
முத்தலாக் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று முத்தலாக் விவகாரத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை லக்னோவில் சந்தித்து பேசினார்.
அவர்களுக்கு மத்தியில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் பேசுகையில், “இந்து சமுதாயத்திலும் ஒரு பெண்ணை மணந்துவிட்டு விவகாரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
திருமணம் செய்துவிட்டு பெண்களை கைவிடும் ஆண்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தடுக்க எங்கள் அரசு பாடுபடும். முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வரும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச அரசு துவங்க உள்ளது.

அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உதவி தொகை வழங்கப்படும்.
முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு இல்லை என்றால் அரசே அவர்களுக்கு வீடு வழங்கும்.
அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகையும் மருத்துவ உதவியும் ஆயூஸ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும்” என்றார்.



