டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி இதுதான்

Published:

01 Oct 06 cricket - 2026

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 181 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 196 ரன்னிலும் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாக்காவில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்களிலும், நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.

ALSO READ:  FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

Related articles

Recent articles

spot_img