கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, திட்டமிட்ட செயலில் காவல்துறை ஈடுபடுவது சட்டவிரோதம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்து ஒற்றுமை, எழுச்சித் திருவிழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவிழாவாக நடத்துவதன் நோக்கத்தை, வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் தெளிவாக வகுத்துக் கொடுத்துள்ளார்.
இந்துக்கள் சாதி, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றுகூடி ஒருங்கிணைவதற்கும், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை உணர்வதற்குமாக இது நடத்தப்படுகிறது.
கோவில் திருவிழாவில் சாதி-சமுதாய பிரச்சினை ஏற்படும் போது அரசு ஒதுங்கிக் கொள்வதை பார்க்கிறோம். ஆனால் எந்தப் பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் அத்தகைய நிலை இல்லை. இதற்கு காரணம் இந்து முன்னணியின் வழிகாட்டுதல்கள்.
ஆனால் சமுதாய ஒற்றுமை தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் கசக்கிறது. பிடிப்பதில்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கெடுப்பதற்கு கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.
நேற்று சென்னையில் பல இடங்களில் தேவையற்ற கெடுபிடிகளை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. சூளைமேடு பகுதியில் வைத்து இருந்த விநாயகரை நள்ளிரவில் காவல்துறையினர் துணையோடு திருடி சென்றது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஒன்றியம், சுப்பிரமணிய பேரி கிராமத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் ரகுநாதன் விநாயகர் திருமேனியை எடுத்து சென்றுள்ளார்.
நெல்லை நாங்குநேரி பட்டர் புரம் ஶ்ரீ அல்லல் காத்த அய்யனார் கோவிலில் வைத்த விநாயகருக்கு வழிபாடு நடத்த விடாமல் காவல்துறை கெடுபிடி. கோவிலை மூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை பகுதியில் பதட்டம். முத்துப்பேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறையை கையாண்டுள்ளது.
இவை தவிர காவல்துறை அதிகாரிகள் தனியார் விநாயகர் வைக்க ஊக்கப்படுத்தி, லஞ்சமாக கட்டிங் – கமிஷன் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக, உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கை குறைந்தால் வெகுமதி கிடைக்கும். அதுவே விநாயகர் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட ஒன்று கூடினாலும் உங்களுக்கு ஏதாவது காரணம் கூறி மெமோ அளிக்கப்படும் என பலரது முன்னிலையில் வாக்கிடாக்கி மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இத்தகைய செய்திகள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலருக்கு உள்நோக்கம் இருப்பதாக தெரிய வருகிறது.
வேளாங்கண்ணி விழா ஊர்வலத்திற்கு, மிலாது நபி ஊர்வலத்திற்கு காவல்துறை எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. அவர்களும் காவல்துறை அனுமதி கேட்காமல் தான் பெரும்பாலும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். காவல்துறை, அரசு அதிகாரிகள் அடங்கி தான் போகிறார்கள்.
ஆனால் சாதாரண இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏன் இத்தனை வன்மம்? என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியாளர்களை மகிழ்விக்க காவல்துறை இத்தகைய செயலைச் செய்கிறதா? அல்லது ஆளும் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தமா? அல்லது காவல்துறையில் உள்ள சில கறுப்பாடுகளின் செயலா? எது எப்படி இருந்தாலும் இந்த செயல் ஒருதலைப்பட்சமானது, ஜனநாயக விரோதமானது.
இதுபோல் செயல்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எந்த நிலைக்கு ஆளானார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் கொடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
வக்கிரதுண்ட விநாயகர்: இவர் பிரளயகால முடிவில் தோன்றி அரி, அயன், ருத்திரன் முதலான மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை அருளினார்.
சிந்தாமணி விநாயகர்: கபில முனிவருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டருளினார்.
கஜானன விநாயகர்: பிரம்மனிடம் இருந்து தோன்றிய சிந்துரன், தேவர்களுக்கு தொல்லை தந்தபோது அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.
விக்னராஜ விநாயகர்: காலரூபன் என்ற கொடியவனை அழித்து உலகினை காத்தருளினார்.
மயூரேச விநாயகர்: பிரம்மதேவனிடத்தில் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களையும் சிறையில் வைத்த சிந்தாசுரனையும் வென்றருளினார்.
பாலசந்திர விநாயகர்: எமனிடத்தில் உதித்த அனலாசுரனை சிறிய குழந்தை வடிவில் சென்று அந்த அசுரை விழுங்கி அருளினார்.
தூமகேது விநாயகர்: மாதவராசனுக்கும் அவர் மனைவி சுமுதைக்கும் தீங்கு செய்த தூமராசனைக் கொன்று அவர்களை காத்து அருளினார்.
கணேச விநாயகர்: தம்மிடத்தில் அருள்பெற்ற பெலி என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் தந்து அலைக்கழித்த போது தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து முகத்தினராய் அவதரித்து அந்த அசுரனை அழித்தார்.
கணபதி விநாயகர்: கஜமுகாசுரனை வெல்வதற்காக சிவபெருமானால் படைக்கப் பெற்றவர். விஷ்ணுவின் சாபத்தை நீக்கியருளினார்.
மகோற்கட விநாயகர்: காசிராஜனுக்காக நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனை காத்தருளினார்.
துண்டி விநாயகர்: துராசதனை வென்று திவோதாசன் மனம் களிக்கச் செய்தார்.
வல்லபை விநாயகர்: மரீசி முனிவருடைய புத்திரியாகிய வல்லபையினையும், விஷ்ணு புத்திரிகள் பன்னிருபேரையும் திருமணம் செய்து கொண்டு விஷ்ணுவுக்கு யோக ஞான தத்துவம் என்றும் கணேச கீதையை அருளினார்.
இந்தியா மீது படையெடுப்பு என்று முஸ்லீம் பேசினால் வழக்கில்லை, அதை கண்டித்த தேசியவாதி மீது வழக்கு – திமுக அரசின் அணுகுமுறை இந்தியாவை அழிக்கத் தூண்டும் பயங்கரவாதம்-காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதக்கி என்பவர் இந்தியாவின் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை அல்லா நரகத்திற்கு அனுப்ப மாட்டார் என பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் பொது அமைதியை குலைக்கும் வகையில் மதவெறியை தூண்டி பேசியுள்ளார். இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் ஸ்டுடென்ட் பெடரேஷன், சுன்னத் ஜமாத் பாலகர் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த தாவா யாத்திரையில் கலந்து கொண்டவர்.
இத்தகைய மதவெறியாக பேசி தேசத்தின் அழிவை தூண்டும் இவரைப் பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல், தமிழக அரசும் காவல்துறையும் அலட்சியமாக இருக்கின்றன.
கடந்த காலங்களில் இதுபோன்ற வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் தான் மதக் கலவரங்கள் ஏற்பட வழி வகுத்தன என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
நமது நாட்டிலேயே இருந்து கொண்டு, நமது நாட்டின் மீது படையெடுப்போம் என பேசிய கொடூர எண்ணம் கொண்ட உஸ்தாத்தை கைது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு உணர்வு காவல்துறைக்கு இல்லை. இத்தகைய வன்முறை, தேச விரோத பேச்சு, வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக காவல்துறை மதிக்கவில்லை.
மாறாக உஸ்தாத்தின் பேச்சின் அபாயத்தை எடுத்து கூறி தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரித்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் தலைவரும், சிறந்த தேசபக்தருமான ஊடகவியலாளர் பால கெளதமன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
யாரும் தாமாக முன்வந்து புகார் கொடுக்காத நிலையில் சமூக வலைத்தள கண்காணிப்பு குழு உதவி ஆய்வாளர் மூலம் புகார் அளித்து அதை வழக்காக பதிவு செய்துள்ளது, ஒரு தலைபட்சமானது. தேசவிரோதிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு வருவது வேதனையான உண்மை.
முஸ்லிம்களை இந்தியாவின் மீது போர் தொடுக்க சொல்லும் உஸ்தாத்தின் பேச்சு சமூக அமைதியை பாதிக்கவில்லையா? அது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லையா?
ஆனால் அவர் பேசிய கருத்து நமது தேசத்திற்கு எதிரான கருத்து என என பேசிய பாலகௌதமன் அவர்களின் கருத்து சமூக அமைதியை பாதிக்கும் எனக்கு காவல்துறை விளக்கம் அளிப்பது கேலிக்கூத்தானது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் முஸ்லிம் பயங்கரவாத பேச்சுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் உந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத செயல்களுக்கு தயார் செய்யப்படுகின்றனர். கோவையில் நடந்த மனித வெடிகுண்டு சம்பவத்தை மறக்க வேண்டாம்.
இத்தகைய ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு விடுவதால் வரும் காலத்தில் பயங்கரவாத செயல்கள் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதை காவல்துறை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் கூட அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளும் திமுக அரசு, பயங்கரவாத பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
ஆன்மீக பேச்சாளர்களையும், நல்ல சிந்தனையாளர்களையும் அரசியல் விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்களையும் திட்டமிட்டு சிறையில் அடைத்து விட்டு தேச விரோத கருத்துக்களை கூறுபவர் மீது ஆதரவளிப்பது திராவிட மாடலின் கொள்கையாக உள்ளது.
சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதம் பேசுபவர்களை ஆதரிப்பதும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சீர்குலைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற செயலாகும்.
தமிழக அரசும் பயங்கரவாதத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை.
யாராவது அதை சுட்டிக்காட்டி பேசினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்பது சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாகும்.
கடவுள் மறுப்பு பேச்சுக்களும், நமது ராணுவ வீரர்களுக்கு எதிரான பேச்சுகளும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அமைப்புகள் சார்பாக வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க ஆளுங்கட்சி தயாராக இல்லை.
தேச நலன் விரும்பி யாராவது கருத்துக்களை வெளியிட்டால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுவது இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது.
ஸ்ரீ டிவியின் இயக்குனரான பாலகவுதமன் அவர்கள் சிறு வயது முதலே தெய்வபக்தியும் தேசபக்தியும் கொண்ட சிந்தனையாளர். சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் சிறந்த பேச்சாளர். அவர்மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல்துறை தேடி வருவது அபத்தத்திலும் அபத்தம்.
தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகள் பயிற்சி எடுப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வருகிறது. இவர்களையெல்லாம் கண்காணிக்காமல் கைது செய்யாமல், பால கௌதமன் அவர்களை கைது செய்ய நினைப்பது, கருத்து சுதந்திரத்தின் ஆணிவேரை அறுக்கின்ற செயலாகும்.
வெறுப்பு பேச்சு பேசியவர்கள் மீது தாமாகவே முன்வந்து காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.
மத வெறுப்புணர்வுடன் பேசிய உஸ்தாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பால கௌதமன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாய்க்கு சிறுநீரக நோய், வாய் பேச முடியாத இரு மகள்களுடன் சேர்ந்து ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த பரிதாபம் விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் தாய் ராஜவள்ளி, சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாலும், வறுமை காரணமாகவும் வாய் பேச முடியாத தனது இரு மகள்களுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய், இரு மகள்கள் என்பது தெரிந்தது.
விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்த ராஜவள்ளி 60, இவருக்கு உப்புச்சத்து அதிகரித்து சிறுநீரக குறைபாடு இருந்தது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் 30, முத்துமாரி 27, முத்துப்பேச்சி 25 என மூன்று மகள்கள் உள்ளனர்.
ராஜவள்ளி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். மற்ற நால்வரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.
சிறுநீரக நோய் பாதிப்பு, வறுமை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று மாலை 5:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்தது. தர்மர் உடல்களை அடையாளம் கண்டார். வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளத்தில் விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கம்பி எடுத்து வந்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு வியாழக்கிழமை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் காளீஸ்வரன் கிருஷ்ணன் கோவில் அருகே தனியார் கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் விஜய் ரசிகராக உள்ளார் மேலும் இனாம் கரிசல்குளம் பகுதியில் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த கம்பியை எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் நண்பர் ஒருவர் சிறிய காணொளியை அனுப்பி இருந்தார். அது அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை பற்றியது. அதில், ஒரு பெண் உறுப்பினர் நீண்ட வாழைப்பழத்தை கையில் எடுத்துக்காட்டி இதை அமெரிக்க மக்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறோம். இதற்கு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளீர்களா ? அப்படி என்றால் ஏன் அதிகரித்தீர்கள் ? , என்று காட்டமாக கேட்கிறார்.
U S going bananas என்று எழுதி ஒரு ஸ்மைலியையும் சேர்த்து பதில் அனுப்பினேன். கதலி/ வாழை குடியரசு – பலகீனமான பொருளாதாரம்’ அரசும் கொண்ட நாடாக அமெரிக்கா மாறி வருகிறது என்று அதற்கு பொருள்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று , அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நாளொரு அதிரடி அறிவிப்புகள். இரண்டு , கருங்கல் ஜல்லி ஏற்றி போகும் லாரி மெர்சிடெஸ் பென்ஸ் கார் மீது மோதினால் ……பாக் இராணுவ தளபதியின் சவடால்.
பாக் சவடால்
இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு அதில் வெற்றி பெற்ற நாட்டு தளபதிக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைப்பது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் உதை வாங்கி தோற்ற நாட்டு தளபதிக்கு பதவி உயர்வு என்றால் அது பாகிஸ்தானில் தான்.
பஹல்காம் பயங்கரவாத செயலுக்கு பதிலடியாக இந்தியா (ஆபரேஷன்) சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானில் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுத கிடங்கு வாசலை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்தன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களும் செய்தித்தாள்களும் எழுதின. அதனால்தான் பாகிஸ்தானின் கையை முறுக்கி மோதலை நிறுத்த மண்டியிட வைத்தது அமெரிக்கா என்பது இந்திய செய்தியாளர்களின் உலகத்தில் உலா வரும் செய்தி.
ஆனால், தோற்று தாக்குதலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட பாகிஸ்தான் நாட்டு தளபதி அசீம் முனீர் தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் பாராட்டையும் சூட்டிக் கொண்டார். இது உலக நாடுகளிடையே நகைப்பை ஏற்படுத்தியது. அது பற்றி எல்லாம் பாகிஸ்தான் கவலைப்படவில்லை. அவ்வளவு சுரணைக் கிடையாது அந்த நாட்டு தலைவர்களுக்கு. (இந்தியாவிலும் அப்படி பாரத ரத்னா வாங்கியவர்கள் உண்டு)
முதல் காரணம்
தனக்குத்தானே பட்டத்தை சூட்டிங் கொண்ட முனீர் தன்னை மண்டியிட வைத்த மகானுபாவர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நகைச்சுவை. அதற்கும் அடுத்த கட்டம் ஒன்று உண்டென்றால் அது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியின் பேச்சு. அந்தப் பெண்மணி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் தளபதி அசீம் முனீர் சொன்னதை பாராட்டி அவரை விருந்துக்கு அழைத்தோம் , என்று முனீர் (தோல்விக்கு பின்) முதல் முறை அமெரிக்காவுக்கு அழைத்தக் காரணம் சொன்னார்.
அதைவிட உச்சபட்ச கோமாளித்தனம், போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அல்ல என்று கூறும் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல முடியுமா, என்ற ராகுலின் பேச்சு. இவரது தந்தை ராஜீவ் காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டார். ஒரு விருந்து. அதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்க அதிபருடன் கையில் கோப்பையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த ஜியா உல் ஹக் வருகிறார். அமெரிக்க அதிபரிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி, இவர் தான் ஆசாதி காஷ்மீரின் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்) பிரதமர், என்கிறார். ராஜீவ் காந்தி எப்படி பதில் வினையாற்றுவது என்று தெரியாமல் திகைத்தார் அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றார். இதை அவரே ஒரு நேர்காணலில், பாகிஸ்தான் அதிபரின் பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் திகைத்தேன் . அங்கிருந்து விலகிச் சென்றேன், என்று சொல்லி உள்ளார்.
பென்ஸ் காரும் ஜல்லி லாரியும்
அடுத்த சில வாரங்களில் முனீர் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த முறை சென்ற போது அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமை தளபதியான மைக்கேல் குரில்லா பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சியில் ( டெக்ஸாஸில் நடந்தது) கலந்து கொண்டார். அதில் தான் முனீர் , எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஏவுகணைகளுக்கும் பஞ்சமில்லை, நிறைய இருக்கின்றன. எங்கள் நாட்டின் மீது யாராவது கை வைத்தால் எங்களோடு சேர்ந்து பாதி உலகத்தையும் அழித்து விடுவோம், என்று கொக்கரித்தார்.
