மதுரை தியாகராசர் கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தட்டச்சர், பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது.
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே ஆர்வமுள்ளவர்கள் 12-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர், தட்டச்சர், பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர் மற்றும் பல பணியிடங்களை நிரப்ப 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்த பட்ச கல்வித்தகுதி மற்றும் உயர் கல்வியும் பரிசீலிக்கப்படும்.
வயது வரம்பு:
பொ.பி-30 வயது, பி.வ-32 வயது, மி.பி.வ, மி.பி.வ.(வ) மற்றும் சீ.ம.வ-32 வயது, தா.வ, மற்றும் தா.வ.(அ)-35.
சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தமிழ்நாடு அரசு விதிகளின் படி, சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு // பணியிடத்திற்க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140, காமராசர் சாலை, தெப்பக்குளம், மதுரை-9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் வந்து சேர வேண்டும். “விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்திலும், முத்திரையிடப்பட்ட உறையிலும் விண்ணப்பிக்ககூடிய பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும்.
இணைப்புகள் :
கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள்:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் புதுப்பிக்கப்பட்டு இருந்தால் அதற்கான நகல்
சாதிச் சான்றிதழ் நகல்.
ஆதாவற்ற விதவை எனில் வருவாய் கோட்ட அலுவலர்/உதவி கலெக்டர்/சப்கலெக்டர் வழங்கிய தகுதியான சான்றிதழின் நகல்
தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் நகல்.