பட்டாணி சுண்டல்—-நவாத்திரி ஸ்பெஷல்
நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை 06-10-2019
நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)
பட்டாணி சுண்டல்
தேவையான பொருட்கள் :
பட்டாணி : 1/2 கிலோ (முதல் நாள் ஊறவைக்கவும்)
உப்பு : தேவையான அளவு
மிளகாய் வற்றல் : 5 Nos (காரத்திற்கேற்ப)
தனியா : 1 டேபிள் ஸ்பூன்
க.பருப்பு : 1 டேபிள் ஸ்பூன் வறுத்து பொடிக்கவும்
கருவேப்பிலை : 1 ஆர்க்கு
பெருங்காய போடி : 1 டி ஸ்பூன்
தேங்காய் துருவல் : 1 மூடி தேங்காய்
கடுகு எண்ணை : 1 டி ஸ்பூன்
செய்முறை :
பட்டாணியை களைந்து குக்கரில் உப்பு சேர்த்து 3 to 4 விசில் விட்டு இறக்கவும்
பட்டாணியை (நீரை) வடிகட்டவும்
பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்தவுடன் கடுகு போடவும்
கடுகு வெடித்தவுடன் பட்டாணி சேர்க்கவும்
பிறகு பொடித்துள்ள பொடியை சேர்த்து வதக்கவும்.பிறகு தேங்காய், கருவேப்பிலை, சேர்த்து வதக்கி இறக்கவும்.
சுவையான பட்டாணி சுண்டல் ரெடி



