மாஸ்க் அணிந்து வெளிநாடு பறந்த விஜய்!

சினி நியூஸ் சினிமா
vijay 4 - 2026

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

விமான நிலையத்திற்கு அவர் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.தலையில் தொப்பி அணிந்தும், முகத்தை மெடிக்கல் மாஸ்க்கால் மறைத்துக் கொண்டும் கையில் ஒரு சூட்கேசுடனும் அவர் விறுவிறுவென நடந்து சென்ற வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.

கவுன்டரில் மாஸ்க் இல்லாமல் தொப்பியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் உள்ளன.பிகில் இசை வெளியீட்டு விழா முடிவதற்காகத்தான் அவர் காத்திருந்திருக்கிறார் என்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவரின் அந்த அரசியல் பேச்சுக்கு ஆளும் அரசு தரப்பில் கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன. அவர் எதையும் கண்டு கொள்ளாமல் பிகிலு படத்திற்கு ஒரு விளம்பரம் தேடிய நிம்மதியோடு வெளிநாடு பறந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.