December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

athivarathar durga stalin - 2025

காஞ்சிபுரத்தில், அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அடையும் துயரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது #அத்திவரதர்_வைபவம். வெள்ளிக்கிழமை இன்று காலையே கூட்டம்தான். அடுத்த மூன்று நாட்களும் கூட்டம் அதிக இருக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. ஆகவே வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் காஞ்சி உள்ளூர் நிலவரத்தைத் தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள் என்று கூறுகின்றார்கள் உள்ளூர் அன்பர்கள்.

தாம்பரம் – படப்பை காஞ்சிபுரம் வழி பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலால் திண்டாடுகிறது. விஐபி பாஸ் கிடைக்கும் என்ற நம்பிகையில் இங்கு உள்ளூர்வாசிகளை நம்பி வரவேண்டாம் என்று கூறுகின்றார்கள் உள்ளூர்க்கார்கள். போலீஸார் கெடுபிடி அதிகம் என்பதால் உள்ளூர்க்காரர்களே திண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், கட்சிக்காரர்களும், குறிப்பாக திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் செல்வாக்கைக் காட்டவும், பயன்படுத்தியும், மாவட்ட ஆட்சியரகத்தை துவம்சம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலும் காஞ்சிபுரம் அதிகம் எதிரொலிக்கிறது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறால் நான்கு பக்தர்கள் உயிரிழப்பு..! – செய்தி
கலெக்டரே… திமுக ரவுடிகளின் குடும்பங்களுக்கு VVVVIP பாஸ் கொடுத்து புடுங்குறதெல்லாம் இருக்கட்டும், கொஞ்சம் சாதாரண மக்களையும் கவனத்தில் கொள்ளுங்கோ.. -சத்யா
– என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 4 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளது அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டமிடல் இல்லாததே காரணம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நி உதவி தரவேண்டும் -ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, அத்திவரதருடன் பக்தரை அர்ச்சகரும்… ரவுடிகளை திமுக.,வினரும் சேர்த்து வைக்கிறார்கள் என்று கூறுகின்றார்கள் பக்தர்கள். அத்தி வரதருக்கும் ரவுடிகள், திமுக.,வினருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பும் அவர்கள், ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர் என்று ஆட்சியர் பரபரப்பு தகவல் வெளியிட்டதைக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எவருமே டோனர் பாஸ் இல்லாமல் வந்ததாகக் கூறப் படுகிறது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது! ஆனால், டோனர் பாஸ் கூட் ஐல்லாமல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு இந்து அறநிலை துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே அளவிலான மரியாதையை ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வழங்கப் பட்டது கண்டு உள்ளம் குமுறுகின்றார்கள், வரிசையில் கால்கடுக்க நின்றவர்கள்.

varichiyur selvam1 - 2025இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்வது போன்ற வீடியோக்கள் எனது கவனத்திற்கும் வந்தது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, வரிச்சூர் செல்வத்தை திமுக பிரமுகர்கள் அழைத்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள், உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் விவிஐபி நுழைவு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

rasathiammal - 2025திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்திவரதரில் ஆர்வம் காட்டும் திமுக.,வினர் குறித்து பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்கின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா, கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் என குடும்பத்தினரே ஆவலுடன் வந்ததும், ரவுடி ஒருவரை திமுக பிரமுகர்கள் எந்தவித அனுமதி சீட்டும் இன்றி அழைத்து வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories