December 7, 2025, 11:05 AM
26 C
Chennai

“கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019- பதினெட்டாம் பேரு-நாளை

“கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)-ஆடி-18 ஸ்பெஷல்-03-08-2019-
பதினெட்டாம் பேரு-நாளை

1)புளியோதரை2)எலுமிச்சம்பழ சாதம்3) தேங்காய் சாதம்-மற்றும் எள்ளு
.

புளியோதரை
38122627 2088693664509121 1968553996188647424 n - 2025
தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1 டீஸ்பூன்

புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:

புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)

சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.

பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியைசேர்க்கவும்..முந்திரிபருப்பு, வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.

எலுமிச்சம்பழ சாதம்.

தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து’

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.

சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.

உப்பு வறுக்கவேண்டாம்.

மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.

4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)

தேங்காய் சாதம்

தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது

தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி

செய்முறை

பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.

சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்
கொள்ளவும்.

ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்

காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் ‘சித்ரான்னம்’ என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.

எள்ளு சாதமும் செய்யலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories