Home Blog Page 74

82 வயதில் சபரிமலைக்கு நடந்து சென்ற இடதுசாரி முதலமைச்சர்!

V S Achuthanandan - 2026

82 வயதில் சபரிமலைக்கு நடந்து சென்ற ஒரு இடதுசாரி முதலமைச்சர் அச்சுதானந்தன்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன் (20 அக்டோபர் 1923 – 21 ஜூலை 2025), தோழர்களால் பாசத்துடன் VS என்றும் அழைக்கப்படுபவர். இவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்தார். 82 வயதில், அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஒரு மாநில முதல்வராகப் பதவி வகித்தவர்களில் மிக வயதானவர். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) இணைந்திருந்தார். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாக சீர்திருத்தங்களின் தலைவராக மாநில அமைச்சரவை அந்தஸ்துடன் பணியாற்றினார். அவர் 15 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார், இது கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

          அச்சுதானந்தன் 1985 முதல் ஜூலை 2009 வரை சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார், பின்னர் அவரது சித்தாந்த மனப்பான்மை காரணமாக கட்சியின் மத்திய குழுவிற்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.

          முதலமைச்சராக அச்சுதானந்தன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பல ஏக்கர் நிலத்தை திரும்பப் பெறுவதற்காக மூணாரில் எடுத்த இடிப்பு நடவடிக்கை;  கொச்சியில் நீண்ட காலமாக இழந்த சாலையின் பகுதிகளை மீட்டெடுக்கும் எம்.ஜி. சாலை இடிப்பு நடவடிக்கை; திரைப்பட திருட்டுக்கு எதிரான திருட்டு எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் மாநிலத்தில் லாட்டரி மாஃபியாவுக்கு எதிரான அவரது போராட்டம் ஆகியவை அடங்கும். ஊழல் குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளையை தண்டிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மாநிலத்தில் இலவச மென்பொருளை ஊக்குவிப்பதிலும், குறிப்பாக மாநிலத்தின் பொதுக் கல்வி முறையில் இலவச மென்பொருளை ஏற்றுக்கொள்வதிலும் அச்சுதானந்தன் முன்னிலை வகித்தார்.

2016 எண்டோசல்பான் திருவனந்தபுரம் போராட்டம்

          கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் மாநில அரசு நிறுவனத்திற்குச் சொந்தமான முந்திரித் தோட்டங்களில், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வான்வழியாக ஒரு பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு வந்தது. எண்டோசல்பான் என்ற அந்த மருந்தால் பூச்சிகள் எந்த அளவுக்கு அழிந்தன என்று தெரியவில்லை, ஆனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்நிலை வெகுவாகச் சீர்குலைந்தது. காற்றிலும் மண்ணிலும் நீரிலும் கலந்த அந்த மருந்து மனிதர்களின் உடலில் ஊடுருவி, குழந்தைகள் ஊனத்துடன் பிறந்தார்கள், பெண்கள் புற்று நோயால் தாக்கப்பட்டார்கள், ஆண்களின் விந்தணு பலவீனமடைந்தது, வன விலங்குகள் மடிந்தன.

          என்டோசல்பான் தெளிப்பை நிறுத்தவும், இழப்பீடுகள் வழங்கவும் கோரி மக்கள் 2016 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பாகப் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். பல அமைப்புகளின் தலைவர்கள் அங்கே வந்து, போராட்டத்திற்குத் தங்களது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துச் சென்றார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. 93 வயது வி.எஸ். அச்சுதானந்தன் அங்கே வந்தார். தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு யாரும் எதிர்பாராத வகையில் அவர்களில் ஒருவராக உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்தபடி முதலமைச்சருடன் கைப்பேசியில் தொடர்புகொண்டவர், “போராட்டக் களத்திலிருந்து பேசுகிறேன். அவர்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபகரகமாக இருக்கிறது. இதில் நீங்கள் தலையிடுகிற வரையில் நான் இங்கேயேதான் உட்கார்ந்திருப்பேன்,” என்று கூறினார்.

          அப்போதுதான் முதலமைச்சர் உமன் சாண்டி, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தோ, மூத்த தலைவரின் இந்த நேரடிப் பங்கேற்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எண்ணியோ உடனே தலையிட்டார். அதிகாரிகள் குழு பேச்சு நடத்தியது. ஏற்கத்தக்க முடிவுகள் எட்டப்பட்டன. விஎஸ் என்றுமே மக்களோடு நிற்பவர், குரலற்றோரின் குரலாக ஒலிப்பவர் என்ற செய்தி மறுபடியும் உறுதிப்பட்டது. இந்தப் போராட்டப் பண்பு சிறுவயதிலிருந்தே அவரோடு வளர்ந்தது.

போர்க்குணம்

          திருவிதாங்கூர் மன்னராட்சிப் பகுதியாக இருந்த ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்புரா வட்டார பரவூர் கிராமத்தில் 1923 அக்டோபர் 20 அன்று வெலிக்கக்காத்து சங்கரன்–அக்கம்மா இணையரின் மகனாக இவர் பிறந்தார் அச்சுதானந்தன். நான்காம் வயதில் தாயையும் பதினோராவது வயதில் தந்தையையும் இழந்தவர், 7ஆம் வகுப்போடு பள்ளிக் கல்வியையும், குழந்தைப் பருவக் கும்மாளங்களையும் இழந்தார். தந்தை விட்டுச்சென்ற தையல்கடையில் தன் அண்ணனோடு சேர்ந்து வேலை செய்தார்.

          பள்ளிக்குச் சென்ற நாட்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த உயர்சாதி என்று கூறிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்த பையன்கள் அச்சுதானந்தனின் சமூக அடையாளத்தைச் சொல்லி அவமானப்படுத்தினார்கள். ஆவேசமடைந்த அவர் அவர்களைக் கடுமையாகத் திட்டிவிட்டு வீடு திரும்பினார். தந்தை இதற்காகத் தன்னைக் கடிந்துகொள்வார் என்று இவர் எதிர்பார்த்தார். மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டபோது தந்தை இரும்புத் தகடுகள் இணைக்கப்பட்ட இடுப்புப் பட்டையை மாட்டிவிட்டார். தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கூறினார். அச்சனின் இந்த அணுகுமுறை அச்சுவின் போர்க்குணத்திற்குக் கூர் தீட்டியது.

