அறநிலையத் துறை வழி தவறக் கூடாது!

Published:

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சமீபத்தில் கேரளாவின் ‘திருநெல்லி’ தேவஸ்தானத்தின் நிதியை நஷ்டத்தில் இருக்கும்  கூட்டுறவு வங்கிகளை மீட்பதற்குப் பயன்படுத்தி, கால எல்லை தீர்ந்த பின்னும் கோவிலின் வைப்புத் தொகையைத் தீர்க்காமல் போனதால், அந்த வங்கிகளுக்கு எதிராக தேவஸ்தானம், உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலின் நிதிகளை வங்கியின் பயன்பாட்டுக்குச் செலவழிக்கக் கூடாது என்றும் அந்த டெபாசிட்டுகளை உடனடியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று கூறி அந்தத் தீர்ப்பையே உறுதியாகக் கூறியது உச்ச நீதிமன்றம். கோவில் நிதிகள் அந்த தெய்வத்தைச் சேர்ந்தது என்றும், அவற்றைக் கோவிலின் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடக் கூறியது. கோவில் நிதிகள், நஷ்டத்தில் இருக்கும் வங்கியின் சொத்துக்கள் அல்ல என்று எச்சரித்தது.

அதேபோல் சிறிது காலம் முன்பு ஹிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றம், “கோவில் நிதிகள் பவித்திரமானவை. அவை ஆலயத்தின் தெய்வத்துடையவை. மாநில வருமானம் அல்ல” என்று தெளிவுபட உத்தரவிட்டது.

பக்தர்கள் நம்பிக்கையோடு ஆலயத்திற்காகவும், அதிலிருக்கிரும் தெய்வத்திற்காகவும் அளித்த நிலம், சொத்து, நன்கொடை போன்றவற்றை, ‘கோவிலின் உபயோகத்திற்காக’ என்ற உணர்வோடு அளிக்கிறார்கள். அவற்றை கோவிலின் பூஜைகளுக்கும், நித்திய வழிபாடு, சிறப்பு வழிபாடு போன்ற தெய்வீகச் செயல்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும், மேம்பாட்டுக்கும், மராமத்துக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை அரசாங்க நிகழ்ச்சிகளுக்கோ, பிற செயல்களுக்கோ பயன்படுத்துவது மத நம்பிக்கைகளை வஞ்சிப்பதாகும். அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்று தீர்ப்பு கூறியது.

ALSO READ:  வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

அரசாங்க நலத் திட்டங்களுக்கு ஆலய நிதியைப் பயன்படுத்தக் கூடாதென்று நேரிடியாகவே குறிப்பிட்டது. சாலைகள், பாலம் அமைப்பது, ‘செக்யூலர்’ பணிகள், அரசியல், சமுதாய நிகழ்சிகள் போன்ற எவற்றுக்கும் பயன்படுத்தக் கூடாதென்றும் தெரிவித்தது. வி.ஐ.பிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்காக ஆகும் செலவுகளை கோவில் சொத்து மூலம் செலவழிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியதும் கவனிக்கத் தக்கது. இந்த இரண்டு தீர்ப்புகளும் கவனத்திற்குரியவை.

இந்தியாவின் பல மாநிலங்களில், அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் கோவில்களிலிருந்து காலந்தவறாமல் அதிக தொகை குறிப்பிட்ட நேரத்தில்   அரசாங்கத்திற்குச் சேருகின்ற செய்தி ஆலய பக்தர்களுக்குத் தெரியாது. கோவில் சொத்தும், நன்கொடைகளின் வருமானமும் அரசியல் ஊழல்வாதிகளின் கைகளுக்குச் செல்கின்ற உண்மை மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறது.

பிற மத வாக்கு வங்கிக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் நம் ஆலயங்களின் வளங்கள் பகிரப்படுகின்றன. ஆனால் பிற மத நிலையங்களின் வருமானம் அறநிலையத்துறைக்கு வருவதில்லை. அதாவது பிற மத அமைப்புகளின் வருமானம் அந்தந்த மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஹிந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசாங்கச் செயல்களுக்கும், பிற மத நலனுக்கும் செலவிடப்படுகிறது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அதோடு கூட, ஹிந்துக்களை அழிக்கவேண்டும் என்றும் நாட்டை நலிவுறச் செய்ய வேண்டும் என்றும் சதித் திட்டம் தீட்டும் தீவிரவாத மதத்தைச் சேர்ந்தவர்கள் நம் கோவில்களில் ஊழியர்களாகவும், சுற்றுப்புறங்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் நிலைபெறுகிறார்கள். அதனால் ஆபத்து மறைந்துள்ளது என்று தெரிந்தும், தொடர்புடைய துறையினர் கண்டு கொள்வதில்லை.

கோவில்களில் அரசர்களும் பக்தர்களும் அளித்த வரலாறுச் சிறப்புமிக்க தங்க ஆபரணங்களைத் தம் விருப்பபடி சில மாநில அரசுகள் உருக்கித் தம் தேவைக்குப் பயன்படுத்துகின்றன. கோவில்களுக்கு மக்கள் நன்கொடையாக அளித்த சொத்து விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

ஹித்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கரங்களில் இருந்து விடுவிப்பது தேவையா? இல்லையா? இந்த விவாதம் ஒருபுறம் பலனின்றி நடந்து கொண்டே உள்ளது. அதைவிட, அறநிலையத் துறையில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, கேரளா, ஹிமாச்சல்பிரதேஷ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு எல்லா மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

‘ஆலய நிதி ஆலயத்திற்கே’ என்ற முக்கியச் செய்தியை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த கோவில்களின் அதிக வருமானத்தை வளர்ச்சியடையாத கோவில்களின் வளர்ச்சிக்காகச் செலவழிப்பதில் தவறில்லை.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ஹிந்து ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இருக்கும் அமைப்புகள் சீர்செய்யப்பட வேண்டும். மக்கள் இந்தப் புரிதலை அடைத்து அரசாங்கத்தின் மேல் அழுத்தம் எடுத்து வர வேண்டும்.


 Source: ருஷிபீடம் மாத இதழ், ஜனவரி 2026


ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img