ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தவர் இப்போது மாதம் 5 லட்சம் சம்பாதிக்கிறார். ஏழை இளைஞனின் வாழ்வை மாற்றியமைத்த யூடியூப் சேனல்.
ஏழையாகப் பிறப்பது தவறு அல்ல. ஆனால் ஏழையாகவே வாழ்வது தவறாகும்.
ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இருந்த ஒரு பட்டியல் சமுதாய இளைஞன் தற்போது யூடியூபில் ஒரு மாதத்திற்கு ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார். இவரைப் பார்த்து பலரும் ஆர்வமும் உற்சாகமும் கொண்டுள்ளார்கள்.
ஒடிசா சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முண்டா என்ற இளைஞர் தினக்கூலி பணி செய்து வந்தார். லாக்டவுன் காரணமாக வேலை இல்லாமல் சோற்றுக்கு வழியில்லாமல் தவித்தார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில்… தன் நண்பனின் மொபைல் போனில் யூடியூப் ஃபுட் ப்ளாகர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்த போது தானும் ஒன்று செய்யலாமே என்று நினைத்தார். ஆனால் அவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை.
மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார். அதில் முதல் வீடியோவாக தனக்கு கிடைத்த உணவை ஒரு தட்டில் சோறு, , ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய், ஒரு சமைத்த கீரை வைத்துக்கொண்டு சாப்பிடுவதை வீடியோ எடுத்து போஸ்ட் செய்தார்.
இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்தது. அவ்வாறு ஆரம்பித்த யூடியூப் சேனலுக்கு தற்போது 7 லட்சத்திற்கும் மேலாக சப்ஸ்க்ரைபர்கள் உள்ளார்கள். இப்போது அவர் ஒரு மாதத்திற்கு யூ டியூப் மூலம் ரூ 5 லட்சத்திற்கு மேலாக சம்பாதிக்கிறார்.
இதுகுறித்து அந்த இளைஞர் பேசுகையில் நான் எடுக்கும் வீடியோக்களில் என் வீடு என் கிராமம் கிராம வாழ்க்கை குறித்து வீடியோ எடுக்கிறேன். இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றிகள். தற்போது கிடைத்த பணத்தில் என் பெற்றோருக்கு ஒரு வீடு கட்டி தந்துள்ளேன் என்று கூறுகிறார்.
தன் லட்சியம் வீடியோவில் இருந்து பணம் சம்பாதிப்பது அல்ல என்றும் தங்கள் கிராமத்து மக்களின் பழக்கவழக்கங்கள் பற்றி மக்களிடம் புரிதலை ஏற்படுத்துவது என் நோக்கமாக உள்ளது என்றும் கூறுகிறார்.
தற்போது இவருடைய வீடியோக்கள் சோஷல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அவர் எடுத்த முதல் வீடியோ…