
பூனைகளுக்கு பால் மிகவும் பிடித்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நம் வீடுகளில் எலிகளை வேட்டையாடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
இது தவிர மீன்களையும் பூனைகள் மிகவும் விரும்பி சாப்பிடும். ஆனால் இன்று நீங்கள் பார்க்கும் ஒரு வீடியோவில், மீனையும் வெறுத்து ஒதுக்கும் ஒரு சைவ பூனையை காணலாம்
வைரலாகும் சைவ பூனை வீடியோ
பூனைகள் எலிகளைத் தவிர, மீன்களையும் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மீனைப் பார்த்தவுடன் பூனை வாந்தி எடுப்பதைக் காணலாம்.
இந்த காணொளியில், அதன் எஜமானர் மீண் ஒன்றை அதன் வாயிடம் கொண்டு சென்றதுமே, பூனைஓடுவதை காணலாம். காணொளியை பார்த்ததும் இந்த பூனை சைவமா அசைவமா என்று பலரும் வியக்கிறார்கள்.
my_cat_baron என்ற பக்கத்திலிருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிரப்பட்டது. பூனையின் பெயர் பரோன். இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கிலும் கணக்கு உள்ளது.
இந்தக் கணக்குகலில் பூனையின் எஜமானர் பதிவுகளை இடுகிறார். சில நாட்களுக்கு முன்பு, எஜமானி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மீனைப் பார்த்ததும் பூனை வாந்தி எடுப்பதைக் காணலாம்.
எஜமானி தனது பூனைக்கு இரால் கொடுப்பதை வீடியோவில் காணலாம். முதலில், பாரோன் இரால் பார்த்த பிறகு பின்வாங்குகிறது.
ஆனால் எஜமானி மீண்டும் மீனை அதன் முன் கொண்டு செல்லும் போது, பூனை வாந்தி எடுக்கத் தொடங்குகிறது.
பரோனின் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரோனை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.