
- செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி.
ஹைதராபாத்தை சேர்ந்த காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் இணைந்து ஜூம் காணொளி வழியாக சமீபத்தில் நான்கு அமர்வுகளில் நடந்த கவிஞர்களின் சபையில் மொத்தமாக 120 கவிஞர்கள் பங்கேற்றனர்.
காவிய குமுதி குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பன்மொழிக் கவிஞர் டாக்டர். குமுத் பாலா அவர்களின் முன்னிலையில் நான்கு அமர்வுகளில் முறையே பாலசந்திரன் நாயர் ( திருவனந்தபுரம்), டாக்டர் பாரமித்ரா முகர்ஜி முல்லிக் (மும்பை), காயத்ரி லகியானி சாவ்லா ( மும்பை), அருந்ததி முகர்ஜி ( கோல்கட்டா), ஜாகீர் மாலிக் ( காஷ்மீர்), ப்ரொபஸர் தீபா ஜார்ஜ் ( கேரளா), ப்ரீத நம்பியார் ( மைசூர்), மஞ்சுளா அஸ்தானா மஹந்தி (புவனேஷ்வர்), ஷிவ்வாத் ஷஹ்ர்ஹியார் ( பங்களாதேஷ்), அலாபாடி (ஹைதராபாத்), டாக்டர் மரியா ஃபெர்னாண்டா வில்லா மிக்லியரோ (உருகுவே) மற்றும் டாக்டர் ஸ்ரீநிவாஸ வாசுதேவ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் டாக்டர் மனோஜ் கிஷோர் நாயக் தான் பேசும் போது வெளிவர இருக்கின்ற காவிய காமுதி குழுமத்தின் இ- புத்தகம் பற்றியும், கவிதை தொகுப்பு பற்றியும் விளக்கமளித்தார்.
குழுமத்தின் 120 கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை வாசித்து உலகில் மனங்களை இணைக்கும் அற்புதமான விஷயம் கவிதைகளுக்கே உரித்தாகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தனர்.
முன்னதாக கவிஞர்கள் சபை புரட்சிக் கவிஞர் பாரதியாரை நினைவுக் கூறியது. கவிஞர்கள் குன்னூருக்கு அருகில் வீர மரணத்தை எய்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தனர்.
ஹரி சந்தனா, மைதிலி, உதய்ஸ்ரீ, கே. மஞ்சுளா இறை வணக்கப் பாடல்களை முறையே நான்கு அமர்வுகளில் பாடினர்.
ராஜீவ் மூதேடத், குல்னார் ரஹீம் கான், பங்குரி சின்ஹா மற்றும் சுதா குமாரி ஜுஹி ஆகியோர் தாம் கலந்துக் கொண்ட அமர்வில் நன்றியுரை வழங்கினர் . கவிஞர்கள் சபையை டாக்டர் குமுத் பாலா அழகாய் தொகுத்தளித்தார்.