு 08.02 வரை

09.09.2025 – ஆவணி 24 செவ்வாய் – துவிதியை – மாலை 06.29 வரை – உத்திரட்டாதி – மாலை 06.07 வரை

10.09.2025 – ஆவணி 25 புதன் – திருதியை – மதியம் 03.38 வரை – ரேவதி – மாலை 04.03 வரை

11.09.2025 – ஆவணி 26 வியாழன் – சதுர்த்தி – பகல் 12.46 வரை – அஸ்வினி – பகல் 01.58 வரை

12.09.2025 – ஆவணி 27 வெள்ளி – பஞ்சமி – காலை 09.59 வரை – பரணி – காலை 11.58 வரை (மஹா பரணி)

13.09.2025 – ஆவணி 28 சனி – சஷ்டி – காலை 07.23 வரை சப்தமி – மறுநாள் அதிகாலை 05.04 வரை – கிருத்திகை – காலை 10.11 வரை

14.09.2025 – ஆவணி29 ஞாயிறு – அஷ்டமி – இரவு 03.06 வரை (மத்யாஷ்டமி) – ரோகிணி – காலை 08.41 வரை, மிருகசீரிடம் – மறுநாள் காலை 07.31 வரை

15.09.2025 – ஆவணி 30 திங்கள் – நவமி – இரவு 01.31 வரை திருவாதிரை- காலை 07.32 முதல் மறுநாள் காலை 06.46 வரை

16.09.2025 – ஆவணி 31 செவ்வாய் – தசமி – இரவு 12.22 வரை புனர்பூசம் – காலை 06.47 முதல் மறுநாள் காலை 06.26 வரை

17.09.2025 – புரட்டாசி 1 புதன் – ஏகாதசி – இரவு 11.40 வரை பூசம் – காலை 06.27 முதல் மறுநாள் காலை 06.32 வரை

18.09.2025 – புரட்டாசி 2 வியாழன் – துவாதசி – இரவு 11.25 வரை ஆயில்யம்- காலை 6.33 முதல் மறுநாள் காலை 07.05 வரை

19.09.2025 – புரட்டாசி 3 வெள்ளி – திரயோதசி – இரவு 11.37 வரை மகம் – காலை 07.06 முதல் மறுநாள் காலை 08.06 வரை

20.09.2025 – புரட்டாசி 4 சனி – சதுர்த்தசி – இரவு 12.17 வரை மகம் – காலை 08.06 வரை பூரம் – காலை 08.07 முதல் மறுநாள் காலை 09.32 வரை


சோழவந்தானில் வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா!

voc birthday in usilampatti - 2026

செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

சோழவந்தானில் உள்ள வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சார்பில் அதன் நிர்வாகிகள் வ உ சி யின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் முன்னதாக உறவின்முறை சங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்

தொடர்ந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் திமுக சார்பில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி வக்கீல் முருகன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி நிஷா முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் நல்லதம்பி பொருளாளர் பேட்டை கண்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஐயப்பன் கலாவதி ராஜா விவசாய அணி பேருர் துணைச்செயலாளர் சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் முட்டை கடை காளி முள்ளி பள்ளம்ஜீவாபாரதி ஞானசேகரன் வக்கீல் சுரேஷ் டாஸ்மாக் பொன்முடி செங்குட்டுவன் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா இளைஞரணி கேபிள் மணி மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் முள்ளிப்பள்ளம் நாகு ஆசாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ரஜினி நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் முத்துராமன் குரு ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதி ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பிச்சைமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதே போல் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பில் அதன் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தொடர்ந்து நேற்று மாலை வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக சென்றனர் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம் வானவேடிக்கை பேண்டு வாத்தியம் வ உ சி யின் சுதந்திர போராட்ட உரைகளை விளக்கும் சொற்பொழிவு வ உ சி போல் வேடமணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர்

தொடர்ந்து வ உ சி யின் சிலைக்கு பூக்கள் தூவி மரியாதை செய்தனர் சிலை முன்பு சொற்பொழிவு கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதில் வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்