வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் 3 நாளாக தொடர்ந்து வெறிநாய்கடித்து 30 பேர் காயமடைந்த நிலையில் இன்று கால்நடைகளையும் கடித்து காயப்படுத்தியதால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. காயம் அடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வெறிநாயை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் மூன்று நாட்களாகியும் இன்னும் அந்த நாய் பிடிபடாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை அந்த வெறி நாய் ஆடு, மாடு, கோழிகளையும் கடித்து குதறியது. இதனால் ஆத்திரமடைந்த கால்நடை வளர்ப்போர்கள் அதன் உரிமையாளர்கள் நேற்று காலை கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் தாங்கள் கால்நடைகளுடன் வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காயமடைந்தவர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து கொண்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூமாபட்டி, வத்திராயிருப்பு போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நாயை இரவுக்குள் பிடித்து விடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த நாய் பிடிபடவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்
“அந்த வெறி நாய் கடிக்க துவங்கிய போதே பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு எவ்வளவு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. பாதிப்பு கணிசமாக அதிகரித்த பின்னர் நடவடிக்கை எடுக்கிறது. மேலும் அந்த ஒரு நாயை மட்டும் தான் குறி வைத்து தேடுகின்றனர். ஆனால் அதே போல் ஊர் முழுவதும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த நாய்களால் பாதசாரிகள் மிகவும் அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் நாய்கள் ஊர் முழுவதும் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வெளியூர் சென்று இரவு ஊர் திரும்பும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வீடு சென்று சேர முடிகிறது. அவற்றை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதே நிலைதான் வத்திராயிருப்பு பேரூராட்சியிலும் நிலவுகிறது. எனவே இதன் பிறகாவது கூமாப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய பேரூராட்சி நிர்வாகங்கள் தாங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றனர்.
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி.. இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்.. என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது
22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப் பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து மக்களை சந்தித்து அழைப்பிதழ் தந்து வரவேற்றும், மேலும் மாநாட்டு திடலிலும் இரவு பகல் பாராது இந்து இயக்கத் தொண்டர்கள் உழைத்தனர்.
இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாக போராடி தடைகள் நீங்க பாடுபட்டனர்.
அனைத்து சம்பிரதாயங்களை சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கினர்.
மேலும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள். சமுதாய தலைவர்கள், ஆன்மீக குழுவினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள்..
அறுபடை முருகன் அருட்காட்சியை தரிசிக்க வந்து சிறப்பு சேர்த்த ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர், திரையுலக பிரபலங்கள் ஆகியோர்..
மாநாட்டில் உரை நிகழ்த்திய கௌமார மடத்தின் சுவாமிகள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் தென்பாரத பொறுப்பாளர் டாக்டர் வன்னியராஜன், ஆந்திர மாநில துணை முதல்வர் மாண்புமிகு பவன் கல்யாண், ஆகியோருக்கு இந்து முன்னணி சார்பில் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு பாசமிகு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாட்டு அரங்கம், அறுபடை வீடு அருட்காட்சி அரங்கம் ஆகியவை நிறுவிய கலைஞர்கள், நிகழ்ச்சியில் அருமையாக நடனம் ஆடி பிரமிக்க வைத்த நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள், மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாநாட்டு செய்திகளை, அருட்காட்சி பெருமைகளை மக்களுக்கு கொண்டு சென்று கந்த சஷ்டி கவசத்தை உலகம் முழுவதிலும் ஒரு கோடி பேர் சேர்ந்து பாடவும், கண்டு களிக்கவும் காரணமாக இருந்த ஊடகத்தினருக்கும், பாதுகாப்பு, ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மாநாடு மற்றும் ஆறு நாட்கள் நடந்த அறுபடை வீடு அருட்காட்சி ஆகியவை குறித்து எல்லா தரப்பினரும் பெருமையாக பெருமிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக, எழுச்சியுடன், கட்டுப்பாடு, ஒழுங்கு பிரமிக்க வைத்துள்ளது. இத்தகைய பண்பாடுகள் ஒவ்வொரு பக்தரின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் இந்துக்களிடம் இருக்கும் ஆழ்ந்த பக்தி சிரத்தை, அந்த பக்தியின் ஒருங்கிணைந்த சக்தியாக வெளிப்பாடாகியுள்ளது. தமிழகத்தின் திருப்புமுனையாக இந்த முருக பக்தர்கள் மாநாடு அமைந்துள்ளது.
