காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து… கட்சியை உதறிய கொறடா!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன்

Bhubaneswar Kalita resigns from Rajya Sabha - 2026காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் அக்கட்சியின் தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா செய்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எடுத்த இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அக்கட்சியின் தலைமைக் கொறடா புவனேஸ்வர் கலிட்டா, இதனைக் கண்டித்து தனது கொறடா பதவியை ராஜினாமா செய்தார்.

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளதாகக் கூறிய அவர், இதனால் தாம் ராஜினாமா செய்வதாகக் கூறி, தமது ராஜினாமா கடிதத்தையும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் கொடுத்துவிட்டார்.

அது போல், தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து வருத்தப் பட்ட சமாஜ்வாதி எம்.பி., சஞ்சய் சேத் தாமும் ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். இந்த இரு ராஜினாமா கடிதங்களையும் ஏற்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதனிடையே, #Thank_You_Leaders பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி, தேச நலனைக் கருத்தில் கொண்டு #Article_370
ரத்து செய்யப்பட்டதை உத்தரப் பிரதேசத்தின் #மாயாவதி, ஒடிசாவின் #நவீன்பட்நாயக், தில்லியின் #அரவிந்த்கெஜ்ரிவால், ஆந்திராவின் #சந்திரபாபுநாயுடு, தெலங்கானாவின் #சந்திரசேகரராவ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்று ஆதரவு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.