அப்போதுதான், மெர்சிடஸ் பென்ஸ் கார் போல இந்தியா உள்ளது. அது குவாரிகளில் கருங்கல் ஏற்றி செல்லும் லாரி (பாகிஸ்தான்) மீது மோதினால் யாருக்கு சேதம் விளையும் என்பது எல்லோருக்கும் தெரியும், என்று நக்கலாக பேசினார்.
அந்த விருந்தில் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேல் ராணுவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருப்பார்கள். இந்தியா சார்பாக கலந்து கொண்டதாக இதுவரை செய்தி இல்லை. இஸ்ரேலுக்கும் இந்த பேச்சு அச்சுறுத்தலை தந்திருக்கும் .
அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரும் இதை கண்டிக்கவில்லை. அவர்களது அமைதி காதை பிளப்பதாக உள்ளது. அவரை கண்டித்தால் பாகிஸ்தான் மண்ணை அமெரிக்கா பயன்படுத்த விடாமல் செய்துவிட்டால், ஆசியாவில் தான் கால் வைப்பதற்கு இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற தயக்கம். அவரை ஆதரித்தாலோ அவரது அணு ஆயுத அச்சுறுத்தலை சரியென ஏற்றுக் கொள்வதாகவும் இந்தியாவுடனான நட்புக்கு எதிரானதாகவும் கருதப்படும்.
ஆ(த)னால், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் தளபதி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் தளபதி முனீரை வன்மையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் ஒரு பொறுக்கி நாடு. முனீர் கோட்டு போட்ட ஒசாமா பின் லேடன். அவரது விசாவை உடனடியாக தடை செய்ய வேண்டும். பாகிஸ்தானின் நேட்டோவில் இல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அதன் மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும், என்று மைக்கேல் ரூபின் என்று சொல்லி உள்ளார்.
அமெரிக்க மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தலை விடுவதும் , அதை கண்டிக்காமல் அமெரிக்கா அமைதி காப்பதும் அதன் புவியரசியல் யுத்தி என்று சிலர் கருதலாம். வாழைக் குடியரசு என்றும் சொல்லலாம்.
இரண்டாவது காரணம்
டிரம்பின் அதிரடி அறிவிப்புகள். முதலில் 25 சதவீதம். பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் 25 சதவீதம் . டிரம்ப் ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமாக வரி விதித்தது நட்பு நாடான இந்தியா மீதுதான். எதிரியான சீனா மீதல்ல.
நெருங்கிய நண்பர் என்று மோடி சொன்னாரே , அடுத்த முறை டிரம்ப் சர்க்கார் என்று மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தாரே , இப்போ ??? , என்று மோடி எதிர்ப்பாளர்கள் நக்கல் அடிக்கிறார்கள். அவர்களது கேலி நியாயமற்றது என்று கூறி விட முடியாது. ஏனெனில் அதெல்லாம் பொதுவெளியில் எல்லோரும் பார்க்கும்படி நடந்தது.
டிரம்பின் முந்தைய ஆட்சியில்
ஆனால் , முதல் முறை டிரம்ப ஆட்சியின் போது நமக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன, என்கிறார் பங்கஜ் சரண். இவர் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றியவர் .
ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்க டேவிட்சன் பைக்குகளுக்கு (இருசக்கர வாகனங்கள்) இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். போர்ன்பான் விஸ்கிக்கு இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என்று இந்தியாவின் கையை முறுக்கி வரியை குறைத்தார். தீநுண்மீ (கொரோனா) காலத்தில் வேறு நாட்டுக்கு நாம் அனுப்பிய தடுப்பூசியை நடுவழியில் மறித்து கடத்திக் கொண்டு போனார். அமெரிக்காவுக்கு தடுப்பூசியை தராவிட்டால்…. என்று மிரட்டினார். அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. அது வரி விதிப்பில் அரசன் ( Tax King ) என்று சாடினார். இதெல்லாம் தெரிந்தும் ஊடகங்கள் நெருங்கிய நண்பர் என்றாயே , தேர்தல் பிரச்சாரம் செய்தாயே , என்றெல்லாம் வெற்று அரசியல் பேசுகின்றன.
டிரம்ப் சொல்வது என்ன?
ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்காதே. ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வாங்காதே. இந்திய விவசாய துறையை அமெரிக்காவுக்கு திறந்து விடு. பால் வளத் துறையில் அமெரிக்காவை அனுமதி, என்கிறார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரம்
ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யா குறைந்த விலைக்கு எண்ணையை விற்றது. ஆனால் அதன் மீது வர்த்தக தடை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா பெட்ரோலிய எண்ணெய்க்கு விலையும் நிர்ணயமும் செய்யப்பட்டது. உலக நாடுகள் நிர்ணயித்த விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெயை வாங்கியது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்கியது. யாராவது அதை வாங்கித்தானே ஆக வேண்டும். இல்லையென்றால் விலை ஏறி விடும். எனவே அவர்கள் வாங்கி சுத்திகரித்து மற்றவர்களுக்கு விற்றார்கள். இதில் தவறு எதுவும் இல்லை. தடை திட்டத்தை அப்படித்தான் வடிவமைத்தோம். அதன்படியே அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள், என்று 2004 மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கை பற்றிய கருத்தரங்கில் எரிக் கார்சிட்டி கூறியுள்ளார். இவர் ஜோ பைடன் காலத்தில் இந்தியாவில் தூதராக இருந்தவர்.
இதைத்தான் நமது அயலுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார் . உலக நாடுகளின் அனுமதியோடுதான் நாங்கள் வாங்கினோம். அது மட்டுமல்ல, நாங்கள் ஒரு மாதத்தில் இறக்குமதி செய்ததை நீங்கள் ஒரு வாரத்தில் இறக்குமதி செய்துள்ளீர்கள். இதுவும் எங்களுக்கு தெரியும் . அப்படி இருக்கையில் இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்ததன் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து நடத்துகிறது என்று குற்றம் சாட்டுவது எப்படி சரி என்று கேட்டு உலக நாடுகளை திணறடித்தார் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல, ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், புளோடோனியம், விவசாய உரங்கள், நிக்கல், இரும்பு ஆகியவற்றை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மற்ற நாடுகளும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், என்றார். நம்மூர் எதிர்க்கட்சிகளும் இவரது பதிலால் திகைப்படைந்தன.
அமெரிக்காவின் வலு எது ?
உலக யுத்த காலத்தில் இருந்தே போர் விமானங்கள், ஆயுதங்கள், பயணியர் விமானங்கள், உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்கர்கள் வல்லவர்களாக உள்ளார்கள். இரண்டாம் முறை டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மோடியுடன் நடந்த சந்திப்பின்போது எப் 35 போர் விமானங்களை தருவதாக அறிவித்தார். இந்தியா அதை கேட்காமலே தருவதாக அறிவித்தார்.
அந்த அதிநவீன விமானங்களை இங்கிலாந்து வாங்கி உள்ளது. அதுதான் மூன்று மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே எப் 35 ரக விமானம் ஜப்பானில் பழுதாகி நின்றது. டிரம்பின் அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடியாக இந்தியா விலை உயர்ந்த அந்த போர் விமானத்தை வாங்க மாட்டோம் என்று அறிவித்து விட்டது.
நாம் ஏற்கனவே அமெரிக்க போயிங் விமான நிறுவனத்திடம் 450 விமானங்களை வாங்க ஆர்டர் போட்டதை மறந்து விட்டாரா டிரம்ப் , என்று கேட்கிறார் மோகன்தாஸ் பை. இவர் ஒரு பொருளாதார வல்லுனர் . பதிலடியாக நாம் அதை ரத்து செய்தால் என்னவாகும் என்று கேள்வி எழாமல் இல்லை.
விவசாயம்
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்துறை திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சியின் போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அனுமதிக்கப்பட்டது. பருத்தி அனுமதிக்கப்பட்டது . விளைவாக மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன.
மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்ததின் விளைவுகளை பார்த்த பிறகு (ஆர் எஸ் எஸ் சார்புடைய விவசாய சங்கமான) பாரதிய கிசான் சங்கம் அதை கடுமையாக எதிர்க்கிறது. காந்தியவாதியான டாக்டர் வந்தனா சிவா பொதுவெளியில் எதிர்ப்பை கூர்மைப்படுத்தி வருகிறார்.