          தையல் கடைக்கு வரும் கயிறாலைத் தொழிலாளர்களும் விவசாயப் பாட்டாளிகளும் தங்களுடைய உழைப்பு உறிஞ்சப்படுவது பற்றிப் பேசிக்கொள்வார்கள். விடுதலைப் போராளிகளின் சந்திப்பிடமாகவும் இருந்த அந்தக் கடை சகோதரர்களுக்கு அரசியல் வகுப்பறையாக அமைந்தது. ஒரு கயிறாலையில் தொழிலாளியாகச் சேர்ந்தார் வி.எஸ். சில அடிப்படைப் புரிதல்கள் ஏற்பட்டவராக, நெல்வயல்கள் பரவியிருந்த குட்டநாடு வட்டாரத்தில் விவசாயத் தொழிலாளர்கள், கயிறுத் தொழிலாளர்களின் போராட்டங்களில் ஆதரவாளராகப் பங்கேற்றார். பின்னர் அவர்களை அணி திரட்டக்கூடியவராக உருவெடுத்தார். 15 வயதில், கயிறு நிறுவனங்களின் சுரண்டல்களுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர், அரசியல் விழிப்போடு 1938இல் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

          இரண்டே ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருடைய முனைப்புமிகு செயல்பாடுகள், மூன்றாவது ஆண்டிலேயே கோழிக்கோடு நகரில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநிலக் குழு மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியாக அவரை அனுப்பிவைத்தன. மாநாடு முடிந்தபின் அவரை அழைத்துப் பேசிய முன்னணித் தலைவர் வி. கிருஷ்ணப்பிள்ளை, “கயிறு தொழிற்சாலை வேலை போதும் சகா, இளம் புரட்சிக்காரருக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறதே,” என்றார். அதை ஏற்ற அச்சுதானந்தன், முழுநேர கம்யூனிஸ்ட் தோழராக மாறினார்.

          திருவிதாங்கூர் அரசாட்சிப் பகுதியின் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மா என்றாலும், அவரால் நியமிக்கப்பட்ட திவான் ராமசாமி ஐயர் முடிவுகள் எடுப்பதில் செல்வாக்கு செலுத்தினார். திருவிதாங்கூரை அமெரிக்கா போல மாற்றப்போவதாக அறிவித்து தொழிற்சாலைகளை நிறுவுவது, நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்குவது என்று சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே, விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாடுகளை இறுக்கமாக்கினார். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிற்சங்கங்களையும் ஆபத்தானவை என்று அறிவித்து அடக்குமுறைகளை ஏவிவிட்டார்.

          விடுதலைக்குப் பிறகு இந்தியாவோடு இணையாமல் திருவிதாங்கூரைத் தனிநாடாக ஆள்கிற நோக்கத்துடன்தான் சுதந்திர அமெரிக்கா போல மாற்றுவது பற்றி, மன்னரின் முழு ஒப்புதலுடன் பேசி வந்தார். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சுரண்டல் கொடுமைகளிலிருந்து விடுவிப்பதோடு, மன்னராட்சியிலிருந்து திருவிதாங்கூருக்கு விடுதலை பெறுவதாகவும் பரிணமித்தது. போராளிகளுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்தார்கள். அதிலெல்லாம் வி.எஸ். தலையாய பங்கு வகித்தார்.

காவல்நிலைய சித்திரவதை

          1946இல் ஒடுக்குமுறைகளின் உச்சமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டார்கள். போராளிகள் திருப்பித் தாக்கியதில் 10 காவலர்களும் கொல்லப்பட்டார்கள். கைது வேட்டை கடுமையாக்கப்பட்டது. போராட்டத்திற்கு வழிகாட்டும் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டுமென்ற கட்சிக் கட்டளைப்படி வேறு பகுதிக்குச் சென்று ஒரு தோழரின் வீட்டில் தங்கியிருந்த வி.எஸ்., கொடுமைகள் அளவின்றித் தொடர்வதைக் கேள்விப்பட்டவராகப் போராட்டக் களத்திற்குத் திரும்பி வந்தார்.

          1946 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர், காவல்நிலையத்தில் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டார். குண்டாந்தடிகளால் அடிக்கப்பட்டு, துப்பாக்கி முனைகளால் குத்தப்பட்டவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த காவல் அதிகாரிகள், சில்லறைத் திருட்டுகளில் ஈடுபட்டதற்காகக் காவல் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஒருவரிடம் அவருடைய “உடலை” ஒப்படைத்து, காட்டுக்குள் வீசச்சொல்லி, சில காவலர்களோடு ஜீப்பில் ஏற்றி அனுப்பினர்.

          வண்டி போய்க்கொண்டிருந்தபோது உடல் அசைவதைக் கவனித்த அந்தக் கைதி, உடனே பக்கத்து மருத்துவனைக்குப் போகுமாறு கூச்சல் போட்டுக் கட்டாயப்படுத்தினார். மருத்துவனையில் சேர்க்கப்பட்டுத் தன் உடல்நிலையோடும் போராடிய வி.எஸ். குணமடைந்த பின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா சுதந்திர நாடான பிறகு, 1948 பிப்ரவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். தடிகளும் துப்பாக்கிக் கத்திகளும் தாக்கியதில் பாதிக்கப்பட்ட கால்களால் நடந்துதான் மறுபடியும் மாநிலம் முழுவதும் இயக்கப் பணிகளுக்காகவும் மக்கள் போராட்டங்களுக்காகவும் சுற்றத் தொடங்கினார். பிற்காலத்தில் வி.எஸ். “என் மீட்பராக வந்தவரைப் பார்க்க முடியாமலே போய்விட்டது,” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

சிறைவாசம்

          மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றதற்காக அந்த 16 மாதங்கள் உட்பட மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் சிறைகளில் அடைக்கப்பட்டவர்ல அவர். நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையில் இயக்கப் பணியை மேற்கொண்டவர். புன்னப்புரா–வயலார் போராட்டத்திற்கான சிறைவாசத்திற்குப் பிறகு, 1963இல், மறுபடியும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறை அவர் மீது, கைது செய்யப்பட்ட இதர பல மார்க்சிஸ்ட்டுகளைப் போலவே, அன்றைய காங்கிரஸ் அரசு சுமத்திய குற்றச்சாட்டு –“சீன உளவாளி”! பின்னர் 1975இல் அவசரநிலை ஆட்சிக் காலத்தில், ஜனநாய உரிமைகளை மீட்கப் போராடியதற்காக 20 மாதங்கள் சிறைவாசம்.

கட்சிக்குள் கொள்கைக் போராட்டம்

          இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த கொள்கைப் போராட்டமும் பெருமைக்குரியது. அதன் முடிவில், 1964இல் அதன் தேசியக் குழுவிலிருந்து 32 பேர் வெளியேறினார்கள். அவர்களின் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது. அப்போது முதல் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டவர், 1980 முதல் 1992 வரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை நிறைவேற்றினார். 1985இல் அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக மத்தியக் குழு கூட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2022இல் மத்தியக் குழுவிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

          எந்தப் பொறுப்பில் இருந்தாலும இல்லாவிட்டாலும் ஒரு கம்யூனிஸ்ட் என்ற பொறுப்புணர்வோடு போராட்டக் களங்களில் மக்களோடு இணைந்திருந்தார். அவரை மக்கள் “கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ” என்று குறிப்பிட்டதில் வியப்பில்லை.. மாநில சட்டமன்றத்திலும் தங்களுக்காகப் போராடுவார் என்று உறுதியாக அறிந்திருந்த மக்கள் அவரை 1967, 1970, 1991, 2001, 2006, 2211, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் மூலம் பேரவைக்கு அனுப்பினர். 1991–1996, 2001–2006, 2011–2016 ஆகிய கட்டங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, மிக அதிக காலம், 15 ஆண்டுகள், அந்தப் பொறுப்பில் செயல்பட்டவரானார். 2006 முதல் 2011 வரையில் முதலமைச்சராகவும் மக்கள் பணியாற்றினார். கேரளத்தில் 82 வயதில் முதலமைச்சரான மிக மூத்தவர் அவர்தான். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக, அமைச்சர் நிலைக்கு நிகரான பொறுப்பில் பங்களித்தார்.

