
91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற வீட்டு வேலைக்காரன் மற்றும் கூட்டாளிகள் 4பேர் கைது.
தெற்கு டெல்லியில் வயதான தம்பதிகள் கிருஷ்ணன் கோஷ்லா (வயது 91), மனைவி சரோஜா கோஷ்லா (87) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனா்.
இவர்கள் வீட்டில் பீகாரைச் சேர்ந்த கிஷன் என்பவா் கடந்த ஓரு வருடத்திற்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் வேலைபார்த்து வந்துள்ளார்.
கிருஷ்ணன் வேலைக்கார கிஷனிடம் அளவுக்கு அதிமாக வேலை வாங்கிய விதத்தால் கிஷன் அதிருப்தியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன் கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் தனது கூட்டாளிகள் 5 பேரின் உதவியோடு மயக்க ஸ்பிரே அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் டெம்போவில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து வந்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அங்கு மாட்டப்படடிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டிற்கு வெளியே டெம்போவில் குளிர்சாதன பெட்டியுடன் காணப்பட்டார்.
வாட்ச்மேன் கிஷனிடம் இது குறித்து கேட்டபோது அவர் குளிர்சாதன பெட்டியை ரிப்பேர் செய்வதற்காக எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார்.
கடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில், குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டெம்போ பிரதீப் சர்மா என்பவரது வீட்டிற்கு வெளியே இருந்து மீட்கப்பட்டது.
குளிர்சாதன பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு முதியவா் கிருஷ்ணன் மீட்கப்பட்டார்.
இது சம்பந்தமாக கிஷன் மற்றும் அவனது கூட்டாளிகள் தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