பால் வளம்
அதேபோல் பால்வளத் துறையில் அமெரிக்கா நுழைய முயல்கிறது. அவர்களது மாடுகளுக்கு மாமிச கழிவுகளை உணவாக கொடுக்கிறார்கள். பால் அதிகரிக்க ஊக்க மருந்து கொடுக்கிறார்கள் . இதெல்லாம் அந்த நாட்டின் மாடுகளின் தன்மையையும் பாலின் தன்மையையும் மாற்றியுள்ளன.
நம் நாட்டில் பசு தெய்வமாக வணங்கப்படுகிறது. பசுவின் பால் தாய் பாலுக்கு நிகராக கருதப்படுகிறது பசுவினம் (எருமை, எருது) தூய சைவம். பால் சைவ உணவு.
வெண்மை புரட்சி மூலம் பால் வளம் நம் நாட்டில் பெருக காரணம் குரியன் வர்க்கீஸ். அவர்தான் காங்கிரஸ் ஆட்சியில், குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி மூலம் மாநில பொருளாதரத்தையே மாற்றிக் காட்டியவர். அதை பின்பற்றி நம்மூர் ஆவின் முதல் எல்லா மாநிலங்களிலும் கூட்டுறவு மூலம் பால் வளமும், கால்நடை வளர்ப்பும், பால் பொருள்களும் அதிகரித்தன. இந்தியர்களின் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பெரிய மாற்றத்தை அது ஏற்படுத்தியது.
இந்தியாவில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன . இருந்தாலும், இன்றும் பெருவாரியான மக்கள் விவசாயம், அது சார்ந்த தொழில்களில்தான் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி அண்மையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதற்காக பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது எனக்கு தெரியும். விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க எந்த விலையையும் கொடுக்கத் தயார், என்று பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துள்ளார். இது ட்ரம்புக்கு கொடுக்கப்பட்ட பதிலாக தெரிகிறது.
வாஜ்பாய் ஆட்சியில்
பிரதமர் வாஜ்பாயின் அனுமதியோடு, தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், முரசொலி மாறன் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து பேசினார் . அப்போது இந்தியாவை சீனா ஆதரித்தது. அதேபோல் இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புத்தினும் (நாளை) பேச உள்ளார்கள் . அது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். பிறகு தன் எக்ஸ் தளத்தில், நான் இந்திய பிரதமருடன் நீண்ட நேரம் பேசினேன். இரண்டு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு பற்றியும் ஒட்டுமொத்த ராஜாங்க ரீதியான செயல்பாடுகள் பற்றியும் பேசினோம். பிரதமர் மோடி கனிவான, ஆறுதலான பேச்சின் மூலம் எங்கள் நாட்டு மக்களுக்கு ஆதரவளித்தார். அமைதியை திரும்புவதற்கு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அமைதிப் பேச்சில் தனது நிலையை உக்ரைன் தான் மேற்கொள்ள வேண்டும். வேறு வகையாக நடந்தால் அது பலன் அளிக்காது என்று அவர் சொன்னார் , என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் பிரச்னையும் ஆசையும்
ஆகஸ்ட் 15 தேதி ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி அலாஸ்காவில் அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் . பேச்சுவார்த்தைக்கு முன்பு, ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது இந்தியா தான் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். (கட்டுரை பதிவேறும்போது சந்திப்பு சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்றும் அந்த இரு தலைவர்களின் அடுத்த சந்திப்பு ரஷ்யாவில் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. )
ட்ரம்புக்கு சில பிரச்சனைகளும் ஆசைகளும் உள்ளன. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும். உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
பற்றாக்குறையை குறைக்க இறக்குமதி பொருள்களுக்கு அதிகமான வரி விதிப்பு என்கிறார். அதன் மூலம் அமெரிக்காவில் விலைவாசி ஏறிவிடும். உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்தியா உட்பட பல நாட்டினரை வெளியேற வேண்டும் என்கிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50 சதவீதம் பேர் இந்தியர்கள். எனவே , என்ன செய்வது என்று தெரியாமல் சலுகைகளும் பிரம்படியும் என்று மாறி மாறி பேசுகிறார். அவர் கஷ்டங்களை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.
அதேபோல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போல் தனக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்ற ஆசை . அது அவரை அலைகழிக்கிறது.
இனி …..
மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் தளபதி அசீம் முனீரின் பயங்கரவாத பேச்சை கண்டிக்க முடியாத நிலை , பொருளாதார சரிவு மற்றும் உலக விவகாரங்களில் அமெரிக்காவுக்கு மதிப்பு குறைந்து வருவது ஆகியவற்றை பார்க்கும் போது அமெரிக்கா கதலிக் குடியரசாக மாறி வருவதாக கருதலாம்.
உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை டிரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாக தெரிய வரும்.
மலையாள புத்தாண்டு சிம்மம் முதல்நாள் மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை மாலை திறந்து புதிய திதந்திரி பொறுப்பேற்ற இன்று ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் சன்னிதானத்தில் கோலாகலமாக துவங்கியது.பல்லாயினக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே இருமுடி செலுத்தி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு புதிய தந்திரி பிரசாதம் வழங்கினார்.
மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.
சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறந்ததும் கணபதி ஹோமம் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்ககயது.பின்னர் உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.
21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.
ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் பம்பை சபரிமலையில் நிரம்பி வழிந்தது.
இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற மலையாள புத்தாண்டு சிம்மம் ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் பூஜைகள் அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெறும்.சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார்.இவர் ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான பூஜை வழிபாடுகள் நடத்துவார்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.இது போல் மலையாள புத்தாண்டு கேரளாவில் ஆவணி சிம்மம் முதல்நாள் அதி விமர்சையாக கொண்டாடப்படும்.அதன்படி மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆவணி முதல் நாள் மலையாளிகள் மலையாள புத்தாண்டாக கொண்டாடுவார்கள் இதற்காக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான மலையாளிகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு அதிகளவில் வந்து ஐயப்பனுக்கு பல்வேறு முயற்சிகள் செலுத்தி பூஜை வழிபாடுகள் நடத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்
சென்னையில் கம்பன் கழகத்தின் பொன்விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கவிஞர் வைரமுத்துவுக்குக் ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப் பட்டது. விருது வாங்கிய விழா மேடையிலிருந்து ஒரு பைத்தியக்காரப் பேச்சைப் பேசினார் வைரமுத்து.
கம்பராமாயணத்தில் வரும் பாடல் சொல் ஒன்றுக்கு ஏடாகூடமான விளக்கம் கொடுத்தார் வைரமுத்து. அதன் மூலம் ராமன் புத்தி சுவாதீனம் அற்றவனாக இருந்தான், அப்படித்தான் கம்பன் சொல்ல வருகிறான் என்கிற ரீதியில் வைரமுத்து உளறிக் கொட்டினார்.
ராமாயண காவியத்தில், வாலி-சுக்ரீவன் யுத்தத்தின் போது, வாலி சுக்ரீவனைப் பிடித்துத் தரையில் வீசிக் கொல்ல இருந்த தருணம் வருகிறது. அந்த நேரத்தில், மறைந்து நின்றிருந்த ராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் தைக்க, சுக்ரீவன் மீதிருந்த வாலியின் பிடி நழுவுகிறது. சுக்ரீவன் தப்பிக்கிறான். வீழ்த்தப்பட்ட வாலி, தன் மார்பிலிருந்த அம்பைச் சிரமத்துடன் உருவிப் பார்த்து அது ராமபாணம் என்று தெரிந்து கொள்ள, ராமனும் வாலியின் முன் வருகிறான்.
ராமன் தன்னைக் கொல்ல அம்பு விடுத்தான், அதையும் மறைந்து நின்று செய்தான், என்பதை ஏற்க முடியாத வாலி கோபத்தில் ராமனிடம் பல கேள்விகள் கேட்கிறான். அதில் ஒரு கேள்வியின் சாரம் இது: ‘சீதையைப் பிரிந்ததால், அந்தப் பிரிவில் திகைத்துப் போய், தன்னிலை மறந்து, என்னைக் கொல்ல முயன்றாயா ராமா?’ இதை வெளிப்படுத்தக் கம்பன் வாலியின் வாயிலிருந்து வருவதாகத் தனது பாடலை இப்படி முடிக்கிறான்: “….. தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும் செய்கை?”
இந்தப் பாடலில் வரும் “திகைத்தனை” என்ற சொல்லின் அர்த்தத்தை, வைரமுத்து விபரீதமாக வளைத்து முறுக்குகிறார். அவர் பேசிய வார்த்தைகள் இவை:
“திகைத்தல் என்றால் பிரமித்தல். இன்னொரு சொல், மயங்குதல். மதி மயங்கி விட்டான். சீதையைப் பிரிந்த ராமன் செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்து விட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம் குற்றமாகாது என்று இந்திய தண்டனைச் சட்டம், 84-ஆம் பிரிவு சொல்கிறது. இது கம்பனுக்குத் தெரியுமோ தெரியாதோ. கம்பனுக்குச் சட்டம் தெரியாது, ஆனால் அவனுக்குச் சமூகம் தெரியும், உளவியல் தெரியும், இந்த மண்ணைத் தெரியும். ராமன் என்ற ஒரு குற்றவாளி கம்பனால் முற்றிலும் விடுவிக்கப் படுகிறான். ராமனை மன்னித்து ராமனை மனிதன் ஆக்குகிறான், கம்பன். ராமன் அந்த இடத்தில் மனிதன் ஆகிறான். கம்பன் கடவுளாகிறான்.”
வைரமுத்து இப்படிக் கூச்சமில்லாமல் பிதற்றியதன் காரணம், அவரது இந்த எண்ணம்: ‘இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் சொன்ன கலைஞர் கருணாநிதி கோலோச்சிய திமுக-வின் இன்றையத் தலைவர் மு. க. ஸ்டாலினையும், அவர் மகன் உதயநிதி ஸ்டாலினையும் நமது கோணங்கிப் பேச்சு மகிழ்விக்கும். அதனால் அவர்களிடம் நம் மதிப்பு உயர்ந்து நமக்கு வருகிற பலன்கள் வருக வருகவே!’
ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற தினம் முதல், ராவணனை வதம் செய்து ராமன் சீதையை மீட்ட நாள் வரை, ராமன் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அந்த எல்லா நாட்களிலும் ராமன் புத்தி சுவாதீனம் இழக்காமல், வாலியைக் கொன்ற நேரம் மட்டும் ராமன் புத்தி சுவாதீனத்தை இழந்திருந்தானா? என்ன சொல்கிறார் வைரமுத்து?
இன்னொன்று. வாலி-சுக்ரீவன் யுத்தத்திற்கு முன்னரே, ராமனும் சுக்ரீவனும் தம்முள் பேசி வாலி வதத்தைத் திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி சுக்ரீவன் வாலியை யுத்தத்திற்கு அழைத்தான், வாலியும் சண்டைக்கு வந்தான், வாலி வதம் அப்படியாக நடந்தது என்று கம்பராமயணத்தில் வருகிறது. ஆகையால் ராமன் புத்தி சுவாதீனம் இழந்ததால் வாலியைக் கொன்றான் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படிப் பேசுபவர்களின் புத்தியைப் பற்றி யார் என்ன சொல்ல?
ராமபாணத்தால் வீழ்ந்து முடங்கி இருந்த வாலி, ஆத்திரத்தில் ராமனிடம் ஒவ்வொன்றாகக் கேள்விகள் கேட்க, அந்தக் கேள்விகளுக்கு ராமன் பொறுமையாகப் பதிலளிக்கிறான். தான் வாலியைக் கொல்ல வந்தது ஏன் என்றும் விளக்குகிறான். ராமன் ஏன் மறைந்திருந்து அம்பு வீசினான் என்பதை லக்ஷ்மணன் விளக்குகிறான். முடிவில் ராமன் மற்றும் லக்ஷ்மணனின் விளக்கங்களால் வாலி திருப்தி அடைகிறான், அதை வாலியே ராமனிடம் சொல்கிறான். இவையும் கம்பராமாயணத்தில் அடுத்து வரும் பாடல்களில் உள்ளன.
முடிவாக, ‘ராமன் அறத்தின்படி நடந்திருக்கிறான், அவன்மீது தவறில்லை. நான்தான் என் வாழ்வில் தவறான செய்கைகள் செய்துவிட்டேன்’ என்று வாலி உணர்ந்தான். தான் செய்த தீதை, கெட்ட செயல்களை, ராமன் பொறுத்தருள வேண்டும் என்றும் வாலி ராமனிடம் வேண்டினான் என்றெல்லாம் கம்பரே விவரிக்கிறார். ஆகையால், ‘சீதையைப் பிரிந்ததால் மனக் கலக்கம் கொண்டிருந்த ராமன், அவன் என்ன காரியம் செய்கிறான் என்பது தெரியாமலேயே என்னைக் கொல்ல முயற்சித்தானோ?’ என்று ஆரம்பத்தில் எண்ணிய வாலி அந்த எண்ணத்தைப் பின்னர் மாற்றிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
ஒரு கட்டத்தில், வாலி ராமனைப் பார்த்துத் “தந்தை போன்றவனே!” என்றும் அழைத்துப் பேசுவதாகக் கம்பன் சொல்கிறான். அடுத்து, ராமன் பேசிய பேச்சை உள்வாங்கி உணர்ந்த வாலி, “என் உயிர் போகும் முன்னர் எனக்கு மெய்யறிவைத் தந்து அருள் செய்தாய்” என்றும் ராமன் மீது நன்றி கொண்டவனாகப் பேசுகிறான் (வாலி வதைப் படலம், பாடல் 130).
ராமனின் மீது வாலிக்கு ஏற்பட்ட மதிப்பு எப்படி உயர்கிறது என்றால், தன்னருகே தன் மகன் அங்கதன் வந்து வருந்தி அழுதபோது அவனைத் தேற்றிவிட்டு, ராமனின் பெருமையையும் அங்கதனுக்கு எடுத்துச் சொல்கிறான் வாலி. பின்னர், எவர் மனதையும் தொடும் ஒரு காரியத்தை வாலியும் ராமனும் செய்கிறார்கள். வாலி ராமனிடம் அங்கதனை அடைக்கலமாக ஒப்படைக்கிறான். ராமனும் அங்கதனை ஏற்று, தன்னுடைய உடைவாளை அங்கதனிடம் கொடுக்க, அதை அங்கதனும் பெற்றுக் கொள்கிறான். அச் சமயம் வாலியின் உயிர் பிரிகிறது (வாலி வதைப் படலம், பாடல்கள் 159, 160)
இறுதியாக ராமன் மீது வாலி குறை காணவில்லை, மாறாக அவன் ராமன் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன் ஆனான் என்பது கம்பர் மூலமாகவே நமக்கு விளங்குகிறது. கம்பராமாயணத்தின் இந்த மற்ற பாடல்களைப் பற்றி வைரமுத்து மேடையில் மூச்சு விடாததன் காரணம் என்ன? அவற்றுக்கு விரோதமான கண்ணோட்டத்தில் ஏன் அன்று பேசினார்? நேர்மையின்மை, உள்நோக்கம் தானே?
ஆரம்பத்தில் வாலி ராமனைப் பார்த்துக் கேட்ட ஒரு கேள்வியை ஏதோ கம்பனே அப்படிக் கேட்டு ராமனைப் புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று கம்பனே தீர்ப்பும் கொடுத்த மாதிரிப் பேசி இருக்கிறர் வைரமுத்து.
தனது பேச்சில் வைரமுத்து கடைசியாகச் சொல்ல வருவது இது: ‘புத்தி சுவாதீனம் இழந்த ராமன் ஒரு கொலையைச் செய்துவிட்டான். ஆகவே ராமன் கடவுள் அல்ல, வெறும் மனிதன். இன்னொரு பக்கத்தில், வெறும் மனிதனான கம்பன், கொலைபாதகக் குற்றம் செய்த ராமனைச் சாமர்த்தியமாக புத்தி சுவாதீனம் இழந்தவன் என்று காண்பித்து, அதன் காரணமாக இ.பி.கோ சட்டப் பிரிவு 84 போன்ற சட்ட அடிப்படையில் ராமனை – அதாவது ஒரு அவதாரக் கடவுளையே – குற்றம் செய்யாதவனாக ஆக்கிக் காப்பாற்றுகிறான். ஆகையால் கம்பன், கடவுளாக உயர்கிறான்.’
வைரமுத்துவின் இந்த எண்ணம், இந்த வியாக்கியானம், அசல் மாய்மாலம், ஏமாற்று வேலை, பிராடுத்தனம்!
வைரமுத்து குறிப்பிட்ட இ.பி.கோ சட்டம் நீக்கப் பட்டு அதற்குப் பதில் வேறு பெயரில் ஒரு புதுச் சட்டம் அமலில் இருக்கிறது. அதிலும் வைரமுத்து சொன்ன சட்டப் பிரிவின் அம்சம் உண்டு. இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் மீதான குற்றச் சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப் படவேண்டும் என்றால், அந்த நபர்தான் அகற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அவர்தான் குற்றம் நடந்த தருணத்தில் தான் புத்தி சுவாதீனம் இழந்து இருந்ததாக நிரூபிக்க வேண்டும்.
