நவீன வாழ்க்கை முறையில் பீரியட் காலத்தை எதிர்கொள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பேருதவிப் புரிகின்றன.
சானிட்டரி நாப்கின்கள் இல்லாத பெண்களை இப்போது கற்பனை கூட செய்ய முடியாது. புதுமை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன், இந்த நாப்கின்கள் பீரியட்ஸ் அசௌகரியத்தை பெருமளவில் குறைக்க உதவியுள்ளன.
இதன் காரணமாக தாமதமாக வேலை செய்வது, விளையாடுவது மற்றும் பள்ளிகள், கல்லூரி வகுப்புகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் தற்போது பெண்களுக்கு ஒரு சங்கடமான விவகாரமாக இருப்பதில்லை.
மேலும் தற்போதைய காலகட்டத்தில் டாம்போன்கள் மற்றும் மாதவிடாய் கப் போன்ற பல விருப்பங்கள் இருந்தாலும், பெரும்பாலான பெண்களின் முதல் தேர்வாக இருப்பது சானிட்டரி பேட்கள் மட்டுமே
ஒவ்வொரு மாதமும் சானிட்டரி பேட்களை பயன்படுத்தும் பெண்கள், அவை போதுமான அளவு பாதுகாப்பாக இருக்கிறதா?, நீண்ட காலத்திற்கு அவை நோயை ஏற்படுத்தாமல் இருக்குமா? என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
நீங்கள் இதுபற்றி கூகுள் செய்து பார்த்தல், சானிட்டரி பேட்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று சில ஆய்வுகளும், அதேநேரத்தில் அவை முற்றிலும் பாதுகாப்பானவை என்று சில ஆய்வுகளும் கூறுவதைக் காணலாம்.
இது மிகுந்த குழப்பத்தையும் பயத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தலாம். இந்த பதிவில் சானிட்டரி பேட்கள் எவ்வளவு பாதுகாப்பானவை, அவை புற்றுநோயை ஏற்படுத்துமா? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சானிட்டரி பேட்கள் மிகவும் பாதுகாப்பானவை. ஆனால் சானிட்டரி பேட்கள் மூலம் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதாக சில அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
ஏனெனில் அவை டையாக்ஸின் மற்றும் சூப்பர்-அப்சார்பெண்ட் பாலிமர்கள் போன்ற உறிஞ்சும் மூலக்கூறுகளை பயன்படுத்துகின்றன.
இதன் காரணமாக இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கக்கூடிய டையாக்ஸின் உடலில் குவிந்து, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
டையாக்ஸின் ஒரு புற்றுநோயாகும் (carcinogen). அதாவது இது உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது. சானிட்டரி பேட்களின் உறிஞ்சும் திறனை அதிகரிக்க அவை பிளீச் செய்யப்படுகின்றன.
ப்ளீச்சில் டையாக்ஸின் உள்ளது.
டையாக்ஸின் ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதன் காரணமாக பெண்களுக்கு தொற்றுநோய் எளிதில் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இந்த டையாக்ஸின் செக்ஸ் ஹார்மோன் என்று அழைக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் போன்ற இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்தியையும் இது பாதிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
மேற்கண்ட ஆபத்தை குறைக்க சானிட்டரி பேட்களை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
- உங்களுக்கு அதிக மாதவிடாய் போக்கு இல்லாவிட்டாலும் கூட, சானிட்டரி பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டும். 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும் மாற்றுவது அவசியம்.
- சிறுநீர் குழாய் தொற்றுக்கான (UTI) வாய்ப்புகளை குறைக்க பீரியட் சமயங்களில் நீரேற்றமாக இருங்கள். அதிகஅளவில் தண்ணீர் அருந்துங்கள்.
- எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணிந்து பெரினியல் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
- சுத்தமான ஆர்கானிக் பேட்களை தேர்வு செய்வது நல்லது.
- நறுமணம் வீசும் பேட்களை தேர்வு செய்ய வேண்டாம்
- பொது வாஷ்ரூம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- உங்கள் யோனி அதாவது பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி ஏதேனும் தடிப்புகள் அல்லது அரிப்புகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.