இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அப்டேட் செய்வது எப்படி?
முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request and Inquiry என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் online nomination என்பதை கிளிக் செய்தால் வங்கிக் கணக்கு விவரங்கள் வரும்.
அதில் நாமினி பெயர் மற்றும் மற்ற விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.
அதைப் பதிவிட்ட பிறகு சரிபார்ப்பு நடைபெற்று நாமினியின் பெயர் சேர்க்கப்படும். எஸ்பிஐ வங்கியின் யோனா ஆப் வழியாகவும் நாமினியின் பெயரை சேர்த்து கொள்ளலாம். நம்முடைய வங்கிக் கணக்கில் நாமினி பெயரை இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்று.
ஏனெனில், கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவருடைய பணம் முழுவதையும் நாமினி பெயர் மூலமாக பெற்று விடலாம். எனவே நாமினி பெயரை உடனடியாக இணைப்பது நல்லது.