எதாவது குறை காண முடியாதா என்று இந்து விரோத சக்திகள் விமர்சனம் செய்கின்றனர். நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதை தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறி புரிய வைத்தது.
எந்த ஒரு தனி மனிதரையும் எப்போதும் எங்கும் விமர்சனம் செய்யாது இந்து முன்னணி. அதேசமயம் இந்துக்களின் நம்பிக்கைகளை அநாகரிகமாக பேசினால் எதிர்க்கவும் தயங்காது. இந்து ஆன்மீகத்தை போற்றவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும் இந்த மாநாடு மூலம் உலகம் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் ஒருங்கிணைந்து கந்த சஷ்டி கவசம் பாடியதன் மூலம் உறுதி செய்துள்ளனர்.
நமது முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்று இந்து தர்மத்தின் இந்துக்களின் நற்பண்பை உலகம் அறிய அருளிய நம் அன்பு தெய்வமான முருக பெருமானின் பாதத்தில் காணிக்கையாக்குகிறோம்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டது.இக் கோயில் ஜூலை 13ல் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் நவக்கிரக சன்னதி இருந்தது.இங்கு உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அண்மையில் பார்க்கப்பட்ட தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இக் கோவில் பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி வேத பாராயண முறைப்படி நடைபெறுகிறது.
இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சு குழி கண்மாய் சாலையில் இயற்கை எழில்சிற சொந்துமலை அடிவாரத்தில் தென்னந்தோப்புக்குள் எழுந்தருளி அருள் பாலித்து வரும் லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை லலிதாம்பீஸ்வரர், லலிதாம்பீஸ்வரி, மற்றும் நந்திகேஸ்வரருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், உள்ளிட்ட 12 அபிஷேகங்கள் செய்யப்பட்டு அருகம்புல்.துளசி. மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மலர்களால சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இந்த பூஜை மற்றும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாச்சல பாண்டியன் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்
#image_title
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார் அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்றுகூறி ஊர்வலத்தில் வந்தனர். பிரதோஷ ஏற்பாடுகளை பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா 8வது வார்டு கவுன்சிலர் கூடைப்பந்தாட்ட சேர்மன் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதே போல்திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத கோவிலிலும் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்து சென்றனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தாரா வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. பொறியாளர் கே ஸ்ரீகுமார் அனைவரையும் வரவேற்றார்.
பொன் கருணாநிதி தாளாளர் பாரதியார் மெட்ரிக் பள்ளி எழுமலை, மாதவன், நிர்வாகி, சிற்பவானந்த ஆசிரமம் ,தேனி. சுவாமி ஞான சிவானந்த தலைவர் தத்வானந்த ஆசிரமம், திண்டுக்கல், சுவாமி சமானந்தர் தலைவர் சுவாமி சித்பவானந்த ஆசிரமம் தேனி சுவாமி பரமானந்தர் விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி திருவேடகம். சங்கர சீதாராமன் நிர்வாக இயக்குனர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் லிமிடெட், மருத்துவர் டி. ராமசுப்பிரமணியன், இல அமுதன் , பக்தவச்சலம் , வைதீக சமாஜத்தின் தலைவர் ஸ்ரீதர் சாஸ்திரிகள், தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நடராஜன், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளையின் ஆசிரியர் வீரமணிகண்டன், உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். ஆச்சாரிய சுவாமிகளின் அருளுரை நூலை சுவாமி சமானந்தர் வெளியிட விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீதாராமன் பெற்றுக் கொண்டார்.
மேலும், மகா பெரியவாளின் கருணையை விளக்கும் மைத்ரி என்ற புத்தகம், தெய்வத்தின் குரல் கருத்து படங்களுடன் தினசரி தினசரி பெரியவா தியானம் என்ற புத்தகம், காஞ்சி முனிவர் நினைவுக்கதம்பம் என்ற புத்தகம் பாரதிய சமுதாய கட்டமைப்பின் ஆணிவேர் என்ற புத்தகம் வந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற ரா கணபதி பற்றிய புத்தகம் ஆகியவை வெளியிடப்பட்டது. ஆசிரியர் வேதா டி ஸ்ரீதரன் புத்தகத்தினை பற்றி எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் துறவியர்களின் பிரசாதம் வழங்கப்பட்டது. மேற்படி புத்தகங்கள், பொறியாளர் கே ஸ்ரீகுமார் 94431 51258 பெற்றுக் கொள்ளலாம்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்திய நாட்டில் பிரசித்தி பெற்ற பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் இன்று திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவம்10 நாட்கள் நடைபெறுகிறது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சித்ரசபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவசைலாஸ் தீட்சிதர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் பசுக் கொடியை ஏற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.
ஜூன் 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 26-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 30-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்ழமை தெப்போற்சவத்துடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.
சாதனை மாநாடு! சாதித்த இந்து முன்னணி! திரட்டிய முருகன்! மிரட்டிய மாநாடு! திரண்ட பக்தர்கள்! அரண்ட நாத்திகம்! – இப்படி விதவிதமாக போற்றி சிறப்பிக்கும் வகையில் அமைந்துவிட்டது, மதுரையில் இந்து முன்னணி அமைப்பு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு.
தமிழக வரலாற்றில் இப்படி ஒரு ஆன்மிக மாநாடு நடந்திருக்குமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது, மதுரையில் 2025 ஜூன் 22ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு! 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இந்த மாநாட்டுக்கு திட்டமிட்டவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், மாநாட்டுத் திடலுக்குள் வர இயலாமல் வெளியிலேயே தங்கிப் போனவர்கள் லட்சக்கணக்கில்! எதனால் இந்தத் தன்னெழுச்சி? ஏன் இப்படி ஒரு மாநாடு? கோயில்கள் பல இருக்கும் போது, அவற்றுக்கும் பக்தர்கள் பலர் திரளாகச் சென்று கொண்டிருக்கும் போது, முருகப் பெருமான் பெயரில் பொதுவான ஓர் இடத்தில் இப்படி ஒரு மாநாட்டுக்குத் திட்டமிட வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? கேள்விகள் பல கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் நாத்திகத்தில் தோய்ந்து போனவர்கள்! ஆனால் இந்த மாநாட்டுக்கான மூலகாரணம், அவர்களும் அவர்களின் ஆத்திக விரோத செயல்பாடுகளுமே என்பதை இந்த மாநாட்டில் கூடியவர்கள் புரியவைத்தார்கள்!
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்களில் நிலவும் ஊழல்கள், அரசுத் துறையே நடத்தும் கொள்ளை, பக்தி மேலீட்டால் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களைச் சுரண்டும் போக்கு, இப்படியே பார்த்துப் பார்த்து விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆன்மிக மனங்களின் வடிகாலாகத்தான் இந்தத் தன்னெழுச்சிக் கூட்டத்தைக் காண முடிந்தது. குறிப்பாக, எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய தமிழக அரசு காட்டும் பாரபட்சமான போக்குதான் இந்த மாநாட்டின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை முருகன் கோயிலுக்கு ஏற்பட்ட பிரச்னை முருக பக்தர்களை பெரிதும் சீண்டிப் பார்த்தது. வாக்குவங்கி அரசியலுக்காக அரசு சோடை போனபோது, சென்னிமலையைக் காப்போம் என 2023 அக்டோபரில் ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். தொடர்ந்து பழனி, திருச்செந்தூர் என முருகன் தலங்களில் பிரச்னைகள். முத்தாய்ப்பாக முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மதரீதியாக ஏற்படுத்தப்பட்ட பெரும் பிரச்னை, அதற்காக இந்து முன்னணி முன்னெடுத்த போராட்டமும் திரண்ட மக்களும் தான் இந்த வெற்றிகரமான மதுரை மாநாட்டுக்கு திட்டமிட வைத்துள்ளது.
