Home Blog Page 93

ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளின் பணியைச் செய்யும் ‘ஒற்றை நபர்’!

annamalai in trichy meeting - 2026

தமிழகத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் அரசியல் பணியைச் செய்யும் ஒற்றை நபராகத் திகழ்கிறார் தமிழக பாஜக., முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை. தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.

ஜூன் 4 – அன்று அண்ணாமலையின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு, தற்போது தமிழக பாஜக., மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும் கூட, பாஜக.,வினர் மட்டுமல்ல, பொதுவான பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அரசியல் மட்டத்தில் அதிமுக.,வினர், ஓபிஎஸ்., டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. இதன் பின்னணியில் வெளித் தெரிவது, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தலைவராக அண்ணாமலையை ஏற்கின்றனர் என்பதுதான்!

மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், இனி எனக்கு பாரம் தடைகள் எதுவும் இல்லை, அடித்து ஆடுவேன் என்று அண்ணாமலை கூறியதற்கு ஏற்ப, எதிர்க்கட்சியினரின் அரசியலை மிகச் சரியாக, தனது கடமையை செவ்வனே செய்து வருகிறார் என்பது அண்மைக்கால அவரது செயல்பாடுகளில் வெளித் தெரிந்தது.

கடந்த அதிமுக., ஆட்சியின் போது எதிர்க்கட்சி அரசியலைச் செய்து வந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், “எதிர்க்கட்சி என்றால் அரசியல் தான் செய்யும், அது அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று கேள்வி எழுப்பினார். கடந்த நான்கு வருடங்களாக ஆளும் கட்சியாக இருக்கும் திமுக.,வுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து கேள்விகளை எழுப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அதனால் தான் அவ்ரை மட்டும் குறிப்பிட்டு, அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றார் ஸ்டாலின். அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அதிமுக.,வின் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யாமல் அவியல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

அண்ணாமலை பாஜக., தலைவர் பதவியில் நயினார் நாகேந்திரனை அமர்த்திவிட்டு விலகும் போது, இனி தனக்கு சுதந்திரம் கூடியுள்ளதாகவும், தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படி, அண்மைக்காலமாக அவரது செயல்பாடுகள், தொய்வுற்றிருந்த ஊடக மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம் இருவரும் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டித்தும், திமுக., அரசைக் கண்டித்தும் பாஜக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகிரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அண்ணாமலை, குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு தண்டனை தரப்படாவிட்டால் தாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அதிர வைத்தார். ஆனால் அவர் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாகச் சொன்ன நாளுக்கு முன்பே குற்றவாளிகள் கைதானார்கள்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் ஆளும் திமுக.,வின் செயல்பாடு, காவல் துறையின் கண்மூடித்தனமான ஆளும்கட்சி அடிமைப் போக்கு இவற்றைக் கண்டித்து தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்டு, ஒரு சகோதரிக்கு உதவ முடியாமல் போன கையறு நிலையில் வெளிப்படுத்திய காட்சி மக்கள் மனத்தை வெகுவாகவே பாதித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைதான திமுக., நிர்வாகி ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும், ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு இனி இடமில்லை அவ்வாறு கேட்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அரசு வழக்கறிஞர் கூறியது சந்தேகத்தை எழுப்பியது. இந்த விவரமெல்லாம் தெரிந்துதான், இது போன்ற உண்மைகள் வெளிவரக்கூடாது என்ற காரணத்திற்காகவே பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருப்பார் என்ற அறிவிப்பு வெளியானதா? இந்த அறிவிப்பிற்கும் இந்த நிகழ்விற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் மக்கள் கேள்வி எழுப்பிய போது, தான் கையில் எடுத்த விவகாரத்தை மக்கள் முன் வைத்தார் அண்ணாமலை.

யார் அந்த சார்? – அண்ணா பல்கலை கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் 5 மாதத்தில் தீர்ப்பு பெற்றுக் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் ஏராளமாக இருக்கிறது – என்று சொல்லி கேள்விகளை முன்வைத்தார் அண்ணாமலை.

இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே, “ஞானசேகரனின் செல்போன் கால் ரெக்கார்டஸ் என்னிடம் இருக்கிறது, விசாரணை முடியும் போது இதை வெளியிடுவேன்” என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்தார். அதை சொன்னதற்கான காரணம், விசாரணைக் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாமல் போனால் அவர்களும் மாட்டிக்கொள்வார்கள் என்று மறைமுகமான செய்தி அதில் இருந்தது.

அண்ணாமலை சொன்னது போலவே ஞாணசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற விவரத்தை வெளியிட்டார் அண்ணாமலை. அவர் வெளியிட்ட விவரங்கள் – 23 ம் தேதி இரவு பாலியல் சம்பவம் முடிந்த அந்த இரவே ஞானசேகரன் ஒரு காவல்துறை அதிகாரியுடன் பேசியிருக்கிறார். அதாவது குற்ற சம்பவம் செய்த ஒருவர் அது முடிந்த பிறகு காவல்துறை அதிகாரியிடம் பேசியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. 8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு போன் செய்திருக்கிறார். அதே காவல்துறை அதிகாரி 6 நிமிடங்களுக்கு பிறகு ஞானசேகரனுக்கு திரும்ப அழைத்திருக்கிறார். இது பற்றி விசாரிக்கப்பட்டதா என்பது முதல் கேள்வி.

24 ம் தேதி சம்பவம் நடந்த மறுதினம், திமுக.,வைச் சேர்ந்த வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகம் என்பவரிடம் 5 முறை பேசியிருக்கிறார் ஞானசேகரன்.
காலை 7 மணியிலிருந்து 4 மணிக்குள் 5 முறை பேசியிருக்கிறார். அதன் பிறகு காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஞானசேகரன் இரவு விடுவிக்கப்பட்டிருக்கிறார். வெளியே வந்த ஞானசேகரன் மீண்டும் கோட்டூர் ஷண்முகத்திடம் பேசியிருக்கிறார்.

24 ம் தேதி ஞானசேகரனை காவற்துறை எதற்காக விடுவித்தது? திமுக.,வின் வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகம் விசாரிக்கப்பட்டாரா? வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரங்களை அழித்தாரா? சிறப்பு விசாரணைக் குழு பதிவுசெய்த வழக்குகளில் ஆதாரங்களை அழித்தார் என்பதும் ஒரு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் 24 ம் தேதி ஞானசேகரன் விடுதலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

24 ம் தேதி ஞானசேகரன் வெளியே வந்த பிறகு கோட்டூர் ஷண்முகம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியத்திடம் பேசுகிறார். சில நிமிட இடைவெளியில் சுப்பிரமணியம் சண்முகத்தை அழைக்கிறார். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் நடராஜன் என்பவருடன் கோட்டூர் ஷண்முகம் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். 23 ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை இருவரும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியதா என்பது அடிப்படைக் கேள்வி.

அதே போல் 24ம் தேதி இரவு ஞானசேகரன் காவல்துறை விசாரணை முடித்து வெளிவந்த பிறகு, கோட்டூர் ஷண்முகம் ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசுயிருக்கிறார். இதன் பிறகு தான் 25 ம் தேதி தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். – என்ற தனது கேள்விகளை அடுக்கடுக்காக ஒரு புலனாய்வு அதிகாரி முன்வைப்பது போல் மக்கள் முன் வைத்தார் அண்ணாமலை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் பேசும் போதும், வழக்கு போடாமல் தடுப்பதற்கு காவல்துறை முயற்சி செய்தது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பிறகு, “யார் அந்த சார்” என்ற கேள்வி அனைவராலும் கேட்கப்பட்ட பிறகு ஆணையர் அருண் பேட்டியளித்தார். அதில் அண்ணா பல்கலை சி சி டி வி வேலை செய்யவில்லை என்று சொன்னார். ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று சொன்னார்.

ஆனால் இதற்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது என்பது பொதுமக்களுக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அண்ணா பல்கலை வழக்கு விசாரணை பற்றி மூச்சுக்கூட விடாமல் பாதுகாத்து எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை – என்பது போன்ற பல கேள்விகள் இந்தச் சம்பவத்தில் கேட்கப்பட்டு வருகின்றன.

மேலும் சம்பவம் நடந்த 23 ம் தேதியில் இருந்து அடுத்த 10 – 15 நாட்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியம் மீடியா கண்களில் படாமல் காணாமல் போனது ஏன்? அவருக்கும் ஞானசேகரனுக்குமான தொடர்பு குறித்து இதுவரை அமைச்சர் பேசவில்லையே ஏன்? என்ற கேள்விகளும் இப்போது முன்வைக்கப்படுகின்றன.

