Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நேபாளம் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள முக்திநாத் கோயிலில் வழிபாடு செய்தார்.

மலர்ந்த முகத்துடன் வாக்களித்த எடியூரப்பா: பாஜக., தொண்டர்கள் உற்சாகம்!

இந்நிலையில், முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆவலில் வெகு உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வந்த முன்னாள் முதல்வரும் பாஜக., முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா, காலை 7.05 மணிக்கெல்லாம் வாக்களித்தார். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் பி.எஸ். எடியூரப்பா.

கர்நாடகாவில் துவங்கியது வாக்குப் பதிவு: கடும் போட்டியில் காங்கிரஸ்!

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!

தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன.

பாஜக.,வுக்கு முட்டு கொடுக்கும் காங்கிரஸ்!

ராகுல் பிரசாரத்தால்... பாஜக.,வுக்கு முட்டு கொடுக்கிறது காங்கிரஸ்! கர்நாடகத்தில்!

வடகிழக்கு ரயில்வேயில் வேலை: விண்ணபிக்க கடைசி தேதி மே 31

வடகிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31.
- 2026

இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!

ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!

கூலித் தொழிலாளிக்கும் கைகொடுத்த டிஜிட்டல் இந்தியா திட்டம்: வழிகாட்டுகிறார் கேரளாவின் ஸ்ரீநாத்

இலவச வைஃபை வசதியின் மூலம் ரயில்வே கூலித் தொழிலாளியாக வேலை செய்த ஸ்ரீநாத், மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.

பிரிட்டிஷாரை எதிர்த்து நோபல் பரிசை திருப்பி அனுப்பியவர் தாகூர்: சர்ச்சை ஏற்படுத்திய திரிபுரா முதல்வர் பிப்லப்!

தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, உதய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 46 வயதான பிப்லப் குமார் தேவ், தாகூர் நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார் என்று பேசியுள்ளார். இப்படிப் பேசி, மீண்டும் ஒரு சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியுள்ளார் பிப்லப் குமார்.

சுப்பிரமணிய சுவாமியுடன் மோதல் போக்கு இல்லை: எஸ்.குருமூர்த்தி

சுப்பிரமணிய சுவாமியுடன் எனக்கு மோதல் போக்கு எதுவும் இல்லை என்று தனது டிவிட்டர் பதிவில் தெளிவாக்கியுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
- 2026

Recent articles

spot_img