
பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான பல வீடியோகளை நாம் காண்கிறோம். சில காணொளிகள் பார்த்தவுடன் அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் உள்ளன. இப்படி கூட மணமேடையில் நடக்குமா என வியக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.
சில சமயம் மாலை மாற்றும் சடங்கின்போதே மணமக்கள் பிரிந்துவிடுவதுண்டு. இப்போது அதேபோன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.
இதைப் பார்த்த பிறகு, மணப்பெண் ஏன் தனது திருமணத்தை திடீரென முறித்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம்.
சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோ-வில், மணமக்கள் திருமண சடங்குகளில் பங்கேற்க மணமேடையில் நின்றிருப்பதை காணமுடிகின்றது.
மாலை மாற்றும் சடங்கு துவங்கும்போதே, திடீரென மணப்பெண்ணின் கோபம் அதிகமாகி மணமகன் மீது அவர் கடுப்பாவதைக் காண முடிகின்றது.
கோபத்தில் தனது மாலையை கழற்றிய மணப்பெண் மேடையிலேயே அதை வீசி எறிகிறார். தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் அவர் மேடையிலேயே கூறுகிறார்.
மணப்பெண் செய்த வேலையை பார்த்து அவரது தந்தை கோபமடைகிறார். தந்தைக்கு பதிலளித்த பெண், தான் பிஎட் படித்துள்ளதாகவும், தனக்கு படித்த மாப்பிள்ளை வேண்டும் என்றும் கூறுகிறார்.
மணமகள் திருமணத்தை முறித்துக் கொண்டதால் அவரது தந்தை கோபமடைந்தார். ஆனால் மணமகள் தான் மிகவும் படித்தவர் என்றும், படிக்காதவரை திருமணம் செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.
மேலும் கதறி அழுத மணமகள், தான் ஏற்கனவே திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக கூறுகிறார். திருமணம் தொடர்பான இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது.
இதற்கு பல பயனர்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.