
பொதுவாக பெண்கள், திருமணநாள் பிறந்த நாள், முதலில் பார்த்த நாள், என்று அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது உண்டு.
ஆனால், ஆண்களை பொறுத்தவரை இது போன்ற நாள்களை நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் கணவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சம் கிடையாது. அது அத்தனை பெரிய காரியமாக இல்லையென்றாலும் கூட, அதை நினைவில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமாக கருதுகின்றனர்.
இப்படி ஒரு நாளை மறந்துவிட்டால், அதை விட கடினமான ஒரு நாளே கிடையாது என்ற அளவிற்கு பல வீடுகளில் பல கொடுமைகள் நடப்பது உண்டு.
ஆனால் மனைவிகள் கொடுப்பதெல்லாம் தண்டனையாக கருதவேண்டாம். ஏனென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். சமோவா என்ற நாடு, பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாலிநேசன் தொகுப்பில் உள்ளது.

இந்த நாட்டில் உள்ள சட்டம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த சட்டப்படி கணவன் தன் மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவனுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுமாம்.
ஏனென்றால், அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. கணவன் தெரியாமல் கூட தன் மனைவியின் பிறந்தநாளை மறக்க கூடாது.
இப்படியாக மறந்தால் அதன் பின் கம்பி தான் எண்ண வேண்டும். மனைவி தன் கணவன் தன் பிறந்தநாளை மறந்துவிட்டதாக புகார் அளித்தால் உடனடியாக ஜெயில் தான்.
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் முதன்முறை மறந்துவிட்டால் அப்பொழுது எச்சரிக்கை விடுக்கப்படும், தொடர்ந்து இரண்டவது முறையாக மறந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவார்.