பெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக ஸ்பெயின் இளைஞர் உருவாக்கிய அதிநவீன வசதிகளுடைய குகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞருக்கும் அவரது பெற்றோருக்கும் சிறுவயதில் அடிக்கடி சிறுசிறு சண்டை ஏற்படுவது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு, ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என பெற்றோர் அந்த இளைஞரிடம் ஒருமுறை கூற, பின்னர் அது இருவருக்குமிடையில் வாக்குவாதமாக மாறியுள்ளது.
இதனால் இப்படி பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3 மீட்டர் ஆழத்தில் குகை ஒன்றை தோண்டியுள்ளார்.
6 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிய குகை தற்போது கழிவறை, வைஃபை மற்றும் ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் அந்த இளைஞர் அமைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.