எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது

Reporters Diary

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.

மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே நடவடிக்கையில் இறங்கியதாக கூறிய சிங், தனது புகாரை காவல்துறை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆவோன்லா தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான தரம்பால் சிங்கின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்ட 9 எருமை மாடுகள் கடந்த ஜூன் 22-ம் தேதி இரவில் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடனை தேடி வந்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் மாடுகளைத் திருடிய அக்ரம் என்ற நபரை பரேலியின் சிராவுலி பகுதியில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த மாடுகளை இறைச்சி வெட்டும் கூடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளான். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.