“தேசிய கீதமும்- தேசியக் கொடியும்”
(பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்)


கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-33
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
ஓர் ஆகஸ்ட் 15-ம் தேதி. ஸ்ரீமடம், ஒரு கிராமத்தில் முகாம். உள்ளூர் அன்பர்கள் சிலர், பெரியவாளிடம் வந்து, ‘தேசியக் கொடி ஏற்றி வைக்க வேண்டும்’ என்று இரண்டு நாள் முன்னதாகவே வந்து கேட்டுக் கொண்டார்கள்.
“உள்ளூர் பெரிய மனுஷ்யாளைக் கூப்பிட்டுக்கொடி ஏத்தச் சொல்லுங்கோ …முனிசிபல் சேர்மன்,பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட் இப்படி-பெரியவா அதேபோல் ஏற்பாடாகி விட்டது.
கொடியேற்றும் நேரத்தில் பெரியவாள் அந்தப் பக்கம் சென்று, சற்றுத் தொலைவில் இருந்தபடி நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்து விட்டு, தேசிய கீதம்’ பாடும்போது பக்தி பரவசமாக நின்றார்கள்.
இதேபோல் இன்னொரு சுதந்திர தினம். பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டு விட்டு, சாக்லெட், தேசியக் கொடி சகிதம்,சில மாணவர்கள் பெரியவாளிடம் வந்தார்கள்.
ஒரு குழந்தை ஒரு தேசியக்கொடியைப் பெரியவாளிடம் நீட்டி, “மேல் துண்டிலே குத்துங்கோ” என்றது.
“நான் ஸ்நானம் பண்ணிட்டு மடியா இருக்கேன். அதனாலே, அதோ என்னோட பல்லக்கு இருக்கு பார், அதிலே ஒட்டிடு.
குழந்தை சந்தோஷமாய் ஓடிச் சென்று ஒட்டி விட்டு வந்து நமஸ்காரம் செய்தது.
பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்.