முருகப் பெருமானின் தலங்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் 5 லட்சம் பேரைத் திரட்டி கந்த சஷ்டி கவசம் பாடுவோம் என்று திட்டமிட்ட இந்து முன்னணியின் அறிவிப்பு, மேலும் மெருகேற்றப்பட்டு, பல தலங்களிலும் பூஜிக்கப்பட்ட வேல்களைக் கொண்டு வந்து வழிபாடு செய்வது, லட்சக்கணக்கில் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாடுவது, முருகனின் புகழ்பாடும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, மக்களுக்கு ஆசிகளை வழங்க ஆதினங்கள் உள்ளிட்ட பெரியோர்களை மேடையில் அமர்த்துவது, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தகுந்த சமூகப் பேச்சாளர்களை முன்னிறுத்துவது என நீண்டிருக்கிறது. அந்த வகையில், இந்து முன்னணியின் திட்டமிடல் பெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
இப்படி ஒரு மாநாடு நடக்கக் கூடாது என, அரசுத் துறைகளும் நாத்திக அரசியல் கட்சிகளும் அவதூறுகளைப் பரப்பி, எல்லா வகையிலும் தடைகளை உருவாக்கினார்கள். வழக்கம் போல் நீதிமன்றம் சென்று பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள். மின் தடை ஏற்படுத்தி மதுரை சாலைகளை இருட்டாக்கியது நிர்வாகம். பல்வேறு ஊர்களிலும் இருந்து வ்நத வாகங்களை மறித்து, சோதனை என்ற பெயரில் காவல் துறை வேண்டுமென்றே தேக்கியது. நேரத்துக்குச் செல்ல முடியாதபடி தடைகளை ஏற்படுத்தியும் கூட முருக பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!
வாகனங்களுக்கு அந்த அந்த மாவட்டங்களில் பாஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்து, பின்னர் பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன.
இந்த மாநாட்டில் பங்கேற்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உ.பி. முதல்வர் ஏதோ காரணத்தால் வர இயலாமல் போக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கம்பீரமாகக் கலந்து கொண்டு, அழகுத் தமிழில் தனக்கே உரிய பாணியில் உரையாற்றி மாநாட்டுக்கு உரம் ஏற்றினார்.
மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் நடந்த இந்த மாநாட்டை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இவற்றை நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசித்தார்கள். மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போல் வடிவமைக்கப்பட்டது.
மேள தாளங்களுடன் ஆடிப்பாடி குழுவாக வந்தவர்கள், கந்த சஷ்டி கவசத்தை பாடிய வண்ணம் இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடக்கத்தில் சிறுவன் சூரிய நாராயணன் வேலுண்டு வினையில்லை பாடலை உருக்கமாகப் பாடி கவனம் ஈர்த்தார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பாஜக., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ., அதிமுக., தலைவர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, ஆகியோருடன், ஆதீனங்கள், சன்யாசிகள், முருகனடியார்கள், சிவ பக்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
பச்சை வேட்டி, துண்டுடன் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மேடை ஏறினார். திருத்தணி கோவிலில் வைத்து வழிபட்ட வேல் அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. மாநாட்டில் பேசிய பவன் கல்யாண், “மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், 6-வது படை வீடும் மதுரையில்தான் உள்ளன. மதுரை என்பது மீனாட்சி அம்மன் பட்டணம். மீனாட்சி அம்மன் பார்வதியின் அம்சம். எனவே முருகனின் தாயாரும், மதுரையில்தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில்தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில்தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் முருகனின் அவதாரமாகவே கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதராக வாழ்ந்தார். எனவே தேவரை பணிந்து வணங்குகிறேன்.
இப்போது நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகிறோம், தரிசனம் செய்கிறோம், குங்குமம் பெறுகிறோம். ஆனால் ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி தரும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருள் சூழ்ந்திருந்தது. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில், குங்குமம் கொடுக்க ஆள் இல்லை. 60 வருடங்களாக அங்கு விளக்குகள் இல்லை.கோவில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். அதன் பின்னர் 14-ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார், விஜயநகர இளவரசர் குமார கம்பணன். நமது நாட்டில் நம்பிக்கைக்கு அழிவில்லை என்பதும், அதனை யாராலும் அழிக்க முடியாது என்பதும் நமக்குத் தெரிந்தது.
நமது கலாசாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக உள்ளது. நமது கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தீமைகள் சூழும்போது அதை அறுப்பதுதான் அறம். அதுதான் புரட்சி. அதை செய்பவர்கள்தான் புரட்சித் தலைவர்கள். உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப் பெருமான். அநீதியை அழித்ததால், அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சித் தலைவர். முருகன் மாநாட்டை தமிழகத்தில் ஏன் நடத்துகிறீர்கள் என்று ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். உத்தர பிரதேசம், குஜராத்தில் நடத்த வேண்டியதுதானே என்கின்றனர். இன்று முருகனை பார்த்து இப்படி கேட்கிறார்கள். நாளை சிவபெருமானை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிகவும் ஆபத்தானது.
