சிம்புவுடன் ஓவியா; மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோ வைரலாகிறது

கிசுகிசு சினி நியூஸ்

நடிகர் சிம்பு – ஓவியா இருவரும் ரசிகசியமாக திருமண நிச்சயம் செய்து கொண்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

நடிகர் சிம்பு,  இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என சினிமாவின்  பல துறைகளிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில், இருவரும் திருமணம் செய்ய போவதாக கூறப்படுகிறது.

முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா, ஆரவ்வை காதலித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அது அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர உத்தி என்றும் அந்த ரகசியத்தை ஓவியா பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஆரவ் காதல் முறிவு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான போது, ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சிம்பு ஒரு டுவீட் போட்டிருந்தார்.

simbu oviya - 2026

இந் நிலையில், தற்போது ஓவியா சிம்பு இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இதைவைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது..

முன்னதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன், திருப்பதி சென்று தன் மகன் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.., தனக்கு நல்ல மருமகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.