எதையும் துவாக எடுத்துக் கூறத் தயங்காதவர்

          சமத்துவ லட்சியம், சமூக நீதிக் கொள்கை, உழைப்பாளர் உரிமைகள் இவற்றை நெஞ்சில் தாங்கிய அவருக்கு நேர்மையும் துணிவும் உடன்பிறப்புகளாக இருந்தன. முதலமைச்சராக இருந்தபோது அவர் மேற்கொண்ட “ஆபரேஷன் மூணாறு” நடவடிக்கை அந்த நேர்மைக்கும் துணிவுக்குமான சாட்சிகளில் ஒன்று. இயற்கையெழிலும், சுற்றுச் சூழல் முக்கியத்துவமும் வாய்ந்த வட்டாரம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களின் பசுமையுமுள்ள அந்த மலைப்பகுதியில் பல தனியார்கள் ஆக்கிரமித்துத் தங்கும் விடுதிகளையும் தங்களுடைய தோட்டங்களையும் அமைத்திருந்தனர். டாட்டா குழுமம் உள்ளிட்ட அரசியல் செல்வாக்கு மிக்க பெருநிறுவனங்கள், சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், நில மோசடிப் பேர்வழிகளால் மக்கள் அணுக முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் வாழ்ந்துவந்தோரின் நில உரிமை போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பறிக்கப்பட்டிருந்தது.

          அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்த விஎஸ், பதவிக்கு வந்த ஒரே ஆண்டில், 2007இல் ஆபரேஷன் மூணாறு நடவடிக்கைக்கான சிறப்புப் படையை அமைத்தார். ஊடகவியலாளர்களால் “வி.எஸ்.சின் பூனைகள்” என்று குறிப்பிடப்பட்ட சிறப்புப் படையினர் குறுக்கீடுகள் பற்றிய அச்சமின்றிக் கறாரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.. ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீட்கப்பட்டன. நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு தில்லி உட்படப் பல மட்டங்களிலிருந்து வற்புறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையாக்கின. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், சொந்தக் கட்சியிலேயே கூட சிலர் அதை எதிப்பதைக் கண்டார் அவர். எதைக் கண்டும் அவர் பின்வாங்கவில்லை. ஒரே மாதத்தில் 11,350 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்த விடுதிகளும் பிற கட்டடங்களும் இடிக்கப்பட்டன. இன்று பல மாநில அரசுகளால் ஏழை எளிய மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதைப்போல அல்ல; அதிகாரத் தொடர்பும் பணபலமும் கொண்டவர்களின் நில வளைப்பைத் தகர்த்த புல்டோசர்கள் அவை.

சபரிமலைப் பயணம்

          முதலமைச்சராக அவர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையும் பெரிய பேசுபொருளானது. 2007இல் அவர் சபரிமலைப் பயணம் மேற்கொண்டார். உறுதிமிக்க ஒரு கம்யூனிஸ்ட் இப்படிப் புனித யாத்திரை போவதா என்று ஒரு பகுதியினர் விமர்சித்தனர். ஆனால், லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிற மலை தொடர்பாகக் கூறப்பட்ட சில பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்காகவே அவர் சென்றார். சபரி மலையில் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் கால்நடையாகவே செல்ல முடியும். அத்துடன், 84வயதில் அப்படி அங்கே சென்றதில், அவருடைய உடல் நிலை சார்ந்த கவலைகளையும் மருத்துவர்கள் உட்படப் பலர் வெளிப்படுத்தினார்கள். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதைத் தவற விடாதவரான அவர், அந்தக் கவலைகளையும் தேவையற்றவை என்று மெய்ப்பித்துக் காட்டினார். கொள்கை உறுதியில் மட்டுமல்லாமல் உடல் உறுதியிலும் இளைய தலைமுறைகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அவர்.

          ஆனால் கம்யூனிஸ்ட் கொள்கைகளின்படி அவர் ஒரு கடவுள் மறுப்பாளர். அவருடைய “நம்பிக்கை” பற்றிய இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. முதலமைச்சர் அச்சுதானந்தனிடம் பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக இப்படிக்க் கேட்டார்கள்: “உங்களுக்கு எந்த சாமியை ரொம்பப் பிடிக்கும்?“ அவர்களை அணைத்துக்கொண்டு அவர் இப்படிச் சொன்னார்: “நம் அனைவரையும் போல என்னையும் சாமிக் கதைகள் ஈர்க்கின்றன. ஆனால் மற்ற எல்லாரையும் போலவே நானும் அந்த சாமிகள் இருக்கிறார்களா, இருக்கிறார்கள் என்றால் எந்தக் கோளில் இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்.”

கருத்தில் உறுதியானவர்

          தன் மனதில் தோன்றும் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினார் வி.எஸ். சில நேரங்களில் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியே கூறிவிடுவார். அதற்காக, உட்கட்சி நடவடிக்கைகளையும் எதிர்கொண்டார். அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு செய்தியாளர் அவரிடம், “கட்சித் தலைமை இப்படி அடிக்கடி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது, பிறகு ஏன் கட்சியில் தொடர்கிறீர்கள்,” என்று கேட்டார். அதற்கு வி.எஸ். “எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அதேவேளையில் கட்சிக்காகத்தானே நான் பல ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

          அவரது மனைவியார் வசுமதி ஒரு செவிலியர். அவசரநிலை ஆட்சிக்காலத்தில், அவர் மருத்துவனையில் இரவுப் பணியில் இருந்த நேரத்தில்தான், வீட்டில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது காவல்துறையினர் உள்ளே வந்து அச்சுதானந்தனைக் கைது செய்து கொண்டு போனார்கள். அதன் பின் 20 மாதங்கள் கழித்து சிறைமீண்டு வந்தபோதுதான் இவர்களால் அவரைப் பார்க்க முடிந்தது. அப்போதும் சரி, மக்கள் பிரச்சினைகளுக்காக வி.எஸ். வெளியே போராடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி, அவருடைய எளிமையான வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்டவராகக் குடும்பத்தைக் கவனிக்கும் போராட்டத்தை இணக்கத்தோடு வெற்றிகரமாக நடத்திவந்திருக்கிறார். இன்றும் அதையெல்லாம் உணர்வுப்பூர்மாக நினைவுகூர்கிறார். அந்த அனுபவங்களைக் கட்சி உறுப்பினரான மகன் அருண்குமார், அறிவியலாளரான மகள் ஆஷா ஆகியோரும் பெருமையோடு பகிர்கிறார்கள்.

          பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் உன்னதத்திற்கும், போராட்டத் தழும்புகளின் பெருமிதத்திற்கும் எடுத்துக்காட்டாக என்றென்றும் நினைவு கூரத்தக்கவர் திரு வி.எஸ். அச்சுதானந்தன்.

அரசியல் லாபம் கருதி கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா?

kadeswara subramaniam hindu munnani - 2026

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா? என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தான் ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு கோயில் நிலத்தை சொந்தமாக்கி அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

ஏற்கனவே சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் வக்ஃபு வாரியச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போது தமிழகத்தில் பல கோயில்களும் கோயில் நிலங்களும் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என சொல்லி ஆக்கிரமிக்க முயலும் சிறுபான்மையினருக்கு இது ஆதரவாக அமையாதா?

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அந்த நிலத்தையும் கொடுத்து அதில் வீடும் கட்டித் தரப்படும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், வக்ஃபு நிலங்களிலும், கிறிஸ்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான நிலங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம் என்று சொல்ல முடியுமா!

கோயில் நிலங்களை எடுக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு அரசும் நிரந்தரமல்ல. நேற்று இருந்த அரசு இன்று இல்லை. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே.

கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே திரு. எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் துவங்கிய காலம் முதல் கோயிலுக்கோ, கோயில் நிலங்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் அதை தடுப்பதை தலையாய பணியாக செய்து வருகிறது.

எனவே உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி, தன் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

ஆடி அமாவாசை: திருவேடகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

thiruvedagam traffic jam in adi amavasai - 2026

திருவேடகத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல்; 3 கிலோமீட் டர் தொலைவுக்கு வரிசையில் நின்ற வாகனங்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் போக்குவரத்தையும் சீர் செய்ய முடியாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பாக திருவேடகத்திலிருந்து மேலக்கால் வைகை புதுக்காலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆட்டோக்கள் கார்கள் இருசக்கர வாகனங்கள் என வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது

போதுமான காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது பொதுவாக விழா காலங்களில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு காவலர்களை அனுப்பி போக்குவரத்தை சரி செய்யும் காவல்துறையினர் ஏனோ இந்த முறை கவன குறைவாக இருந்ததன் விளைவாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற பிரச்சனைகள் நடக்காதவாறு காவல்துறையினர் முன்கூட்டியே முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: கோலாகலம்

1000846305 - 2026

சதுசதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா இன்று வியாழக்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இங்கு ஆடி அமாவாசை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதி மட்டுமல்லாமல் அடிவாரப் பகுதியில் உள்ள தோப்புகளில் முகாமிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா கடந்த ஜூலை 22 ந்தேதி பிரதோஷ வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிவராத்திரி வழிபாடும் அதனைத் தொடர்ந்து வன பூஜைகளும் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் வந்து குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் காலை 6 மணிக்கு திறக்க வேண்டிய நுழைவாயில், அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைக்கு கொண்டு செல்லாமல் இருக்க ஒவ்வொரு பக்தர்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் மாங்கேனி ஊற்று, பச்சரிசி பாறை, அத்தியூத்து, படிவெட்டிப்பாறை ஆகிய இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அந்த இடங்களை கடந்து சென்றனர்.

1000846304 - 2026

மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூற்று ஆகிய பகுதிகளில் தோப்புகளிலும் வயல்களிலும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி ஆடு, கோழி பலியிட்டும் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மலையேறிச் செல்லும் பக்தர்கள் பகல்
12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு வந்த பக்தர்கள் வனத்துறையினருடன் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தும் அதிகாரிகளுடன் முறையிட்டும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மலையேறி சென்றனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமி சுந்தரமூர்த்தி சுவாமி பலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடும் அதன் பின்னர் பக்தர்கள் முன்னிலையில் நண்பகல் அபிஷேக வழிபாடும் அதனைத் தொடர்ந்து மாலையில் அமாவாசை வழிபாடும் நடந்தது நள்ளிரவுக்கு பின் சுவாமிகள் மூவரும் ராஜ அலங்காரத்திலும் கருப்பசாமி வேட்டை அலங்காரத்திலும் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இரவு அமாவாசை பூஜைகளை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்மலையில் ஆங்காங்கு முகாமிட்டிருந்தனர். ஆனால் வனத்துறையினரும் காவல்துறையினரும் அவர்களை இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக அடிவாரம் செல்ல திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் பக்தர்கள் அமாவாசை பூஜைகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மலை அடிவாரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

மதுரை ஆதீனத்தின் முன்ஜாமின் மனுவை ரத்து செய்ய, தாக்கல் செய்த மனுவை அரசு திரும்பப்பெற வேண்டும்!

madurai adheenam - 2026

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய, தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி கோரியுள்ளது. அதேபோல், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

hindumunnani
hindumunnani

மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய, தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது….

சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற பொழுது மதுரை ஆதீனம் அவர்களின் காரை மோத வந்தது விஷயமாக மதுரை ஆதீனம் அவர்களை கொல்ல முயற்சி செய்ததாக பத்திரிக்கையில் செய்தியாகக் கூறியிருந்தார்..

அவர் பத்திரிக்கைக்கு பேட்டியளித்ததை அடிப்படையாக வைத்து அவர் மீது மத மோதலை உருவாக்குவதாக பொய் வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

இந்த வழக்கை எதிர்த்து மதுரை ஆதீனம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்ததில், மதுரை ஆதீனம் அவர்களுக்கு முன் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த மதுரை ஆதீனம் அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கொடுக்காமல் மருத்துவ ஓய்வில் இருப்பவரை விசாரணை என்ற பெயரில் காவல் துறை துன்புறுத்தியது.

தற்போது மதுரை ஆதீனம் அவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி முன்ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரை ஆதீனம் அவர்களிடம் விசாரணை செய்யச்சென்ற காவல்துறை, சுவாமிகளுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்து அவருக்கு மற்றொரு தேதியில் விசாரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும்.

உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை வேண்டுமென்றே , திட்டமிட்டே துன்புறுத்தியது மட்டுமில்லாமல், அவரது முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய மனு செய்திருப்பது என்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேலும் பறிகொடுத்த பொருட்களை மீட்கப்படாத திருட்டு வழக்கு, kகுற்ற ஒப்புதல் வாங்க வேண்டிய வழக்குகள், உடன் குற்றவாளிகளை கைது செய்ய தேவைப்படும் வழக்குகள், மிகவும் அத்தியாவசியமாக புலனாய்வு செய்ய வேண்டிய மிக முக்கியமான வழக்குகளில் மட்டுமே முன் ஜாமின் மனுவை காவல்துறை ரத்து செய்ய மனு செய்யும்.

ஆனால் மதுரை ஆதீனம் அவர்களின் மீது பதிவு செய்யப்பட்ட மிகச்சாதாரண வழக்கில் வயதான மற்றும் மருத்துவ ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய மனு செய்திருக்கிறது தமிழுக அரசு.

அதே நேரத்தில் மதுரை ஆதீனம் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு விஷயமாக, காவல்துறை இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யவில்லை

இந்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை தமிழக அரசு வேண்டுமென்றே துன்புறுத்துகிறது. இதேபோன்று சிரவைஆதீனம் அவர்களை, முருக பக்தர்கள் மாநாட்டில் பேசினார் என்பதற்காகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது தமிழக அரசு.

இதுபோன்று திட்டமிட்டே இந்து மதத்தின் மடாதிபதிகள், ஆதீனங்கள் ஆகியோர்களை துன்புறுத்தும் செயலை கைவிட வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் அவர்களின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்ய தாக்கல் செய்திருக்கும் மனுவை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

சபரிமலையில் தனிநபர் வழங்கும் விக்ரஹத்தை ஏற்கத் தடை!

sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை கோயிலில் தனி நபர் வழங்கும் ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய தனி நபர் வழங்கி உள்ளார். தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

சிலை பிரதிஷ்டை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. தனி நபர் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்யும் அனுமதிக்கு 2 வாரம் தடை விதித்தது நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா அமர்வு உத்தரவிட்டது.


சபரிமலையில் தற்காலிக பணியாளர் வாய்ப்பு!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் தற்காலிக ஊழியர்களாகும் வாய்ப்பு; 1800 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய பட உள்ளதாக திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

1201 ஆம் ஆண்டு (2025-26) மண்டல-மகரவிளக்கு மஹோத்சவத்தையொட்டி, சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் தேவஸ்தானங்களில் தற்காலிக ஊழியர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். 18 முதல் 65 வயதுக்குட்பட்ட இந்து ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு ரூ. 650 தினசரி ஊதியம், தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும். விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ் மற்றும் சுகாதார அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் www.travancoredevaswomboard.org என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 16, 2025 அன்று மாலை 5 மணிக்கு முன் தலைமைப் பொறியாளர், திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம் என்ற முகவரியிலோ அல்லது tdbsabdw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பெறும் படி இருக்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது

ஆடி அமாவாசை; பித்ரு தர்ப்பணம் மந்திரங்கள்! செய்முறை!

amavasai pitru tharpanam - 2026

நாளை 24-07-2025 வியாழக்கிழமை கர்கடக மாஸ அமாவாஸ்யா (ஆடி அமாவாசை) புண்யகால தர்ப்பணம்.

ஆசமனம் :-

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

அங்க வந்தனம் :-

1) கேசவா,
2) நாராயணா,
3) மாதவ,
4) கோவிந்த,
5) விஷ்ணு,
6) மதுஸுதன,
7) திரிவிக்ரம,
8) வாமன,
9) ஸ்ரீதரா,
10)ரிஷிகேஷ,
11) பத்மநாப,
12) தாமோதரா.
***

(3 பில் பவித்ரம் கையில் போட்டு கொள்ளவும். 3 கட்டை பில் காலின் கீழ் போடவும். 3 கட்டை பில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்).
***

கணபதி த்யானம் :-

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.

ப்ராணாயாமம் :

ஒம் பூ: ஒம் புவ: ஒகும் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப: ஒகும் ஸத்யம் ஒம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத். ஒம் ஆப: ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ரம்மா பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த்த துரிதஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் – ததேவ லக்னம் ஸுதினம் ததேவ – தாராபலம் சந்த்ர பலம் ததேவ – வித்யாபலம் தைவபலம் ததேவா – லக்ஷ்மிபதே அங்க்ரியுகம் ஸ்மராமி.

அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்தர: சுசி:

மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஸய:
ஸ்ரீ ராம ராம ராம

திதிர் விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்.

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த

அத்ய ஸ்ரீ பகவத: மஹபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிகும் சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸவே ஸகாப்தே

அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே

விஷ்வாவஸு நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே கிருஷ்ண பக்ஷே ஆமாவாஸ்யாம் புண்யதிதௌ வாஸர: குரு வாஸர: யுக்தாயாம் புனர்வஸு நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு நக்ஷத்ர விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவங்குண ஸகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ.

(பூணல் இடமாக போட்டுக் கொள்ளவும்)

பித்ரு வர்க்கம் (அப்பாவழி) :
———– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) —————– சர்மணாம் (அப்பா, அப்பாவின் அப்பா (தாத்தா), அப்பாவின் தாத்தா (கொள்ளு தாத்தா) பெயர் சொல்லி கொள்ளவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹா, ப்ரபிதாமஹானாம்.
———– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) ————– நாம்னீநாம் (அம்மா, அப்பாவின் அம்மா (பாட்டி), அப்பாவின் பாட்டி (கொள்ளு பாட்டி) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் (அம்மா ஜீவித் இருந்தால் “பிதாமஹீ, பிதுபிதாமஹீ, பிதுப்ரபிதாமஹீனாம் ”என்று சொல்லவும்).

மாத்ரு வர்க்கம் : (அம்மாவின் அப்பா ஜீவித் இருந்தால் தர்ப்பணம் கிடையாது).
—————– கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) —————– சர்மணாம் (அம்மாவின் அப்பா, அம்மாவின் அப்பாவின் அப்பா (தாத்தா), அம்மாவின் அப்பாவின் தாத்தா (கொள்ளு தாத்தா) பெயர் சொல்லி கொள்ளவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹ, மாது பிதாமஹா, மாது ப்ரபிதாமஹானாம்.

————— கோத்ராணாம் (கோத்ரம் சொல்லி கொள்ளவும்) ————– நாம்னீநாம் (அம்மாவின் அம்மா (பாட்டி), அம்மாவின் அப்பாவின் அம்மா (கொள்ளுப் பாட்டி), அம்மாவின் அப்பாவின் பாட்டி (எள்ளு பாட்டி) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹீ, மாது பிதாமஹீ, மாது ப்ரபிதாமஹீனாம். உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அத்யதின அமாவாஸ்யா புண்யகாலே மம வர்க்கத்வய பிதரம் உத்திச்ய அமாவாஸ்யா ஸ்ரார்த்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே. ததங்கம் தில தர்ப்பணச அத்ய கரிஷ்யே.

(பூணல் வலமாக போட்டு கொண்டு கையில் இருக்கும் கட்டை பில்லை வடக்கு பார்த்து போடவும். கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும்)

பூணல் இடமாக போட்டு கொள்ளவும் …..

(3 பில் தர்ப்பை இரண்டு பாகமாக தட்டில் நிற்க்க வைக்கவும். 5 பில் கூர்ச்சம் தெற்கு நுனியாக வைக்கவும்.

