மதுரை உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை : கடைக்காரர் கைது
மதுரை மே 1உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர் .
மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கே.புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அந்தக் கடையிலிருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பதுக்கி வைத்திருந்த 85 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சுந்தரராஜனை கைது செய்தனர்.
மதுரை திருப்பாலையில் உடனடியாக திருமணம் செய்துவைக்க மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை!
மதுரை மே 1 திருப்பாலைபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு உடனடியாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் மனமுடைந்தவர்வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை கண்ணணேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து மகன் அருண்பாண்டி 26.இவர் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரை வற்புறுத்தி வந்தார்.
இதற்கு காலதாமதம் ஆனதால் மனமுடைந்த அருண்பாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துஅவருடைய பாட்டி திருப்பாலை போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதத்தில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல்? ஒருவர் கைது
மதுரை மே 1: முன்விரோதம் காரணமாக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பாலை மேல தெருவை சேர்ந்தவர் பாலாஜி 47. இவருக்கும் திருப்பாலை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த காசிதவம் 44 என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணன் நகர் பகுதியில் நடந்து சென்ற பாலாஜியை வழிமறித்த காசி தவம் அவரை அவரை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார் .
இந்த சம்பவம் குறித்து பாலாஜி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காசிதவத்தை கைது செய்தனர்.