ஒப்போ ஏ54 எஸ் சாதனம் குறித்த அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.
ஒப்போ ஏ54 இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது நிறுவனம் அதன் வாரிசாக ஒப்போ ஏ54 எஸ் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஒப்போ ஏ54 எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள், விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.
இதுகுறித்து டிப்ஸ்டர் சுதன்ஷு அம்போர், மைஸ்மார்ட் பிரைஸ் உடன் இணைந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கசிவுத் தகவலின்படி, ஒப்போ ஏ54 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது.
இது இரண்டு வண்ண விருப்பத்தில் வருகிறது. இது பேர்ல் ப்ளூ மற்றும் படிக கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது.
டிப்ஸ்டர் தகவலின்படி, ஒப்போ ஏ54 எஸ் ஸ்மார்ட்போனானது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.17,200 மற்றும் ரூ.21,600 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்களையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 எஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளுடன் வர வாய்ப்பிருக்கிறது.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது 720×1600 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இந்த சாதனம் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இது 89.2 சதவீத திரை விகிதத்துடன் வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் இதில் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அம்சத்துடன் இந்த சாதனம் வருகிறது.இது எல்இடி ஃபிளாஸ் உடன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. நீர் எதிர்ப்புக்கு ஐபிஎக்ஸ்4 மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தோடு வருகிறது. அதேபோல் 90.5 சதவீத டிஸ்ப்ளே டூ பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.
மேலும் இதில் அட்ரினோ 619 ஜிபீயூ, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.13,490 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,990 ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் வசதியோடு வருகிறது.