எந்த ஒரு பத்திரிகையாளரும் மா சுப்ரமணியத்திடம் ஞானசேகரன் குறித்தோ, அவர் வீட்டில் சென்று பிரியாணி சாப்பிட்டது குறித்தோ மா சுப்பிரமணியம் எங்கு சென்றாலும் ஞானசேகரன் பின்தொடர்ந்து வந்தது குறித்தோ அமைச்சரிடம் கேள்வியே கேட்கவில்லையே ஏன்? சம்பவம் நடந்த 10 – 15 நாட்களுக்கு முதல்வரின் நிகழ்ச்சியில் கூட அமைச்சர் மா சுப்பிரமணியம் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வாரா முதல்வர் என்றும் அண்ணாமலையின் கேள்விகளால் பொதுமக்களிடமும் இந்தக் கேள்விகள் வெளிப்படையாகச் சென்றன.

இதனிடையே, இந்த விவகாரத்தில், செல்வப்பெருந்தகைக்கு ஏனிந்த பதற்றம்? என்று கேட்டு அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை. ஒரு பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்சப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன். – என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

https://x.com/annamalai_k/status/1929855807279259943

குறிப்பாக, கல்வி விஷயத்திலும் அவர் எழுப்பிய கேள்விகள் கவனம் பெற்றன. ஆளுநர் விவகாரத்தில் ஆளும் கட்சி கடைப்பிடித்த விரோதப் போக்கு, அதன் உள்நோக்கம் இவற்றை அண்ணாமலை பொதுவில் பேசி மக்களிடம் தெளிவை ஏற்படுத்தினார்.

“சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் ஆட்சியின் சாதனை. திமுக ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ₹ 9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. – என்று கல்வி தொடர்பிலான ஆற்றாமையை வெளிப்படுத்தினார் அண்ணாமலை.

இது போன்று மேலும் பல முக்கியப் பிரச்னைகளை, பொதுமக்களின் மற்றும் வேறூ அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் பெற்றோ பெறாமலோ கேட்கத் தவறிய கேள்விகளை எழுப்பியதன் மூலம், ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை அண்ணாமலை ஒருவரே செய்வது போன்ற பிரமை மக்களிடம் தோன்றியிருக்கிறது.

சபரிமலை: நவக்ரஹ சந்நிதிக்கு அடிக்கல் நாட்டு விழா!

sabarimala navagraha sannidhi foundation - 2026

சபரிமலையில் மளிகை புறம் மஞ்சமாதா கோயில் அருகே நவக்கிரகங்களுக்கு (ஒன்பது கிரக தெய்வங்கள்) அர்ப்பணிக்கப்பட்ட புதிய ஸ்ரீகோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சபரிமலையில் நடைபெற்றது.

காலை 8:30 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சடங்கை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த், வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. அஜிகுமார் மற்றும் சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் இணைந்து நடத்தினர். புதிய ஸ்ரீகோவில் மாளிகாபுரம் அருகே கட்டப்பட்டு வருகிறது.

சமீபத்திய தேவபிரஸ்னம் (ஜோதிட ஆலோசனை) முடிவுகளின்படி, நவக்கிரக ஸ்ரீகோவிலை மிகவும் பொருத்தமான இடத்தில் மாற்றி மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. உத்தராயணம் தொடங்குவதற்கு முன்பு கட்டுமானப் பணிகளை முடிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு இலக்கு வைத்துள்ளது.

சபரிமலை நிர்வாக அதிகாரி பி. முராரி பாபு, நிர்வாக அதிகாரி பிஜு வி. நாத், நிர்வாக பொறியாளர்கள் ஷியாம் பிரசாத் மற்றும் ராஜேஷ் மோகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

திருட்டு நாகரிகம்… வெங்காயம்! அமைச்சருக்கு அண்ணாமலை காரசார பதில்!

annamalai bjp tn leader - 2026

கோவில் திருவிழாவிற்கு அதிகளவில் கூட்டம் செல்வது உண்மையிலேயே நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று திமுக., அமைச்சரவையின் ‘கிறிஸ்துவ’ அடையாளமாகச் சொல்லப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு, முன்னாள் பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை காரசார பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது…

கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்.

கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.

எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?

இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?

தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்.

குற்றாலம் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா மரங்கள் நடல்!

courtallam college environmental day - 2026

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கடைபிடிக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக மரம் நடு விழா நடந்தது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அமிர்தவல்லி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் வசந்தி வரவேற்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

சுயதொழில் பயிற்றுநர் பிரம்ம நாயகம் , மற்றும் விலங்கியல் துறை மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர்.