இந்துக்கள் அமைதியானவர்கள், பண்பானவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்வதராக இருக்கலாம். ஒரு முஸ்லிம், முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சினை. ஒருவன், இந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி என்பது அவர்களின் போலி முகமாக உள்ளது. என் நம்பிக்கையைக் கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனைக் கேட்க நீங்கள் யார்?.என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா… – என்று பேசி உணர்வூட்டினார் பவன் கல்யாண்.
நயினார் நாகேந்திரன் பேசியபோது, “முருகனுக்கு உருகாதார் யாரும் இல்லை. முருகா என்ற பெயரில் 3 வேதங்களும், முக்கடவுள்களும் அடங்கி இருக்கிறார்கள். நமது வாழ்வியலை இங்கே காண முடிகிறது. தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்தும் ஒருமித்த கருத்துகளை கொண்டவை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலமாக சொர்க்கபுரியில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று பேசி, ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். அன்பர்கள் அதை வெகுவாக ரசித்தார்கள்.
அண்ணாமலை வழக்கம் போல் சரவெடியாகப் பேசினார். “நம் முன்னோர்கள் கலாசாரம், பண்பாடு, கோவில்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய வாழ்வியல் முறையை பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்தனர். அவர்களைப் போல நாமும் அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை நாம் ஒரு கொள்கையாகவே இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்துவுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம். இந்தப் பாகுபாடு எதற்காக என்று கேட்கவும் நாம் கூடியுள்ளோம். இந்த மாநாடு அரசியல் நோக்கத்திற்கானதல்ல. நமது வாழ்வியலை மீட்டு எடுத்து உள்ளது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இனி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன்பு, பின்பு என்றுதான் அரசியல், வரலாறு இருக்கும்” என்று பேசினார்.
ஆர்எஸ்எஸ்., தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் பேசியபோது, “இது தமிழகத்தில் ஹிந்து சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் எழுச்சி மாநாடு. இம்மாநாடு வெற்றிக்கு காரணம் ஒற்றுமை. ஹிந்து சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். ஹிந்துவின் எழுச்சி தேசியத்தின் எழுச்சி. ஹிந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காக 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ்., உலகம் முழுதும் ஒரே குடும்பமாக போற்றிய சமூகம் நம் சமூகம். பல உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டது. எல்லாப் பெண்களையும் தாயாகப் போற்றுவதும், பிறர் செல்வங்களை மண்ணுக்கு சமமாக கருதுவதும் நம் தர்மம். தீண்டாமை ஒரு பாவம் என்பது ஆர்எஸ்எஸ்., கோட்பாடு. கோயில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள தீண்டாமையை வேருடன் அழிக்க வேண்டும். இந்த மாநாடு அத்தகைய மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று பேசினார்.
இந்து என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து செல்லுவோம் என்று தொடங்கிய இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன், லட்சக்கணக்கானோர் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியை பார்த்து ராமகோபாலன் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்து ஆசீர்வதித்து கொண்டிருப்பார்கள். மதுரையில் எதற்கு இந்த மாநாடு என்று கேட்டார்கள். இந்த மதுரை மண் கடவுள் பிறந்து விளையாடி திருமணம் செய்து மீனாட்சியாக ஆட்சி செய்யும் மண் இந்த மதுரை மண். இந்த மதுரையில் மாநாடு நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது? அவர்கள் விமர்சிப்பது போல் இது சங்கிகள் மாநாடு தான். எப்படி? தமிழுக்கு சங்கம் வைத்து தலைவனாக இருந்த சிவபெருமானும் முருகனும் தான் முதல் சங்கிகள். அவர்கள் வழியை பின்பற்றி நாமும் சங்கிகள் தான். சிவனை நோக்கி தவம் செய்த இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் அகஸ்தியர் அவர் சிவபெருமானின் சொல்கேட்டு தென்னகம் வந்து தமிழை வளர்த்து இலக்கணம் அமைத்தார். சூரபத்மனும் சிவனை வணங்கி வரம் பெற்றார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் மக்களை கொடுமைப்படுத்தினான். மக்கள் சிரமப்பட்டார்கள் தேவர்கள் இடம் முறையிட்டார்கள் அவர்களுக்காக முருகப்பெருமான் வந்தார் சூரசம்ஹாரம் செய்தார் தர்மம் என்றது. அதுபோல் மக்கள் சக்தி திரண்டால் இந்த நாட்டுக்கு ஒரு தீர்வு வரும். தமிழகத்தில் பக்தி இருக்கிறது ஆனால் சக்தி இல்லை அந்த சக்தியை நாம் வெளிப்படுத்தவே இன்று அனைவரும் சேர்ந்து சஷ்டி கவசம் சொல்கிறோம். என்று பேசினார்.