எள்ளை எடுத்து கொள்ளவும் –
ஆவாஹனம் :-

யஜூர்வேதம்

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.

ரிக்வேதம்.

உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.

அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.

ஸாமவேதம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சந: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன் உசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.

அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் த்யாயாமி/ஆவாஹயாமி.

ஆஸனம் :

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ஊர்ணாம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா: அனுகைஸ் ஸஹ அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூனாம் இதமாஸனம். (3 கட்டை பில் தர்ப்பை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்).

திலாதி ஸகல ஆராதனை ஸுவர்ச்சிதம். (எள்ளை எடுத்து கொண்டு கூர்ச்சத்தின் மேல் போடவும்.

பித்ரு வர்க்கம் (அப்பா வழி) :-

உதீரதாம் அவரே உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ: அஸும் ய ஈவு: அவ்ருகா ருதஜ்ஞாஸ் தேநோ வந்து பிதரோ ஹவேஷு.

———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அங்கிரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ
யஜ்ஞியானா அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம.
———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஆயந்து ந: பிதர: ஸோம்யாஸ: அக்னீஷ் வார்த்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்து அஸ்மான்.

———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்.

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷன் பிதர:.

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

யே சேஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்மா அக்னே தான் வேத்த யதிதே
ஜாதவேதஸே தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்த்தீ

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மதுவாதா ருதாயதே மது க்ஷரந்த்தீ ஸிந்தவ: மாத்வீர் நஷ்சந்தீ ஓஷதி.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மது நக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும் ரஜ: மதுத்தௌ அஸ்துந பிதா.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மது மாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

———- கோத்ரா: ——— நாம்னீயா: வஸுரூபா அஸ்மத் மம மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “பிதாமஹீ” சொல்லி கொள்ளவும்)

———- கோத்ரா: ——— நாம்னீயா: ருத்ரரூபா அஸ்மத் மம பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “பிதுபிதாமஹீ” சொல்லி கொள்ளவும்)

———- கோத்ரா: ——— நாம்னீயா: ஆதித்யரூபா அஸ்மத் மம ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. (3 முறை ஜலம் விடவும்). (அம்மா ஜீவீத் இருந்தால் “ப்ரபிதாமஹீ” சொல்லி கொள்ளவும்).

மாத்ரூ வர்க்கம் (அம்மாவழி) :

உதீரதாம் அவரே உத்பராஸ உன்மத்யமா:பிதரஸ் ஸோம்யாஸ: அஸும் ய ஈவு: அவ்ருகா ருதஜ்ஞாஸ் தேநோ வந்து பிதரோ ஹவேஷு.

———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

அங்கிரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ
யஜ்ஞியானா அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம.

———- கோத்ரான் ———–
சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஆயந்து ந: பிதர: ஸோம்யாஸ: அக்னீஷ் வார்த்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்து அஸ்மான்.

———- கோத்ரான் ———– சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரீஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்.

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷன் பிதர:.

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

யே சேஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்மா அக்னே தான் வேத்த யதிதே
ஜாதவேதஸே தயா ப்ரத்தம் ஸ்வதயா மதந்த்தீ

———- கோத்ரான் ———– சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாதுபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மதுவாதா ருதாயதே மது க்ஷரந்த்தீ ஸிந்தவ: மாத்வீர் நஷ்சந்தீ ஓஷதி.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மது நக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகும் ரஜ: மதுத்தௌ அஸ்துந பிதா.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

மது மாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:.
———- கோத்ரான் ———– சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாதுப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

———- கோத்ரா: ——— நாம்னீயா: வஸுரூபா அஸ்மத் மம மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)

———- கோத்ரா: ——— நாம்னீயா: ருத்ரரூபா அஸ்மத் மம மாதுபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)

———- கோத்ரா: ——— நாம்னீயா: ஆதித்யரூபா அஸ்மத் மம ப்ரபிபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
(3 முறை ஜலம் விடவும்)

ஜ்ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. (3 முறை ஜலம் விடவும்)

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்க்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத||
(எல்லாம் ஜலம் விடவும்)

(பூணல் வலமாக போட்டு கொண்டு எழுந்து ப்ரார்த்தனை செய்து ப்ரதக்ஷிணம் செய்யவும்)

ப்ரார்த்தனை :

தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹயை நித்யமேவ நமோ நம:

ப்ரதக்ஷிணம் :

யாநி காநிச பாபாநி ஜன்மாந்திர க்ருதாநிச தானி தானி விநஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ப்ரார்த்தனை :

நமோ ப்ரம்மண்ய தேவாய கோ ப்ராம்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:
(அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்யவும்)
பூணல் இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்)

யஜுர்வேதம்
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

ரிக்வேதம்.
உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

ஸாமவேதம்
ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன்னுசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

(தட்டில் இருக்கும் கூர்ச்சத்தை அவிழ்த்து வலது கையில் வைத்து கொண்டு எல்லாம் எள்ளு எடுத்து கொள்ளவும்)

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: ந அன்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.
(எல்லா எள்ளையும் ஜலத்தையும் விடவும்).

(பூணல் வலமாக போட்டு கொண்டு கையில் இருக்கும் பவித்ரத்தை அவிழ்த்து வடக்கு பக்கமாக போட்டு ஆசமனம் செய்து கொள்ளவும்).

(நெற்றியில் விபூதி இட்டு கொள்ளவும்)

தானம் :
(அரிசி, வாழைக்காய், பருப்பு, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, தக்ஷிணை தட்டில் வைத்து எடுத்துக் கொள்ளவும்)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ அனந்த புண்யபலதம் அத சாந்திம் ப்ரயச்சமே அத்யதின அமாவாஸ்யா புண்யகாலே தர்ப்பண ஸாத்குண்யார்த்தம் இதம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஆச்சார்யாய துப்யமஹம் ஸம்ப்ரதது.

(கொஞ்சம் அக்ஷதை துளசி நாளு உத்தரணி ஜலம் கையில் எடுத்து கொள்ளவும்).

காயேன வாசா மனஸே இந்த்ரிவா புத்யாத்மனாவா ப்ரகதேத் ஸ்பாவாத் கரோமியத்தத் சகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.

ஓம் தத் ஸத் ப்ரம்மா அர்ப்பணம் அஸ்து. பூமியில் விடவும்.

75 வயதில் ஓய்வு சர்ச்சை! வயது என்பது வெறும் எண் மட்டுமே!

mohan bhagavat rss leader - 2026

— டாக்டர் விஜய் தார்தா

தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்


ஆச்சரியப்படத்தக்க ஒரு தற்செயல் நிகழ்வு . இந்த மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் வயதின் அடிப்படையிலான மூப்பு பற்றி இரண்டு அறிக்கைகள் வெளிவந்து , பொதுவெளியில் , ஒரு பெரிய விவாதத்தை கிளப்பின !

ஒரு அறிக்கையை வெளியிட்டவர் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா. மற்றதை கதை வடிவில் சொன்னவர் ஆர் எஸ் எஸ் ஸின் தலைவரான டாக்டர் மோகன் பாகவத்.

இருவருடைய ஆளுமைகளும் , வகிக்கும் பொறுப்புகளும் அவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு சேர்த்து விடுகின்றன என்பது இயல்பானதே. எனவே விவாதம் கிளம்பியதும் இயல்பானதே. மோகன் பாகவத்தின் பேச்சு விரைவில் அரசியல் ஆரவாரத்தை கிளப்பி விட்டது. முதலில் இரண்டு பேர்களும் என்ன சொன்னார்கள் என்பதை பார்ப்போம்.

தலாய் லாமா அறிக்கை

ஜூலை 6 தேதி தலாய்லாமா தனது 90 வயதை கொண்டாடினார். அதை ஒட்டி அவருக்கு அடுத்தது யார் என்று ஊகங்கள் கிளம்பின. ஆனால் தலாய்லாமா வயது தொடர்பான கேள்விக்கு , இப்போதைக்கு , முற்றுப்புள்ளி வைத்தார். இன்னும் 30 , 40 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென அவலோகிதேஸ்வரர் (கருணையே வடிவெடுத்த போதிசத்துவர்) தனக்கு சமிக்கை அளித்ததாக கூறினார். அவலோகிதேஸ்வரர் தீபெத்தில் சென்ரெசிக் என்றும் சீனாவில் குன் யின் என்றும் அறியப்படுகிறார்.

தலாய் லாமாவின் இந்த அறிக்கை அவரது சீடர்கள், ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும் இயல்பானதே. சீனாவுக்கு உறுத்தலாக இருப்பவர் (14 வது) தலாய் லாமா. அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்வார் என்பது அவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

மோகன் பாகவத் சொன்னது

வயது பற்றிய இரண்டாவது சம்பவம் சுவாரஸ்யமானது. ஆர்எஸ்எஸ் ஸின் தலைவர்களில் ஒருவரான மோரோபந்த் பிங்களே வின் வாழ்க்கையை பற்றிய நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் ஒரு சம்பவத்தை விவரித்தார். ‘ பிருந்தாவனத்தில் அகில பாரத பைடக் (கூட்டம்) நடந்தது. அதில் 75 வயதை அடைந்த மோரோபந்த் பிங்களேவுக்கு மரியாதை செய்யும் விதமாக பொன்னாடை போர்த்தப்பட்டது. ‘

‘ மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு பிங்களே ஜி எனக்கு 75 வயதானதற்காக பொன்னாடை அளித்து கௌரவித்துள்ளீர்கள். இதற்கு பொருள் என்ன என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு வயசாகிவிட்டது ஒதுங்கி நின்று மற்றவர்கள் பணி செய்ய வழி விடுங்கள் என்பதை உங்களுக்கே உரிய பாணியில் சொல்கிறீர்கள்”, என்று சொன்னார்.’

அரசியல்

பாகவத்தின் பேச்சில் இருந்த இந்த விஷயத்தை எதிரணியில் இருப்பவர்கள் உடனே பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வயதுடன் முடிச்சு போட்டனர். 2025 செப்டம்பர் 17 ல் மோடிக்கு 75 வயதாகும். சுவாரஸ்யம் என்னவென்றால், பிங்களே சம்பவத்தைச் சொன்ன பாகவத்திற்கும் இந்த ஆண்டு செப்டம்பர் 11 தேதி 75 வயதாகிறது.

எந்த விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ளாதவர்கள் கூட அரசியலில் எதைப்பற்றியும் கருத்து கூறவும், அலசவும், விளக்கம் அளிக்கவும் முடிகிறது. மோரோபந்த் பிங்களேவைப் பற்றி பாகவத் கூறியது நிஜத்தில் நடந்த சிறிய சம்பவம். அது , நூல் வெளியீட்டு விழா சூழ்நிலையில் பொருத்தத்திற்காக சொல்லப்பட்டது. அதற்கும் மோடியின் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மோடி சொன்னது

ஏனெனில் மோடி , பாகவத் இருவருமே மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்கள். இளைஞர்கள் கூட போட்டியிட முடியாத அளவுக்கு அவர்களது ஈடுபாடும் செயலூக்கமும் உள்ளது. அதுமட்டுமல்ல , நான் ஒரு பக்கிரி (துறவி) . நேரம் வரும்போது என்னுடைய பையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன் ! என்று , மோடி ஏற்கனவே கூறியுள்ளார்.

புகழ் பெற்ற உருது கவிதையின் வரி இப்படி சொல்கிறது.

‘ உமர் கா பந்தன் தோ தஸ்தூர் ஏ ஜஹான் ஹே ,
மெகசூஸ் நா காரேன் தோ படுத்தி கஹான் ஹேய் ? ‘
( வயது என்பது ஒரு தளை என்பதை புரிந்து கொண்டால் சரி. உணரவில்லை என்றால் , அதனால் என்ன ? – மொழிபெயர்ப்பாளர் )

வாழ்நாள் : அன்றும் இன்றும்

இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. கடந்த 75 ஆண்டு காலத்தில் இந்தியர்களின் வாழ்நாள் இரண்டு மடங்காகி உள்ளது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் சராசரி வயது 32 ஆண்டுகள். சிலர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம். ஆனால் பெருவாரியான இந்தியர்கள் இளம் வயதிலேயே இறந்து விட்டனர். இந்தியா முழுவதும் பரவலாக இருந்த வறுமை , பசி , நோய் ஆகியவற்றால் அப்போது சராசரி வயது 32 ஆக இருந்தது.

இன்று இந்தியர்களின் சராசரி வயது 72. இன்றும் கூட ஒரு முழுமையான உணவுக்காக போராடும் நிலையில் இருப்பவர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பற்றி பேசவில்லை. நான் சொல்ல வந்தது பெரும்பாலோருக்கு இன்று வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது. நல்ல உணவு, பழங்கள், ஆரோக்கியம் , மருந்துகள் கிடைக்கின்றன.

சாதனையாளர்கள் வயது

அதேபோல் , நடப்பதற்கே பிறர் உதவி தேவைப்படுபவர்களை பற்றி நான் சொல்லவில்லை. 75 அல்லது 80 வயதானாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர்களை பற்றி பேசுகிறேன். சரத் பவார் அதற்கு சரியான உதாரணம். அவருக்கு வயது 84 க்கு மேலாகிறது. ஆனாலும் இளைஞரை போல் சுறுசுறுப்பாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.

90 வயதான பிறகும் கூட ராம் ஜெத்மலானி வழக்காட நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். இறப்பதற்கு சிறிது காலம் முன்பு வரை , 92 வயதிலும் டாக்டர் மன்மோகன் சிங் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இ எம் எஸ் நம்பூதிரிபாட் (88) , கருணாநிதி (84), ஜே ஆர் டி டாட்டா (89), கன்ஷியாம் தாஸ் பிர்லா (89), ரத்தன் டாட்டா (86), நானி பல்கிவாலா (82), சோலி சொராப்ஜி (91) ஆகியோரை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஜோதி பாசு 85 வயதாகும் வரையில் மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்தார். தனக்கு வயதாகி விட்டதால் எந்த பதவியும் கொடுக்க வேண்டாமென இடதுசாரி தலைவரான ஹரிகிஷன் சிங் சொல்லிவிட்டார்.

வயதானாலும் சாதிப்பவர்கள்

ஆனால் வயது மூப்பு என்பது என்னை பொருத்த வரையில் உண்மையில் ஒரு அனுபவ சுரங்கம் என்று தான் சொல்லுவேன். எடுத்துக்காட்டாக அமிதாப்பச்சன். மகத்தான வேலைகளை அவர் செய்கிறார் !. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள காடுகளுக்கு புகைப்படம் எடுக்க வஹிதா ரஹ்மான் பயணிக்கிறார். ஹேமமாலினி இப்போதும் கூட மேடையில் துர்கா நடனத்தை நிகழ்த்துகிறார். சோனியா காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் இப்போதும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்கள். டாக்டர் பாரூக் உத்வாடியா (93) – பத்மபூஷண் விருதாளர் , டாக்டர் பீம் சிங்கால் (92) – பத்மஸ்ரீ விருதாளர் இன்றும் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் , சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணி ஓய்வு பெறும் வயது என்பதே இல்லை. ஒன்பது ஆண்டு காலத்திற்கு அவர்கள் பணியமத்தப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் வயதை பொருட்படுத்தாமல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

செயலில் இளமை

இளம் சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்தான். அதனால்தான், அனுபவத்தினால் வரக்கூடிய ஞானமும் புதிய சக்திமிக்க இளமையும் இணைவதுதான் வெற்றிக்கான உண்மையான வழி, என்று நான் அடிக்கடி கூறுகிறேன். வயதைப் பற்றிய இரண்டு வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.

உமர் கா தூ தமசா நா தோக்கா,
தகாசா டூ கூச் அவுர் ஹய்.
சான் – இ – அயினா ஹய் உமர்,
மேரி காபிலியத் அபி தேக்,
அனுபவ் மேரி குத்தாரி ஹய்.

( என்னுடைய வயதை பார்க்காதே. இனிதான் வேற கதையே இருக்கிறது. என் வயது எல்லோருக்கும் தெரிகிறது. என் திறமையை பார். செயல்களே என்னுடைய வெளிப்பாடு. – மொழிபெயர்ப்பாளர்)

நன்றி : டெய்லி கார்டியன் , 18-7-2025

*ஆசிரியர் – முன்னாள் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர், லோக்மத் மீடியாவின் சேர்மன் ( ஆசிரியர் குழுவின் தலைவர்)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம்..

1000838351 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.

1000838352 - 2026

முதல் நாளான இன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வருகின்றனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், 26-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்ரகரையம்மாள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பூரத் தேர் திருவிழா  மதுரை திருவண்ணாமலை சிதம்பரம் கோயில் திருவிழா போல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஆகம முறைப்படி கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

   இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம், தங்கபல்லக்கு, சிம்மவாகனம், சேஷவாகனம், ஐந்து கருடசேவை, பெரிய அன்னவாகனம், யானைவாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லக்கு, குதிரை போன்ற வாகனங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி இரவில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆடிப் பூரத்தன்று 28.07.2025 திங்கட்கிழமை  நடைபெறுகிறது.
  இந்த திருவிழாவிற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தினமும் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு, வீணை இன்னிசை, நடனம், ஆய்வரங்கம், பஜனை, வில்லிசை, நாமசங்கீர்த்தனம், வயலினிசை ஆகியவை நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

ஊழல் அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும்!

hindumunnani
hindumunnani

ஊழலில் திளைக்கும் இந்து சமய அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது. தனியார் கோவில் வருமானப் பிரச்சினையில் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு.

அரசு அலுவலகங்களில் அதிக ஊழல், முறைகேடு மற்றும் வழக்குகளை சந்திக்கும் துறையாக இந்து சமய அறநிலையத்துறை முதலிடம் பெற்று சாதனைப் படைத்து வருகிறது.

மற்ற துறைகளில் மக்களுக்கு சாதகமாக முறைகேட்டில் ஈடுபடத் தான் லஞ்சம் வாங்குவார்கள். இந்து சமய அறநிலையத்துறையில் கோவிலுக்கு தானமாக கொடுப்பதற்கு மக்களிடம் லஞ்சம் வாங்கும் விநோதம் இங்கு தான் பார்க்க முடியும்.

லஞ்சம் வாங்கும் பலரில் இப்படி யாராவது ஒருவர் சிக்கும்போது, ஆக இது நல்ல நிர்வாகம் என ஏமாந்திட வேண்டாம். திருப்பூரில் லாட்ஜில் ரூம் போட்டு பொய் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அதிகாரிகளை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கையும் களவுமாக பிடித்துக்கொடுத்த வழக்கு என்னவாயிற்று?

இதுவரை பிடிபட்ட அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தனக்கு அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு கௌரவத்தை தருகிறார்.

சென்ற ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் என்ன? சத்தமே இல்லாமல் அந்த வழக்குகள் சமாதி கட்டப்பட்டன.

காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஒன்று இருக்கிறது. அது இருக்கிற இடம் தெரியாமல் ஆக்கிய பெருமை செயல்பாபு என்று தமிழக முதல்வர் புகழும் அமைச்சர் சேகர் பாபுவிற்கே சேரும்.

மூவாயிரம் கோவில்களில் குடமுழுக்கு என மார்தட்டுகிறார் அமைச்சர் சேகர் பாபு. இந்து சமய அறநிலையத் துறைக்கு தனியான ஸ்தபதி கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எந்த செயலும் செய்ய முடியும்.

இந்த செயல்பாடு தரமான நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதையே தங்களுக்கு சாதகமாக்கி ஊழல் செய்கிறார்கள் அமைச்சரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும். அதனால் தான் கும்பாபிஷேகம் முடிந்து சில நாட்களில் அது சிதிலமடைந்து விடுகிறது.

இதுபோன்ற அவலங்களை பார்த்த பிறகும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருப்பது எத்தகைய விபரீதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

எவ்வளவு வருமானம் வந்தாலும் சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போல தரிசன கட்டணத்தை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார் அமைச்சர். இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை சீரழிக்கும் வகையில் தரிசன கட்டணம் மூலம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தி பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

எனவே கோவில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் வெளியேற வேண்டும். சர்ச், மசூதிகள் இயங்குவதைப் போல தனித்து இயங்கும் சுதந்திர வாரியத்திடம் கோவில்களின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்…