விஷால், சமந்தா நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் இன்றுமுதல் தொடங்கவுள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது
விஷால், சமந்தா, அர்ஜூன், ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
Posts by Dhinasari Reporter:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!

