ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் சார்ஜிங் மையங்கள் மற்றும் ரயில்வே துறையுடன், இப்போது சென்னை மாநகராட்சியும் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளன.
சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங், 2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், 3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங், 4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங், 5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம், 6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு, 7) மெரினா கடற்கரை பார்க்கிங், 8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா, 9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.
ரயில் நிலையங்களில் மின் வாகன சார்ஜிங் மையங்கள்
ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வரும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அடுத்து, செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் புதிய சார்ஜிங் மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றனர்.
ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.
ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்த பட்ச வெப்ப நிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.
இந்த நிலையில், ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்குமாறு மாற்றியமைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கடடார் தெரிவித்துள்ளார்.
20 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான அளவையோ, 28 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ ஏசி-க்களில் இனி அளவை மாற்ற முடியாது. இந்த குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச அளவீடுகளுடன் தான் ஏசி.,க்கள் விற்பனைக்கு வருமாம்.
இது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
ஜூன் 9 திங்கள் மாலை, சென்னையில் ஓர் இனிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையப் பெற்றது. இரு வாரம் முன் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தபோது, நண்பர் பால.கௌதமன் கைபேசியில் இந்த நிகழ்ச்சி குறித்துச் சொல்லி, ‘நன்றியுரைக்கு நீங்கள் தான்’ என்று கூறி, மீண்டும் சென்னை வருமாறு அன்புக் கட்டளையிட்டார். அதன் பேரில் இந்த நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்தேன்!
நண்பர் கௌதம் தொடர்பில், திருவள்ளுவர் திருநாட் கழகம் அமைப்பின் கூட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாகவே அவ்வப்போது கலந்து கொள்கிறேன். முன்னர் சாமி தியாகராசன் அவர்கள், இந்த அமைப்பின் பின்னணியை விளக்கி, வைகாசி அனுஷம் தான் திருவள்ளுவரின் பிறந்த தினம் என்பதால், அதையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடப்பட முயற்சி மேற்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்றார். அவரிடம், எங்கள் பகுதி தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைகாசி அனுஷத்தை ஒட்டியே திருக்குறள் திருவிழா நடப்பதை நினைவுகூர்ந்தேன்.
சாமி தியாகராசனார் அண்மையில் காலமாகிவிட்டார். அதன் பின் அவரது நோக்கத்தை விடாப்பிடியாக தொடர்ந்து இந்த சமூகத்தில் முன்வைக்க நண்பர் கௌதமன் பெரும் பொருட்செலவை தன் சக்திக்கு மீறிச் செய்து, திருவள்ளுவர் திருநாட் கழகக் கூட்டத்தை நேற்று சிறப்பாக நடத்தியிருக்கிறார்.
சென்னை மேற்கு மாம்பலம், ஆர்ய கௌடா சாலையில் உள்ள குமரன் அனுக்ரஹா அரங்கில் மாலை வேளையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த வருடம் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பன்று வழிபாட்டுக்காக வந்திருந்த ஆளுநர் திரு. ரவீந்த்ர நாராயண் ரவி அவர்களிடம் வைகாசி அனுஷத்தின் சிறப்பைக் குறித்து சொல்லப்பட்டது. அப்போது ஒரு சிறு புத்தகத்தை ஒரு மாத காலத்துக்குள் – அவசர கதியில் தயாரித்து, வைகாசி அனுஷத்தில் வெளியிட முயற்சி செய்தேன். புத்தகம் வந்தபோதும், அனுமதி கோரல் தொடர்பில் நேரமின்மையால் ஆளுநர் கையால் அதை வெளியிட இயலாமல் போனது. அந்த நூல் – தமிழர் ஞான மரபில் திருவள்ளுவர் – என்பது!
இந்த வருடம் அந்தக் குறையைத் தீர்க்க, மேடையில் நூலின் சிறப்பைச் சொல்லி ஆளுநருக்கு பரிசளிப்போம் என்றார் கௌதம். அவ்வாறே அந்த ஏற்பாடு சிறப்பாக அமைந்தது.