விழாவில் இணை பேராசிரியர் இசக்கியம்மாள் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாட்டை விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

கோயில் விழாக்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு; பாரபட்சம்?

kadeswara subramaniam hindu munnani - 2026

திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை கூறியதற்கு, “இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடா? இதனை
உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கோரியிருப்பதாவது…

திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருந்தது. தற்போது 14 மாவட்டங்களில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி தொடர்புடைய ஏற்பாட்டாளர்கள் உள்ளாட்சி அமைப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்மீக விழாக்களில் ஆடல் பாடல் மற்றும் ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்துவது ஏன்? என கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பணம் செலுத்தினால் நடத்திக் கொள்ளலாம் என்றால் ஆபாச ஆடல் பாடல்களை நடத்திக் கொள்ளலாமா? எனும் கேள்வி எழுகிறது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தங்களது மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்து மதத்தை தவிர வேற்று மத விழாக்களிலும் இதுபோல சில நிகழ்ச்சிகள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்துமா?

ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் கடவுளை தரிசனம் செய்ய காசு வாங்குகிறார்கள். கடவுளை காட்சி பொருளாக்கி பக்தர்களை பொருளாதார தீண்டாமையை கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.

இப்போது திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்தவும் பணம் செலுத்த வேண்டும் என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் செயலாகும். இந்துக்களின் பழக்கவழக்கங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் மட்டும் மூக்கை நுழைக்கும் உத்தரவாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தலாம், ஆபாசம் கூடாது என சில கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்கிறோம். தவிர பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளுங்கள் என்பது பக்தர்களினுடைய மனதை காயப்படுத்துகின்ற செயலாகும்.

ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்காக செலுத்தும் பணத்தை வைத்து தான் நீர்நிலைகளை தூர்வார வேண்டுமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நீர் நிலைகளை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்கள் அமைப்பது, சமுதாய கூடங்கள் அமைப்பது என்பதெல்லாம் அரசாங்கத்தினுடைய வேலை.

ஒருவேளை இதற்கு பணம் செலுத்தாவிட்டால் நீர்நிலைகளை அரசாங்கம் தூர் வாராமல் அப்படியே விட்டு விடுமா?

தமிழர்களின் கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்ற நூற்றுக்கணக்கான கலைகள் கோவில்களின் மூலமாகத்தான் வளர்ந்தன. ஆனால் இன்று படிப்படியாக பல கலைகள் நம் கண் முன்னே அழிந்து வருகின்றன. கிராமிய கலைஞர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

இதை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்க்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நீதிமன்றமும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளலாம் என்றால் பல கலைகள் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும்.

அப்படியே நீதிமன்றம் சொன்னபடி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை விழா ஏற்பாட்டாளர்கள் செலுத்துகிறார்கள் என்றால், உள்ளாட்சி அமைப்புகள் அந்த பணத்தைக் கொண்டு நீர்நிலைகளை தூர்வாருவார்களா? அல்லது அந்தப் பணத்திலும் ஊழல் செய்வார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது.

இந்து விழாக்களுக்கு மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தத் தீர்ப்பை மாண்புமிகு நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரதிஷ்டை விழா; சபரிமலை கோயில் நடை திறப்பு!

sabarimala panguni uthiram - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது. ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி இன்று அதிகாலை திறந்து வைத்து பூஜை வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.

நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.

அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.

இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது.

இதனைth தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மூல விக்ரகம் ஐயப்பன் சிலை தீ சேதம் ஏற்பட்டது.தற்போதைய சிலை பல ஆண்டுகள் முன்பு வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நாளில் வருடம்தோறும் பிரதிஷ்டை தின பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப் படுகிறது.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பயணிகளின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே நிர்வாகம்!

railway news - 2026
#image_title

பயணிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, ஏசி பெட்டிகளைக் கூட்டியும் ஸ்லீப்பர் பெட்டிகளைக் குறைத்தும் வெளியிட்ட அறிவிப்பை தென்னக ரயில்வே திரும்பப் பெற்றது.

வருகின்ற ஆகஸ்ட் 02/08/2025 முதல் சென்னையிலிருந்தும் (12661) 03/08/2025 முதல் செங்கோட்டையிலிருந்தும் (12662) புறப்படுகின்ற பொதிகை அதிவேக ரயில்களில் 3 ஏசி வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 5 லிருந்து 6 ஆக கூட்டப்பட்டும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 8 லிருந்து 7 ஆக குறைக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்திருந்ததற்கு பயணிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை தற்போது தெற்கு ரயில்வே கைவிட்டது.