இந்த மாநாட்டில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதன் புனிதத்தையும், மலையையும் காத்திட வேண்டும், ஆன்மிகம் சம்பந்தம் இல்லாத விஷயங்களுக்கு கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது, இந்துக்களையும், இந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதியையும், அரசியல் கட்சிகளையும் தேர்தல்களில் மக்கள் புறக்கணிக்க வேண்டும், முருக பக்தர்கள் சஷ்டி தோறும் முருகன் சந்நிதியில் ஒன்று கூடி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்’ ஆகியன உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்றனர். ‘நான் இந்து என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்துக்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். பாரத தேசத்தையும், இந்து சமுதாயத்தையும், நமது வழிபாட்டு தலங்களையும் பெரிதும் நேசிக்கிறேன். எனது இந்து மதத்தை நான் பாதுகாப்பேன். அதை பிறர் இழிவு செய்தால், தட்டிக்கேட்பதை எனது கடமையாகக் கொள்வேன். எனது குடும்பம் முன்மாதிரி இந்து குடும்பமாக திகழ பாடுபடுவேன். நான் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றம் நடைபெறாமல் தடுக்க பாடுபடுவேன். மதம் மாறி சென்றவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப செய்வேன். ‘நம்ம சுவாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற உணர்வுடன் ஆலயங்களை பாதுகாப்போம் என முருகப் பெருமானை மனதார வேண்டி உறுதி ஏற்கிறேன் – என அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.
நிகழ்வின் நிறைவாக மாநாட்டு மேடை யில் இருந்தவர்களும், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும் என லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி ஒரு கின்னஸ் சாதனையைச் செய்தனர். எல்இடி திரையில் இசையுடன் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க, அரங்கில் திரண்டிருந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் இணைந்து பக்தி பரவசத்துடன் பாடினர். மேடையில் இருந்த பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தரையில் அமர்ந்து பாடினர்.
கந்த சஷ்டி கவசம் பாடி முடித்த பிறகு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த அறுபடை வீடுகளுக்கும், நடுவில் இருந்த பிரம்மாண்ட முருகன் சிலைக்கும் கைலாய வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் மாநாடு நிறைவுற்று அனைவரும் திரும்பினர்.
ஏற்பாடுகள்:
அறுபடை வீடுகளின் அருட்காட்சி ஜூன் 16ல் திறக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாடு நடைபெறும் பகுதியில் பக்தர்களை வழிநடத்த, இந்து முன்னணி சார்பில் பாதுகாப்பு, சுகாதாரம், மைதானம், மருத்துவம், ஊடகம், இதர பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 27 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 100 பேர் என, 2,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த மாவட்ட வாரியாக, 81 தன்னார்வலர்கள் குழுவும், 25 பேர் கொண்ட வழக்கறிஞர் குழுவும் தனியாக நியமிக்கப்பட்டது. அவசர மருத்துவ தேவை ஏற்படுவோருக்கு மருத்துவ உதவி வழங்க 13 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாட்டு நுழைவாயில் முதல், மாநாடு நடைபெறும் பகுதி வரை ஒவ்வொரு 20 மீட்டருக்கும் ஒரு தன்னார்வலர் வழிகாட்ட நிறுத்தப்பட்டார்.