ஆளுநர் உரையாற்றியபோது, மிகச் சிறப்பாக ஆபரேஷன் சிந்தூரையும் வள்ளுவரின் அமைச்சு, படை இவற்றையும் கோத்துப் பேசினார். உண்மையில் உள்ளம் கவர்ந்த சொற்கள். அவருக்கு தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாகவே வருகிறது. குறள்களை அடுக்கினார். அனைத்தும் சிறப்பான உச்சரிப்பில். ஒரு வடமாநிலத்தவர் இவ்வளவு விரைவில் தமிழ் உச்சரிப்பைக் கற்று தெளிவாக மேடையில் பேசுவதும், மேடையில் தமிழில் பேசுவதை உடனே புரிந்து கொண்டு, அதற்கு பதிலளிப்பதும் – வியப்பளிக்கும் ஒன்றுதான்! அந்த வகையில், ஆளுநர் ரவீந்த்ர நாராயண ரவி அவர்கள் நாம் கண்ட ஆளுநர்களில் தனித்துவமானவர் மட்டுமல்ல, மிகவும் மேம்பட்டவரும் கூட!
இந்த நிகழ்ச்சியில் மனம் கவர்ந்த சில விஷயங்கள் – நண்பர் பத்மன், திருக்குறளின் மேலாண்மைக் கருத்துகளை சுருக்கமாக, தனக்குக் கிடைத்த பத்து நிமிடங்களுக்குள் தெளிவாகச் சொன்னது, சம்ஸ்க்ருத ஆசிரியர் அறிஞர் திரு.ராமச்சந்திரன் பாரதீய பண்டைய மரபில் திருவள்ளுவரின் உள்ளத்தை குறைந்த நேரத்தில் கேட்பவர்களுக்கு அலுப்பு ஏற்படாத வகையில் உரைத்தது, கௌதமன் குழு சிறப்பாக நடத்தி வரும் அனன்யா ஃபௌண்டேஷன் குழந்தைகள் திருக்குறள் பாராயணம், திருக்குறள் பாடலுடன் கூடிய நாட்டியம், வைகாசி அனுஷம் கொண்டாடப்படுவதன் காரணத்தை விளக்கும் வில்லுப்பாட்டு என அசத்தியது, நிகழ்ச்சியை அலுப்பு ஏற்படாத வண்ணம் நெறிப்படுத்திய நெல்லை ஜெயந்தி ஐயங்காரின் தொகுப்பு… நிகழ்ச்சியின் எந்த இடத்திலும் சிறு தொய்வு இன்றி நண்பர் கௌதமின் ஸ்ரீ டிவி குழுவினர் சிறப்பாகச் செய்திருந்த ஏற்பாடுகள் எல்லாம் நெஞ்சில் நிறைந்தவை, என்றும் நிற்பவை!
முதல் நிகழ்ச்சி முடிந்து கிளம்பிவிட்ட ஆளுநர் அவர்கள், அடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டு, மேடையில் இருந்த நாற்காலிகளை கீழே போடுங்கள், நானும் அமர்ந்து சிறிது நேரம் பார்க்கிறேன் என்று சொல்லி அமர்ந்து, நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்து பாராட்டிச் சென்றது, அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்க்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது!
ஆளுநரை வழியனுப்பி வைத்த நண்பர் ஒருவரிடம் ஆளுநர் கிசுகிசுத்தாராம்… ‘என்ன திருப்தியா?’ என்று! நமக்காக நம் ஆளுநர் – என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பெற்றது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளது இந்திய அஞ்சல்துறை.
அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை ‘DigiPIN’ என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஐடி ஹைதராபாத், NRSC மற்றும் ISRO ஆகியவற்றுடன் இணைந்து டிஜிபின் எனப்படும் புவிசார் குறியீடு செய்யப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பை இந்திய போஸ்ட் உருவாக்கியுள்ளது.
இனி நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது.
