மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்களின் குறைகளை பற்றி எண்ணாமல் தன் வீட்டில் இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்று சமையல் குறிப்புகள் பார்த்துக்கொண்டிருந்த பெண் அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனுக்களை கொடுத்தனர்.
அப்போது ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி சுமதி, தனது செல்போனில் சமையல் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்திருந்தார். இதை சிலர் கவனித்துவிட்டு அவர் யூடியூப் பார்ப்பதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர்.
கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இப்படி நடந்துகொள்ளும் அதிகாரியை அம்பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் அந்த அதிகாரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.