மதுரை ராம் பிரசாத் தலைமையில் மிகச்சிறந்த மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த தென்பாரத அமைப்பாளர் க. பக்தன், மாநில அமைப்பாளர் பாலாஜி உள்ளிட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அனைவரும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மாநாட்டு நிறைவில், வந்திருந்தவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை அவர்களே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்தனர். அங்கே இருந்த தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்து இடத்தை தூய்மைப் படுத்தினர். மாநாடு நிறைவுற்ற பின், அறுபடை வீடு அமைப்பைப் பார்க்க மேடை ஏறியவர்களை, ‘இவ்வாறு கூட்டமாக ஏற வேண்டாம், மேடை தாங்காது’ என்று விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதை ஏற்று அமைதி காத்து அனைவரும் ஒத்துழைத்தனர். இந்து முன்னணி இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களே கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். அவர்களின் வழிகாட்டலை ஏற்று எந்த அசம்பாவிதமும் இன்றி லட்சக்கணக்கானோர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது தமிழகத்தில் ஒரு கும்பமேளாவை நினைவூட்டியது.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் முதல்வராக வேண்டி ஜனசேனா கட்சி தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் வேண்டுதல்:
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று வருகை தந்துள்ளார். அவருடன்திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. ஆரணி சீனிவாசலூவும் வந்துள்ளார்.
இந்நிலையில், மதுரை வந்த ஜனசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சீனிவாசலு ஆதரவாளர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தபோது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரை முருகன் மாநாட்டிற்கு வந்துள்ளார்.
அவருடன் வந்த தங்கள் கட்சி எம்எல்ஏ சீனிவாசன் உடன் ஆந்திராவில் இருந்து 150 பேர் மதுரை வந்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகவும், தற்போது ஆந்திராவில் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் விரைவில் முதல்வராக வேண்டுமென ஜனசேனா கட்சி சித்தூர் மாவட்டத் தலைவரும் நகர்ப்புற கைத்தொழில், வளர்ச்சித் துறை சேர்மன் ஹரிபிரசாத்துடன் தொண்டர்கள் அனைவரும் வேண்டுதல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Reclaiming Epics: The Unexpected Youth Surge at Dushyant Sridhar’s Lecture on ‘Secrets in Ramayana’ at Narada Gana Sabha, Chennai (June 18–22, 2025)
Narasimhan Vijayaraghavan
As one entered hall, confident to occupy a vantage seat for the lecture, it was pleasantly surprising to see the hall overflowing and even the aisles were filled with seated asthikas. It was unusual. The question arose whether the eternal topic was the attraction of the speaker. Of it was a combination of both. One is drawing no profound inferences except it was good to see the ‘content’ having welcome traction. Whichever way, it was a sight for sore eyes and compelled one to pen this piece.
This article challenges the entrenched belief that discourses on Indian epics, particularly those delivered in traditional sabhas, fail to engage younger generations. Drawing from the remarkable turnout—especially of millennials and Gen Z—at Dushyant Sridhar’s lecture series ‘Secrets in Ramayana’ held at Narada Gana Sabha, Mylapore, Chennai between June 18 and 22, 2025, this essay explores the evolving socio-cultural dynamic that is making age-old narratives relevant and accessible to newer audiences. Through empirical observation, cultural analysis, and sociological framing, this article reflects on the resurgence of classical storytelling in modern urban spaces.
In the cultural heartland of Chennai, where Carnatic music and spiritual discourses have long shaped the intellectual and aesthetic life of the city, traditional sabhas are often seen as bastions of the elderly. It is widely assumed that lectures on Hindu epics such as the Ramayana are received with lukewarm interest by today’s digitally driven, globally oriented youth. This stereotype was upended dramatically in June 2025, when eminent scholar and orator Shri Dushyant Sridhar delivered a five-day lecture series titled ‘Secrets in Ramayana’ at Narada Gana Sabha, Mylapore.
What was originally expected to draw a modest crowd of religious seniors turned into a cultural phenomenon, marked by unprecedented attendance of millennials and Gen Z audiences. The lecture series, conducted in the evenings, witnessed packed halls, queues for entry, and even standing-room-only scenarios—an anomaly for spiritual discourses in post-pandemic urban India.
Narada Gana Sabha, an iconic cultural venue in Mylapore, Chennai, is often associated with December music festivals and conventional discourses. Yet from June 18–22, 2025, it wore an altogether different look: young professionals, students, artists, and tech-savvy urbanites filled its rows, many taking notes on tablets or recording key moments for later reflection. Traditional veshtis and kurtas mingled with jeans and hoodies, symbolizing an intergenerational confluence that few had predicted.
This atmosphere of cultural synthesis signaled a paradigm shift in audience profile, speaking volumes about the evolving attitudes towards spiritual and mythological inquiry among younger Indians.
