சதுரன் படத்தில் மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக அறிமுகம்

சினி நியூஸ்

chathuranமூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிகிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் K.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். மற்றும் முன்டாசுப்பட்டி காளிவெங்கட், கயல் தேவராஜ், இயக்குனர் ராஜீஸ்வரன், ஆகியயோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவு மோனிக்குமார்.ஜி இவர் ஹாலிவுட் படங்களான ஸ்லம்டாக் மில்லியனர், மரியான், கோஸ்ட் புரோடோகால் உள்ளிட்ட படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைதிருக்கிறார். படத்தொகுப்பு- சுரேஷ்அர்ஸ் வசனம் – ஜி.ராதாகிருஷ்ணன். இவர் விஷால் நடித்த ஆம்பள படத்திற்கு வசனம் எழுதியவர். பாடல்கள் – யுகபாரதி, முத்தமிழ் / நடனம் – தீனா, நந்தா ஸ்டன்ட் – கே.கணேஷ்குமார் -(எங்கேயும்எப்போதும் கலை – பழனிவேல் நிர்வாக தயாரிப்பு – அண்ணாமலை இப்படத்தில் சென்னை ஆட்டோக்காரனாக நாயகன், ஜனனி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் மனதில் இடம்பெற முயற்சிக்கும் வேலையில், உதவும் மனப்பான்மை கொண்ட நாயகன் சட்ட விரோத கும்பலின் சதியில் தானாக மாட்டிக் கொள்ள, அதனால் தன்னுடைய நண்பர்களுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து காப்பாற்ற போராடும் திகில் நிறைந்த பொழுது போக்கான படம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக அமையும் இந்த சதுரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.