அதாவது, உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தை இந்த DigiPIN மூலம் காணலாம். DigiPIN ஐ உருவாக்கி குறியீட்டைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் வீட்டைக் கண்டறியலாம்.
DigiPIN இன் நன்மை என்னவென்றால், அது சரியான இடத்திற்கு கடிதங்களை வழங்கும். ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறைகள் போன்ற அவசர சேவைகள் இருப்பிடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை துல்லியமாக அடைய உதவும்.
மலைப் பகுதிகள், கிராமப்புறங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு DigiPIN மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மிகத் துல்லியமாக இடத்தைக் கண்டறிவதற்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மின் வணிக வலைத்தளங்களுக்கும் DigiPIN சரியான இடத்திற்கு பார்சல்களை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.
உங்கள் Digipin ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?
உங்கள் டிஜிபினைக் கண்டறிய அரசாங்க வலைத்தளமான https://dac.indiapost.gov.in/mydigipin/home தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டு நீங்கள் கண்டறிந்த இடத்தைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் 10 இலக்க டிஜிபினைக் கண்டறியலாம். மற்ற முகவரி அமைப்புகளிலிருந்து டிஜிபினை வேறுபடுத்துவது, நான்கு மீட்டர் சுற்றளவில் உங்கள் சரியான இருப்பிடத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதே!
இந்த டிஜிபின்னை ஆன்லைனில் சென்று தான் பயன்படுத்த முடியும் என்பதல்ல, ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம். இதற்கான பட்டியலை இந்தியா போஸ்ட் தன் இணையதளத்தில் கொடுத்துள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…
ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன்.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.
திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
உள்துறை அமைச்சர் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு, வார்த்தைகளின் அர்த்தம் பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி யார் தலைமையில் தான் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா போனால் போகட்டும் என பொறுத்து விட்டு விடவா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் எந்த கட்சியினைய வேண்டும் என்பதை எடப்பாடியார் சரியாக முடிவெடுப்பார்.
கமலஹாசன் திமுக கூட்டணிக்கு சென்றது குறித்த கேள்விக்கு, சூழ்நிலைக்கு தகுந்த முடிவு எடுக்கும் போது வார்த்தைகளை விட செயல்தான் பலமாக பேசும். புற்றுநோய் மற்றும் கல்வி குறித்த மனித வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்து உரைத்துள்ளேன். 2026 தேர்தலை பொருத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி யார் தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும்.
எடப்பாடி யார் மிகத் தெளிவாக இருக்கிறார். கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து… என்றார்.
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். வைகாசி விசாகத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார்.
மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் இருந்து அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அட்சயப் பாத்திரத்தைக் கொடுத்து, “மக்களின் பசிப்பிணியைப் போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்” என்று கூறி மறைந்தது!
மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள் என்கிறது மணிமேகலை (ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று)
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்துவதோடு நாடகத்தில் நடித்தவர்களுக்கும் சன்மானமாக நெல் வழங்கிய ராஜேந்திர சோழன் பற்றிய குறிப்பு தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளதைப் பார்க்கலாம்.
எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்ம ராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சூரியன் உதித்த பின்னர் காலை வேளையில் அல்லது சூரியன் மறைவதற்கு முன்பாக மாலை வேளையில் தெற்கு முகமாகப் பார்த்து எமதர்ம ராஜனை வைகாசி விசாக நாளன்று வழிபட்டால் நீண்ட ஆயுள் நோயின்றி வாழ்வு கிடைக்கும் என்பார்கள்.
பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முருகனை வழிபடுவதால் பகை அழியும். விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாதலால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஓலைச் சுவடிகளில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 20 ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகள் அழிந்து அச்சு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. ஓலைச் சுவடிகளை எழுதவோ படிக்கவோ ஆளில்லை என்ற நிலைமை வெறும் 70-80 ஆண்டுகளில் வந்துவிட்டது.
