கோபத்தில் டிவி., மீது கல்லெறிந்து உடைத்த சிறுவன்! ஏன் தெரியுமா!?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tvbreak3 - 2026

அனைவருக்கும் உதவி புரியும் சோனூ சூடை அடிப்பீங்களா என்று கேட்டு டிவியை உடைத்த ஒரு சிறுவனின் செயலுக்கு ஹெல்பிங் ஸ்டார் பதிலளித்தார்.

இவ்வாறு டிவியை உடைக்காதீங்கப்பா! என்று டுவிட் செய்தார். சங்காரெட்டி மாவட்டத்தில் விராட் என்ற 7 வயது சிறுவன் டிவியில் தூக்குடு என்ற திரைப்படம் பார்த்துகொண்டு இருந்தான். அதில் ஹீரோ மகேஷ்பாபு வில்லன் சோனு சூடை அடிப்பதை பொறுக்க இயலாமல் போனான்.

கஷ்ட காலத்தில் சேவை செயல்கள் புரிந்து ஏழைகளுக்கு உதவும் சோனூசூடை அடிப்பீங்களா என்று கோபம் கொண்ட விராட் ஒரு கல்லை எடுத்து வந்து டிவி மீது எறிந்து டீவியை உடைத்தான். இந்த வீடியோ வைரல் ஆகி சோனூசூடு வரை சென்று சேர்ந்தது.

tvbreak2 - 2026

“இவ்வாறு டிவியை உடைக்காதீங்கப்பா! அவனுடைய அப்பா என்னை டிவி வாங்கித் தரச் சொல்வார்” என்று சமத்காரமாக பதிலளித்தார் சோனூசூட்.

இனி வரும் படங்களில் சோனூசூடை வில்லனாக காண்பித்தால் மக்கள் தியேட்டரையே நொறுக்கி விடுவார்கள் என்று நெட்டிசன்கள் காமெண்ட் செய்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.