திருப்பதி தேவஸ்தானம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
thirupathi-temple
thirupathi-temple

உலக சாதனை புத்தகத்தில் திருப்பதி தேவஸ்தானம் இடம்பெற்றுள்ளது. பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, திருப்பதியில் இலவச உணவு பெரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. மற்ற ஆண்டுகளில் திருப்பதி மலைக்கு ஒவ்வொரு வருடமும் 2 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர்.

அவர்களின் 50 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதனைத் தவிர லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்கிறார்கள் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத அளவில் இந்த எண்ணிக்கை திருப்பதியில் உள்ளது. அதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.