அச்சு ஊடகம் வந்த பிறகு ” யார் காப்பார் என்னை என தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் உன்னை” என்று களமிறங்கியவர்கள் உ.வே.சாமிநாதய்யர், திருக்குறள் முனுசாமி கவுண்டர் போன்றோர். அவர்கள் சங்க இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அரிய நூல்களையும் தேடித்தேடி கண்டறிந்து ஓலைச் சுவடியில் இருந்து காகித பிரதிகளாக மாற்றினர். இல்லையேல் ஓலைச் சுவடிகளோடு ஓலைச் சுவடியாக தமிழும் கரையான்களால் அழிக்கப்பட்டிருக்கும்.
இன்று புத்தங்கள் அழியும் நிலையை நோக்கி PDF பைல்களும் டாக்குமெண்ட் பைல்களும் கொண்டு சென்றுவிட்டன. நாம் யாரும் காகித புத்தகங்களை தூக்கிக் கொண்டு சுற்றுவதில்லை மிக எளிதாக PDF பைல்களை தான் படித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் PDF பைல்களையும் காலச்சக்கரம் முழுமையாக அழித்து, அனைத்தையும் AI வடிவில் மட்டுமே நிலைத்திருக்க செய்திருக்கும். இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2020 க்கு பிறகு பிறந்த குழந்தைகள் கல்லூரி நாட்களில் AI யையோ அல்லது அதற்கு அடுத்த அப்டேட் டெக்னாலஜியையோ தான் கட்டாயம் பயன்படுத்துவார்கள் அவர்களின் கையில் எந்த புத்தகமோ எந்த PDF பைல்களோ எந்த doc பைல்களோ இருக்க வாய்ப்பில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமானால் மரபு கவிதையை அழித்து புதுக் கவிதையைப் புகுத்திய பாரதி ” மெல்லத் தமிழில் இனி சாகும்” என்றான். ஆம் உண்மைதான் பாரதி மட்டும் புதுக்கவிதை என்ற ஒன்றை தோற்றுவிக்காமல் போயிருந்தால் இன்று ஒரே ஒருவர் கூட கவிஞர் என்றோ தமிழ் புலவர் என்றோ கூறித் திரிய வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். புதுக் கவிதை எழுதவே எவருக்கும் சிந்தனை இல்லை என்னும் போது மரபு கவிதை எல்லாம் இக்காலத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது, அதனால் தான் முக்காலமும் உணர்ந்த எங்கள் பாரதி இலக்கிய விதிகளை உடைத்து ஒரிஜினல் rugged boy ஆக மரபை உடைத்து புதுக்கவிதையைப் புகுத்தினான். அன்று அவன் அதை செய்யாமல் போயிருந்தால் தமிழ் பேரழிவைச் சந்தித்திருக்கும்.
தமிழோடு தோன்றிய ஏனைய மொழிகள் எல்லாம் கணினி யுகத்தில் தாக்குப்பிடிக்காமல் காணாமல் போனது போல AI புரட்சி தமிழையும் காணாமல் செய்யும் என்றே தோன்றியது. உண்மையில் யார் காப்பார் என்னை என கன்னித்தமிழ் முதுமை தாங்கிய குடுகுடு கிழவியாய் உயிருக்கு ஊசல் ஆடும் நிலையில், டெக்னாலஜி உலகில் நான் காப்பேன் உன்னை என களமிறங்கி இருக்கிறார் பாஜகவின் மாநில செயலாளர் அ. அஸ்வத்தாமன் .
தொழில்நுட்ப புரட்சி இன்னும் 20 ஆண்டுகளில் உலகை தலைகீழாக மாற்ற போகிறது. 1990 காலத்தையும் 2020 காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி கற்பனை பண்ண முடியாத மாற்றத்தை கண் முன் காண்கிறோமோ அதை விட 100 மடங்கு மாற்றத்தை அடுத்த 20-25 வருடங்களில் காண இருக்கிறோம்.