இதன் படி ஏற்கனவே தற்போது இயங்கும் ஏசி பெட்டிகள் மற்றும் முன்பதிவு தூங்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் நான்கு முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,ஒரு முதல் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் இணைந்த தூங்கும் வசதி ஏசி பெட்டி , இரண்டு தல இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டிகள் தொடர்ந்து மாற்றமின்றி இயக்கப்படும். இதே போன்று நெல்லை விரைவு ரயிலிலும் வழக்கமான பெட்டிகளும் இயங்கும்.

தொடர் வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இதில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவுத் தொடர் வண்டிகளில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை தொடர் வண்டித்துறை  கைவிட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு; டோல்கேட் வசூல் நிறுத்தம்!

tollgale in madurai - 2026

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுங்க கட்டண தடை உத்திரவை தொடர்ந்து, எலியார்பத்தி சுங்கசாவடி நிர்வாகம் நேற்று நள்ளிரவு முதல் வாகனைகளுக்கு கட்டணமில்லா சேவை.

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு உற்பட பல்வேறு உள்கட்ட அமைப்பு பணிகளை நிறைவேற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் எலியார் பத்தி டோல்கேட் முதல் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடைவிதித்தது.

எலியார் பத்தி டோல் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையாணையை மீறி சுங்க கட்டணத்தை நிர்வாகம் வசூல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமுக நல அமைப்புகள் எதிர்பினால் சுங்க கட்டண விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சுங்க கட்டண ரத்து உத்தரவு நகல் எலியார்பத்தி டோல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டணம் இன்றி சேவை வழங்கப்படுகிறது.

நேற்று முன் தினம் மதுரை எலியார் பத்தி சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்ற தடை உத்தரவு நகல் வரும் வரை கட்டணம் வசூல் தொடரும் – எலியார் பத்தி சுங்க சாவடி நிர்வாகம் அறிவித்து கட்டணம் வசூல் செய்தது.

மதுரை எலியார்பத்தி டோல்கேட் நிர்வாகம் சுங்க கட்டணம் வசூலிப்பதை தொடர்ந்து பொதுமக்களுக்கும் சமூக அலுவலருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் எலியார்பத்தி டோலில் சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மன் சிம்ம வாகன பவனி!

janagai mariamman temple utsav - 2026

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இரண்டாம்நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படிதாரர் பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு திருக்கோவிலில் இருந்து அம்மனை அழைத்துச் சென்று பூமேடு தெரு உச்சிமாகாளி அம்மன் கோவில் முன்பாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன்‌ வாண வேடிக்கை அதிர்வேட்டுகள் மேளதாளங்கள் முழங்க அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

சோழவந்தான் கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளிமயில் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தத்கால் ரயில் முன்பதிவுக்கு இனி இ-ஆதார் கட்டாயம்!

railway news - 2026
#image_title

தத்கால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கு இனி இ ஆதார் கட்டாயமாகிறது. இதனை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகத் தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். முன்னதாக போலிகளைக் கண்டறிந்து களை எடுக்கும் வேலையை ஐஆர்சிடிசி தளத்தில் துவங்கியுள்ளதாக தெரிவித்த நிர்வாகம் இரண்டரை கோடி போலி பயனர் ஐடிகளை நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விடுவதாகவும், இடைத்தரகர்கள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்வதாகவும் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க ரயில்வே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தத்கால் முன்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அவர் தனது சமூக தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள குறிப்பில், தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதாவது, ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பது அவரது அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இதன் மூலம், ஆதார் எண் இணைத்து வெரிபிகேஷன் – சரிபார்ப்பு செய்து வைத்திருக்கும்  பயனர் கணக்கில் இருந்து மட்டுமே தத்கால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் ஓடிபி என்ணை பதிவு செய்த பிறகே டிக்கெட் புக் செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கவுன்ட்டர்களில் தத்கால் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படக்கூடும். 

ஏற்கனவே ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் பயனர் கணக்குகளுக்கு ஆதார் எண் சரிபார்ப்பு நடைமுறை உள்ளது.  அதன் மூலம் டிக்கெட் பதிவு செய்யப்பட்டும்  வருகிறது.  எனினும் அது கட்டாயமாக்கப்படுவது தற்போது உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் வசதியாக இருக்கக் கூடும்.  

சாதாரண டிக்கெட் முன்பதிவு என்பது, ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னதாகவே செய்ய முடியும். மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகிறது. ஏசி வகுப்பு தத்கால் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளுக்கான டிக்கெட் 11 மணிக்கு முன்பதிவு செய்ய முடியும்.