At the core of this unexpected success lies Dushyant Sridhar’s unique ability to decode classical texts with a modern sensibility. An alumnus of BITS Pilani and a polyglot fluent in Sanskrit, Tamil, and English, Sridhar seamlessly weaves Vedic hermeneutics with contemporary analogies, thus bridging the cognitive chasm between ancient lore and current life.A willing dropout from Tata Consultancy Services, has done well for himself commercially too. There is obvious societal interest as well.
His rendition of Ramayana was neither sermonizing nor didactic. Rather, it was a penetrative inquiry into lesser-known motifs, psychological subtexts, and moral paradoxes, such as: (i) The internal dilemmas of Lakshmana and Bharata (ii) The oft-overlooked strength of Mandodari (iii) The epistemological conflict between destiny and free will in Rama’s journey
A superficial analysis suggests several factors for the ‘full to the brim’ turnout, including the youth: 1. Search for Rooted Identity: In a post-globalization era, many millennials and Gen Z individuals are looking beyond consumerism to discover cultural anchors. Ramayana, when offered not as blind faith but as a literary, psychological, and philosophical text, has immense appeal.
2. Instagrammable Wisdom: Short reels and memes drawn from Sridhar’s lectures were widely shared, transforming kathakalakshepam into a viral event. The digital format extended the reach of the Sabha into the smartphones of the next generation.
3. Community and Curiosity: The ambiance offered not just knowledge, but also satsang—a sense of spiritual community and thoughtful conversation. Young Chennaiites, long alienated from religious spaces seen as rigid or irrelevant, found in this lecture series a safe and open space for inquiry.
The event also countered the stereotype that classical Indian knowledge traditions are esoteric, Brahminical, or inaccessible. Sridhar’s inclusive commentary drew from both Valmiki and Kamba Ramayana, integrating folk tales, bhakti narratives, and pan-Indian variants of the epic. The turnout thus indicated a subversive return to tradition, not as dogma but as dynamic dialogue.Notably, the lecture drew equal participation from women and men, proving that the hunger for dharmic literacy cuts across all boundaries.
The remarkable youth presence at this lecture series represents more than an anomaly; it suggests a renaissance of interest in Indian classical thought, when it is presented with intellectual rigor and emotional intelligence.
This moment marks a turning point in public pedagogy—a reassertion of the epic as a source not merely of religious lore but of ethical, psychological, and civilizational wisdom. It also poses a challenge to sabhas and cultural institutions to reimagine their roles—not merely as gatekeepers of heritage but as catalysts for generational dialogue.
In Dushyant Sridhar’s lecture on “Secrets in Ramayana,” the audience did not just listen; unusually they were packed to capacity from earlier than 18.00 hrs till close beyond 20.00 hrs; they awakened. Can we so conclude? And in that awakening lies the silent revolution of India’s youth—a generation seeking moksha with mindfulness and mananam with modernity.
Can we say Sanatana Dharma, particularly in Chennai, instead of being vanquished is alive and well?
சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக ஸ்ரீகோவில்; உத்தர வைப்பு விழா இன்று நடைபெற்றது.கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்ற
சபரிமலை சன்னிதானத்தில் நவக்கிரகங்களுக்காக கட்டப்பட்டு வரும் புதிய ஸ்ரீகோவிலின் உத்தர வையப்பு விழா நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ். பிரசாந்த் இன்று மதியம் 11.58 மணி முதல் 12.20 மணி வரை உத்தர வையப்பு விழாவை நிகழ்த்தினார். மாளிகாபுரம் அருகே புதிய ஸ்ரீகோவில் தயாராகி வருகிறது.
நவக்கிரகங்களின் தற்போதைய ஸ்ரீகோவிலை மிகவும் விரும்பத்தக்க இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தேவபிரஷ்ணவிதிப்படி புதிய ஸ்ரீகோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோயில் தேக்கு மரம், செப்புத் தகடு மற்றும் கல்லால் ஆனது.
சபரிமலை நிர்வாகப் பொறியாளர் ஷ்யாமா பிரசாத், சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜு வி நாத், உதவி நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ், உதவி பொறியாளர்கள் மனோஜ் குமார், சுனில் குமார் மற்றும் கோயில் சிற்பி மகேஷ் பணிக்கர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.