இந்த மிக மிக இக்கட்டான மிக மிக முக்கியமான இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் ChatGPT, சீனாவின் Deep seek இவற்றிற்கு இணையாக தமிழ் வழியில் ஒரு தனித்து சுயமாக இயங்கக்கூடிய AI பிளாட்பாரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அஸ்வத்தாமன். அவரது இந்த முயற்சி முழு வெற்றிபெறுமேயானால் அமெரிக்காவும், சீனாவும் நம்மை பார்த்து பயம்கொள்ளக் கூடும். இந்தியா எந்த வகையிலும் பிற நாடுகளை விட தாழ்ந்ததில்லை என நிரூபிப்பதோடு தமிழ் மொழி உலகை ஆளும் நாளும் மிக விரைவில் வரக் கூடும்.
தமிழ் என்பது ஏதோ கருத்தை மட்டும் பரிமாறும் சாதாரண ஒலிக்குறியீடோ வெறும் வேலை வாய்ப்பை மட்டும் தரும் மொழியோ அல்ல அது பிரபஞ்ச சக்தியின் மொழி, ஒவ்வொரு உயிரும் பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் மேம்படுத்திய மொழி. “என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யவே” என்று கூறிய ஆதி சித்தன் திருமூலரும், தமிழே உருவமாய் மாறி யுகம் யுகமாய் காத்து நிற்கும் அகத்தியரும், அந்த சித்தர் கூட்டத்தின் தலைவன் முருகனும் அஸ்வத்தாமனுக்கு துணை நின்று வழி நடத்த வாழ்த்துக்கள்.
‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்பதுதான் எலான் மஸ்க் தொடங்க உத்தேசித்துள்ள புதிய கட்சியின் பெயர்! இதனை அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பெரும் உதவி செய்து தேர்தலில் வெற்றிபெறக் காரணமானவர்களில் ஒருவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், இப்போது டிரம்புடன் உறவு கசந்து போனதால், புதிய கட்சி தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன்; அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனது கட்சியின் பெயர் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று தற்போது அறிவிக்கிறேன்; உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும் – என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோதல் போக்கை கையாண்ட டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இப்போது புதிய கட்சி தொடங்கி, அமெரிக்கத் தேர்தலில் தனக்கென ஓர் இடத்தைப் பெற முயன்று வருவதாகவே கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் அண்மைக் காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என்று கேள்வி கேட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கணிப்புக்கு 80 சதவீத மக்கள் – அதாவது, 56.30 லட்சம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். மேலும் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரையும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்கலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தினேன். அப்போது நடுத்தர மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவை என்று 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருப்பது விதி. கட்சியின் பெயரை ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்று சொல்வது நல்ல தொனியாக உள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இது இருக்கும். – என்று தெரிவித்துள்ளார்.
அக்னி வீரர்களின் அட்டகாசம்! கொல்லன் வீதியிலேயே ஊசி விற்ற இந்தியா!
இந்திய, பாகிஸ்தான் போரில் பல அருமையான நிகழ்வுகள் நடந்ததும் அது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டு உள்ளது.
1970 களில் இந்தியா ஸ்வீடனின் போஃபோர்ஸிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை வாங்கியது. அன்றைய காலகட்டத்தில் விமானங்கள் மெதுவாக பறந்ததால், அதை சுடுவதற்கு L70 என்ற பீரங்களை இந்தியா வாங்கியது. அதன் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது. அதனால் அதை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமையை வாங்கி இங்கேயே உற்பத்தியும் செய்தோம்.
ஆனால் போர் விமானங்களின் மேம்பாடுகளாலும், அதன் வேகம் அதிகரிப்பாலும் அந்த டாங்குகள் அதன் இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டு, அது தேவை அற்றதாகிப் போனது. அதனால் அது அவுட்டேட்டட் என்று அதன் உரிமத்தை சொற்ப விலைக்கு ஸ்வீடனின் ஃபோபார்ஸ் நமக்கு விற்றுவிட்டது.
