தில்லியில் போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலித்து வந்தனர். இந்தநிலையில், தில்லியில் நேற்று ஒருவருக்கு விதியை மீறியதால் போக்குவரத்து போலீசார் ரூ 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர்.
அந்த வாகனத்தை கொளுத்தியவர் பெயர் ராகேஷ் என்றும், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால், ரூ.11 ஆயிரம் அபராதம் என்று போக்குவரத்து காவலர் எச்சரிக்கை மட்டுமே செய்தனர். அபராத நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் வாகனத்துக்கு தீ வைத்துள்ளார் என்று காவலர் தரப்பில் கூறியுள்ளனர்.