இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 ஆட்டம் – டர்பன்– 10.11.2024
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்திய அணியை(20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 124, திலக் வர்மா 20, அக்சர் படேல் 27, ஹார்திகபாண்ட்யா 39, ஜெரால்ட் கோயட்சி, ஜேன்சன், சிம்லனி, மர்கரம், பீட்டர் தலா ஒரு விக்கட்)தென் ஆப்பிரிக்க அணி (19 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 128, ஸ்டப்ஸ் 47, ஹென்றிக்ஸ்24, கோயட்சி 19, ரிக்கிள்டன் 13, வருண்5/17, ரவி பிஷ்னோய் 1/21, அர்ஷதீப் சிங் 1/41)3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் இரண்டாவது ஆட்டம்இன்று கபரைகா நகரில் நடந்தது. பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர்மர்க்ரம் இந்திய அணியை மட்டையாடச் சொன்னார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக்ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சஞ்சு சாம்சன் (மூன்று பந்துகளில் பூஜ்யம்ரன்) இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். சூர்யகுமார்யாதவ் (9 பந்துகளில் 4 ரன்) நாலாவது ஓவரிலும் திலக் வர்மா (20 பந்துகளில்20 ரன்) 8ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர் திலக் வர்மா, அக்சர் படேல் (21பந்துகளில் 27 ரன்) ஹார்திக் பாண்ட்யா (ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 39 ரன்)மூவர் மட்டுமே சுமார் 86 ரன்கள் இந்திய அணிக்காகச் சேர்த்தனர்.
இதன் பின்னர் வந்த வீரர்களானரிங்கு சிங் (11 பந்துகளில் 9 ரன்), அர்ஷ்தீப் சிங் (6 பந்துகளில் 7ரன்), ஆகியோர் சொற்ப ரன்களே சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு124 ரன்கள் சேர்த்தது.
இதற்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணி ஆடவந்தபோதுஅதன் தொடக்க வீரர்களான ஹென்றிக்ஸ் (21 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரிக்கிள்டன்(11 பந்துகளில் 13 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
அணித்தலைவர் மர்கரம் (8 பந்துகளில்3 ரன்) ஆறாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஸ்டப்ஸ் இறுதிவரை ஆடி(41 பந்துகளில் 47 ரன்) அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில்வருண் சக்ரவர்த்தி நாலு ஓவர்கள் வீசி, 17 ரன் கொடுத்து, 5 விக்கட் வீழ்த்தினார்.
களம் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமானதாக இருக்கவில்லை. இருப்பினும் அக்சர் படேலை கடைசி இரண்டு ஓவர்களை வீசச் செய்திருந்தால் இந்திய அணிக்கு வேற்றி வாய்ப்பு இருந்திருக்கலாம்.தென் ஆப்பிரிக்க அணியில், வருண் பந்து வீசிக்கொண்டிருந்தபோது புத்திசாலித்தனமாககிளாசன், டேவிட் மில்லர் ஆகியோருக்குப் பதிலாக ஜேன்சனை மட்டையாட களமிறக்கினார்கள்.
அந்த வகையில் சூர்யகுமாரின் கேப்டன்சி இன்று சரியில்லை எனக் கூறவேண்டியுள்ளது,
ஆட்ட நாயகனாக ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் அறிவிக்கப்பட்டார்.