அது அப்போதைக்கு மேன்யூல் ஆபரேஷனில் இருந்தது, அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோமேட் செய்து அதை நவீனமாக்கி, அதில் கணினியின் இணைப்புடன் மேம்படுத்தி, அதில் சில அறிவுசார் (Artificial Intelligence) விஷயங்களையும் புகுத்தி அதிநவீனமாக்கிவிட்டது.
சமீபத்தில் பாகிஸ்தான் ஏகப்பட்ட சிறிய, பெரிய ட்ரோன்களை ஏவி, நமது S-400 போன்ற முக்கிய வான் தடுப்பு பேட்டரிகளை வீணடிப்பது என்பது அவர்களது திட்டம். அதாவது ஒரு பேட்டரியின் விலை பில்லியனில் என்றால் அதம் திட்டம் என்ன என்பதை யோசித்தால் புரியும்.
ஆனால் நமது வான்பாதுகாப்பு என்பது நான்றடுக்கு கொண்டதாக மாற்றி அதில் கடைசி அடுக்காக S-400 பயன்படுத்தப்பட்டது. அதுவும் அதன் எடை, வேகம், போன்றவற்றை Artificial Intelligence மூலம் அதை ட்ரெய்ன் செய்து, வித்தியாசப்படுத்தி அதற்கு ஏற்ப தாக்கும் திறனை ஏற்படுத்தி இருந்தது.
அதனால் ஒரு சாதாரண ட்ரோன், சைசில் பெரியதாக இருந்தால் அது சில லட்சங்களில் வாங்கிவிடலாம். ஆனால் அதற்கு கோடிக்கணைக்கில் உள்ள ராக்கெட் ஏவுகணை பயன்படுத்துவது எப்படி முட்டாள்தனமோ, அதை செய்வார்கள் என்று சீனா, பாகிஸ்தான் எதிர்பார்த்தது.
ஆனால் இந்தியா அவற்றை இனம் பிரித்து சரியான கைனெடிக் சிறுரக ஏவுகணைகள் அல்லது L70+ பீரங்கிகளை அல்லது நான்-கைனெடிக் ஆயுதங்களை பயன்படுத்தி அதன் செயல்பாடுகளை எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூல குளப்பி அழித்தது.
இதில் நிறைய விஷயங்கள் வீடியோ கேம்போல நவீன L70+ பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி அழித்தது. அதற்கு.
முந்தைய தலைமுறை இராணுவ வீரர்கள் பொறுத்தமில்லாதவர்கள் என்பதால் அக்னிவீரின் மூலம் இராணுவத்தில் சேர்ந்த பப்ஜி விளையாண்டவர்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்களை விளையாட்டாக நாசப்படுத்தி விட்டது இந்தியா.
அதாவது பாகிஸ்தான் எதிர்பார்த்த பெரிய ராக்கெட்டுகளை பயன்படுத்தாமல், சாதாரண பீரங்கி குண்டுகளை பயன்படுதேதி பெரிய ட்ரோன்கள், ராக்கெட்டுகளை அழித்துவிட்டது. அதுவும் நிறைய ட்ரோன்கள் நான்-கைனெடிக் எனும் எலெக்ட்ரானிக் வார்ஃபேர் மூலம் லட்சங்கள் விலை கொண்ட அந்த குண்டுகள் கூட பயன்படுத்தவில்லை..
அதற்கு மேற்சொன்ன L70 பீரங்கியின் மேம்பாடு அதை தயாரித்த ஸ்வீடன் கம்பெனிக்கு சர்ப்ரைஸை கொடுத்து சபாஷ் சொல்ல வைத்தது மட்டுமல்ல அதை வாங்கவும் தூண்டியது. ஆனால் அதற்கு ஒரு சிக்கல், இப்போது அதை வாங்க வேண்டுமென்றால், அதன் உரிமம் இந்தியாவிடம் உள்ளதால் செலவு அதிகமாகுமே என்று யோசிக்கவைத்துள்ளது. அதாவது கொல்லன் வீதியில் இந்தியா ஊசி விற்கிறது என்றால் மிகையில்லை!
அதுமட்டுமில்லாமல் D4 (Drone, Detect, Deter, Destroy) என்ற வான்பாதுகாப்பும், இந்தியாவில் Make In India மூலமும், நிறைய ஸ்டார்ட்டப்களில் செய்யும் நவீன ட்ரோன் வார்ஃபேர் உற்பட பல விஷயங்கள் உலகை ஆச்சரியத்தில் மட்டுமல்ல, நம் அண்டை எதிரிகளுக்கு பயத்தையும் ஏற்படுத்திவிட்டது.
அதைவிட தைவான், பிலின்பைன்ஸ் போன்று சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீபாவளியே கொண்டடி விட்டது. ஏனென்றால் இந்த போர் என்ற சட்டை மட்டும்தானே பாகிஸ்தாப், அதன் பின்னஅல் இருந்தது சீனாதானே! அதுவும் அவர்கள் சேட்டிலைட் டேட்டா முதல், அவர்கள் டெக்னீஷியன்களே பாகிஸ்தானில் இருந்து இயக்கி இருக்கிறார்கள்.
இதில் அக்னிவீர்கள் இளைஞர்களாக இருப்பதால் இதுபோன்ற லேட்டஸ்ட் புரிதல் சிறப்பாக உள்ளது. ஆனால் அறிவியல் மாற்றங்கள் வேகமாக நடப்பதால் அவர்களே சில வருடங்களுக்கு பிறகு அவுட் டேட் ஆகிவிடுவார்கள். அதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் (5?)அவர்கள் பணி முடிந்து 75% ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியே வந்துவிடுவார்கள்.
அப்போது அவர்களுக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்கும். அவர்களுக்கு தொழிலும் தெரிந்திருப்பதால், அவர்கள் ஆயுத தொழிற்சாலைகளில் புதிய ஆயுத சோதனைகளை செய்வதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.
அதே சமயம் புதியவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். இப்படி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்தியாவிற்கு ஒரு போர் ஏற்பட்டு அதிக இராணுவ வீரர்கள் தேவைப்பட்டால், ஏற்கனவே நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களை இந்திய ராணுவம் பயன்படுத்திக்கொள்ளும்..
புதிய டெக்ன்லாஜியை, அதில் ஏற்படும் மாற்றங்களை பயன்படுத்த இளைஞர்கள் தேவை. அதனால்தான் எந்த ராணுவத்தின் சராசரி வயது குறைவாக உள்ளதோ அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அக்னிவீரருக்கு முன்பு நமது இராணுவத்தின் சராசரி வயது மிகவும் அதிகமாக இருந்தது. இப்போது அது வெகுவாக குறைய தொடங்கி உள்ளது.
அதுமட்டுமல்ல, இராணுவத்தின் ஒரு மிகப்பெரிய செலபினம் என்பது ஓய்வூதியம். ஆனால் இந்த அக்னிவீர்களுக்கு ஐந்தாண்டு பணி முடிந்தபின்னர் ஒரு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது, ஆனால் ஓய்வூதியம் இல்லை என்பதால் வருங்காலத்தில் இராணுவத்தின் ஓய்வூதிய செலவு தொகை வெகுவாக குறையும் என்கிறார்கள்.
ஆம், 25% அக்னி வீரர்கள் அல்லது தேவையான அளவிலான சிறந்தவர்களை இராணுவம் தொடர்ந்து நீண்ட பணியில் எடுத்துக்கொள்கிறது என்றால், அவர்கள் பணி ஓய்வுக்கு பின் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்பதால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் ஓய்வூதிய செலவினம் பெருமளவில் குறையும்.
எனவே இந்தியாவின் பாகிஸ்தானுடான போரில், இந்தியாவின் போர் யுக்திகள் மட்டுமல்ல, அதன் பொருளாதாரா யுக்திகள் இப்போது நமது எதிரியான சீனா உற்பட மேற்கத்திய நாடுகளால் உற்று பார்க்கப்பட்டு ஆராயப்படுகிறது.
இந்த இந்திய- பாகிஸ்தான்(சீன) போர் உலகிற்கு பல புதிய யுக்திகளை கடந்த 10 ஆண்டுகளாக புகுத்தியது வெளிவர துவங்கியுள்ளது.
இந்தியா பற்றி தெரிந்ததாலும், இதன் முக்கியத்துவம் அறிந்ததால், சீனா, அக்னிவீர் வந்தபோது அதற்கு எதிராக போராட கோடி கோடியாய் கொட்டி போராட வைத்தது ஏன் என்பது நமக்கு இப்போது புரியுமல்லவா? எனவே இந்திய அரசின் நிலைப்பாடுகளை எமோஷனால பார்ர்க்க கூடாது.
இந்தியா இந்த 88 மணி நேர போரில் 88 ஆண்டுகளாக பயன்படுத்திய போர் யுக்திகளை மாற்றி, ஒரு மகத்தான சாதனையை எல்லா துறைகளிலும் செய்தது என்பதை நாம் மட்டுமல்ல உலகமே புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் குப்பைகளாக மாற துவங்கிவிட்டது. ஆனால் அந்த குப்பை ஆயுதங்களின் உரிமத்தை இந்தியா கேட்டால் கொடுக்குமா என்றால், போஃபோர்ஸ் அனுபவத்தில் சந்தேகம் என்றாலும், அவர்கள் பொருளாதார நிலை, விற்கும் நிலையில் நிறுத்திவிட்டது.
காலம் ஒரு நாள் மாறும், கவலைகள் யாவும் தீரும்! இப்போது வண்டியில் ஓடம்!
இந்துக்களின் எழுச்சி கண்டு, விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் பதட்டம் அடைந்துள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள்.
முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது.
கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக, முத்தமிழ் முருகன் மாநாடு என்று தங்கள் புகழ்பாடியபோது அது அரசியல் மாநாடாகத் தெரியவில்லையா?
முத்தமிழ் முருகன் மாநாடு என்று தலைப்பிட்டு முன் வரிசையில் முஸ்லீம்களை அமர வைத்து மாநாடு நடத்துவது எந்த வகையிலான மாநாடு என பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு விருது வழங்கி திமுக சிறப்பித்த போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகியோருக்கு அரசியலாகத் தெரியவில்லையா?
அரசியலில் ஈடுபடாத சமூக இயக்கமான இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அரசியல் சாயம் பூச முற்படுவதேன்?
தினமும் இந்துக்களின் வழிபாட்டை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போலி மதசார்பற்ற கட்சிகளின் கயமைத்தனத்தை உணர்ந்து, மாநாடு மூலம் இந்துக்கள் விழித்துக் கொள்வார்களே என்ற பயமும் பதட்டமும் இந்து விரோத கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக தலைவர்களின் கருத்துகள் மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவில்லை, திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் தின்று அக்கிரமம் செய்தபோதும், கந்த சஷ்டி கவசம் அவதூறு செய்யப்பட்ட போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவினர் எங்கே போனார்கள்?
இப்போது பக்தர்கள் மாநாடல்ல, அரசியல் மாநாடு என்று கருத்து சொல்பவர்கள் யாருக்கும் அப்போது இந்துக்களின் மன குமுறல் இவர்களுக்கு கேட்கவில்லையே ஏன்?
முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.
மேலும் இந்துக்களின் எழுச்சி அந்தக் கட்சிகளுக்கு பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதை அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகிறது என்பதை மக்களும், பக்தர்களும் உணர்ந்துள்ளார்கள்.
எனவே இதுபோன்று இந்துக்களை திசைத்திருப்பும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட இந்துக்கள் தன்னெழுச்சியாக மதுரை மாநாட்டிற்கு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறோம்.
ஆகவே எதிர்வரும் ஜூன் 22, முருக பக்தர்கள் மாநாடு முருகனின் அருளால் மாபெரும் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.