தொடக்கத்தில் வாலி ராமன் மீது ஒரு சந்தேகம் கொண்டிருந்தாலும் – அதாவது சீதையைப் பிரிந்த காரணத்தால் ராமன் தன் மீது அம்பு எய்தபோது அவன் திகைப்பில் இருந்தானோ என்று சந்தேகம் கொண்டிருந்தாலும் – ராமன் வாலியிடம் பேசப் பேச, தன்மீது ராமன் குற்றம் இழைக்கவில்லை என்று வாலி உணர்கிறான், மேலும் ராமனை வாலி புகழ்கிறான், போற்றுகிறான் என்று கம்பர் விவரிக்கிறார். முடிவில் ராமன் குற்றம் செய்ததாக அவன் மீது கம்பராமாயணத்தில் குற்றச்சாட்டே வைக்கப் படவில்லை – கடைசியில் வாலியின் பார்வையில் கூட அந்தக் குற்றச்சாட்டு இல்லை. ஆகையால் ராமனின் பெயரைக் கம்பன் காப்பாற்றித் தர ஒரு சட்டப் பிரிவு கை கொடுக்கிறது என்று வைரமுத்து சொல்கிறாரே, அந்தச் சட்டப் பிரிவுக்கு இங்கு தேவையும் இல்லை, வேலையும் இல்லை. வைரமுத்துவின் சட்ட வாதமும் புஸ்வாணம் தான்.
தன்மீது விழும் உளறல் குற்றச்சாட்டிலிருந்து இப்போது யாராலும் காப்பாற்றப் பட முடியாமல் இருப்பவர் ஒருவர்தான். வேறு யார்? வைரமுத்துதான்!
Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com
ஔரங்கசீப் பாகிஸ்தானின் கருத்தியல் தந்தை. அதை பாதுகாக்கும் புரவலர். முஸ்லிம்கள் மீதான அன்பினால் பிறந்தது அல்ல பாகிஸ்தான். இந்துக்கள் மீதான வெறுப்பில் உருவானது. பிரிட்டிஷாரின் கூட்டாளியான நவநாகரீக உடை அணிந்த முகமது அலி ஜின்னா பிரசவகால தாதியாக இருந்து வெளிக்கொணர்ந்தது.
ஔரங்கசீப் வழியில் பிரிட்டிஷார்
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை அரசின் கொள்கையாற்றியவர் ஔவுரங்கசீப் . திலகம் அணிவது, ஹோலி பண்டிகை கொண்டாடுவது என இரு மதத்தினர் இடையே தினசரி வாழ்வில் வெளிப்பட்ட கலாச்சார ஒற்றுமை, மொழி ஒற்றுமை என நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இருந்த சமூக ஒருமைப்பாட்டை உடைத்து நேரெதிராக இரு மதத்தினரையும் நிறுத்தியவர். பிரிட்டிஷார் இந்த இடைவெளியை தனக்கு சாதகமாக்கி கொண்டனர் . ரயில் நிலையங்களில் முஸ்லிம்களுக்கான தனி தண்ணீர் குடம் இந்துக்களுக்கான தண்ணீர் தொட்டி என்பன போன்ற திட்டங்களால் வேற்றுமையை நீரூற்றி வளர்த்தனர்.
இரு மதத்தினருக்கும் தனித்தனி தொகுதி, ஒரு சார்பாக தேர்தல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் ஹிந்து முஸ்லிம்களிடையே மோதலை வழமையாக்கினர். தனித் தொகுதி தான் பிறகு தனி நாடாக வடிவெடுத்தது. அவர்களின் செயல்கள் மற்றும் நோக்கங்கள் இடையே இருந்த தொடர்பு வெளிப்படையானது.
இந்தியாவும் பாகிஸ்தானும்
மதவெறி என்னும் நச்சு அடித்தளத்தின் மீது எதிர்கால இந்தியாவை கட்டி எழுப்ப முடியாது. கடந்த காலத்தை பார்த்து கழுத்து விரைத்து நோவுபடாமல், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் இந்தியா என்பதே நம் நாட்டின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது. 21 ஆம் நூற்றாண்டின் எழுச்சியுடன் மின்னும் விண்மீன் இந்தியா. 19 ஆம் நூற்றாண்டு சகதியில் சரிந்து விட்டது பாகிஸ்தான். வேறுபட்ட மக்கள் என்பது காரணமல்ல. வேற்றுமையை, வெறுப்பை மையமாகக் கொண்டதுதான் காரணம்.
ஆர் எஸ் எஸ் கலாச்சாரம்
ஆர் எஸ் எஸ் சார்பாக பேசுபவர்கள், அவர்கள் உயர்ந்த தலைவர்களாக இருந்தாலும் கூட , தன் விருப்பம் போல் பேசி விட முடியாது. அவர்களுக்கு நம்முடைய அரசியல் கலாச்சாரம் ஒத்து வருவதில்லை. நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை கூட கட்டுப்பாடுடனே முன்னெடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்கள். அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களை போல் விருப்பம் போல பேசவோ, சூழ்நிலைக்கு ஏற்ப வார்த்தை பிரயோகங்களுக்கோ, உதறல் எடுத்தது போல் உடனடியாக மாற்றிக் கொள்ளும் சுதந்திரமோ ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களுக்கு இல்லை. விஷயம் எவ்வளவு தீவிரமானதோ அதற்கேற்ப தீவிர சிந்தனைக்கும் விவாதங்களுக்கும் பிறகு ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் ஏற்ப மறுப்பு என்ற வாய்ப்பு உங்களுக்கு கிடையாது.
ஆர் எஸ் எஸ் ஸின் கொள்கை பரப்பு செயலாளரான சுனில் அம்பேத்கர், ஆறாவது முகலாய அரசரின் சமாதி தொடர்பாக எழுந்த வன்முறையை ஒட்டி பேசும்போது, 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஔவுரங்கசீப் தேவையற்றவர், என்று சொன்னார். அந்த அமைப்பின் அதிகாரமிக்க பொதுச்செயலாளராக இருக்கும் தத்தாத்ரேயா ஹெசாபோலே, இந்திய கலாச்சார பண்புகளின் அடிப்படையிலேயே ‘நல்லிணக்கம் கொண்ட ஒன்றுபட்ட பாரதம் கட்டமைக்கப்படுகிறது’ என்று உறுதிப்பட தெரிவித்தார். அமைப்புக்குள் நடந்த சீரிய விவாதங்களுக்கும் சிந்தனை கடைசலுக்கும் பிறகே உருவான நிலைப்பாட்டை தான் இருவரும் வெளிப்படுத்தினர்.
கலாச்சாரமும் மதநம்பிக்கையும்
கலாச்சாரமும் மத நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நிறுவ மத அடிப்படைவாதிகள் எவ்வளவுதான் முயன்றாலும், அவை இரண்டும் ஒன்றல்ல.
இந்தோனேசியர்களும் அரேபியர்களும் ஒரே மதத்தை பின்பற்றினாலும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்கள் அல்லர் . இந்தோனேசியாவில் உள்ள ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மொழியை பேசுகிறார்கள். அரேபிய கிறிஸ்தவர்கள் அரபு மொழி பேசுகிறார்கள்.
குரான் சொல்கிறது
ஒவ்வொரு மொழியிலும் இறைதூதரை அனுப்பி உள்ளதாக குரான் சொல்கிறது. ஏனெனில் படைப்பில் வேறுபாட்டை பார்க்க இறைவனால் முடியாது. நமக்கு மத நம்பிக்கை இருக்குமானால் நாம் எல்லோரும் இறைவனின் படைப்பு என்று ஏற்றுக் கொள்வோம். ஔவுரங்கசீப் மனப்பாடமாக குரானை சொல்லக்கூடியவர் என்பதால் அவருக்கு, லா கும் தீன் ஓ கும் வா இல் யா தீன் – உங்கள் நம்பிக்கை உங்களுக்கு என்னுடைய நம்பிக்கை எனக்கு என்ற குரானின் வசனம் தெரியும். ஆனால் அதை புரிந்து கொள்ள விடாமல் அவருடைய முன்முடிவான கருத்துக்கள் தடுத்தன.
ஏராளமான கசடுகள் நம்முடைய கதையாடலில் கலந்து விட்டதால் அவற்றை கலைந்து விரிவான தளத்தில் புரிந்து கொள்ள மீள்சீரமைப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நம்மிடையே நடக்கும் விவாதங்கள் வெறுப்பைதான் வளர்க்கின்றனவே தவிர இணக்கத்தை அல்ல.
ஜிசியா
1669 ல் ஔரங்கசீப் ஜிசியா வரியை விதித்தார். அந்த அநியாயமான வரி விதிப்பு கடும் கண்டனத்தையும் எதிர்வினையையும் கிளப்பியது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மதத்தினரிடையே பெரும் இடைவெளியையும் உருவாக்கியது. முகலாயர்களுக்கும் ரஜபுத்திரர்களுக்கும் இடையே இருந்த உறவை மோசமாக பாதித்தது.
அதற்கு நூற்றாண்டுக்கு முன்பு அக்பரும் அவருக்கு பின் வந்த முகலாய பேரரசர்களும் இந்த நாட்டு கலாச்சாரத்துடன் முரண்படும், மக்களின் இயல்புக்கு மாறான மத அடிப்படையிலான (ஜிஸியா) வரியை நீக்கிவிட்டார்கள் என்பது இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும் . அக்பர் மத நம்பிக்கைகளில் இருந்து விலகி விட்டதாக குற்றம் சாட்டி அவரது தம்பி முகமது ஹக்கீம் இஸ்லாமிய மத பழமைவாதிகளை திரட்டி அக்பருக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். கிளர்ச்சியாளர்களை ஓட ஓட விரட்டி காபூலில் ராஜா மான்சிங் தோற்கடித்தார்.
ஜிசியா வரியை அரசுக்கு வருமானத்தை சேர்க்காமல் தோல்வி அடைந்தது ஒரு முரண்நகை. மத ரீதியான முன் முடிவுகளை விட ஊழலை வென்றது. ஔவுரங்கசீப்புக்கு முட்டுக் கொடுக்கும் வரலாற்றாளர் ஆட்ரி ட்ருஷ்கே , ‘ ஜிசியா வரி விதிப்பை கொண்டு வந்ததன் மூலம் வலிமையான உலாமாக்களின் இடையே (முஸ்லிம் மத அறிஞர்கள்) ஔவுரங்கசீப்புக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லை. ஜிஸியா வரி வசூலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக ஔவுரங்கசீப்பின் சகாக்கள் திரண்டனர். வரி வசூல் செய்பவரின் பைக்கு பணம் சென்றதே தவிர கஜானாவுக்கு வரவில்லை. இது போன்ற திருடுகளை தடுக்கும் ஆண்மை ஔவுரங்கசீப்புக்கு இல்லை’, என்று எழுதியுள்ளார் (ஔவுரங்கசீப்: உண்மையும் கட்டுக்கதையும்)
ஹிந்து விரோதம்
1679 ல் அதுவரை நடைமுறையில் இருந்த ஜாரோகா தரிசன முறையை ஔவுரங்கசீப் ரத்து செய்தார். அந்த தரிசன முறையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு ஹிந்துக்களுக்கு மொகலாய மன்னர்கள் தரிசனம் கொடுப்பது வழக்கம் . இது ஹிந்து சமய பழக்கம் எனக் கூறி அதை நிறுத்திவிட்டார். அவரது மதவெறிக்கு பாலின வேறுபாடும் தப்பவில்லை. முஸ்லிம் மகான்களின் கோவில்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என தடை விதித்தார்.
அவர் எதையெல்லாம் தடை செய்தார் என்று பார்த்தால் அவையெல்லாம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மொகலாயர்களின் ஆட்சியில் நடைமுறையில் இருந்ததை காணலாம்.
ஔவுரங்கசீப்புக்கு வக்காலத்து வாங்கும் ட்ருஷ்கே போன்றோர், 21 ஆம் நூற்றாண்டு நடைமுறைகளைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது என்கிறார்கள். அது சரியான விஷயம்தான். ஔவுரங்கசீப் தன் சொந்த குடும்பத்தின் பண்புகளின்படி, தந்தை ,பாட்டன், முப்பாட்டன் போன்றோர் பின்பற்றிய நன்னெறிகளின்படி, பார்த்தால் கூட குற்றவாளிதான்.
ஷாஜகான்
அவரது தந்தை ஷாஜகான் ஹோலி பண்டிகையை ஈத்- இ- குலாபி என்ற பெயரில் கொண்டாடினார். ஆப்-இ-பாஸி, மலர் தூவுதல் விழா கொண்டாடினார். ஷாஜகானின் அவையில் இருந்தவர்கள் பன்னீரை சொம்பில் எடுத்து பிறர் மீது தெளிப்பார்கள். அப்போது முரசுகளும் நகராக்களும் ஒலிக்கும் அந்த இசைக்கு ஏற்ப அவர்கள் பன்னீரை தெளிப்பார்கள். பிறகு அரசரின் நெற்றியில் வண்ணத் திலகம் இடுவார்கள். இதை திஜீப் -இ-அக்லாக் , நல்லிணக்கத்தின் நெறி என்பார்கள்.
நட்டாற்றில் நாட்காட்டி
ஔவுரங்கசீப் தன்னுடைய குறுகிய கண்ணோட்டத்திற்கு ஒத்து வராத எல்லாவற்றையும் ஒழித்து கட்டி விடுவார். 12 மாதங்களைக் கொண்ட பாரசீக நாட்காட்டி முறையை விடுத்து சந்திரனின் போக்கை அடிப்படையாகக் கொண்ட அரபிக் நாள்காட்டி முறைக்கு மாறினார். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று ஆலோசனை சொல்லப்பட்ட போதிலும் நாட்காட்டியை முறைமையை மாற்றினார். அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.
உண்மையும் பிம்பமும்
அவரைப் பற்றிய விளம்பரத்திற்கும் உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஔவுரங்கசீப்பின் ஆதரவாளர்கள், அவர் எளிய வழக்கங்களை கொண்டிருந்தார். குரானை பிரதி செய்து விற்பது, பிரார்த்தனைநேர குல்லாக்களை நெய்து விற்பது ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் வாழ்ந்தார், என்கிறார்கள். இது போன்ற முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.
ஔவுரங்கசீப் பேரரசன். அதற்கு தகுந்தாற்போல் வாழ்ந்தார். ஆடைகளை அணிந்து கொண்டார். அவருடன் காஷ்மீருக்கு பயணம் செய்த பர்னியர், ஔவுரங்கசீப் பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார். மஸ்லின் துணியில் தைத்த சட்டை. அது பட்டு மற்றும் தங்க சரிகையால் செய்யப்பட்ட வேலைபாடுகளுடன் இருந்தது. தங்க சரிகைகளால் ஜொலிக்கும் தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் பெரிய வைரங்கள் மதிக்கப்பட்டு ஒளி வீசி கொண்டிருந்தன. மார்பில் அணிந்திருந்த கோமேதக மாலை சூரிய ஒளியின் பிரகாசித்தது. கழுத்தில் போட்டிருந்த முத்துமாலை வயிறு வரை நீண்டிருந்தது .
அவரைப் பார்க்க வந்த பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் தங்கள் செல்வ செழிப்பை வெளிப்படுத்துவதாக கொடுக்கப்பட்டதாக இருந்தது. சில பரிசுகளை தனிப்பட்ட அல்லது அரசு பணியில் அவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப்பட்டன. மற்ற சில பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் மன்னரின் கருணையால் ஆதாயம் தேட கொடுக்கப்பட்டன, என்று எழுதியுள்ளார்.
அரியணையில் உட்கார்ந்திருந்தது துறவி அல்ல. அரசு வியாபாரம் எங்கும் இருக்கும் வழக்கம் போல் இங்கும் சிறப்பாக நடந்தது.
ஔவுரங்கசீப்பும் ஷியாகளும்
பாகிஸ்தானில் உள்ள ஔவுரங்கசீப்பின் பக்தர்கள் , இருபதாம் நூற்றாண்டின் நாயகராக கொண்டாடும் ஜின்னா ஒரு ஷியா என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
ஔவுரங்கசீப் ஷியாக்களை வெறுத்தார் . அவர்களை குல்- இ- பயாபானி (பிணம் தின்னும் பிசாசுகள்) , பட்டில் மஷாபான் (இறைநம்பிக்கை இல்லாதவர்கள்) என்று இழிந்துரைத்தார்.
பீஜப்பூர், கோல்கொண்டா மீது படையெடுத்த போது, அதை ஆட்சி செய்த சுல்தான்கள் ஷியாக்கள் என்பதால் அதை ‘புனித போர்’ (ஜிகாத்) என்று சொன்னார். ஔரங்கசீப்பின் ஷைக்-உல்- இஸ்லாம் (தலைமை மதகுரு)வாக இருந்தவர் அவருடைய குறுகிய மதவெறியை சகித்துக் கொள்ள முடியாமல் பதவியை விட்டு விலகினர்.
பாரசீகத்தைச் சேர்ந்த ஷியாக்களை ஔவுரங்கசீப் தன் படையில் சேர்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் நன்றாக போரிடக் கூடியவர்கள். படையில் சேர்ந்த பிறகு அவர்கள் சன்னி முறைப்படி தான் நமாஸ் (தொழுகை) செய்ய வேண்டுமென கட்டளையிட்டார்.
ஔரங்கசீப்பும் தாராவும்
மக்கள், தாராளமாத சிந்தனைகளை கொண்டவரும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தாராவை நேசித்தனர். குறுகிய மனமும் கடுமையாக நடந்து கொள்ளும் ஔரங்கசீப்பை அல்ல ஔவுரங்கசீப் அரியணையை வென்றார். ஆனால் மக்கள் மனங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போனார்.
தாரா தோற்கடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட போது மக்கள் என்ன செய்தனர் என்பதை பர்னியர் பதிவு செய்துள்ளார். மக்கள் கண்ணீர் விட்டனர். கதறி அழுதனர். வெட்டப்பட்டு தன் முன் வைக்கப்பட்ட தாராவின் தலையைப் பார்த்து ஔவுரங்கசீப் கூட தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து பரிதாபமாக கதறி அழுதார்.
தாரா யார் ?
ஷாஜகான் தனக்கு பிறகு தன் மூத்த மகன் தாரா சுக்கே அரியணை ஏற வேண்டுமென விரும்பினார். அவரை அரியணை வாரிசாக அறிவித்தார். தாரா வக்த் -அல்-உஜித், எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஹிந்து அறிஞர்கள் ஞானிகளுடன் அவர் உணர்வு பூர்வமாக இணைந்து இருந்தார்.
மத நல்லிணக்கம்
கோசைன் விட்டல்ராய் என்ற கோகுல (வைணவ- யாதவ) சமயத் தலைவருக்கு 1643 ல் நில மானியங்களை வழங்கினார். பஞ்சாப்பை சேர்ந்த பாபா லால் என்ற ஆன்மீக தலைவருடன் விரிவான கருத்து பரிமாற்றம் செய்தார் .அதை ஆவணப்படுத்தினர். சந்திப்பை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார்.
பாபா லாலுடன் நடந்த கருத்து பரிமாற்றத்தின் ஆழத்தையும் விரிவையும் இரண்டு எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஒரு பக்கிரியின் அரசாட்சி எது? என்று தாரா கேட்டார். தன்னை உணர்ந்து கொண்டு, எதை பற்றியும் கவலையற்று இருப்பது தான் என்று அந்த துறவி பதிலளித்தார்.
சமஸ்கிருதமும் பாரசீக மொழியும்
அறிவின் ஆதாரமாக சமஸ்கிருத மொழியை தாரா கருதினார். பான்வாலி தாஸ் என்ற சமஸ்கிருத அறிஞரை ஆதரித்தார். அந்த அறிஞர் பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிரபோத சந்திரோதயம் (ஞான நிலவொளி )என்ற சமஸ்கிருத நாடகத்தை பாரசீக மொழிக்கு பிரதிபெயர்த்தார். அது சூபியசத்தின் நூலாக அறியப்படுகிறது.
வேதாந்த நூல்களான அஷ்டவக்ர கீதை, ஆத்ம விலாசம், பகவத் கீதை ஆகியவற்றை பாரசீக மொழிபெயர்ப்பு செய்ய நிதி உதவி அளித்தார்.
1656 ல் குளிர் காலத்தில் காசியில் சமஸ்கிருத அறிஞர்களின் மாநாட்டை கூட்டினார். அதில் உபநிஷதங்களை பாரசீக மொழிக்கு மாற்ற வேண்டுமென கோரினார் . அதற்கு நிதி உதவி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவை பாரசீக மொழியில் வெளிவந்தன.
முன்னுரையில்
அதற்கு ஷிர்- ஐ -அக்பர் (மகத்தான ரகசியம்) என்று தலைப்பிட்டு ஒரு விரிவான முன்னுரையையும் தாரா எழுதினார். அதில், இஸ்லாமிய கருத்தான தவூஷித் – இறை ஒற்றுமை உபநிஷதங்களில் இருக்கிறது என்றும் அதனால் உபநிஷதங்களை புனித குரானின் விளக்க உரையாக கருதலாம் என்றும் எழுதியுள்ளார்.
ஞானத் தேடல்
தாரா பல்வேறு ஞானதளங்களில் இருந்து அறிவை சேகரித்தது மத பழமைவாதிகளுக்கு சவால் விடுவதாக இருந்தது. ஷா ஷார்மத் என்ற பாரசீக மொழி பேசும் ஆர்மீனிய அறிஞர் ஒருவர் இந்தியாவை தாய் நாடாக ஏற்று வாழ்ந்து வந்தார். எல்லா மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகள் என்று போதித்து வந்தார். தான் குரானை ஏற்று பின்பற்றுவதாகவும் அதே வேளையில் ஒரு ஹிந்து குரு சொல்வதையும் கிறிஸ்துவ பாதிரியார் கூறுவதையும் யூத ரபி (மத தலைவர் ) யின் மொழியையும் முஸ்லீமின் வார்த்தைகளையும் ஏற்பதாக ஷா ஷார்மத் கூறினார்.
தாரா அவரை தத்துவவாதியாகவும் தனது வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார். அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நல்வாய்ப்பாக அந்த கடிதம் மட்டும் தப்பி பிழைத்து ஆவணம் ஆகியுள்ளது. ஔவுரங்கசீப் அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டு 1661 இல் ஷா ஷார்மத் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். டில்லியில் அவர் உடல் புதைக்கப்பட்டது.
மதச்சார்பின்மை விளக்கம்
இஸ்லாமிய மதகுருவான ஷேக் முஹிபுல்லா (1587-1648) அலகாபாத்தில் இருந்தார். சக்கரவர்த்தி அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினார். தன் மகன் தாராவிடம் அதைச் சொல்லி அவரிடம் இருந்து பதில் வாங்கி வர அனுப்பினார். ஷேக் முஹிபுல்லா கொடுத்த பதில் 17ஆம் நூற்றாண்டில் மதசார்பின்மையை வரையறை செய்வதாக இருந்தது.
‘…… மக்கள் (இறை) நம்பிக்கை உள்ளவர்களோ அல்லாதவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களது நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதே ஆட்சியாளர்களின் , நிர்வாக அதிகாரிகளின் கடமை. எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும். அப்படி செயல்படுவதுதான் நீதி. இறைத்தூதர் முஹம்மது நபி நல்லவர்கள் மீதும் தீமை செய்தவர்கள் மீதும் கருணை காட்டினார். நம்பிக்கை கொண்டோரிடமும் நம்பிக்கை அற்றவர்களிடமும் தயையோடு இருந்தார்.’ ( நூல் – இந்திய முஸ்லிம்கள் , மக்துபாத் -ஐ-ஷா முஹிபுல்லா இலஹாபாதி – மேற்கோள். ஆஸாத் நூலகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்)
கேள்வி இதுதான் : ராஜ விசுவாசத்தை வலியுறுத்திய 17 ஆம் நூற்றாண்டு மன்னராட்சி முறைமைகளை, முடிவுகளை 21 ஆம் நூற்றாண்டில் சம உரிமை கொண்ட, ஜனநாயக நாட்டின் வாரிசுகள் ஏன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ?
ஔவுரங்கசீப்பின் வாழ்க்கை சொர்க்கத்துக்கு செல்லும் தூய மனிதரின் வாழ்க்கையாக இல்லை. மாறாக தோல்வியுற்று, குழப்பத்தில், வெறுப்பில் வாழ்ந்து ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட மனிதரின் வாழ்க்கை. இதை விரைவில் வெளிவர இருக்கும் எனது முகலாயர் காலத்தில் வானவியல் என்ற நூலில் விரிவாக எழுதி உள்ளேன்.