காட்டுக்குள் கூட்டாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறு உண்டு கொரோனாவை கிண்டல் செய்த இளைஞர்கள்! காவலர்கள் பிடியில் பாடம் கற்றனர்!

தமிழகம் பொது தகவல்கள்
forest - 2026

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மக்களுக்கு பல்வேறு விதமாக விழிப்புணர்வுகளையும் ஏற்ப்படுத்தி வருகிறது.

ஆனால் இந்த நோயின் தாக்கம் அறியாத கோவில்பட்டி கிராம இளைஞர்கள் 144 தடை உத்தரவை மீறி எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள் கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனாவை கிண்டல் செய்து டிக்டாக் வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அப்பகுதி போலீசார் அந்த இளைஞர்கள் அனைவரையும் அழைத்து 100 தடவை தோப்புக்கரணம் போட சொல்லியுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிராம மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.