அயோத்தி தீர்ப்பு: ரஜினி பட நாயகி சொல்வது என்ன?

அடடே... அப்படியா? சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
huma qureshi - 2026

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், காலா படத்தில் ரஜினியுடன் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

என் அன்பான இந்தியர்களே, அயோத்தி கேஸில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும். நாம் அனைவரும் ஒன்றாக குணமடைந்து இதிலிருந்து ஒரு தேசமாக முன்னேற வேண்டும் !என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.