viswasam3 - 2026தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக போடப்பட்ட செட், கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக நீண்ட நாட்களாக படப்பிடிப்புக்கு காத்திருக்கின்றது.

இந்த நிலையில் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்குள் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை முடித்துவிட முடியுமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

ஆனால் ‘வேதாளம்’ படம் இதே போன்றுதான் ஏப்ரலில் ஆரம்பித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்தவாறே இந்த படத்தின் படப்பிடிப்பும் இரவுபகலாக நடத்தி தீபாவளி தினத்தில் திரையிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending