dhinasari panchangam jyothidam - 2026

பஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஆன்மிகம்
dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: நவ.22

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

கார்த்திகை ~ 6 ( 22.11.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ சரத் ருது.
மாதம்~ கார்த்திகை மாதம் { வ்ருச்சிக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி~ இரவு 12.52 AM வரை த்ரயோதசி பின்னர் சதுர்தசி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 3.19 AM வரை அச்வினி பின்னர் பரணி.
யோகம் ~ வ்யதீபாதம்.
கரணம்~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.14 AM.
சந்திராஷ்டமம் ~ கன்னி.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்ரயோதசி.
இன்று ~ ப்ரதோஷம்.

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

astrology panchangam rasipalan dhinasari - 2026

இன்றைய (22-11-2026) ராசி பலன்கள்

மேஷம்

முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். வியாபார நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே பொறுமை அவசியம். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்யோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : தேடல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.

ALSO READ:  பஞ்சாங்கம் - நவ.18 - புதன் | இன்றைய ராசி பலன்கள்!

ரிஷபம்

கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கை கூடி வரும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : வாதங்கள் நீங்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.


மிதுனம்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உண்டாகும். கமிஷன் வகைகளால் லாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : எண்ணம் கைகூடும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.


கடகம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.


சிம்மம்

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகான்களின் சந்திப்புகள் சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : வேறுபாடுகள் விலகும்.
பூரம் : போட்டிகள் மறையும்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.


கன்னி

மனதளவில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். பழைய உறவுகள் பற்றிய எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். நேர்மறை எண்ணங்களோடு எதிலும் செயலாற்றவும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முடிவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : விவேகம் வேண்டும்.
சித்திரை : முடிவுகளில் கவனம்.


துலாம்

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள் மூலம் பொறுப்புகள் மேம்படும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்விங்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
சுவாதி : பொறுப்புகள் மேம்படும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


விருச்சிகம்

சமூகப் பணிகளில் மாற்றமான சில அனுபவங்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் குறையும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.17 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : அனுபவங்கள் உண்டாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
கேட்டை : தாமதங்கள் குறையும்.


தனுசு

எதிர்கால சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். காப்பீடு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் சஞ்சலங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : தாமதம் உண்டாகும்.
பூராடம் : கவலைகள் குறையும்.
உத்திராடம் : சஞ்சலமான நாள்.


மகரம்

சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகள் எடுப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


கும்பம்

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : மதிப்புகள் உயரும்.


மீனம்

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : வாய்ப்புகள் உருவாகும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar 1 - 2026

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.16 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


1500x900 1775289 arulmigu nellaiappar temple - 2026

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


srirangam ranganathar - 2026

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

Posts by செந்தமிழன் சீராமன்:

5 thoughts on “பஞ்சாங்கம் நவ.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!”

  1. தினசரி பஞ்சாங்கம் மற்றும் தினப் பலன்கள் உபயோகமாக உள்ளது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seven =